Skip to main content

Posts

Showing posts from February, 2006

சுட்ட பழம்

இன்று ஒதுங்கிய பாக்கிஸ்தானி ஹோட்டலின் கல்லாவில் இருந்த பஞ்சாபிக்கு பழைய இந்திப் பாடல்களின்மேல் இத்தனை மோகம் ஏனென்று தெரியவில்லை. கரகர ஒலியமைப்பில் வலுக்கட்டாயமாக தில் புகாரே ஆரே ஆரே ஆரே (ஜுவல் தீ·ப்) பாடலை ஓடவிட்டிருந்தார். 'ஆசாத், ஏதோ தமிழ்ப் பாட்டு ட்யூன் மாதிரி இருக்கே' 'ஆமா அண்ணே. "நாணத்தாலே கால்கள் பின்னப் பின்ன .நடத்தும் நாடகம் என்ன" - சி.ஐ.டி. சங்கர். அனேகமா மியூசிக்கு வேதா வாத்தான் இருக்கணும்' இந்தி - தமிழ் 'சுட்ட' மெட்டுகளைப் பட்டியலிட்டால் தோண்டத்தோண்ட வந்துகொண்டே இருக்கும். அறுபதுகளில் நாம் சுட்டோம். எண்பதுகளில் அவர்கள் சுட்டார்கள். தொண்ணூறுகளில் அவர்கள் இன்னமும் அதிகமாகச் சுட்டார்கள். இரண்டாயிரத்தில் சுட்ட பழங்கள் புளித்துவிட்டனவோ என்னவோ, சுட்டவை கேட்கக்கிடைக்கவில்லை. 'தில்லானா தில்லானா' வை வடக்கத்தியர்கள் சுட்டு 'தீவானா தீவானா' வாக மாற்றியதற்குப் பிறகு வேறு எதுவும் சுடப்பட்டதா என்பது தெரியவில்லை. குன்குனாரரேஹை பவ்ரே கில்ரஹே ஹைன் கலி கலி (ஆராதனா) எங்கள் வீட்டுத் தங்கத் தேரில் இந்த மாதம் திருவிழா திருவிழா (அருணோதயம்?) ராதை...

ரங்கு தே பஸந்தியில் விடுதலை வேட்கைக் கவிதை

சோஹா அலி கானின் ஒயிலான உடையலங்காரத்தையும், ஆமிர் கானின் இளமையையும், ஏ.ஆர். ரகுமானின் பாங்ராவையும் குறித்து இன்னொரு நாளில் பேசிக்கொள்ளலாம். பஞ்சாபி உச்சரிப்பில், 'வோ தோ பச்பன்ஸே ஷைத்தான் தா' (அது சின்னப் புள்ளைலேர்ந்தே பிசாசுதான்) எனக் கலக்கும் கிரன் கேர் குறித்தும் இன்னொரு நாள் பேசலாம். இப்போது விடுதலைப் போராட்ட வீரர் - கவிஞர் ராம் ப்ரஸாத் பிஸ்மிலின் கவிதையின் தமிழாக்கம். * அந்த வெள்ளைக்காரப் பெண், விடுதலைப் போராட்ட வீரர்கள் சந்திரசேகர ஆசாத், அஷ்ஃபாக்குல்லாஹ் கான், ராம் ப்ரஸாத் பிஸ்மில் கூட்டணியைப் பற்றிய ஆவணப் படம் எடுக்கிறாள். பாத்திரத் தேர்வுக்காக ஆள்களைத் தேடும்போது ராம் ப்ரஸாத்தாக நடிக்க யாரைத் தேர்ந்தெடுப்பது என தோழியுடன் பேசிக்கொண்டிருக்கும்போது, அவன் அங்கே வருகின்றான். 'ராம் ப்ரஸாத் பிஸ்மில் இங்கே உங்களுக்குக் கிடைக்கமாட்டார். கலாசாரத்தை மதிக்கும் இந்திய இளைஞனை இங்கேயா தேடுகிறீர்கள்' என்று உணர்ச்சி பொங்க சொல்லிக்கொண்டே வருகிறான். இவன் விவகாரமானவன், வா போய்விடலாம் என்னும் தோழியின் சொல்லைக் கேட்காமல், அவனது பேச்சால் ஈர்க்கப்பட்டு பிஸ்மிலின் பாத்திரப் படைப்பு இ...

கவியரங்கக் கவிதை - மறுபதிப்பு

அன்புடையீர், சந்தவசந்தம் யாஹூ குழுமத்தில் நடக்கும் கவியரங்கில் கலந்துகொண்டேன். எனக்கு மிகவும் பிடித்தமான எண்சீர் விருத்தத்தில் கவிதை ஒன்றை எழுதினேன். கவியரங்கின் தலைப்பு கனவிலிது கண்டேன் . எண்சீருக்காக இரண்டு வகையான தாளக்கட்டுகளை அமைத்துக்கொண்டேன். முதலில், கவியரங்கத் தலைவருக்காகப் பாடியதில் ஒவ்வொரு அரை அடியிலும், [தன.னா.னன] [தன.னா.னன] [தன.னா.னன] [தன்னா] என்னும் தாளக்கட்டு வரும். கனி கனி கனி மா கனி கனி கனி மா என்பார்கள் சில இடங்களில் 'தன' என்னும் தாளம் 'னா' வாகவும், 'னா' என்னும் தாளம் 'தன' வாகவும் ஒலிக்கலாம். ஆயினும், ஒவ்வொரு அரை அடியிலும் முதல் மூன்று வார்த்தைகளின் கடைசிச் சீர் 'னன' வாகவும் நான்காவது வார்த்தையின் முடிவு 'னா' வாகவுமே இருக்கும். இசைப் பாடல்களில் இப்படி 'தன' வும் 'னா' வும் மாறி ஒலிப்பது சகஜம். காட்டு 1: மதன மா.ளிகை. யில் மந்.திர மா.லை.களாம் உதயக் கா.லம். வரை உன்.னத லீலை.களாம் முதல் அடியில் யில் = னா , அதே இடத்தில் இரண்டாம் அடியில் வரை = னன. காட்டு 2: நில்லாமல் சுழலும் பூமியிது எல்லாரும் நடிக்கும் மேடையி...

டாவின்சி கோடு - THE DA VINCI CODE

சுஜாதா சார்தான் நம்மள நல்லா தயார் பண்ணி வெச்சிருக்காரே. அதுனால ஆரம்பிச்சப்பவே தோணிடுச்சு, எதுக்கு இவ்ளோ பில்டப்பு? சும்மா வி.ஜி.பி. தங்கச்சாவி கணக்கா ஒவ்வொண்ணா தடயங்கள விவரிச்சுக்கினே போறப்பதான் தெரிஞ்சுடுதே இது 'பலூன்றா கண்ணா' ன்னு. சுஜாதா சாரோட ராஜராஜன் கிணறுல என்னா பண்றாங்க? இதுதான் பண்றாங்க. பெரிய புதையல் கெடைக்கப்போகுதுன்னு பாத்தா, கடேசில புதையல் இருந்த பித்தளக்கொடத்துல இன்னொரு ராஜா துண்டு சீட்டு எழுதி வெச்சிருப்பாரு, "மன்னிச்சுக்கபா, நாட்டுல பஞ்சம் வந்தப்ப புதையல்லேர்ந்து பணத்த எடுத்து செலவு பண்ணிட்டேன்" . டாவின்சிகோடு ல என்னா பண்றாங்க? கிட்டத்தட்ட ரா.ரா.கி. மாதிரிதான் ஒரு சமாச்சாரம். முடிவ சொல்றதா நெனச்சுக்காதீங்க, படிச்சா நீங்களே நாலஞ்சு அத்தியாயத்துல ரெண்டு மூணு யூகத்துக்குப் போயிருவீங்க. பாரீஸ் நகரோட அமைப்பெல்லாம் நல்லாச் சொல்லி விறுவிறுப்பான ஆரம்பம்தான். அருங்காட்சியகத்துல நடக்ற ஒரு கொலைல கதை ஆரம்பமாவுது. பெஸ்ட் செல்லர்களுக்குன்னே இருக்ற வழமையான ஹை டெக் ஃபண்டால்லாம் எக்கச்சக்கமா இருக்குது. ஃபண்டாவ கடேசில பாக்கலாம், இப்ப கதை. ஜாக் சானீர் - பெரியவரு, வி.ஐ.பி...

நானும் மகிழுந்துகளும்

கொசப்பேட்டை குப்புசாமியின் வலைப்பதிவில் டாடா சஃபாரியின் முன்புறத்து பம்பரில் இருந்த எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்கைப் பார்த்ததும் சென்னை - ஆயிரம் விளக்கு - தீதார் மோட்டார்ஸில் சர்தார்ஜியின் வெடிச் சிரிப்பை ஒதுக்கிவிட்டு சுவற்றில் பார்த்து படிக்கக் கிடைத்த வாசகம் நினைவுக்கு வந்தது. Accessories are not extra fittings . கூடவே வண்டிகளைப் பற்றிய சில நினைவுகளும். துபாய்க்குச் சென்ற நாள்முதலாக ஆலன் டைலர் எழுதும் 'வீல்ஸ்' தொடரை ஆர்வமாகப் படித்தபோதிலும் முதன்முதலாக ஸ்டீரிங்கைத் தொட்டது 93இல் எமிரேட்ஸ் ஓட்டுனர் பயிற்சிப் பள்ளியில்தான். வண்டி, டைஹாட்ஸு - அப்ளாஸ் , சிறிய வண்டிதான். பயிற்சிக்கு ஏற்ற வண்டி. முட்டி மோதி ரிவர்ஸ் பார்க்கிங், கராஜ் பார்க்கிங், ஸ்லோப் எல்லாம் கற்றுக்கொண்டது இதில்தான். பவர் ஸ்டீரிங் இல்லாமல் குறுகலான இடங்களில் வளைப்பதற்கு ஒரு வாரம் டம்பிள்ஸ் அடித்த புஜங்கள் தேவை. ஓட்டுனர் உரிமம் பெற்றதும் ஓடிச் சென்று எடுத்த வாடகை வண்டி டொயோட்டா - கொரல்லா , வளைகுடா வாழ் நடுத்தர மக்களின் மானசீக வாகனம். ஓடுகின்ற சொத்து என்னும் அடைமொழி இதனைத் தவிர வேறெந்த வண்டிக்கும் கிடையாது. விற்க வேண்ட...