பர்வீன் பாபி
பர்வீன் பாபி, கதாநாயகியர்களில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆட வந்தவர்களின் முன்னோடி என்றும் இவரைச் சொல்லலாம்.
மோஹ்னீஷ் பெஹல் அறிமுகமான திரைப்படம் 'தேரி பாஹோன்மே'யில், இவர் கப்பலில் நடக்கும் கலை நிகழ்ச்சியில் நடனம் ஆடுவதான காட்சியமைப்பு. (அது ப்ரூக் ஷீல்டின் ப்ளூ லாஹ¥னின் இந்தி மொழியாக்கம். அதில் மோஹ்னீஷ¤டன் அறிமுகமான ஆஷா தத் என்னவானார் என்பது தெரியவில்லை).
1984இல், அப்படி ஒரு பாடலுக்கு மட்டுமே நடனமாடிய பர்வீன் பாபி, அதன் பிறகு திரையில் தோன்றவில்லையென்றே நினைக்கிறேன். தனிமையில் இருந்த பர்வீன் பாபி இப்போது இல்லை. தனது அடுக்குமாடிக் குடியிருப்பில் யாருமற்ற தனிமையில் இறந்துவிட்டார். அவரது உடலை யாரும் பெற்றுக்கொள்ளவில்லையென்றால் நான் பெற்றுக்கொள்வேன் என்று இயக்குனர் மகேஷ் பட் சொன்னார். அதற்கு வாய்ப்பில்லாமலே போய்விட்டது. பர்வீன் பாபியின் உறவினர்கள் உடலைப் பெற மும்பைக்குப் பயணமாகியிருக்கிறார்கள்.
பத்தாண்டுகளுக்கு மேல் இந்தித் திரையில் இருந்த பர்வீன் பாபியவர்கள் மிகப்பெரிய வெற்றிப்பட நாயகியாக இல்லையென்றாலும், தனது கவர்ச்சி குறையாமல், நடித்த படங்கள் சிலவற்றி...