Skip to main content

Posts

Showing posts from 2006

THE AFGHAN by Frederick Forsyth - எனது பார்வை

அன்புடையீர், இந்த நாவலப் படிக்ற பலர் பலவிதமா அணுகப்போறாங்க. சிலரு இதுல வர்ர சில விவரிப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்பு இருக்குங்க. கதைதானேன்னு வுட்டுட்டும் போகலாம். ஆங்கிலத்துல இணையத்துல கொஞ்சம் தேடிப்பாத்தேன், நாலு வரி பாராட்டி எழுதியிருக்காங்க, ஒருத்தரு மட்டும் பூகோள ரீதியா, கடல் மார்க்கம் - பாதுகாப்பு ரீதியா கொஞ்சம் அங்க இங்க தப்பு பண்ணியிருக்காருன்னு சொல்லியிருக்காரு அதெல்லாம் சரின்னு படிச்சுவச்சுக்கிட்டேன். சென்னைல நாவலப் படிச்சு முடிச்சதும் நமக்கு மனசுல ஓடுன எண்ணமே வேறங்க, அத நான் கடைசில சொல்றனே. சென்னைலயே இத்த எழுதிட்டேன். இப்ப கொஞ்சம் அங்க இங்க தட்டுனேன். அது கெடக்கட்டும், இப்பத்திக்கு நாவலப்பத்திப் பாக்கலாமா? நாவல் நடக்ற கதைக்களன் நாம பாத்த எடமா இருக்கும்போது அதுல ஈர்ப்பு கொஞ்சம் அதிகமா இருக்குங்க. நா.பா.வுது நிசப்த சங்கீதம் படிக்கும்போது திர்லக்கண்ணி கண்ணு முன்னால வந்துது. நாம நடந்த கடற்கரைச் சாலை, விவேகானந்தர் இல்லம் இதச்சுத்தி கதை நகர்ந்தப்ப அதிகமாவே லயிக்க முடிஞ்சுது. இதே மாதிரி ஆங்கிலத்துல படிச்சதுலன்னா... ஸ்ஃபிங்ஸ் ஸுங்க. கெய்ரோவுல தஹ்ரீர், அருங்காட்சியகம், கான...

மு.மேத்தாவுடன் சிலமணிநேரங்கள்

மு.மேத்தாவுடன் சிலமணிநேரங்கள் சவூதி அரேபியாவுக்கு வந்திருந்த கவிஞர் மு.மேத்தா அவர்களை மக்காவிற்கும், மதீனாவிற்கும் அழைத்துச் செல்லும் பொறுப்பு எனக்குத் தரப்பட்டது. அலுவலகத்தில் விடுமுறைக்குச் சொன்னேன். ஜித்தாவில் இருப்பவர்களுக்கு இப்படியான (அறிந்தோர்களை மக்கா, மதீனா அழைத்துச் செல்வது) சேவை புதிதானது அல்ல என்பதால் உடனே அனுமதி கிடைத்தது. ஜித்தா - மக்கா ஒருமணிநேரப் பயணம். நலம் விசாரித்து, பயணத்திற்கான சில விவரங்களை சொல்லி முடிக்குமுன் மக்கா வந்துவிட்டது. கடமைகளைச் செய்து முடித்தபின் மக்காவின் அருகிலிருக்கும் மினா, அரஃபாத் திடல்களுக்குச் சென்றோம். மினாவில் கல்லெறியும் இடத்தில் கட்டுமானப் பணிகள் அதிவேகத்தில் முடுக்கிவிடப்பட்டிருக்கின்றன (சென்ற ஹஜ்ஜில் இங்கே அசம்பாவிதம் நிகழ்ந்தது சிலருக்கு நினைவிருக்கலாம் ). சாலையோரத்தில் வண்டியை நிறுத்திவிட்டு சிலர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுடன் சேர்ந்து நாங்களும் அதையே செய்தோம். அந்தி சாயும் பொழுது வந்துவிடவே, அவசர கதியில் மக்காவிற்கு வந்து அந்தி நேரத் தொழுகை முடிந்ததுக்கொண்டு ஜித்தா புறப்பட்டோம். இன்றைக்கு 1 + 1 மணிநேரப் பயணம்தான், நா...

ஐஷ்வர்யா - ரேகா - உம்ராவ் ஜான் - சில எண்ணங்கள்

ஐஷ்வர்யா - ரேகா - உம்ராவ் ஜான் - சில எண்ணங்கள் ஸ்பென்ஸர்ஸின் உணவங்காடியில் பத்தான்கோட் சென்று அனைத்துமே அனலில் வாட்டிய பதார்த்தங்கள் அடங்கிய 'தாலி' வகையை சாப்பிட்டுவிட்டு (சோறு மட்டும் அனலில் வேகவைக்காமல் நமது பாணியில் செய்தது), ஜஸ்ட் ஜூஸ் இலிருந்து அடிக்கடி வந்து நச்சரித்துக்கொண்டிருந்த பையனிடம் 'கண்ணா பாவக்காய் ஜூஸ் கெடைக்குமா' என கலாய்க்க நினைத்தேன். கேட்டுவைத்தால் ஒருவேளை ஓடிப்போய் பாகற்காய் வாங்கிவந்து அரைத்துக்கொடுத்தாலும் கொடுத்துவிடுவார்கள். அப்படி ஒரு சேவை. 'தேங்ஸ்' சொல்லிவிட்டேன். ஸ்பென்ஸர்ஸ் உணவங்காடியில் ஆங்கிலம் பேசிவிடுவது நல்லது. ரூஸ்டர் இல் நிற்கும் பிலிப்பினோவிடம் தமிழ் பேசினால் காரியம் நடக்குமா? சாப்பாட்டை முடித்துக்கொண்டு புத்தகக்கடைக்கு வந்து மேய்ந்துவிட்டு உம்ரா ஜான் (ஜே.பி.தத்தா - அனு மலிக்), சிவா (ராம் கோபால் வர்மா - இளையராஜா) ஒலிநாடாக்களை வாங்கினேன். வீட்டிற்கு வந்ததும் வராததுமாக உம்ராவ் ஜான் பாடல்களைக் கேட்கத் துவங்கினேன். 'ம்ம் இன்னொரு உம்ராவ் ஜான் கேசெட் வந்துருச்சு. பசங்களா இன்னும் கொஞ்சநேரத்துக்கு வாப்பாகிட்ட யாரும் போவாதீங...

சில சொந்த சமாசாரங்கள் - மறுஉறுதி (ரீகன்ஃபர்மேஷன்)

அன்புடையீர், கட்டுமானத்துறை குமார் அவர்களின் பதிவுதான் எனது பயண முன்பதிவு மறுஉறுதி (ரீகன்ஃபர்மேஷன்) அனுபவங்களை வலைப்பதிவில் பகிர்ந்துகொள்ளத் தூண்டியது. * முன்ன ஒருகாலத்துல ஏர்-இந்தியா அற்புதமா சேவை செஞ்சுக்கிட்டிருந்தப்ப நமக்கு ஜித்தா-பம்பாய்க்கு பயணச்சீட்டு அதுலதான் தந்துக்கிட்டிருந்தாங்க அதுவந்து, சமீபத்துல 1985ன்னு வச்சுக்கங்களேன் (டோண்டு ராகவன் சாருக்கு நன்றிகள்). சில பதிவுகள்ள சொல்லியிருப்பேன், அப்ப சென்னைக்கு நேரடி விமானச்சேவை ஜித்தாவுலேர்ந்து கெடையாதுங்க; மும்பைக்கு ஏர்-இந்தியாவுல வந்து, சென்னைக்கு இண்டியன் ஏர்லைன்சுக்கு மாறி வரணும். எடைப்பட்ட நேரத்துல நட்சத்திர விடுதிகள்ள ஓய்வெடுக்க வச்சதெல்லாம் ஒருகாலங்க. இந்தப் பதிவு மறுஉறுதி தொடர்பானதுன்றதால மத்தத விட்டுர்ரனே. இந்த சென்னை-மும்பை, மும்பை-ஜித்தா மறுஉறுதிய ஒரே அலுவலகத்துல பண்ணிக்க முடியாதுங்க. சென்னை-மும்பைக்கு இண்டியன் ஏர்லைன்சு க்கும், மும்பை-ஜித்தாவுக்கு ஏர்-இந்தியா வுக்குமா ஓடவேண்டியிருக்கும். ரெண்டுபேரும் பக்கத்துப் பக்கத்துலதான் இருக்காங்க, இப்பவும் அப்படித்தான். சி.இன்.சி. சாலை. - இப்ப பேரு என்னங்க? அலுவலகம்தான் தனித்...

டான் - பழசும் புதுசும்

டான் - பழசும் புதுசும் சலீம் ஜாவீத் (சலீம் கான், ஜாவீத் அக்தர்), இந்தித் திரையில் என்றைக்கும் பேசப்படும் சில படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதிய இரட்டையர். உதாரணத்திற்கு ஷோலே, மஜ்பூர் (நான் வாழவைப்பேன்). இருவரின் வாரிசுகளும் வடக்கே திரைத் தொடர்புள்ள, ஆனால், வெவ்வேறான துறைகளில் கால் பதித்தார்கள். சலீம் கானின் மகன் சல்மான் கான் நடிகராகவும், ஜாவீத் அக்தரின் மகன் ஃபர்ஹான் அக்தர் இயக்குனராகவும் உருவானார்கள். சமீபத்தில் வெளியாகியிருக்கும் டான் படத்தில் மகனின் (ஃபர்ஹான் அக்தர்) இயக்கத்திற்கு அப்பா (ஜாவீத் அக்தர்) பாடல்கள் எழுதியிருக்கிறார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களுள் ஒன்றாகிப்போனது இந்த டான் . காரணம், இருபத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் அமிதாப் நடித்து வெளியாகி சக்கைப்போடு போட்ட படத்தை, ஷாருக்கை வைத்து மீண்டும் உருவாக்கியது. அமிதாபைப் பார்த்த அலைவரிசையை முன்வைத்து ஷாருக்கைப் பார்க்கக்கூடாது. பழைய டான் வேறு ரசிகர்களுக்காக எடுக்கப்பட்டது, புதிய டான் வேறு ரசிகர்களுக்காக எடுக்கப்பட்டது. கதையமைப்பு, உத்திகள், அரங்கங்களில் ஒலியமைப்பு, வெளிநாட்டுப் படப்பிடிப்பு, டிஜிட்டல் அச்செடுப்பு...

பெருநாள் தொழுகையும் மழைநீரும்

பெருநாள் தொழுகையும் மழைநீரும் நான் குடியிருக்கும் பகுதியிலிருக்கும் பள்ளிவாசல் அத்தனை பெரிதன்று. குன்றத்தூர் சாலைக்கு வந்து மாங்காடு செல்வதென்றால் எந்தச் சாலையில் திரும்புவீர்களோ அதில் நூறுமீட்டர் சென்றதும் இடப்புறமாக இருக்கும் சிறிய கட்டடம்தான் எங்கள் ஜமாத்தின் பள்ளிவாசல். தோராயமாக நூறு நபர்கள் வரையில் நெரிசலில்லாமல் தொழலாம். அதற்கு மேலென்றால் மொட்டைமாடிக்குதான் செல்லவேண்டும். பெருநாளன்று அதிகமாகக் கூட்டம் கூடுமென்பதால் மாடியில் பந்தல் போட்டு கோரைப்பாய்களை அடுக்கி வைத்திருந்திருக்கிறார்கள். நேற்று பெய்த மழையில் பாய்களெல்லாம் ஈரமாகி, மாடி முழுதும் நீர் தேங்கிக் கிடந்தது. சமமான தரையாக பூசப்படாததால் தண்ணீர் ஓட வழியில்லாமல் அங்கங்கே சிறிதுசிறிதாக தேங்கிக் கிடந்தது. காலையில் யாரையாவது ஏற்பாடு செய்து தளத்தைச் சுத்தப்படுத்தியிருக்கலாம், எப்படியோ தவறவிட்டுவிட்டார்கள், தாமதமாகத்தான் ஒரு நபரை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். கூட்டம் அதிகமாவதை உணர்ந்ததும் மாடிக்குச் சென்றேன். மாடியில் இரண்டாவது ஆளாக நான் சென்றிருக்கிறேன். தண்ணீரைத் துடைக்க வந்த நபர் தென்னந்துடைப்பத்தால் நீரைத் தள்ளிக்கொண்டிருந்தார்....

நடிகை ஸ்ரீவித்யா மரணம்

தோற்றம்: 24.7.1953 மறைவு: 19.10.2006 புற்றுநோய் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஸ்ரீவித்யா அவர்கள் இன்று மரணமடைந்தார் (தகவல்: சன் செய்திகளில் ஃப்ளாஷ் ந்யூஸ், தி ஹிண்டு). 77-78இல் மதுர கீதம் திரைப்படத்தில் நடித்ததற்காக இவர் சிறந்த நடிகை (சிறப்பு விருது) விருதினைப் பெற்றார் என தி ஹிண்டு செய்திக்குறிப்பு சொல்கிறது. ஸ்ரீவித்யாவின் தாயார் பிரபல பாடகி எம்.எல்.வசந்த குமாரி (ஆடாத மனமும் உண்டோ - படம்: மன்னாதி மன்னன்) என்பதை பலர் அறிவார்கள். தந்தையார் 'விகடம்' கிருஷ்ணமூர்த்தி (தகவல்: தி ஹிண்டு). எம்.ஆர்.பி. - எம்.ஆர்.பைரவி (அபூர்வ ராகங்கள்) . ஸ்ரீவித்யாவின் பெயரை எங்கு படித்தாலும், அவர் படங்களில் தோன்றும் காட்சியைப் பார்த்தாலும், ஒரு வினாடிக்காவது எம்.ஆர்.பி. என்னும் அந்தப் பாத்திரம் நினைவில் தோன்றி மறையும். 'ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்' (வாணி ஜெயராம்). திரையிலும் அதனை உயிரோட்டமுள்ள பாடலாக மாற்றியதன் பெருமையை இயக்குனருடன் சேர்ந்து ஸ்ரீவித்யாவும் பங்கு போட்டுக்கொள்வார். அந்தப் படத்தில் ஸ்ரீவித்யா கமலஹாசனுடன் பலப்பரீட்சை (ஆர்ம் ரெஸ்லிங்) செய்யும் காட்சி சென்னையின...

முதன்முறையாக வாக்களித்தேன்

முதன்முறையாக வாக்களித்தேன் தேர்தல் நாளில் விடுமுறையில் சென்னையில் இருப்பது இதுவே முதன்முறை. அதனால், தேர்தலில் வாக்களிப்பதும் இதுவே முதன்முறை. கள்ளவாக்கு, வாக்குச்சாவடி குழப்பங்கள், பிரச்சனைகள் இவை குறித்து நேற்று திருவல்லிக்கேணி நண்பர்களுடன் நீண்டநேர அரட்டையில் (அலசலில்) ஈடுபட்டும் அது குறித்து எந்தவிதமான முன்முடிவும் எடுக்காமல், காலை ஏழு மணிக்கெல்லாம் துணவியாருடன் வாக்குச்சாவடிக்குச் சென்றுவிட்டேன். வாக்குச்சாவடிக்குச் செல்லும் பொதுமக்களுக்காக களப்பணியாளர்கள் செய்யும் சேவையைப் பாராட்டியே தீரவேண்டும். கட்சிப்பாகுபாடின்றி இந்தப் பாராட்டு அனைத்து கட்சிகளின் களப்பணியாளர்களுக்கும் உரித்தாகும். வாக்காளர் பட்டியலிலிருந்து நமது வரிசை எண், வார்டு எண், வாக்குச் சாவடி எண், பாகம் எண் போன்ற எல்லா விவரங்களையும் அச்சடித்த படிவங்களில் நிரப்பி இரண்டுமூன்று நாள்களுக்கு முன்னரே வீடு வாரியாக விநியோகித்துவிடுகிறார்கள். அந்த அச்சடித்த படிவத்தின் இடப்பக்கத்தில் அவர்களது கட்சியின் சின்னம் இருக்கும் என்பது வேறு விஷயம். வாக்களிக்கப்போகையில் இடப்பக்கமிருக்கும் அவர்களது கட்சிச் சின்னத்தைக் கிழித்துவிட்டு சீட்டை ...

கூண்டுக்கிளி - திரைப்படம் எனது பார்வையில்

கூண்டுக்கிளி (1954) நடிப்பு: எம்.ஜி.ராமச்சந்தர் (இப்படித்தான் எழுதியிருக்கிறார்கள்), சிவாஜி கணேசன், பி.எஸ்.சரோஜா இசை: கே.வி.மகாதேவன் திரைக்கதை, வசனம்: விந்தன் இயக்கம்: ராமண்ணா எம்.ஜி.ஆர். - சிவாஜி இணைந்து நடித்த ஒரே திரைப்படம் என்பதைத் தவிர வேறு எதற்காகவும் ஏன் இந்தப் படம் குறிப்பிடப்படுவதில்லை என்பதை நினைத்து வியப்பாக இருக்கிறது. கடைசிக் காட்சியில் கதாநாயகியின் மீது பாலியல் வன்முறையில் இறங்கும்போது வில்லனின் கண்களை மின்னல் தாக்கி அவன் குருடாகிப் போகின்ற திரை மசாலாவைத் தவிர்த்துப் பார்த்தால், ஐம்பதுகளின் சாயலுக்கு இப்படம் மாறுபட்ட கதையமைப்பு கொண்டதாகவே தோன்றுகிறது. ஐம்பதுகளின் சாயல் என்று இங்கே குறிப்பிடுவது மந்திரி குமாரி, மர்மயோகி, மலைக்கள்ளன் வகையறாக்களை. பராசக்தியின் பாதிப்போ என்னவோ தெரியாது, 'வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடே' யின் மறுபதிப்பாகத்தான் படத்தின் ஆரம்ப வசனம் ஒலிக்கிறது. 'காதலையும் வீரத்தையும் இருகண்களெனப் போற்றி வளர்த்த என் கன்னித் தமிழ்நாடே, நீ காதல் கொண்ட நெஞ்சுக்கு நஞ்சூட்டும் வஞ்சகியாக எப்போது மாறினாய்?' தற்கொலை முயற்சிக்கு முன்னால் இப்படிப் பக்கம் ப...

அக்டோபர் மாதத்திய போட்டிக்கான தலைப்பு

அன்புடையீர், வணக்கங்கள். இண்டர்டிப்பண்டண்ட் என்னும் வார்த்தையை நான் அதிகமாக உபயோகித்தது ஸ்டீஃபன் கவியின் புத்தகத்தைப் படித்த பின்னர்தான். தர்க்கரீதியாக நாம் ஒருவருக்கொருவர் கட்டுப்பட்டுதான் வாழ்கிறோமென்றாலும், நம் மனதில் எவருக்கும் கட்டுப்படாமல் வாழும் விருப்பம் இருப்பதாகவே உணர்கிறேன். அது ஒரு விளம்பரப் படம். பணியாளர் ஒருவர் தனது மேலாளரை அலட்சியமாகப் பார்க்கிறார், மேலாளரின் மிரட்டலுக்கு முகத்திலடித்தாற்போல் எதிர்வினை செய்துவிட்டு வெளியே நடக்கிறார். 'இவர் எங்கள் மூலமாக புதிய வேலை வாய்ப்பைப் பெற்றவர்' என்னும் வாசக்ம் பின்னணியில் ஒலிக்கிறது. இங்கே பிரதானமாகக் காட்டப்படுவது தற்போதைய வேலையிலிருந்து விடுதலை. 'முதல் மரியாதை' திரைப்படத்தில் ஒரு காட்சி. சிவாஜி இறுகிய முகத்துடன் வீட்டைவிட்டு வெளியே வருகின்றார். வானத்தைப் பார்க்கிறார், சுற்றுப்புறத்தைக் கொஞ்சம் பார்க்கிறார். அவரிடமிருந்து லேசான பெருமூச்சு வருகின்றது, முகம் மலர்கின்றது, புன்னகைத்தபடியே நடக்கத் துவங்குகின்றார். அங்கே அவருக்குத் தேவைப்பட்டது விருப்பமில்லாத உறவிலிருந்து தற்காலிகமான விடுதலை. இன்றைக்கு கோலாலம்பூரில் நா...

போட்டியில் தேர்ந்தெடுத்தமைக்கு நன்றிகள்

அன்புடையீர், வணக்கங்கள். எதிர்பாராதவிதமாக தேன்கூடு + தமிழோவியம் போட்டியில் வெற்றி கிடைத்திருக்கிறது. வாக்களித்தவர்களும், நடுவர்களுமாக ஒன்றுசேர்ந்து இதனை எனக்கு வழங்கியிருக்கிறார்கள். அவர்களுக்கு எனது நன்றிகள். போட்டியில் பங்குபெறும் வாய்ப்பை உருவாக்கித் தந்த தேன்கூட்டார்களுக்கும், தமிழோவியத்தார்களுக்கும் நன்றி சொல்லாமல் இதனைத் தொடர்வது சரியன்று. போட்டியின் அமைப்பாளர்கள் இருவருக்கும் நன்றிகள். இக்கடிதத்துடன் எனது சில எண்ணங்களைப் பகிர்ந்துகொள்கிறேன். குடும்பத்தாருடன் சுற்றுலாவில் இருக்கிறேன். சிங்கையிலிருந்து கோலாலம்பூர் வந்து இரண்டு நாள்களாகின்றன. சரி...கொஞ்சம் மின்னஞ்சல்களைப் பார்க்கலாம் என உலவி மையத்திற்குச் சென்றால் இன்ப அதிர்ச்சி. நண்பர்களிடமிருந்து பாராட்டுகள். எல்லாவற்றையும் பார்த்துவிட்டு விடுதிக்கு வந்தால், இரவு மணி ஒன்று. செல்பேசியிலிருந்த தொகை முடிந்துவிட்டது. கடைகள் அடைக்கப்பட்டுவிட்டதால் தொகையைக் கூட்ட வழியில்லை. தங்கியிருக்கும் விடுதியிலிருந்து வெளிநாட்டு அழைப்புகள் யானை விலை குதிரை விலை :). ஒருவார்த்தையில் தொலைபேசி எண்ணைத் தெரிவித்ததும் கே.வி.ராஜா தொடர்பு கொண்டார், தேன்கூ...

சில சொந்த சமாசாரங்கள் - சிங்கை (1)

சில சொந்த சமாசாரங்கள் - சிங்கப்பூர் (1) 22ம் தேதி இரவு பதினொன்றரை மணியளவில் கடவுச் சீட்டையும், பயணச் சீட்டையும் முகவரிடமிருந்து வாங்கும் வரையில் சிங்கப்பூர் பயணம் உறுதியாகவில்லை. அதன் பிறகே மறுநாள் புறப்படுவதற்கான ஏற்பாடுகளில் கவனம் செலுத்தினேன். மறக்காமல் சிங்கை நண்பர்களின் தொலைபேசி எண்களைக் குறித்து வந்து, சிங்கை சேர்ந்ததும் அவர்களுடன் ஒரு ஹலோ சொல்லியபின் திருப்தியாக இருந்தது. ரா.கா.கி. நண்பர் சலாஹுத்தீன் அவர்கள் 'பாய் ஏர்போர்ட்டிற்கு வரவா' என குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். அவரிடம் அன்பாக 'வேண்டாம்' சொல்லிவிட்டு 23ம் தேதி மாலை சிங்கையை அடைந்து, அந்த பளப்பளா சாலைகள், அடுக்குமாடிகள், நியான் விளக்குகள், எம்.ஆர்.டி., எல்லாவற்றிலும் மீண்டும் ஒருமுறை மனதை இழந்தாகிவிட்டது. பயணக் குறிப்புகள் எழுதினால், பயணத்தில் சந்தித்த / தொலைபேசிய நண்பர்களின் பட்டியலை வலைப்பதிவில் இடுவது எழுதாத சட்டமாக விரிந்திருக்கிறது. தனிப்பட்ட முறையில் இந்த வழக்கத்துடன் எனக்கு உடன்பாடு இல்லையென்றபோதும், மரபாக அது வளர்ந்திருப்பதால் கடைப்பிடித்தல் அவசியமாகிறது. ஆகிர் ஃபார்மாலிட்டீஸ்தோ பூரி கர்னா ஹைனா :)...

சில சொந்த சமாசாரங்கள்

சில சொந்த சமாசாரங்கள் பயணம் புறப்படும் நாளன்று அலுவலகத்தில் எல்லோரிடமும் கையைக் குலுக்கி விடைபெறுவது எங்களிடையே இருக்கும் எழுதப்படாத சட்டம். சொல்லாமல் புறப்பட்டுவிட்டால் அவர் அடுத்த விடுமுறையில் செல்லும் வரையில் 'ஏன்யா சொல்லாம போன?' என மாதமிருமுறை கேட்டுவைப்போம். அப்படித்தான் காலையில் கைகுலுக்கும் வைபவம் துவங்கியது. பாக்கிஸ்தானி, யமனி, சவூதி, சூடானி, ஹிந்தி (நாமதாங்க) எல்லோரிடம் கையைக் குலுக்கி விடைபெற்றேன். பஞ்சாபியர்களிடம் விடைபெறும்போது கவனமாக இருக்கவேண்டும். 'கியாலஜீ ஆசாத் சாபு' என விசாரித்து அணைத்து ஒரு இறுக்குஇறுக்கும்போது, மூச்சடிக்கி உடம்பை கெட்டிப்படுத்தவில்லையென்றால், விலா எலும்புகள் தெறிக்கும் அபாயம் உண்டு. அண்ணிக்கு ஸலாம் சொல்லவும், குழந்தைகளுக்கு அன்பைச் சொல்லவும், குடும்பத்தார் அனைவருக்கும் என் வாழ்த்தைச் சொல்லவும், இப்படியாக ஒவ்வொருவராக அவர் குறிப்பிட்டு நம்மை வழியனுப்புமுன் விமான நிறுவனத்தார்கள் நேரமாகிவிட்டதென மேசையைத் துடைத்துவிட்டுப் போய்விடுவார்கள். NWFP (நார்த் வெஸ்ட் ஃப்ரண்டியர் ப்ராவின்ஸ்) பாக்கிஸ்தானியர்கள் வேறு ரகம். மனைவி மக்கள் எல்லாரையும் சே...

சித்திரம் பேசுதடி - புத்தகம் குறித்த எண்ணங்கள்

சித்திரம் பேசுதடி - புத்தகம் குறித்த எண்ணங்கள் ராயர் காப்பி க்ளப் நண்பர்களுடன் 1 தியோடர் பாஸ்கரன் அய்யாவின் கருத்துப் பரிமாற்றங்களை ஒருமுறை நேரில் கேட்டிருக்கிறேன். பிறகு அய்யாவை சந்தித்தது சென்னை புத்தகக் கண்காட்சியில். அவரது சித்திரம் பேசுதடி யை வாங்கி அவரிடம் கையெழுத்தையும் பெற்றுக்கொண்டேன். கருப்பு வெள்ளையில் என்.எஸ்.கே. - டி.ஏ.மதுரம் நகைச்சுவைக் காட்சியை அட்டையாகக்கொண்டு 1934முதல் 2003வரையில் எழுதப்பட்ட பல கட்டுரைகளின் தொகுப்பு. அனைத்து கட்டுரைகளும் தமிழ்த் திரைப்படங்கள் தொடர்பானவை. தமிழகத்தில் வெகுஜன கேளிக்கைச் சாதனமாக திரைப்படங்கள் உருவானதை எழுத்தாளர்கள் எப்படி அணுகினார்கள் என்பதை தமிழ் வாசகர்களுக்கு உணர்த்துவதே தொகுப்பின் நோக்கம் என முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். நோக்கம் நன்றாக நிறைவேறியிருக்கிறது. தமிழ்த் திரைப்படங்கள் கீழ்த்தட்டு மக்களின் ரசனைக்காக எடுக்கப்படுபவை என்னும் நினைப்பால், சில காலங்கள் திரைப்படங்களின் வளர்ச்சி குறித்தோ, தாக்கங்கள் குறித்தோ மேல்தட்டு மக்கள் அக்கறையேதும் கொண்டிருக்கவில்லை. 1916முதல் 1931வரையில் தமிழ்ப் பத்திரிகையாளர்கள் மௌனப் படங்களின் வரவைக் க...

Don - கோவையற்ற எண்ணங்கள்

Don ஒலிப்பேழை - சில கோவையற்ற எண்ணங்கள் அந்நியனில் கண்ணும் கண்ணும் நோக்கியா வைக் கேட்டதும், வசுந்தரா தாஸின் மேலிருந்த ஈர்ப்பால் பாடலை வேறுவிதமாகக் கற்பனை செய்திருந்தேன். திரையில் பார்த்தபோது என்னைப் பொருத்தவரையில் கொஞ்சம் ஏமாற்றம். புதுப்பேட்டையின் எங்க ஏரியா உள்ள வராதே , வேட்டையாடு விளையாடுவின் கற்கக் கற்க இவை பாடலைக் காண்பதற்கு முன்பே எனது கற்பனையில் வேறு காட்சிகளாக ஒடியிருக்கின்றன. திரையில் பாடலைப் பார்ப்பதற்கு முன் ஒலிப்பேழைகளைக் கேட்கையில் எனது பயிற்சிக்கேற்ப ஏதாவதொரு கற்பனை வடிவம் மனதிற்குக் கிடைக்கின்றது. இப்பொழுது மீண்டும் அப்படி ஒரு பாடல். இது ஏற்கெனவே திரையில் பார்த்ததுதான் என்றபோதும், பாடியவர் மேலிருக்கும் ஈர்ப்பு பாடல் காட்சி குறித்த கற்பனைகளை வளர்த்துவிட்டது. பழைய பாடல்தான், ஆஷா போஸ்லே + ஹெலன் + கல்யாண்ஜி ஆனந்த்ஜி கூட்டணியில் எழுபதுகளின் இறுதியிலிருந்து இன்று வரையில் இந்தித் திரைப்பாடல் ரசிகர்களைத் தலையாட்டவைக்கும் பாடல்தான், அந்தக்கால ஐட்டம் நம்பர்தான். ஆனாலும், சுனிதி சௌஹானின் குரலில் இந்தப் பாடலைக் கேட்கும்போது பழைய பாடலை எப்படி இன்றைய திரைக்கு மாற்றியிருப்பார்கள் என்...

லிஃப்ட் - போட்டிக்காக அல்ல

லிஃப்ட் - மின்மாடம் பயனர்களுக்கு இது நகரும் தொலைபேசிக் கூண்டு. வாசலில் இருக்கும் பொத்தானை அழுத்துகிறோம், மின்மாடம் வந்து நிற்கிறது. உள்ளே சென்று போகவேண்டிய தளத்தின் பொத்தானை அழுத்துகிறோம். அது கொண்டு சேர்க்கிறது. சில மின்மாடங்களில் தானியங்கிக் கதவுகள், சிலவற்றில் நாமே திறக்கவேண்டிய கதவுகள். கதவைத் திறந்து / கதவு திறந்ததும் இறங்கிச் செல்கிறோம். பயனர்க்கு நகர்கின்ற கூண்டாக இருக்கும் மின்மாடத்தின் உள்ளே இருக்கும் சில இயந்திரப் பாகங்களையும், மாடத்தின் இயக்கத்தையும் மேலோட்டமாக இக்கட்டுரையில் காணலாம். அடிப்படை: மின்மாடத்தின் முக்கியமான பாகங்கள். 1. கூண்டு (நாம் ஏறுவது) 2. இயந்திரம் (மோட்டாருடன் இணைக்கப்பட்டு உயரே இருக்கும்) 3. எதிர் எடை (கூண்டின் பின்புறத்திலோ பக்கத்திலோ இருக்கும்) 4. தண்டவாளம் (கூண்டும், எதிர் எடையும் மேலே கீழே சென்று வர) இவையல்லாமல் ஆயிரக்கணக்கில் பல உதிரிபாகங்கள் அதனுள் இருக்கின்றன. பொத்தானென்றால் வெளியே தெரியும் ப்ளாஸ்டிக் குமிழ், பின்னே இருக்கும் சர்க்யூட் போர்ட், இணைக்கும் கம்பிகள், எல்.இ.டி., விளக்கு, ஸ்க்ரூ இப்படியாக ஒவ்வொரு பாகத்திலும் உதிரிப் பாகங்கள் விரிவடையும். ...