Skip to main content

Posts

Showing posts from May, 2008

சிக்கன் ஆஃப்கானியும் சில எண்ணங்களும்

வழமையான சிக்கன்65, பட்டர் சிக்கன், சில்லி சிக்கன் ஆசாமிகளுக்கு சிக்கன் ஆஃப்கானி பிடிக்காது. புளிப்பு, காரம், துவர்ப்பு இவற்றைக் கலந்துகட்டி அரைத்தால் என்ன சுவை வருமோ அப்படியான மாறுபட்ட சுவையாக இருக்கும். மசாலாவுடன் சேர்த்து கொஞ்சம் பாக்கையும் அவர்கள் அரைக்கின்றார்களோ என்னும் சந்தேகம் வரக்கூடும். கொஞ்சம் கொஞ்சமாக நாக்கு சுவையறிந்து மூளைக்கு தகவல் அனுப்பிய பின்னரே அந்தத் துவர்ப்பு ஏலக்காயை அரைத்துப் போட்டதால் உண்டானது விளங்கும். நிறத்தை விடுத்து அமைப்பை மட்டும் பார்த்தால் நமது செட்டிநாடு உணவகங்களில் கிடைக்கும் சிக்கன் போன்லெஸுடன் ஒத்துப்போகும். இந்தப் பதார்த்தத்தில் கோழிக்கறியை எலும்புடன் போடுவதா எலும்புகளை நீக்கிவிட்டுப் போடுவதா என்னும் விவாதங்கள் பாகிஸ்தானிய அரசியல் விவாதங்களை விட அதிசிக்கலானவை, அதனால் தேவையற்றவை. நான் எப்பொழுதாவது சாப்பிடும் துபாய் சில்வர் ஈகிள் உணவகத்தில் எலும்புகளை நீக்கிவிட்டுத்தான் சமைக்கிறார்கள். எலும்புகள் நீக்கப்பட்ட மாமிசத்தை சாப்பிடுவதில் அப்படியொன்றும் பேரானந்தம் கிடைப்பதில்லைதான், ஆனாலும், என்னளவில் சிக்கன் ஆஃப்கானி மட்டும் அதற்கு விதிவிலக்கு. மிளகுக் காரமு...

சென்னை கானா - புத்தகம் எனது பார்வையில்-2

சென்னை கானா புத்தகம் - எனது பார்வையில்-1 வடசென்னை விளிம்புநிலை மனிதர்களின் வாழ்வுடன் இரண்டறக் கலந்துவிட்ட காவல் நிலையங்களும், அரசு மருத்துவமனைகளும் கானாக்களில் காணக்கிடைக்கும்போது அவை அறிமுகப்படுத்தும் சென்னையின் இன்னொரு முகம் கிழக்குக் கடற்கரைச் சாலைக்கும் அடுக்கு மாடிக்குடியிருப்புகளுக்கும் அன்னியமானது. நீ குடிச்சுப்புட்டு கலாட்டாப் பண்ணா புடிச்சுருவாரு அந்த போலீஸ்காரு! லாக்கப்புல அடச்சுருவாரு! ஜாமீனுண்ணு வந்தாலும் மாலு நீ தந்தாலும் வைத்திருக்கும் எஸ்.பி. உன்னை விடமாட்டாரு! * அரசாங்க ஆசுபத்திரி அங்கே ரேஷன் கடை மாதிரி ஆயிரக்கணக்கு ஜனங்க நிக்கிதுங்க அஞ்ஜி ரூபா நோட்டக் காட்டு எல்லோருக்கும் முன்ன போயி டாக்டர் முகம் பாக்கலாமுங்க! (பவுராஸ் பாண்டியன்) எஸ்.பி., எஸ்.ஐ., ஏட்டு, மஃப்டி, அக்யூஸ்ட்டு, ஏ2, ஜாமீன், பெயிலு, கஸ்டடி, தொகுதி, பகுதி, வார்டு, சார்பட்டா இப்படியான வார்த்தைகளுள் ஏதாவதொன்றை நிமிடத்தில் ஒருமுறையேனும் உபயோகிக்கும் மக்களின் வாழ்க்கை முறையின் ஒரு சிறிய கீற்றாக பவுராஸ் பாண்டியனின் மேற்கண்ட வரிகளைக் காண முடிகின்றது. பவுராஸின் வரிகளாக புத்தகத்தில் அச்சாகியிருக்கும் சில வரிகள் உண்மை...

ஒரு பாடலும் சில நண்பர்களும்

செல்பேசியில் வந்த எண் புதிதாக இருந்தது. அலுவலகம் தொடர்பான அழைப்புகளே பெரும்பாலும் என்பதால், வழமையான முகமனுடன் துவங்கினேன். "பேசறது யாரு தெரியுதா?" மறுமுனையில். "தெரியலீங்களே" "என்னங்க ஆசாத், உங்க பாட்ட இப்பத்தான் சென்னை சங்கமத்துல பாடுனேன், தெரியலேன்றீங்களே!" "அடடே இறையன்பனா? சரியாப்போச்சு. என்ன விசிட்ல வந்துருக்கீங்களா?" "இல்ல. இங்க ஒரு இசை நிகழ்ச்சிக்கு வந்திருக்கேன்" அவசியப்பட்ட விசாரிப்புகளுக்குப் பின், துபாய் நிகழ்ச்சியில் பாடுவதற்கு இரண்டொரு வரிகள் எழுதித் தரவேண்டுமென்று கேட்டுக்கொண்டார். புதன்கிழமை இரவு செல்பேசியில் வர்ணமெட்டை வாங்கிக்கொள்வதான திட்டம் நிறைவேறாமற்போனது. அன்று ரினைசன்ஸில் துபாய் ட்ரம்ஸ்ஸின் அதிரடிநடைகளில் லயித்துவிட்டு நண்பருடன் ஷார்ஜா சென்று திரும்புவதற்குள் நள்ளிரவாகிவிட்டது. அதற்குமேல் இறையன்பனை அழைத்து மெட்டைக் கேட்டு பாடல் எழுதும் மனநிலையில் இல்லை. வியாழன் மாலை பார்த்துக்கொள்ளலாம் என விட்டுவிட்டேன். வியாழன் மதியம் வழமையான குட்டித் தூக்கத்திற்குப் பின் நண்பரை செல்பேசியில் அழைத்து மெட்டை உள்வாங்கி அவசரம் அவசர...