Skip to main content

Posts

Showing posts from February, 2005

பிலிம்பேர் விருதுகள் - 50வது ஆண்டு

பிலிம்பேர் விருதுகள் - 50வது ஆண்டு வணிகத் திரைப்படத்திற்கு விருது வழங்கும் விழாக்களில் கோலாகலத்துக்குக் குறைவிருக்காது. அதிலும் விருது வழங்குவதில் ஐம்பதாவது ஆண்டினை எட்டியிருக்கும் பிலிம்பேர் பத்திரிகையின் விருது வழங்கும் விழா வழமையான கோலாகலங்களுடன் நடந்தது. சோனி எண்டர்டெயின்மெண்ட் சானல் அதை ஒளிபரப்பி என்னைப் போன்ற திரை ரசிகர்களிடமிருந்து புண்ணியம் கட்டிக்கொண்டது. ஒருமணி நேரம் தாமதமாகவே நிகழ்ச்சியைக் காண முடிந்தது. சிறந்த திரைக்கதைக்கு (யுவா) 'நம்மவர்' மணிரத்தினம் விருது வாங்கியதைப் பார்க்கமுடியவில்லை. ஸ்வரூப் க்ரூப் புரவலராக இருந்த இந்த விழாவில், அறிவிப்பாளராக சோனாலி பிந்தரே, சைப் அலி கான், பரீதா ஜலால். நிகழ்ச்சியை அலுப்பு தட்டாமல் எடுத்துச் சென்றார்கள். விருதுகள் விஷயத்தில் வணிக சினிமாவோ, இணை சினிமாவோ எப்போதுமே மாற்றுக் கருத்துகள் இருக்கும். ஜாம்பவான்களுக்கு விருதுகள் கிடைக்கும்போது வேண்டுமானால், அந்த மாற்றுக் கருத்துகளின் விகிதம் குறைந்திருக்கும். எனக்கு உண்டான மாற்றுக் கருத்துகள் இரண்டு. 1. பரிந்துரையில் இருந்தவற்றில், 'ரெயின்கோட்' ஐஷ்வர்யாவிற்கு சிறந்த நடிகைக்கான வ...

அனுமன் பறந்ததும் நேரவித்தியாசமும்

அனுமன் பறந்ததும் நேரவித்தியாசமும் அன்புடையீர், ஹரி அண்ணன் அவர்களின் அனுமன் நூல் வெளியீட்டு விழா கடற்கரையில் நடந்தது குறித்து பத்ரி அவர்களின் வலைப்பதிவில் படித்திருப்பீர்கள். அதில் ஹரியண்ணன் பேசிய 'கம்பனில் நேரவித்தியாச' விஷயங்கள் குறித்து சிறிது யோசித்துப் பார்த்தேன். சுருக்கமாக மனக்கணக்காகவும் சொல்லக்கூடிய அந்த நேரவித்தியாசத்தை, விளக்கமாக எழுதிப் பார்க்க எண்ணி இக்கட்டுரையை எழுதினேன். அதிகமாக பூகோள விஷயங்களை அணுகிப் பார்க்காமல், மேலெழுந்தவாரியாக தோராயமாகவே எல்லாவற்றையும் மனதில் கொண்டு சில கூட்டல் கழித்தல்கள் போட்டு ஹரி அண்ணன் சொன்ன விஷயத்தை அணுகிப் பார்த்தேன். நான் போட்ட கூட்டல் கழித்தல்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள நினைக்கிறேன். ***** சவூதி அரேபியாவிற்கும், இந்தியாவிற்கும் இடையே நேர வித்தியாசம் 2 மணி 30 நிமிடம். தீர்க்க ரேகையில் பதினைந்து பாகைக்கு ஒரு மணி நேரம் என்பதே நேர வித்தியாசமாக இருப்பினும், அந்தந்த நாட்டின் முறைமைப்படி ஒரே நேரத்தையே வைத்திருப்பதை, நமது வசதிக்காக, இப்போதைக்கு சிறிது மறக்கலாம். ஜித்தா இருப்பது 40பாகை தீர்க்கரேகையில், சென்னை இருப்பது 80பாகையில். இந்த நாற...

சென்னையில் தயாரான முதல் படம்

சென்னையில் தயாரான முதல் படம் நண்பர் ராம்கியின் பரிந்துரையைக் கேட்டு எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய உலக சினிமா வை வாங்கியபின் இன்றுதான் கொஞ்சம் புரட்டிப் பார்க்க நேரம் கிடைத்தது. எழுநூற்றைம்பது பக்கங்கள் கொண்ட புத்தகம். ஒரே மூச்சில் படித்து முடிக்க மலைப்பாக இருந்ததால், பிடித்தமான பகுதிகளை முதலில் படிக்கத் துவங்கினேன். உலகின் நூறு சிறந்த படங்களாக புத்தகத்தின் தேர்வுக்குழு தந்திருக்கும் பட்டியலில், 1. கான் வித் த விண்ட் 2. காந்தி 3. இ.டி. 4. த லாஸ்ட் எம்பரர் 5. டைடானிக் 6. பென்ஹர் 7. ஸ்டார் வார்ஸ் 8. த காட் பாதர் இவ்வளவே பார்த்திருக்கும் என்னைப் பார்த்து 'நீயெல்லாம் படம் பாக்குறேன்னு சொல்லாத' என புத்தகம் சிரிப்பது ஒருபுறமும், பட்டியலில் பாதிக்கு மேல் கேள்விப் படாத படங்களாக இருப்பதால் மனதிற்குள் கொசுவாகிப்போன உணர்வுகளுடனும், பட்டியலையும், படங்களைப் பற்றியும் மேலோட்டமாக மேய்ந்துவிட்டு இந்திய சினிமாப் பகுதியைப் படித்தேன். இருபத்தேழு சிறந்த இந்திய இயக்குனர்களைத் தேர்ந்தெடுத்து தேர்வுக்குழு தந்திருக்கும் பட்டியலில் தமிழ்த் திரையிலிருந்து ஐவர். 1.மணிரத்னம் 2.பாலசந்தர் 3.பாலுமகேந்திரா ...

சுட்டாச்சு சுட்டாச்சு - புத்தகம். எனது பார்வை

சுட்டாச்சு சுட்டாச்சு (புத்தகம்) எம்.ஜி.ஆர். - எம்.ஆர்.ராதா குண்டடி வழக்கு குறித்த புத்தகம் இது. திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை பகுதிகளில், குறிப்பாக, ஜானிஜான் கான் தெரு, டாக்டர் பெசன்ட் சாலை, ஷேக்தாவூத் தெரு பகுதிகளில் வாழும் நாற்பது + வயதில் இருக்கும் அனைவருக்குமே அந்தப் பகுதியில் நிகழ்ந்தவை ஒரே பாதிப்பை உண்டாக்கியிருக்குமோ. சுதாங்கன் அவர்களின் புத்தகத்தைப் படிக்கையில் அப்படித்தான் தோன்றுகிறது. "உம்மா, அங்க போனாலும் அவரைப் பாக்க முடியாது. போலீசு கட்சிக்காரங்கன்னு பெரிய கூட்டம். ஆஸ்பத்திரி கிட்டவே போவமுடியாதுன்னா கேளேன்" "எல, என்ன நீ அங்க கூட்டிட்டுப் போவப்போறியா இல்ல நானே போவவா. தோ இருக்கு ஆஸ்பத்திரி" எம்.ஜி.ஆர். அவர்கள் குண்டடிபட்டு ராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தபோது எங்கள் பகுதியில் (ஆறு வயதில்) நான் கேட்ட உரையாடல்களில் இதுவும் ஒன்று. இப்படிப்பட்ட உரையாடலைக் கேட்ட அனுபவம் அந்தப்பகுதியில் வசித்தவர்களுக்கு அனேகமாக இருந்திருக்கும். இதுபோன்ற நிகழ்வை, புத்தக ஆசிரியர் சுதாங்கன் அவர்களும் கண்டிருக்க, அந்த நிகழ்விலிருந்துதான் ஒரு நாவலைப் போல சுட்டாச்சு சு...

மெட்ராஸ் டு பாம்பே

மெட்ராஸ் டு பாம்பே சமீபத்தில் தமிழிலிருந்து இந்திக்கும், இந்தியிலிருந்து தமிழுக்கும் ம் மொழிமாற்றப்பட்டு எடுக்கப்பட்ட திரைப்படங்களின் பட்டியலைத் தொகுத்தேன். இது முழுமையான பட்டியல் அன்று. அறிந்தவரியில் தொகுத்திருக்கிறேன். சில அங்கிருந்து வந்தன. சில இங்கிருந்து போயின. மொழிமாற்றத்தில் சரியாக பிராந்தியத்தின் நாடி பிடித்து கதைக்காக வெற்றியைப் பெற்றவை சில. ஸ்டார் வேல்யூவின் அடிப்படையில் வடக்கை அப்படியே வடித்தும் வெற்றி பெற்றவையும் இருக்கின்றன. ஊத்திக்கொண்டவை சில. ஊத்தலோ ஊத்தலானவை சில. இங்கிருந்து போனவை: 1. அந்த ஏழு நாட்கள் = வோ சாத் தின் 2. நாயகன் = தயாவான் 3. தேவர் மகன் = விராசத் 4. ஒரு கைதியின் டைரி = ஆக்ரி ராஸ்தா 5. சிகப்பு ரோஜாக்கள் = ரெட் ரோஸஸ் 6. மாப்பிள்ளை = ஜமாய் ராஜா 7. ரிக்ஷ¡க்காரன் = ரிக்ஷ¡வாலா 8. வாணி ராணி = சீதா அவுர் கீதா 9. காதலிக்க நேரமில்லை = ப்யார் கியே ஜா 10. படோசன் = அடுத்த வீட்டுப் பெண் 11. சட்டம் ஒரு இருட்டறை = அந்தா கானூன் அங்கிருந்து வந்தவை: 12. கோரா அவுர் காலா = நீரும் நெருப்பும் 13. பே ஈமான் = என் மகன் 14. நசீப் = சந்திப்பு 15. துஷ்மன்...

கிஸ்னா

கிஸ்னா முன்னணி நிறுவனத் தயாரிப்பு, முன்னணிக் கதை சொல்லி சுபாஷ் கை, முன்னணி இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரகுமானும் இஸ்மாயில் தர்பாரும், முன்னணிக் கவிஞர் ஜாவீத் அக்தர், முன்னணி ஒளிப்பதிவாளர் அஷோக் மேத்தா, முன்னணி நடன அமைப்பாளர்கள் சரோஜ் கானும் ஷைமக் தவாரும், இப்படி எல்லா முன்னணிகளும் இருந்தும் கதைப் பின்னணி எதையும் தொடாமல் இங்கும் அங்கும் அலைந்ததன் விளைவோ என்னவோ, கிஸ்னா ஏமாற்றத்தையே தந்தது. பிரிட்டனைச் சேர்ந்த காத்தரீன், இந்தியாவுக்கு வந்து மூவாயிரத்து ஐநூறு கோடி ரூபாயினை தர்ம காரியங்களுக்குத் தருவதற்கு முன்வருகிறார். இந்திய அரசின் சுற்றுலாத்துறை அவருக்காக ஏற்பாடு செய்யும் 'பாரத் தர்ஷன்' சுற்றுலாவை மறுத்துவிட்டு, உண்மையான இந்தியாவை தனக்குக் காட்டவேண்டுமென்றால் தான் சொல்லும் இடத்திற்கு அழைத்துச் செல்லச் சொல்கிறார். *தேப்ரியாக், உத்ராஞ்சலில் பாகீரத் நதியும், அலக் நந்தன் நதியும் இணைந்து கங்கையாகும் இடத்திலிருக்கும் புண்ணியஸ்தலம். ரிஷிகேஷிற்கும் ஹரித்வாருக்கும் மேலே. அங்கே தன்னை அழைத்துச் செல்லச் சொன்னதும், கதை ·ப்ளாஷ் பேக்கில் சொல்லப்படுகிறது. (* வசனத்தில் ஒருமுறை கேட்டதை அப்...

ஈர்க்கும் எண்கள் (Fancy numbers)

ஈர்க்கும் எண்கள் (Fancy numbers) இது ஒரு மோகம்தான். சென்னையில் வாகனப் பதிவு எண்கள் M இலிருந்து T யாக மாற்றப்பட்டதும் எம்.ஜி.ஆர். அவர்கள் தனது வாகனத்திற்கு MGR பதிவாக வேண்டுமென மகாராஷ்ட்டிராவில் ஒரு வண்டியை பதிவு செய்து அதனைத் தமிழ்நாட்டில் ஓட்டியதாகச் சொல்லும் செய்தியில் எத்தனை உண்மை இருக்கிறதென்பதை நான் அறியேன். ஆனால், இந்த ஈர்க்கும் எண்களுக்கு மதிப்பு இருப்பதை அறிவேன். துபாயின் முக்கியமான ஷேக்குகளில் ஒருவரான ஷேக் அல்குரைரின் வாகனப் பதிவு எண் '1' . தனது வாகனத்தை மாற்றினாலும் பதிவு எண்ணை மாற்றாமல் அதையே உபயோகித்தார். 1 ம் எண்ணைக் கண்டதும் அது ஷேக் அல்குரைர்தான் என்பது துபாயில் இருக்கும் பலருக்கும் தெரிந்தது. 101 டாலமேஷன்ஸ் திரைப்படத்தில் க்ளென் க்ளோஸின் வண்டி எண் DEVIL எனத் தொடங்குவதாக ஒரு நினைவு. சவூதி அரேபியாவில் தொலக்காட்சித் தொடர் ஒன்றில் இத்தகைய ஈர்க்கும் எண்ணை முன் பதிவு செய்த பின், வண்டி வாங்கப் பணமில்லாமல், பழைய வண்டியை வாங்கி அதில் ஈர்க்கும் எண்ணை மாட்டி ஓட்டிச் செல்வதை நகைச்சுவைக் காட்சியாகவே காண்பித்தார்கள். ஈர்க்கும் எண் கிடைக்கிறதோ இல்லையோ, ப...