மங்கல் பாண்டே 'பிரிட்டிஷ் ராஜ்' காலத்திய கதைக்களனும், ஆமிர் கானும் இணைவது மட்டுமே இந்தியத் திரைப்படத்தை ஆஸ்கார் விருதிற்குக் கொண்டுசெல்லுமா? இப்படியே பல விஷயங்களை ஒப்புநோக்கியதால், மங்கல் பாண்டே, சிறந்த படமன்று எனச் சொல்ல முடிகிறது. ஜாவீத் அக்தர், ஏ.ஆர். ரகுமான் கூட்டணியென்றால், 'ராதா கைஸே நா ஜலே ஆக் தன் மன் மே லகே' (படம்: லகான்) நினைவுக்கு வருகிறது. ஆமிர் கான், ராணி முகர்ஜி கூட்டணியென்றால், 'ஏய் க்யா போல்தி து' (படம்: குலாம்) நினைவுக்கு வருகிறது. வடக்கத்திய சோமபானம் 'பங்க்'கை ஆமிர் குடித்ததும், ராஜேஷ் கன்னா தலையாட்டிய 'ஜெய் ஜெய் ஷிவ ஷங்கர்' (படம்: ஆப் கி கசம்) நினைவுக்கு வந்து, ஆமிர் உளருகின்ற, 'கம்பெனிக்கா தன்ஹா தோ ஸாத் ருப்பைய்யா த்யான் கரோ ஹாஸிர் ஹை பாக்கி சிப்பையா' போன்ற இயைபுத்தொடையான நகைச்சுவை வரிகளை மறக்கச் செய்கிறது. (கும்பினிக்காரன் கூலி தந்தான் ஏழு ரூவாயி .கூப்பிட்டதும் ஓடி வந்தான் மீதி சிப்பாயி) என்னதான் ராணி முகர்ஜி வளைந்து நெளிந்து, சரவிளக்கு - மெழுகுவத்தி முன்னே 'தும்ஹாரி அதாவோன் பே மைன் வாரி வாரி' (உனது நளினங்கள...