ஆங்கிலக் கலப்பில் என்றைக்குமே ஆசிபுக்கு விருப்பம் இருந்ததில்லை; தேவைக்குஆங்கிலம் கலப்பதில் தவறில்லை என்னும் எண்ணம் கொண்டவன் நான். ஏதோ ஒரு விளையாட்டான நினைப்பில் பாடுவோர் பாடினாலுக்கு ரீமிக்ஸ் வரிகள் எழுதினால் என்ன எனத் தோன்றியது. ஆசிபும் பாடினார், ஆனாலும் கோபத்தைப் பாடலிலேயே வெளிப்படுத்தினார், சல்தா ஹை. பாடல் நன்றாக வந்திருப்பதாக எனது எண்ணம். * வழமையான வர்ணமெட்டுகள் மறுகலவையில் பாடப்படும்போது அங்கே இங்கே நீட்டி சுருக்கி வளைத்து நெளிந்துதான் வார்த்தைகள் உச்சரிக்கப்படுகின்றன. அதன்போக்கில் கொஞ்சமும், ஆங்கிலம் கலந்து எழுதியதால் அதன்போக்கில் கொஞ்சமும் வார்த்தைகள் சென்றதால், ஓரிரு இடங்களில் தத்தகாரத்துக்காக நிரையசையின் பாதியைக் கூட நெடில் போலாக்கிப் பாடுவதும், நெடில் நேரசையைக் குறில் போலாக்கிப் பாடுவதும் பாடுபவரின் பாணியைப் பொறுத்து இந்த மறுகலவையில் அமையக் கூடும். மறுகலவை பாடுவோர்க்கான சில குறிப்புகள்: 1. 'ட', 'ண' இவற்றை உச்சரிக்கும்போது நுனிநா மேலண்ணத்தின் நடுவில் படாமல் பற்களும் ஈறுகளும் இணையும் இடத்தில் படவேண்டும். 2. குற்றியலுகரம் என்ற ஒன்று இருப்பதாகவே காட்டிக்கொள்ளக் கூ...