Skip to main content

Posts

Showing posts from July, 2008

எனது உடற்பயிற்சிக்கூடங்கள் - சொந்தக் கதை

சென்னை - திருவல்லிக்கேணி வளர்ப்பிற்குச் சிறிதும் மாற்றமில்லாமல் எல்லா மாணவர்களையும் போலவே எனக்கும் உடற்பயிற்சியில் ஆர்வம் இருந்தது. தாமைரை இலை அளவிற்கு விரிந்த சட்டைப்பட்டைக்குள் (காலர்) பஞ்சு வைத்துத் தைத்த சட்டைகள் போட்டு சாண்டோவாகிவிடத் துடித்த சில நாள்களும் கணக்கில் உண்டு. எல்லாம் துவங்கியது சென்னை - ஐஸ்ஹவுஸ் மாஸ்டர் உடற்பயிற்சிக்கூடத்தில்தான். ஞாயிற்றுக்கிழமைகளில் அங்கு சென்றால் ஆஜானுபாகுவான அந்த மாஸ்டர் இருப்பார். சொந்தமாக உடற்பயிற்சிக்கூடம் வைத்து நடத்தினாலும், வருமானத்திற்கு பள்ளியில் ஓட்டுனராகப் பணிபுரிந்து, உடற்பயிற்சியில் தனக்குள்ள ஈடுபாட்டை விளம்பரமில்லாமல் சொல்லிக்கொண்டிருந்தவர். டாக்டர் சிவா திரைப்படத்தில் ஆதிவாசிகள் பாடுகின்ற பாடலில் ஆதிவாசிகளின் தலைவராக நடித்திருப்பவர்தான் அந்த மாஸ்டர். ஞாயிறுகளில் அங்கு சென்று உடற்பயிற்சிக்கூடத்தைக் கூட்டித் தள்ளி, பளுக்கள், கம்பிகள், கண்ணாடிகள் இவற்றைத் துடைத்தால் ஒருமணி நேரம் இலவசமாக உடற்பயிற்சி செய்யலாம். அப்படிச் செய்ய நான்கைந்து பள்ளிமாணவர்கள் இருந்தார்கள், அவர்களுள் நானும் ஒருவன். அங்கே துவங்கியதுதான் ஆர்வம். கொஞ்சம் வளர்ந்த பிற...

தசாவதாரம் - முதல் சண்டைக்காட்சி குறித்து

ஆணழகன் போட்டியின் அடிப்படை வெளிப்பாடான 'முன் தோள் பரவல்' (Front lat spread) பாணியில் தோள்களை விரித்து புஜங்களின் தசைகள் கட்கத்தில் அழுந்தியிருக்க கீழிருந்து துள்ளி எழுகின்ற காட்சி முதல், "சுங்கம் தவிர்த்த சோழனின் பேரனிடம் கர்வம் தவிர்க்கச் சொல்" என கர்ச்சித்து மணியை அடித்துவிட்டு திரும்பி நின்று குடுமியை முடியும்போது 'இரட்டைப் புஜம் - பின்புறம்' ( Rear double biceps) நிலைக்கு வருகின்ற வரையில் நிகழும் சண்டைக் காட்சிகளில் மிக நேர்த்தியாக நவீன வீச்சுகளின் சாயல் சிறிதும் கலக்காமல் அமைத்திருப்பதன் பின்னணியில் யார் இருக்கக்கூடும் என்னும் வினா எழுகின்றது. கமல்தானா, தியாகராஜனா (சண்டைப்பயிற்சி), கே.எஸ்.ரவிகுமாரா, அல்லது விலக்கப்பட்ட பயிற்சியாளரா? (சண்டைக்காட்சி நடிகர்களைப் பொதுவில் திட்டியதால் பிரச்சனை பெரிதாகி ஒரு பயிற்சியாளர் விலக்கப்பட்டதாக இணையச் செய்திகள் கூறுகின்றன). சண்டை நிகழும் காலகட்டம் பன்னிரண்டாம் நூற்றாண்டென்பதால் சீன ஜப்பானிய சண்டைக் கலைகளில் காணப்படும் வீச்சுகளின் சாயலோ, நமது பாரம்பரியக் குத்துச் சண்டைகளில் வீசப்படும் வரிசைகளோ இல்லாமல் மற்போரின் பாணிய...

கலைஞர் தொலைக்காட்சி - கானா குயில்

கானாப் பாடல்களைத் தொகுத்து வழங்குபவர் சென்னைத் தமிழ்தான் பேசவேண்டும், கானாவின் பாரம்பரியம் காக்கப்படவேண்டும் என்றெல்லாம் பேச வரவில்லை. காலத்திற்கேற்ப எங்கும் மாறுதல்கள் வரும், கானாவிலும் அது வந்திருக்கிறது, அதற்காக கானாவிற்கு எந்தவிதத்திலும் தொடர்பில்லாத பாடல்களையெல்லாம் அந்தப் பெண்மணி பாடிவைத்து இடையிடையே கானாக்களைத் தொகுத்து வழங்குவதை மனம் ஏற்க மறுக்கிறது. கானாவின் மரபு காப்பாற்றப்படாவிட்டாலும் தவறில்லை, ஆனால், தனிப்பட்ட ஒலி-ஒளிப்பதிவினைப் போல இந்த அம்மையாரை மட்டும் திரைப் பாடல்களில் கானாக்கள் அல்லாதவறையும் பாடவைத்து இந்தப் பாடல்களுக்கும் கானாக்களுக்கும் தொடர்பு இருப்பதான மாயையை உண்டாக்குவது தவறு. தீபா வெங்கட் டின் மேல் எனக்கொன்றும் கோபம் கிடையாது. தொலைக்காட்சித் தொடர்களில் அவருக்கென ஓர் இடம் இருப்பதைக் கொஞ்சமேனும் தொடர்களில் கவனம் செலுத்துவோரும் அறிந்திருப்பார்கள். அது வேறு நேயர்க்கூட்டம்; இது வேறு நேயர்க்கூட்டம். இங்கே, கானாக் குயில் நிகழ்ச்சியில் மிகக் குறைந்த அளவே விளம்பரங்கள் வருவதால், இதன் நேயர் வட்டம் குறுகியதென்பதைப் புரிந்துகொள்ள முடிகின்றது. அந்தக் குறுகிய வட்டத்தினருக்காகவ...