ஒரு இடைவெளிக்குப் பிறகு இந்தியில் நல்ல மெல்லிசையைக் கேட்கிறேன். http://ww.smashits.com/music/hindi-film/songs/24710/wanted.html# நீங்களும் கேட்கவேண்டுமென்றால் சுட்டியைச் சொடுக்கு Dil leke என்று துவங்கும் பாடலைச் சொடுக்கிக்கேளுங்கள், உங்களுக்கும் பிடித்தாலும் பிடிக்கலாம். தென்னிந்திய இயக்குநர்களை வடக்கத்திக்காரர்கள் கண்டுகொள்ளமாட்டார்கள் என்பதால் இந்தப் பாடலின் மெல்லுணர்வுக்கும் பிரபுதேவாவுக்கும் ஏதும் சம்மந்தமில்லை என்பதாகத்தான் வடக்கத்திக்கரர்கள் நினைத்துக்கொள்வர்கள். மேரே ஜீவன் சாத்திக்கும், தேரே மேரே பீச்சுமேவுக்கும் பாலசந்தருக்கும் சம்மந்தமில்லாததுபோலத்தான் எண்பதுகளின் துவக்கத்தில் நடந்துகொண்டார்கள். அதேதான் இப்போதும் நிகழ்கிறது. நடனத்தில் வடக்கில் பிரபுதேவாவின் பெயர் உச்சரிக்கப்படுவதாலேயே ஓரள்விற்கு 'வாண்டட்' திரைப்படத்தில் பிரபுதேவா குறித்துப் பேசுகிறார்கள், ஒருவேளை பிரபுதேவா முருகதாஸைப் போல் இயக்குநராக மட்டும் இருந்திருந்தால், இந்தி கஜினியில் முருகதாஸ் கண்டுகொள்ளப்படாததைப்போல் பிரபுதேவாவையும் விட்டிருப்பார்கள். வடக்கு வாழ்வதற்கும் தெற்கு தேய்வதற்கும் வடக்கத்திக்காரர்களை ...