டோஸ்ட்மாஸ்டர்ஸ் இன்டர்நேஷனல்
'நிஜங்கள்'. கே.எஸ்.சேதுமாதவனின் திரைப்படம் என்றே நினைக்கிறேன். ஒரு கிராமத்தில் பேருந்து நிலையத் திறப்பு விழாவில் சோ பேசுவார். பேருந்து நிலையம் தொடர்பான காட்சிகள் திரையில் இருக்கும்போது பின்னணியில் சோவின் மேடைப் பேச்சு ஒலித்துக்கொண்டிருக்கும். நீர்த்துப்போயிருக்கும் கழகப் பாணி மேடைப்பேச்சுகளை நையாண்டி செய்த காட்சி அது.
'அண்ணனின்
பண்பை பராக்கிரமத்தை
தொண்டை தோழமையை
அன்பை ஆட்சித்திறமையை...' இப்படியாக அடுக்கிக்கொண்டே தன்னை இன்னொரு அண்ணாவாக, கலைஞராக, குமரி அனந்தனாக எண்ணிக்கொண்டு அடித்துவிடக்கூடிய பேச்சாளர்கள் வட்டத்துக்கு வட்டம் வண்டி வண்டியாக இருக்கிறார்கள்.
கேட்கச் சென்ற ஒரிரண்டு இலக்கியக் கூட்டங்களில் பேசிய இலக்கியவாதிகளின் பேச்சு நானறிந்த மேடைப்பேச்சிற்குள் உட்படாததாக இருக்கிறது.
எங்கோ துவங்கி எங்கோ சென்று, பேச வந்த காரணத்தைவிட்டு விலகி, தான் சொல்லவேண்டும் என நினைப்பதை (தலைப்பை விட்டு விலகியிருந்தாலும்) மக்களிடம் திணிப்பதாகவே தோன்றியது. திருமண விழாவை பிரச்சார மேடையாக்குவதைப் போன்றதுதான் இதுவும்.
புத்தக வெளியீட்டு விழாவில் ஒரு இலக்கியவாதி கழகப் பாணியில் பேச்சைத் துவக்கியதும் அருகிலிருந்த நண்பர் எழுந்து வெளியே சென்றுவிட்டார்.
மேடைப் பேச்சில் இருக்கின்ற பிரச்சனையே இதுதான். பேச்சைக் கேட்கவந்திருப்போர் யார் யார் என்பதே தெரியாமல் அரைத்த மாவை அரைப்பதும், கேட்க வந்திருப்பவரும் இந்தப் பேச்சு நமக்கு மட்டுமல்ல என்பதை விளங்கிக்கொள்ளாமல் நெளிவதும் அடிக்கடி நிகழ்பவை.
குறிப்பிட்ட மக்களுக்குள்ளாகவே மேடைப்பேச்சுப் பயிற்சிகளும் போட்டிகளும் நடப்பதால், இந்தப் பிரச்சனைகளெல்லாம் டோஸ்ட்மாஸ்டர்ஸ்ஸில் இல்லை. பேசுபவரின் குறிக்கோள் என்ன என்பதை முதலிலேயே அறிவித்துவிடுவார்கள். பேசுபவரின் திறனும் முன்பே சொல்லப்பட்டுவிடும். திறன் என்பது பேசுபவர் பயிற்சியின் எத்தனையாவது கட்டத்தில் இருக்கிறார், இன்றைய பேச்சில் அவர் காட்டவேண்டிய திறன் என்ன போன்ற விவரங்கள்.
இவை முன்பே அறிவிக்கப்படுவதால், கூட்டத்திலிருப்போர் நெளியக்கூடிய வாய்ப்புகள் குறைவு.
ஆனால், டோஸ்ட்மாஸ்டர்ஸ்ஸில் சாதாரணமாக நடக்கக்கூடிய கைதட்டல்களும், செயற்கையான தோற்றமளிப்பதாக இருக்கும் பாராட்டுகளும், கையை ஆட்டிப் பேசுவதும், க்ளிப் ஆன் மைக்கை செருகிக்கொண்டு நடந்துகொண்டே பேசுவதும் நம்மவர் சிலருக்குப் பிடிக்காமற்போகவும் வாய்ப்புகள் இருக்கின்றன.
*
டோஸ்ட்மாஸ்டர்ஸ் இன்டர்நேஷனல்
அமெரிக்காவில் தலைமைச் செயலகம் இருக்க, பல நாடுகளில் கிளைவிட்டு, கிட்டத்தட்ட நாற்பது லட்சம் அங்கத்தினர்களைக் கொண்டது டோஸ்ட்மாஸ்டர்ஸ் இன்டர்நேஷனல். ஒவ்வொரு குழுவும் பகுதி - பிரிவு - எண் என்று பிரிக்கப்பட்டிருக்கும். இரண்டு வருடங்களுக்கு முன்பு வரையில் மத்திய கிழக்கில் வளைகுடாப் பகுதி 'தற்காலிக' இணைப்பாகவே இருந்தது. இப்போது அதற்கென்றும் தனியாக மாவட்ட எண் தரப்பட்டுள்ளது.
குழுக்களை அடையாளம் சொல்வதும் District - Area - Club No. என்றபடியாகத்தான். ஒவ்வொரு வருடமும் குழுவின் தலைவருக்கான தேர்தல் நடக்கும். ஜித்தாவிலிருந்து இயங்கும் HOPE குழுவின் 2005-2006 வருடத்திற்கான தலைமைப் பொறுப்பு என்னிடம் தரப்பட்டுள்ளது. சுட்டியில் 'ஹோப்' குழுவில் தரப்பட்டிருக்கும் செல்பேசி அடியேனுடையது. அறியாத நபர்களிடமிருந்தும் வாரத்தில் ஒன்றிரண்டு அழைப்புகள் டோஸ்ட்மாஸ்டர்ஸின் விவரங்களைக் கேட்டு வருவதுண்டு.
*
டோஸ்ட்மாஸ்டர்ஸில் நடப்பது என்ன?
மேடைப்பேச்சுப் பயிற்சி.
அங்கத்தினராகச் சேர்ந்தவரின் பெயர் தலைமைச் செயலகத்தில் பதிவு செய்யப்பட்டு, அவருக்கு புத்தகங்கள் அனுப்பிவைக்கப்படுகின்றன. அவற்றில் மேடையில் பேசுவதற்கான உத்திகள் படிப்படியாக விளக்கப்பட்டிருக்கும். கலைஞரின் 'பேசும் கலை வளர்ப்போம்', குமரி அனந்தனின் 'நீங்களும் பேச்சாளராகலாம்' இவற்றில் சொல்லப்பட்டிருக்கும் உத்திகளில் பெரும்பான்மையானவற்றை அந்தப் புத்தகங்களிலும் காணலாம்.
நம்மவர்களின் புத்தகங்களுக்கும் இதற்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், இதில் ஒவ்வொரு உத்தியையும் செய்துகாட்ட மேடையில் பேசியாக வேண்டும். உத்தி ஒன்று - சபை நடுக்கத்தை நீக்குவது, உத்தி இரண்டு - வார்த்தைகளை கோவையாகச் சொல்வது...இப்படியாக.
முதல் புத்தகத்தில் தரப்பட்டிருக்கும் பத்து பாடங்களை முடிப்பவருக்கு Competent Toastmaster சான்றிதழ் வழங்கப்படுகிறது. CTM என்று சொல்வார்கள். அதன் பிறகு, அவரவர் விருப்பத்திற்கேற்ப Competent Leader (CL), Advanced Toastmasters (ATM) வெண்கலம், வெள்ளி, தங்கம் என படிப்படியாக பாடத்திட்டங்கள் செல்லும்.
(சிங்கையில் நடக்கும் சொல்லின் செல்வர் தமிழ் டோஸ்ட்மாஸ்டர்ஸிற்காக பாடத்திட்டங்களை மொழிபெயர்க்கின்றீர்களா என நண்பர் கேட்டபோது ஒப்புக்கொண்டு, பிறகு அப்படியே ஜூட் விட்டது தனிக்கதை)
இரண்டு வாரத்திற்கு ஒருமுறை கூடும் எங்கள் குழுவில் ஒருவர் பத்து பாடங்களை முடிக்கவேண்டுமென்றால், தோராயமாக இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. சில குழுமங்களில் இது ஒரு வருடத்திற்குள்ளாகவும் முடியலாம்.
இப்போதைக்கு 'CTM'உம் 'CL'உம் முடித்துள்ளேன்.
தொடரும்...

Comments