வெண்பா(வனா) பதிவில் போட்டது மொக்கையல்லவென்றும் ஜொள்ஸென்றும் பெருவாரியன நண்பர்கள் சொன்னதால், தலைப்பு தரும் உரிமையை அவர்களுக்கே தருகின்றேன். இது மொக்கையோ? ஜொள்ஸோ? எதுவாகவும் இருக்கட்டும், எனக்கு மிகவும் பிடித்தமான எண்சீர் விருத்தத்தின் நான்கு வரிகள் எழுத இந்தப் பதிவு உதவுகின்றது. எட்டுச்சீரென்றாலே அமுதம் கொட்டுச்சீர், அதிலும் முத்துப்பரல்களைப் ;-) பற்றி எட்டுச்சீர் எழுதுவதென்றால் இரட்டிப்பு மகிழ்ச்சி.

அன்றந்த கொற்கைக்குப்1 பயணம் செய்து
. அருமுத்தைக் காண்தமிழன் ஆனேன் அல்லன்
இன்றந்த ருசியத்து2 வீதி சென்று
. இணைமுத்தைக் கண்டேனா இன்னும் இல்லை
என்றெந்தன் பயணத்தில் ஜப்பான் சென்று
. எழில்மிக்கி மோட்டோவைக்3 காணக் கூடும்
நன்றென்று நான்கண்ட முத்துக் கோவை
. நாள்தோறும் இங்கென்றால் குற்றம் ஏனோ?
1. கொற்கை - முத்துகளுக்குப் பெயர் பெற்ற அன்றைய துறைமுகம்
2. ருசியா - ரஷியா. அங்கே குறைந்த விலையுள்ள முத்துகள் கிடைக்கும்
3. மிக்கிமோட்டா - ஜப்பான் நாட்டில் புகழ்பெற்ற முத்து வணிக நிறுவனம்
***
சிறிய விளக்கம்:
ஆட்சீர் - 'ஆட்' என்றால் உருதுவில் எட்டு, 'சீர்' தமிழ்.
எண்சீர் விருத்தங்களை அடிக்கடி எழுதியதால், சந்தவசந்தம் என்னும் மடலாற்குழுமத்தில் பேரா.பசுபதி அய்யா அவர்கள் என்னை 'ஆட்'சீர் ஆசாத் என்றழைத்தார்கள். இந்த இழையின் தலைப்பு, சினேகா + ஆட்சீர், இணைந்ததில் திரிந்து 'சினேகாட்சீர்'.
அன்புடன்
ஆசாத்

Comments
எண்சீர்...அது என் சீர். அம்மணி ஒரு காரணிதானே.
*
இனிய கெக்கேபிக்குணி,
ரா.கா.கி.யை நினைவுபடுத்தியதற்கு மிக்க நன்றிகள்.
அன்புடன்
ஆசாத்
;-)