Skip to main content

Posts

Showing posts from June, 2007

தலைக்கவசமும் இன்னும் சிலவும்

பதினான்கு ஆண்டுகள் வளைகுடா நாடுகளில் ஹோண்டா சிவிக் முதல் டொயோட்டா அவலோன் வரை பல சீருந்துகளை (cars) ஓட்டிய பின்னர், சென்ற மாதத்திலிருந்து இன்றோடு நான்காவது வாரமாக சென்னையின் சாலைகளில் தொடர்ந்து இருசக்கர வாகனம் ஓட்டுகின்ற அனுபவம் வாய்த்திருக்கிறது. தலைக்கவச விதி கட்டாயப்படுத்தப்பட்டாலும் தளர்த்தப்பட்டாலும் அது குறித்து ஏதும் பாகுபாடின்றி தலைக்கவசத்துடன் வண்டி ஓட்டும் 'பழம்' அல்லது 'முன் ஜாக்கிரதை முத்தண்ணா' வகையைச் சேர்ந்த ஜீவராசிகளுள் ஒருவனாக இருப்பதில் எந்தவிதமான தாழ்வு மனப்பான்மையும் கொள்ளாத நூற்றுக்கணக்கான சராசரி இந்தியக் குடிமகன்களுள் ஒருவனாக, குறிப்பிட்ட பாதை, குறிப்பிட்ட நேரம் என்றில்லாமல், நகரின் பல சாலைகளில் பல வேளைகளில் இருசக்கரத்தில் சுற்றியதில் கிடைத்த அனுபவத்தால், தலைக்கவசம் அணிவதால் மட்டுமே இருசக்கர வாகன ஓட்டியின் உயிருக்கு பாதுகாப்பு கிடைத்துவிடுகின்றதா என்னும் மிகப்பெரிய கேள்வி மனதிற்குள் எழுகின்றது. தலைக்கவசம் அணியவேண்டும், அதில் எந்தவிதமான சமாதானத்திற்கும் இடமில்லை. ஆனால், தலைக்கு வரும் ஆபத்திற்கும் மேலாக இருசக்கர வாகனஓட்டிகளுக்கு இன்னும் எந்தெந்த விதங...

சீனி கம் - எனது பார்வையில்

இடதுகைப் பழக்கமும், நடக்கையில் சற்றே சரிந்திருக்கும் இடதுபுறத்தோளும், ஓடும்போது இருக்கும் கம்பீரமுமாக எழுபதுகளில் டான் திரைப்படத்தில் பார்த்த அதே அமிதாப், முப்பதாண்டுகளுக்கும் மேலாகியும் இன்னமும் வசீகரம் குறையாமல் சீனி கம் திரைப்படத்தில். தமிழில் டப்பிங்கோ, ரீமேக்கோ செய்தால் 'உனக்கு 34 - எனக்கு 64' என்று பெயர் வைப்பார்களோ? அந்த அளவிற்கு வயதிற்கு முக்கியத்துவம் கொடுத்து வசனங்களை எழுதியிருக்கிறார்கள். அமிதாப், தபு, பரேஷ் ராவல் என மூன்று பேர்களை மையப்படுத்தியும், சற்று வெளியே சென்று ஸொஹ்ரா சைகலை இணைத்து கொஞ்சம் நகைச்சுவையையும், சமையற்காரர்களை இணைத்து கொஞ்சம் நகைச்சுவையையும், பெண்குழந்தை ஒன்றையும் கதையில் இணைத்து கொஞ்சம் அழுகையையும் சேர்த்து மிகக்குறைவான கதாபாத்திரங்ளுடன் அமைந்து குடும்பத்துடன் அமர்ந்து (ஒரே ஒரு காட்சியில் கொஞ்சம் மட்டுமே நெளிந்து, மற்றபடி வேறெங்கும் நெளியாமல்) பார்க்கக்கூடிய நல்ல பொழுதுபோக்கான திரைப்படம். லண்டனில் சொந்தமாக இந்திய உணவகம் வைத்திருக்கும் கண்டிப்பான முதலாளி (தலைமை சமையல்காரர்), 64 வயதாகியும் பிரம்மச்சாரியாக இருக்கும் புத்ததேவ் சாஹேப் (அமிதாப்). ...

சிவாஜி - முன்பதிவு துவக்கநாள் படங்கள்

இன்று காலையில் (10.6.2007) சென்னை - வடபழனி அருகே கமலா திரையரங்கை கடக்கும்போதே விளங்கிவிட்டது ' சிவாஜி - தி பாஸ்' வெளியாகவிருக்கும் அரங்கங்களில் முன்பதிவு செய்வதற்காக ரசிகர் கூட்டம் அலைமோதும் என்று. ரசிகர் கூட்டம் மட்டும்தான் அலைமோதும் என நினைத்தேன். ஆனால், தொலைக்காட்சி நிருபர்களும், பத்திரிகைக்காரர்களுமாக அவரவர் ஒருபக்கத்திற்கு மொய்த்துக்கொண்டிருப்பார்கள் என எதிர்பார்க்கவில்லை. சாந்தி திரையரங்கில் அந்தக்காலத்தில் அண்ணன் ஒரு கோயில் திரையிடப்பட்டபோது, கால்களை இழந்த ரசிகர் ஒருவர் தவழ்ந்து தவழ்ந்து திரையரங்கிற்கு வர, அந்த நேரத்தில் அரங்கிற்கு வந்திருந்த சிவாஜி அவர்கள் அந்த ரசிகரைக் கண்டு மனம் நெகிழ்ந்து அவருக்கு சீட்டு கிடைக்க ஏற்பாடு செய்து, எப்பொழுது அவர் சாந்தி திரையரங்கிற்கு வந்தாலும், வரிசையில் நிற்காமல் ஒரு சீட்டினை நேராக மேலாளரிடம் சென்று வாங்கிக்கொள்ளலாம் என உத்தரவும் பிறப்பித்ததாக தெரிந்தோர்கள் சொல்லக் கேட்டதுண்டு. இன்று அது போன்றதொரு காட்சியினை சத்தியம் திரையரங்கில் சிவாஜி திரைப்படத்தின் முன்பதிவில் கண்டேன். என்னவொரு மாற்றம் - கால்கள் இல்லாதிருக்கும் அந்த ரசிகருக்காக ...