சிலம்பம் குறித்த எண்ணங்கள்
-------------------------------
சிலம்பம் என்றதும் பெரும்பாலானோர் கற்பனையில் தோன்றுவது எதாவது திருவிழாவோ அல்லது திரைப் படங்களோதான். சீன ஜப்பானிய சண்டைக்கலைகள் திரைப்படங்கள் வழியாக நமக்கு அறிமுகமான பிறகு, சிலம்பத்தை நமது விளையாட்டுகளில் ஒன்றாக பொருத்திப் பார்க்கும் வாய்ப்பு அற்றுப்போனதென்பது எனது எண்ணம்.
இந்தக் காரணம் மட்டுமின்றி, வழிவழியாக சிலம்பம் கற்றவர்களும் அதனை உடற்பயிற்சியின் ஒரு அங்கம் என்று இளைஞர்களுக்கு உணர்த்தாமல், வீர விளையாட்டு என்றே சொல்லி கொஞ்சம் விலக்கி வைத்துவிட்டார்களோ என்றும் நினைக்கத் தோன்றுகிறது. சிலம்பத்தை தற்காப்புக் கலை (மார்ஷல் ஆர்ட்) என்பதை விடவும், நமது பாரம்பரியங்களுள் ஒன்று என முன்னிறுத்துவதே சிறப்பு.
இன்றைக்கும் மாநில அளவில் சிலம்பப் போட்டிகள் நடக்கின்றன. தனியார் தொலைக்காட்சிகள் எப்போதாவது கிடைக்கும் நேரத்தில், போட்டிகளை இரண்டு மூன்று நிமிடங்கள் ஒளிபரப்பிவிட்டு அடுத்த விளம்பரதாரர் நிகழ்ச்சிக்குச் சென்றுவிடுகிறார்கள். திருவிழாக்களுக்குச் செல்வதும், சிலம்பாட்டத்தைப் பார்ப்பதும் நமது இன்றைய வாழ்வில் சாத்தியப்படுமா என்பது ...