Skip to main content

Posts

Showing posts from 2004

kadal konthaLippu

சில நாள்களாக வலைப்பதிவுகளின் பக்கமே வர இயலாமற்போனதும், வந்ததும் இப்படி ஒரு சோகச் செய்தியை அதிகமாகப் படிக்கவேண்டும் என்பதும் நிலை என்றால் அதனை மாற்ற முடியுமா? நண்பர்கள் ஆசிப் முதல் பத்ரி வரை நண்பர்கள் கடல் கொந்தளிப்பால் விளைந்த பாதிப்புக்களை / மீட்புப் பணிகளை விவரமாகக் குறிப்பிட்டது தொலைக்காட்சிகள் கிளப்பிவிட்டிருந்த பீதியிலிருந்து விடுபட உதவியது. பட்டுணர்ந்தோம், சரி. இனி இத்தகைய பாதிப்புக்கள் நிகழப்போவதை முன் கூட்டியே அறிந்து பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடமுடியுமா எனபது மிகப் பெரிய கேள்வி. திருமலை அய்யா சொன்னதைப் போல கடற்கரையிலிருந்து குறிப்பிட்ட தூரம் வரையில் வீடுகள் இல்லாமலிருக்கும்படியாகப் பார்த்துக்கொள்ளலாம் என்பது ஒரு யோசனை. அப்படி ஒரு வதந்தி சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையிலிருந்து (ECR) கடலை நோக்கிச் செல்லும் பகுதிகளில் சில நாள்கள் உலாவியது. கடல்நீரின் தற்போதைய இடத்திலிருந்து ஐநூறு மீட்டர்கள் (தோராயமாக) வரையில் எந்தக் குடியிருப்புப் பகுதிகளும் இருக்கக்கூடாதென்னும் சட்டம் வரப்போவதான வதந்தியில் நீலாங்கரை பகுதியில் ஆளாளுக்கு அதற்குத் தடை (Stay) வாங்குவது எப்படி என்...

பர்தா

இனிய நேசகுமார், அரவிந்தன், அபூ முஹை, செஞ்சுடர், அபூ உமர், நண்பர்கள் அனைவருக்கும், வணக்கங்கள். நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும். * இணைய நண்பர்கள் என்னை அறிந்தவர்கள். வலைப்பூவில் இருக்கும் சில நண்பர்கள் என்னை அறியாதவர்களென்பதால், முதலில் என்னைப் பற்றிய அறிமுகத்துடன் இதனைத் துவங்குகின்றேன். எனது மனமகிழ்வு விஷயங்கள் சிலருக்கு முகச்சுளிப்பை அளித்தாலும், அதாவது, திரைப்படங்களை ரசிப்பது, திரையில் வரும் நடிக நடிகையரின் செய்திகளை நினைவில் வைத்திருப்பது, எம்ஜிஆர் அவர்களின் மேல் நான் வைத்திருக்கும் பற்று, இப்படியான சில ரசனைகள் சிலருக்குப் பிடிக்காமற் போய் முகச்சுளிப்பை உண்டாக்கினாலும், எனது மனிதநேயத்தையும், இறையச்சத்தையும் மதித்து பழகிவருகிறார்கள். நான் ஒரு இஸ்லாமியன். யுகயுகங்களாக இருக்கும் இப்பிரபஞ்சத்தின் வயதில் கண்ணிமைக்கும் நேரத்திற்கும் குறைவான எழுபது எண்பது வருடங்களே வாழ்ந்து போவதற்காக இந்த உயிரை இறைவன் படைத்திருக்கமாட்டான் என்பதைத் தீவிரமாக நம்பி, மறுமை வாழ்வில் புண்ணியம் பெறுவதற்காக எனக்குப் பயிற்றுவிக்கப்பட்ட / ஏற்றுக்கொண்ட இறைநம்பிக்கையின் ...

கஜல்

கஜல் எனக்கு அறிமுகமானது சுவாரசியமான சம்பவம். 1985, ஜனவரி 1ம் தேதியன்று எங்கள் குடியிருப்புக்குள் நடந்த சிறிய விழாவில் 'காற்று வெளியிடைக் கண்ணம்மா'வை ஒரு மாதிரியாகப் பாடினேன். "ஏண்டா இப்படி பாரதியாரக் கடிச்சுத் துப்புற" என நண்பர் கிண்டலடிக்க, அனைவரும் சிரித்து முடித்தார்கள். அந்த விழாவில்தான், அஜீஸ் பாய் என்னும் பெரியவர் 'ஜப் ஆன்சல் ராத்துக்கா லெஹராயேன்' ('மேலாடை காற்றில் அலையாக' - சரியான மொழிமாற்றம் அல்ல) கவிதையை முன்னிறுத்திப் பேசினார். கவிதையின் விளக்கம் என்னை ஈர்த்தது. மெதுவாக அவரிடமிருந்து சில கஜல் வரிகளைப் பொருளுடன் அறிந்துகொண்டேன். பிறகு, ஒருநாள் மாலையில் தனிமையான நேரத்தில் தாஜ்மஹால் படத்தின் பாடல்களைக் கேட்டுக்கொண்டிருந்தபோது, 'ஜோ பாத் துஜ்மே ஹை தேரி தஸ்வீர் மே நஹீ' என்ற ர·பி சாஹேபின் குரலைக் கேட்டு, நண்பர் ஒருவர் அறைக்கு வந்தார், அவர் பெயர் இர்ஷாத் அலி ஜெத்தி. அதுவரையில் நண்பர்களிடம் மறத்தமிழனாகவே :) அறிமுகமாகியிருந்த நான், உருதுப் பாடல்களை கேட்பதைப் பார்த்து ஆச்சரியமாக "இதையெல்லாம் கேப்பீங்களா" என்றார். பொருள் ...

சிலம்பம். பாகம் 2/6

சிலம்பம். பாகம் 2/6 சிலம்பம் பயிலவேண்டுமென்று ஆர்வமாக வாத்தியாரிடம் சென்றால், முதலில் சிலம்பத்தைக் கண்ணில் காட்ட மாட்டார். சிலம்பம் சுழற்றத் தேவையான பலம் (ஸ்டெமினா) இருக்கிறதா என்பதைப் பார்த்து, உடலை உறுதிப்படுத்துவதே முதல் வேலை. மேலே சொன்ன தோப்புக்கரணம், அனுமார் தண்டாலில் பயிற்சி துவங்கும். உடலுறுதியைப் பொறுத்து சில வாரங்களுக்கு உடற்பயிற்சி மட்டுமே. பாதத்தின் முன் பகுதியைத் தரையில் ஊன்றி, முழுவட்டமடித்து, சட்டென்று நிற்கும்போது மூட்டுகள் பிசகாது என்று வாத்தியார் நினைத்ததும் சில பயிற்சிகள் துவங்கும். அப்போதும் சிலம்பம் கையில் கிடைக்காது. இரண்டு கைகளையும் பின்னால் கட்டிக்கொண்டு கால்களை மாற்றி வைக்கும் பயிற்சிதான் துவங்கும். கைகளைப் பின்னால் இறுக்கமாகக் கட்டிக்கொண்டு சுழலும்போது சமநிலை (பேலன்ஸ்)கிடைப்பதைப் பழக ஓரிரு நாள்களாவது ஆகலாம். சிலம்பச் சுழற்சி --------------- ஒரு நல்ல பொழுதில் சிலம்பம் கையில் கிடைக்கும். வழுவழுவென இருக்கும் கழி கைகளை விட்டு வழுக்குமோ என நினைத்தால் வழுக்காது. உள்ளங்கை வியர்க்கக் கூடிய நண்பர்களுக்குதான் துவக்கத்தில் சிரமமாக இருக்குமே தவிர, மற்றபடி வழு...

சிலம்பம் - Part 1/6

சிலம்பம் குறித்த எண்ணங்கள் ------------------------------- சிலம்பம் என்றதும் பெரும்பாலானோர் கற்பனையில் தோன்றுவது எதாவது திருவிழாவோ அல்லது திரைப் படங்களோதான். சீன ஜப்பானிய சண்டைக்கலைகள் திரைப்படங்கள் வழியாக நமக்கு அறிமுகமான பிறகு, சிலம்பத்தை நமது விளையாட்டுகளில் ஒன்றாக பொருத்திப் பார்க்கும் வாய்ப்பு அற்றுப்போனதென்பது எனது எண்ணம். இந்தக் காரணம் மட்டுமின்றி, வழிவழியாக சிலம்பம் கற்றவர்களும் அதனை உடற்பயிற்சியின் ஒரு அங்கம் என்று இளைஞர்களுக்கு உணர்த்தாமல், வீர விளையாட்டு என்றே சொல்லி கொஞ்சம் விலக்கி வைத்துவிட்டார்களோ என்றும் நினைக்கத் தோன்றுகிறது. சிலம்பத்தை தற்காப்புக் கலை (மார்ஷல் ஆர்ட்) என்பதை விடவும், நமது பாரம்பரியங்களுள் ஒன்று என முன்னிறுத்துவதே சிறப்பு. இன்றைக்கும் மாநில அளவில் சிலம்பப் போட்டிகள் நடக்கின்றன. தனியார் தொலைக்காட்சிகள் எப்போதாவது கிடைக்கும் நேரத்தில், போட்டிகளை இரண்டு மூன்று நிமிடங்கள் ஒளிபரப்பிவிட்டு அடுத்த விளம்பரதாரர் நிகழ்ச்சிக்குச் சென்றுவிடுகிறார்கள். திருவிழாக்களுக்குச் செல்வதும், சிலம்பாட்டத்தைப் பார்ப்பதும் நமது இன்றைய வாழ்வில் சாத்தியப்படுமா என்பது ...

kick boxing

கிக் பாக்சிங் பீட்டர் ஹெய்ன் என்னும் இளைஞரின் ரசிகன் என்று சொல்லிக்கொள்வதில் எனக்கு தயக்கம் ஏதும் இல்லை. காளி திரைப் படத்தின் தீ விபத்திற்குப் பின் சுப்பராயன் என்னும் சண்டைப் பயிற்சிக் கலைஞனுக்கு முன்னேற்றம் கிடைத்தது போல், முதல்வன் திரைப் படத்தில் உயிருடன் விளையாடி உடம்பில் தீ வைத்துக் கொளுத்திக்கொண்டு பாலத்தின் மேலிருந்து குதித்த பீட்டர் ஹெய்னிற்கு அதன் பிறகு நல்ல முன்னேற்றம். அந்த விபத்திற்குப் பின்னரே நான் ஹெய்னின் ரசிகனானேன். இவரைக் குறித்து எழுதிய கட்டுரை ஒன்று மரத்தடி டாட் காமில் இருக்கிறது. தற்போதைய தமிழ்த் திரை ரசிகர்களின் அதீத கற்பனைக்கு (ஃபாண்டசி) தீனி போடும் வகையில் சண்டைக் காட்சிகளை அமைக்கும் பீட்டர் ஹெய்ன், எம்.குமரன் சன் ஆ·ப் மஹாலட்சுமியில் ஏனோ சிலவற்றைத் தவற விட்டிருக்கிறார். ஒரு குறிப்பிட்ட கலை, எதாவது திரைக் கதையின் மையக் கருத்தாக இருக்கையில் கூடுமானவரையில் அந்தக் கலை தொடர்பான விவரங்களை கவனமாகத்தானே கதையில் சேர்ப்பார்கள். சில நேரங்களில், கதாநாயகரின் பெயரைக் (இமேஜ்) கருத்தில்கொண்டு, அவரது ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களோ என்னும் தயக்கத்தில் விதிவிலக்குகள் இருக...

aitraaz

எத்தராஸ் (எதிர்ப்பு, protest) நான்கைந்து நாள்களாகவே பத்திரிகைகளின் திரைப் பகுதியில் எத்தராஸைப் போட்டுத் தாளித்தார்கள். ப்ரியங்கா சோப்ராவின் எதிரான பாத்திரம், கரீனா கபூர் சேலை கட்டியது, அப்பாஸ் - முஸ்தான், ஆங்கிலத் தழுவல் அப்படி இப்படி என தினசரி இரண்டு வரிகளாவது எழுதினார்கள். படம் என்னவோ ஓகே ரகம்தான். 'து சீஸ் படி ஹை மஸ்த் மஸ்த்' என்று அக்ஷய் ஆட்டம் போடவில்லையென்றாலும், அக்ஷய் முத்திரை 'நெருக்கத்தை' பிரியங்காவிடமும், கரீனாவிடமும் காட்டாமலில்லை. தென்னாப்பிரிக்காவில் பணிபுரியும்போது அக்ஷயும் பிரியங்காவும் காதலர்களாகி, பிறகு பிரியங்காவின் திமிரால் பிரிந்துவிடுகிறார்கள். அக்ஷய் எல்லாவற்றையும் மறந்து இந்தியாவிற்கு வந்து, கரீனாவை மணந்துகொண்டு சுகமாக வாழ்கின்ற வேளையில், அவரது முதலாளியாக பிரியங்கா வருகிறார். வயதான கணவர், மாஜி காதலனுடனான சந்திப்பு, இரண்டும் சேர்ந்து பிரியங்காவை தவறு செய்யத் தூண்டுகின்றன. அக்ஷய் மறுக்க, விஷயம் வெளியில் வர, தன்னைக் கெடுக்க முயற்சி செய்ததாக பிரியங்கா சொல்ல, அக்ஷய் அதனை எதிர்த்து "பிரியங்காதான் என்னை பாலியல் வன்முறைக்கு ஆட்படுத்த ...

naach

நாச் (ஆட்டம்) ராம்கோபால் வர்மா பெயரைப் பார்த்துதான் வாஸ்து சாஸ்த்ராவிற்குப் போனேன். முப்பது ரூபாய் குளிர்பானம், இருபது ரூபாய் பாப்கார்ன், எழுபது ரூபாய் டிக்கெட் இவற்றோடு, தியேட்டர்காரரின் டார்ச் லைட்டைப் போல 'நோக்கியா'வை ஒளிரச் செய்து இருக்கையின் எண்கள் தேடிய மேட்டுக்குடி இளைஞர் இளைஞிகள் :) கூட்டத்தின் நடுவில், ஒவ்வாத பிறவியாக அமர்ந்து சத்தியம் திரையரங்கில் இதனைப் பார்த்தேன். பெயருக்குக் கூட படத்தில் வாஸ்து இல்லை. ராம்கோபால் வர்மா நன்றாக ஏமாற்றியிருந்தார். அதில் ஏமாந்ததற்குப் பரிகாரமாக வர்மாவின் 'நாச்'சால் ஓரளவிற்கு திருப்தி. 'ரங்கீலா' ஊர்மிளா மடோன்கரின் நகலாக 'நாச்'சில் அந்த்ரா மாலி (அம்மணியின் ஆடைக்குறைப்பு எரிச்சலாக இருக்கிறது. ஒருவேளை இதுதான் இன்றைய இந்திப்படங்களின் சட்டமோ). நடிக்க வாய்ப்புத் தேடி அலைந்து, நடிகராகி வெற்றி பெறும் கதாபாத்திரத்திற்கு அபிஷேக் பச்சன். நடனத்தையே தனது மூச்சாகக் கொண்டிருக்கும் 'ரேவா', வாய்ப்புக்காக எந்த சமாதானத்தையும் ஏற்காதவள். தனது காதலன் அபிநவ் (அபிஷேக் பச்சன்) ஒரு வார்த்தை சொன்னால் வாய்ப்பு க...

மொஹலே ஆஜம்

மொஹலே ஆஜம் தீபாவளி வெளியீடு இந்திப் படங்களில், 'எத்தராஸ்' பிரியங்கா சோப்ராவுக்கும், 'வீர் - ஸாரா' ப்ரீத்தி ஜிந்தாவுக்கும் போட்டியாக மதுபாலா நிற்கிறார் என்பதில் உண்மையும் இல்லாமலில்லை. ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபதில் வெளியான கே. ஆசி·பின் மொஹலே ஆஜம் மீண்டும் திரையிடப்படுகிறது. ப்யார் கியாத்தோ டர்னா க்யா பாடல் மட்டும் வண்ணத்தில் படம் பிடிக்கப்பட்டு மற்றதெல்லாம் கருப்பு வெள்ளையில் இருந்ததை மாற்றி, அனைத்தையும் வண்ணமயமாக்கி வெளியிடுகிறார்கள். அன்றைக்கு ஒன்றரை கோடி ரூபாய்கள் பொருட்செலவில் எடுக்கப்பட்ட திரைப்படம். மொஹலே ஆஜம் பார்த்த பின்னர், அதுவே நான் பார்த்த இந்திப் படங்களில் மிகவும் நேர்த்தியானது என்று சொல்லத் தயங்குவதில்லை. ஆரம்பக் காட்சியில் "ஜலாலுத்தீன் மொஹம்மத் அக்பர்" என்று முழங்கும் சிம்மக் குரலிலிருந்து, கடைசிக் காட்சியில் "ஜில்லே இலாஹி! ஜில்லே இலாஹி" எனப் பரபரக்கும் கிழவியின் குரல் வரையில் ஒவ்வொரு காட்சியாக பல நேரங்களில் அசை போட்டதுண்டு. சலீம், பிள்ளைப் பிராயத்திலேயே ராணி ஜோத்பாயைப் பிரிந்து போர்ப்பயிற்சிக்கும் தொடர்ந்து போர்...

அக்பர் இலாஹாபாதி

அக்பர் ஹ¤சைன் அக்பர் இலாஹாபாதி --------------------------------------------------------- குலாம் அலி பாடியிருக்கும் கஜல்களில் சிறந்தவற்றின் பட்டியலில் அவசியம் இடம் பெறக்கூடிய பாடல் 'ஹங்காமா ஹை க்யூன் பர்பா / தோடி சி ஜோ பீலி ஹை'. சில வருடங்களுக்கு முன், தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்மணிகள் கஜல் முயற்சியில் ஈடுபட்டபோது இந்தப் பாடலைப் பாடியதாக எதோ வாரப் பத்திரிகையில் படித்த நினைவு. இந்த கஜலை எழுதியவர் கவிஞர் அக்பர் இலாஹாபாதி. அலஹாபாதை, ஏனோ உருதுக்காரர்கள் இலாஹாபாத் என்றே உச்சரிக்கிறார்கள். டெல்லி - தெலி (dheli), லக்னோ - லக்னவ், டெக்கான் - டக்கன் (தக்காணம்), இப்படிப் பல சமாச்சாரங்கள் அவர்களுக்கென்று தனியாக இருக்கின்றன. அக்பர் ஹ¥சைன் அக்பர், அலஹாபாதிற்கு அருகிலுள்ள ஊரில் பிறந்து வளர்ந்தவர். கவிஞரானதும், பெயருடன் 'இலாஹாபாதி' இணைந்து கொண்டது. அக்பர் இலாஹாபாதி (1846 - 1921), சட்டம் பயின்று, வழக்கறிஞராக இருந்து, செஷன் ஜட்ஜ் வரையில் பதவி உயர்வு பெற்றவர். குறுகிய காலமே நீதிபதியாகப் பணியாற்றி, உடல் நிலை காரணமாக இடையிலேயே பதவி விலகியவர். மேற்கத்திய கலாசாரத்தின் நகலான வாழ்க்க...
உல்·பத் மே மேரி ருஸ்வா விடுமுறையில் நண்பர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றிருந்தேன். அவரும் கஸல்களில் விருப்பம் உள்ளவர். நான் சென்றிருந்தபோது சிடியில் உம்ராஜான் படப்பாடலைக் கேட்டுக்கொண்டே எதோ எழுதிக்கொண்டிருந்தார். நான் சென்றதும்எழுதுவதை நிறுத்திவிட்டு உம்ராஜான் ஐகானைப் பெரிதாக்கினார். திரையில்ரேகா வளைந்து வளைந்து "இன் ஆங்கோன் கே மஸ்த்தி மே மஸ்த்தானே ஹசாரோன் ஹை" பாடலுக்காக நடனமாடிக்கொண்டிருந்தார். "சே, கய்யாம் என்னா ம்யூசிக் ஆசாத். ஆஷாவும் என்னமாப் பாடியிருக்கு"என்றார். "உம்ராஜான் எனக்கும் ·பேவரிட்டுங்க. என்னா கஸல், என்னா லிரிக். ஷாரியார்தானே" அப்பொழுது திரையில் அந்த வரி வந்தது. "உல்·பத் மே மேரி ருஸ்வா". "உல்·பத்த்துன்னா என்ன" என்றார். "அட்மிரேஷன்ற மாதிரியா? சரியாத்தெரியலீங்களே" என்றேன். அதற்குள் அடுத்த வரி, "எக் சிர்·ப் ஹமி மைகோ ஆங்கோன் சே பிலாத்தி ஹை" வந்துவிடவே உல்·பத்தை மறந்து வாஹ் வாஹ் என்று கஸலில் மூழ்கினோம். அடுத்த வாரத்தில் திர்லக்கண்ணி நண்பர்களுடன் யாத்காரில் பாயாவை வெளுத்துக் கட்டிக்கொண்டிருந்தபோது உல...

எண்ணம் - 1

வணக்கம். சில நாள்களாகவே வலைப்பதிவு உண்டாக்கவேண்டும் என்ற எண்ணம் இருப்பினும் இன்றுதான் அது முடிந்திருக்கிறது. உள்ளீடுகளை அடுத்த வாரத்தில் துவங்க எண்ணம். அன்புடன் ஆசாத்