பொருள் தேடல், பிழைப்பு, இன்னபிற சொந்த சமாசாரங்களை நீக்கிவிட்டு வாசித்தல், எழுதுதல், மனமகிழ்வு என்று பார்த்தால் இந்த வருடம் அப்படி ஒன்றும் சிறப்பானதாகத் தோன்றவில்லை. 2008இன் துவக்கத்தில் புத்தகக் கண்காட்சியும், துபாய் பயணமும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியவை. பொறுமையாக கண்காட்சியில் ஒவ்வொரு கடைக்கு முன்னாலும் நின்று படம் எடுத்து வலைப்பதிவில் போடுமளவிற்கு நேரம் கிடைத்தது. துபாய்க்கு வந்த பிறகு வலைப்பூவில் எழுதுவது குறைந்துவிட்டாற்போன்ற உணர்வு. புத்தகங்கள் என்று பார்த்தால், பிரெடிரிக் போர்சித்தின் அவெஞ்சர், ஜெயமோகனின் நிழல்வெளிக்கதைகள், இந்திரா சௌந்தரராஜனின் காற்று காற்று உயிர், சென்னை கானா, துபாய் நண்பர்கள் வெளியிட்ட இரண்டு கவிதைத்தொகுதிகள் இவை படிப்பட்டுள்ளன. சில பக்கங்கள் மட்டுமே படிக்கப்பட்ட புத்தகங்கள் என்றால் ரூட்ஸ், எட்வர்ட் சயீதின் கவரிங் இஸ்லாம், ஜான் கிரிஷாமின் ப்ளேயிங் பார் பீட்சா இப்படியாக சில தொடர்ந்துள்ளன. இப்போது கையில் எடுத்திருப்பது, காலித் ஹொசைனியின் தௌஸண்ட் ஸ்ப்ளெண்டிட் சன்ஸ். இது எத்தனை பக்கங்கள் ஓடும் எனத் தெரியாது. திரைப்படங்கள்...துபாயின் வழமைப்படி குறுவட்டிலும் அரங்கி...