Skip to main content

Posts

Showing posts from January, 2006

Rich Dad Poor Dad - Robert T. Kiyosaki

ராபர்ட் டி. கியோசாகி, நான்காம் தலைமுறை ஜப்பானிய அமெரிக்கர், புத்தகம் முழுக்க பேசிச் செல்வது பணவரவு (கேஷ் ஃப்ளோ) சமாசாரம்தான். கதை சொல்வதுபோலத்தான் புத்தகம் துவங்குகிறது. அவரை வளர்த்தவர் இருவர். அவர்களுள் ஒருவர் பணக்காரத் தந்தை, இன்னொருவர் உழைப்பாளித் தந்தை. இருவரும் ராபர்ட்டிற்கு வாழ்க்கையைக் கற்றுத்தருகிறார்கள். பணக்காரர் முதலீட்டு உத்திகளையும், தொழிலாளி உழைப்பையும் படிப்பையும் சொல்லிக்கொடுக்கிறார்கள். இருவரிடமிருந்து அவர் பெற்ற படிப்பினைகளை வாசகருக்குச் சொல்லும்போக்கில் தனது கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறார். வேலை கிடைத்தவுடன் அடுக்கு மாடிக் கனவுகளில் மூழ்கி, வங்கிக் கடனில் வீட்டை வாங்கி, மாதாமாதம் தவணை கட்டி, நரைக்கத் துவங்கும்போது கடனடைத்து வீட்டிற்குச் சொத்தக்காரராக 'அக்கடா' வென உட்காரும் எண்ணத்தை அடித்து நொறுக்குவதற்குப் புறப்பட்டதாகவே புத்தகம் செல்கிறது. வங்கிக் கடனில் வாங்கும் அசையாச் சொத்துகளின் மேல் ஆசிரியருக்கு அப்படி என்ன கோபமோ தெரியவில்லை. அங்கங்கே இலைமறை காய்மறையாகத் தனது விளையாட்டான 'கேஷ் ஃப்ளோ' வைச் சுட்டிக்காட்டுவதன் மூலம், அதனை சந்தைக்கு அறிமுகப்படுத்த...

ஹஜ் - மினாவில் நெரிசலால் உயிரிழப்பு

நண்பர் பத்ரியின் வலைப்பதிவில் பின்னூட்டம் இட்டிருந்தேன். கேரளாவிலிருந்து புறப்பட்ட ஹாஜிகளைப் பார்த்ததாக பத்ரி சொல்லியிருந்தார். கேரளத்திலிருந்து வந்திருந்தவர்களில் மூன்று பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 1. அபூபக்கர் s/o மொயி - கோழிக்கோடு - வயது 55 2. மொய்தீன் குட்டி s/o குன்னாஹ் - பாலக்காடு - வயது 63 3. இம்மரும்மா w/o மொய்தீன் குட்டி - பாலக்காடு - வயது 62 இப்பொழுது அபூ உமர் தனது பதிவில் துயரச் சம்பவத்திற்கு பொறுப்பாளி யார்? என்னும் கேள்வியை முன்வைத்திருக்கிறார். இது குறித்து எனது எண்ணங்களைப் பகிர்ந்துகொள்கிறேன். * ஹஜ் கடமைகளில் இறுதிக்கட்டமான, ஜம்ராத்தின் மீது கல்லெறியும் நிகழ்வின்போது இந்த அசம்பாவிதம் நிகழ்ந்ததற்கான காரணங்களுள் முக்கியமான ஒன்றாகச் சொல்லப்படுவது, பல ஹாஜிகள் மூட்டைமுடிச்சுடன் கல்லெறியும் இடத்திற்கு வந்தது. முதலில் இரண்டு முறைகள் கல்லெறிந்தபோது மூட்டைமுடிச்சுகளுடன் வராமல், கடைசி நாளன்று கல்லெறியும் இடத்திற்கு சாமான்களுடன் வரவேண்டிய அவசியம் என்ன? தேவையற்ற அவசரம்தான் . ஹஜ் கடமைகளை முடித்துவிட்டு மினாவை விட்டு வெளியேற வேண்டுமென்றால், துல்ஹஜ் பிறை பன்னிரண்டு அன்று, மே...

புத்தகக் கண்காட்சியும் நான் வாங்கிய புத்தகங்களும்

நண்பர்கள் பலர் புத்தகக் கண்காட்சி குறித்து எழுதியிருக்கிறார்கள். அவரவர் வாங்கிய பட்டியலும் படிக்கக் கிடைத்தன. எனது பார்வையையும், வாங்கிய புத்தகத்தின் பட்டியலையும் தர விருப்பம். பத்ரி அவர்கள் சொல்லியதைப் போல பல பதிப்பகத்தார் மெத்தனமாக இருந்தார்கள். வாடிக்கையாளர் வாங்குகின்ற புத்தகத்திற்கேற்ப அவருக்கு இன்னும் பல யோசனைகளைச் சொல்வது கிழக்கு பதிப்பகத்திலும், IFT(Islamic Foundation Trust)இலும் இருந்தவர்களே. மற்ற இடங்களில், வாங்கியதற்கு பில்போட்டார்கள், விளக்கங்கள் கேட்டால் அவர்களால் சொல்ல இயலவில்லை. 1. நல்ல கஸ்டமர் சர்வீஸுக்கான உதாரணத்திற்கு IFTஇல் நிகழ்ந்த உரையாடல்: 'குர்ஆன் பதிப்பு ஒண்ணு எடுத்துக்கறேன்' 'ஹதீஸ் தமிழாக்கம் பாக்கறீங்களா. வேற எதுனாச்சம் டாபிக் பாக்கலாமா? நெறைய டாப்பிக்ஸ் இருக்கு' 'இல்லைங்க இப்பத்திக்கு வேணாம்' 'வாங்க வேணாம். ஜஸ்ட் இன்·பார்மேஷனுக்காகப் பாருங்களேன்' 2. மோசமான கஸ்டமர் சர்வீஸுக்கான உதாரணம்: வைரமுத்து முதல் கலைஞர் வரையில் எல்லார் நூல்களும் கிடைக்கும் என்று போடப்பட்டிருந்த கடை. 'நெஞ்சுக்கு நீதி நாலு பாகமும் வேணும்' 'ம்ம்....

எம்.ஜி.ஆர். பிறந்தநாள்

இன்று எம்.ஜி.ஆர். அவர்களின் பிறந்தநாள். எப்பொழுது எம்.ஜி.ஆர். ரசிகனாக ஆனேன் என்பதை குறிப்பாகச் சொல்ல இயலவில்லை. ரிக்ஷாக்காரன் திரைப்படத்தை ரசிகர் மன்றம் சார்பாக அச்சடிக்கப்பட்ட டிக்கெட் கிடைத்து, தீவிர எம்.ஜி.,ஆர். ரசிகர்களுடன்தான் பார்த்தேன் (அப்போது வயது பதினொன்று). தேவி பாரடைஸில் படம் வெளியானது. தேவி திரையரங்கின் சாதாரண டிக்கெட் கிடையாது. குறைந்தது பதினைந்துக்குப் பத்து சென்டிமீட்டர் அளவிலாவது இருந்திருக்கும். ரோஜா நிறத்தில் தாள், எம்.ஜி.ஆர். சைக்கிள் ரிக்ஷா ஒட்டி வருகின்ற 'சைடு போஸ்' இடப்பக்கத்தில் அச்சடிக்கப்பட்டு, வலப்பக்கத்தில் தேதி, வரிசை எண், காட்சி வகையறாக்கள். இப்பொழுது இருக்கும் முன்னணிக் கதாநாயகர்களுக்கு இப்படி பிரத்யோகமாக டிக்கெட்டுகள் அச்சடிக்கப்படுகின்றவா என அறியேன்; எம்.ஜி.ஆருக்கு அச்சடித்தார்கள். இரண்டாம் காட்சிக்காகக் கூட்டத்தோடு கூட்டமாகக் காத்திருக்கையில், தேவி வளாகத்தின் வெளியிலேயே எல்லாரும் நிறுத்தப்பட்டார்கள். காரணம், உள்ளே நடக்கும் முதல் காட்சியைக் காண வி.ஐ.பி.க்கள் வந்திருந்தார்கள். எம்.ஜி.ஆர். வந்திருந்தார் என்று சிலரும், அவர் வரவில்லை என்று சிலரும் அ...

என்.ஆர்.ஐ.களுக்கான வாக்குரிமை

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு, அதிலும் குறிப்பாக அரபு நாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை அளிப்பது குறித்து பிரதமர் பேசியுள்ளார் . அது தொடர்பாக எனது கருத்துகள். என்.ஆர்.ஐ.யா? ஓ.சி.டபுள்யூ.வா?: அரபு நாடுகளில் வேலைசெய்யும் இந்தியர்கள் தங்களை என்.ஆர்.ஐ.களாக நினைத்துக்கொள்வதில் தர்க்கப்படி தவறேதும் இல்லையென்றாலும், உண்மையில் மற்ற நாடுகளில் வசிக்கும் என்.ஆர்.ஐ.களுக்கும் அரபு நாடுகளில் வசிப்பவர்களுக்கும் வித்தியாசம் உள்ளது. அரபு நாடுகளைப் பொறுத்தவரையில் அனைத்து வெளிநாட்டவரும் வேலை செய்ய வந்திருப்பவர்களே. ஏதாவது நிறுவனத்தின் / தனிப்பட்ட முதலாளிகளின் / அரசின் சார்பில் வழங்கப்படும் 'வேலை வாய்ப்பு விசா'தான் வெளிநாட்டவர் அரபு மண்ணில் தங்கியிருப்பதற்கான உரிமையை அளிக்கிறது. தூதரக அதிகாரிகள், தூதரகங்களில் பணிபுரிவோர், அரசு விருந்தினர், இத்தியாதிகள் நீங்கலாக, வேலைசெய்வோர் அனைவருக்கும் இது பொருந்தும். அமீரகத்தில் முதலீட்டாளர்களுக்கு 'தங்கும் உரிமம்' வழங்கப்படுகிறது, அவ்வளவே. மற்றபடி, வேலைசெய்வோர்க்கு சிங்கப்பூரில் இருப்பதுபோன்ற பி.ஆர். சமாசாரங்கள் இங்கே கிடையாது. அரபு நாட்டின் குடிமகன...

சுஜாதாவின் பத்து நூல்கள் வெளியீட்டு விழா - 3 (முடிவு)

6. திருக்குறள் உரை குறித்துப் பேசவந்தவர் ஞானசம்மந்தம்(ன்?) அய்யா. அய்யாவின் நகைச்சுவை தமிழகம் அறிந்தது. அன்றைக்கு அவர் உதிர்த்த சில துணுக்குகள் அரதப்பழசானாலுமே சபை நாகரிகம் கருதி வைரமுத்து பேசும்போது 'எப்படி புதிது புதிதாகச் சொல்கிறீர்கள்' என்றார். எப்படி உரையை அமைத்துக்கொள்ளவேண்டுமென பயிற்சி பெற்ற பேச்சாளர்களுக்குத் தெரியும். அங்கங்கே நகைச்சுவை, பிறகு அரங்கத்தார் சிரிக்கும்போதே கருத்துகளை ஆழமாகச் சொல்வது, படிப்படியாக விளக்குவது, இதற்கு அய்யாவின் பேச்சு ஒரு எடுத்துக்காட்டு. முதலில் சுஜாதாவின் ஆய்வுத்திறன் குறித்து விளக்கினார். கூடவே இலக்கண நூல்களில் கூறப்பட்டிருக்கும் ஆய்வுத்திறனுடன் சுஜாதாவின் திறனை ஒப்பிட்டு, இரண்டு மூன்று உதாரணங்கள். உரை எப்படி இருக்கவேண்டும் என்பதன் விளக்கம், அதற்கு சுஜாதாவின் நூலிலிருந்து உதாரணம். அதிகாரத்தின் தன்மைக்கேற்ப 'வான்சிறப்பு' அதிகாரத்தின் தலைப்பையும் 'மழை' யாக மாற்றியதை அடிக்கோடிட்டு, அதுவும் சரியானதே என்பதற்கான வாதங்கள். 'துப்பார்க்குத் துப்பாய' குறளின் விளக்கம் எத்தனை எளிமையாக வந்திருக்கிறது என்பதின் விளக்கம். இன்னும் ...

சுஜாதாவின் பத்து நூல்கள் வெளியீட்டு விழா - 2

இப்பதிவின் முந்தைய பகுதி இங்கே . 3. சுஜாதாவின் மர்மக் கதை களின் முதல் பதிப்பைப் பெற்றுக்கொண்டு, அதனைப் பேச வந்தவர் ரா.கி.ரங்கராஜன் அய்யா. மேடைப் பேச்சின் பாலபாடம் ஒலிவாங்கியை தனது உயரத்திற்கு ஏற்றாற்போல் அமைத்துக்கொள்வது. அது அதன் உயரத்தில் இருக்க அய்யா உரையைத் துவங்க, பேச்சு ஓரளவிற்கே கேட்டது. உடனே வைரமுத்து எழுந்து வந்து ரா.கி.யின் உயரத்திற்கு ஏற்றவாறு ஒலிவாங்கியைச் (மைக்) சரி செய்தார். முன் நவீனத்துவம், பின் நவீனத்துவம் எல்லாம் இருக்கட்டும், நவீனத்துவம் என்றாலே சுஜாதாதான் என்று ஒரு போடுபோட்டார். ஆரம்பகாலத்தில் அவரது கதைக்கு மணியார்டர் வழியாகப் பணம் அனுப்பியது. மணியார்டர் படிவத்தை எஸ்.ஏ.பி. அவர்கள் பூர்த்தி செய்தது என பழைய கதைகள் கொஞ்சம் சொன்னார். பூர்ணம் அய்யாவை ரசிகர்கள் கை'தட்டிக் கழித்த' நிலைமை தனக்கும் வந்துவிடுமோ என மிகவும் சிரத்தையாக நகைச்சுவைத் துணுக்குகளை அங்கங்கே உதிர்த்துக்கொண்டே பேச வந்த விஷயமான மர்மக் கதைகள் சமாசாரங்களையும் தந்தார். பாராட்டும்போது அதிகமாகப் பாராட்டுவது நமது இயல்பு. சுஜாதாவின் மேல் யாராலும் பொறாமைப்பட முடியாது என்றும் பாரதியின் மீது பொறாமைப்படுவோ...

சுஜாதாவின் பத்து நூல்கள் வெளியீட்டு விழா - 1

தேசிகனின் வலைப்பதிவில் வெளியீட்டு விழா குறித்த அழைப்பைப் படித்ததும் அதிலிருந்த தொலைபேசிக்குத் தொடர்பு உறுதி செய்துகொண்டேன். விழாவை அல்ல; விழா அரங்கில் நுழைய அனைவருக்கும் அனுமதி உண்டா என்பதை அறிந்துகொள்ள. நல்லவேளையாக 'அனைவரும் வருக' என்று சொல்லிவிட்டார்கள். நான் தயங்கித் தயங்கி அப்படிக் கேட்டதற்குக் காரணம் இருக்கிறது. புத்தகங்களைப் பெற்றுக்கொள்வோரெல்லாம் நகரின் முக்கியமானவர்களுள் ஒருவராக இருந்தார்கள். இயக்குநர் ஷங்கர், திலகவதி அம்மையார், பூர்ணம் அய்யா, தலைமையாக வைரமுத்து...இப்படியாக. அதனால்தான் சிறு சந்தேகம் எழுந்தது. நான் சென்றபோது விழா துவங்கியிருந்தது. கவிஞர் தமிழச்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். நல்ல தமிழில் தொகுத்தும் அங்கங்கே ஆங்கிலக் கவிதைகளை, பொன்மொழிகளை மேற்கோள்களாகக் காட்டியும் தொடர்ந்தார். தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை அரங்கம் ஏறக்குறைய நிறைந்திருந்தது. வரிசைகள் A முதல் N வரையிலாக பதினான்கு வரிசைகள், வரிசைக்கு பதினாறு இருக்கைகள், ஆக மொத்தம் 224 இருக்கைகள். இது என்ன இருக்கையை எண்ணும் கணக்கு என்கிறீர்களா? எப்போதும் அரங்கில் நுழைந்ததும் முதலில் செய்யும் வேலை அத...

ஹஜ் பயணம் குறித்த எனது புத்தகம்

'பாய், ஹஜ் பத்தி ஒரு புத்தகம் எழுதணும். இரண்டு வாரத்துல முடிக்கணும். முடியுமா? முடியும்னா உறுதியா சொல்லுங்க.' பாரா கேட்டபோது உடனே முடியும் என்று சொல்லத் தோன்றவில்லை. அடுத்த வாரத்தில் சென்னை புறப்படுவதற்கான ஏற்பாடுகளில் இருந்ததால், நேரிலேயே பார்த்து பேசிக்கொள்ள முடிவுசெய்தேன். பதிலுக்காக ஒரு வாரம் தவணை கேட்டேன். அந்த இடைப்பட்ட நாள்களில், இங்கே, ஜித்தாவில் ஹஜ் பயணம் ஏற்பாடு செய்யும் நண்பருடன் கொஞ்சம் நேரத்தைச் செலவு செய்து குறிப்புகள் எடுத்துக்கொண்டேன். 'பாராஜி, தயார். ஹஜ் புத்தகம் எழுதுகிறேன். ஆனால், அவகாசம் இன்னும் அதிகமாக வேண்டும்' 'விடுமுறை முடித்து மீண்டும் ஜித்தா செல்வதற்குள் தந்துவிடுங்கள்' என்றதும் நிம்மதி. இங்கு கிழக்கு பதிப்பகத்தாரின் 'கமிட்மெண்ட்டை' குறிப்பிட்டே தீரவேண்டும். பத்ரியைச் சந்தித்தால், நலமாவிற்கு அடுத்த வாக்கியம், 'புத்தகம் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது' . முத்துராமனிடம் வணக்கம் சொன்னால், பதில் வணக்கத்திற்குப் பிறகு, 'புத்தகம் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது.' இப்படிக் கேட்டால் எப்படி முடிக்காமல் இருக்கமுடியும். * இந்த வ...

Toastmasters International - 1

டோஸ்ட்மாஸ்டர்ஸ் இன்டர்நேஷனல் 'நிஜங்கள்' . கே.எஸ்.சேதுமாதவனின் திரைப்படம் என்றே நினைக்கிறேன். ஒரு கிராமத்தில் பேருந்து நிலையத் திறப்பு விழாவில் சோ பேசுவார். பேருந்து நிலையம் தொடர்பான காட்சிகள் திரையில் இருக்கும்போது பின்னணியில் சோவின் மேடைப் பேச்சு ஒலித்துக்கொண்டிருக்கும். நீர்த்துப்போயிருக்கும் கழகப் பாணி மேடைப்பேச்சுகளை நையாண்டி செய்த காட்சி அது. 'அண்ணனின் பண்பை பராக்கிரமத்தை தொண்டை தோழமையை அன்பை ஆட்சித்திறமையை...' இப்படியாக அடுக்கிக்கொண்டே தன்னை இன்னொரு அண்ணாவாக, கலைஞராக, குமரி அனந்தனாக எண்ணிக்கொண்டு அடித்துவிடக்கூடிய பேச்சாளர்கள் வட்டத்துக்கு வட்டம் வண்டி வண்டியாக இருக்கிறார்கள். கேட்கச் சென்ற ஒரிரண்டு இலக்கியக் கூட்டங்களில் பேசிய இலக்கியவாதிகளின் பேச்சு நானறிந்த மேடைப்பேச்சிற்குள் உட்படாததாக இருக்கிறது. எங்கோ துவங்கி எங்கோ சென்று, பேச வந்த காரணத்தைவிட்டு விலகி, தான் சொல்லவேண்டும் என நினைப்பதை (தலைப்பை விட்டு விலகியிருந்தாலும்) மக்களிடம் திணிப்பதாகவே தோன்றியது. திருமண விழாவை பிரச்சார மேடையாக்குவதைப் போன்றதுதான் இதுவும். புத்தக வெளியீட்டு விழாவில் ஒரு இலக்கியவாதி கழகப...

புத்தாண்டு கானா

'மாமா மாமா மாமா ஏம்மா ஏம்மா ஏம்மா' பாடலின் மெட்டிற்கு ஏற்றபடி எழுதப்பட்ட கானா. புத்தி தீட்டி வாழு மாமே! ஆண்டு ஆண்டு ஆண்டு1 தாண்டு தாண்டு தாண்டு! அஞ்சுலதான்1 வந்ததுன்னு அஞ்சலநாங்2 கெஞ்சலநான் ஆனமட்டும் பாடவந்தேன் கில்லி தாண்டு! - இங்க ஆணவுட்டேன் வேட்டிய நீ போட்டுத் தாண்டு! ஆண்டு ஆண்டு ஆண்டு! தாண்டு தாண்டு தாண்டு! (ஆண்டு ஆண்டு ஆண்டு!) நிலநடுக்கம் கொலநடுக்கம் பாத்தாச்சு! - கடலு அலநடுக்கம் மோத வந்துந் தோத்தாச்சு! வல்சாச்சு கெல்ச்சாச்சு வல்சாச்சு கெல்ச்சாச்சு வகவகயா ஒதவி செஞ்சு வாடுனவன் கண்ணு தண்ணி தொட்சாச்சு! - கானா பாடுனவன் ஒத்த அடி3 புட்சாச்சு! (ஆண்டு ஆண்டு ஆண்டு!) புச்சுப்புச்சா கச்சிக்கொடி ஏறுதடா! - அய்யய்யோ அச்சு அச்சா கொள்கையெல்லாங் கூறுதடா! நம்பாத வெம்பாத நம்பாத வெம்பாத நாலு நாளு மாநாட்டுல கோழிக்கறி பிரியாணி பொட்லங்கட்டு! - முட்ஞ்சா நாளிக்கி நீ அமுக்கிவெச்சு நடையக்கட்டு! (ஆண்டு ஆண்டு ஆண்டு!) வெடிவெடிச்சு என்கவுண்டர் அக்யூஸ்ட்டு! - யம்மா தடிவருது4 ஒதுங்கிக்கினு வுடுஜூட்டு! ஆகாது வேகாது ஆகாது வேகாது பாழு கட்டப்பஞ்சாயத்து பொட்டிக்கட ரொட்டிக்கட சீட்டுப் போடு! - அங்க செட்டுலதான் த...