Skip to main content

Posts

Showing posts from February, 2011

சென்னையிலும் ஆடுகளச் சேவல்கள்

ஞாயிற்றுக்கிழமை காலை ஆறு ஆறரை மணிக்குள்ளாக உயர்நீதிமன்றத்திலிருந்து பொடிநடையாக பிரகாசம் சாலை என்றழைக்கப்படும் பிராட்வேக்குள் நடக்கவேண்டும். ஆற்காடு லூத்ரன், சி.எஸ்.ஐ., வெஸ்லி இங்லிஷ் என ஒவ்வொன்றாக தேவாலயங்களைக் கடந்து சென்றதும் இடப்புறமாக அரசு வணிக வளாகம் விரியும், அதிலிருந்து நான்கைந்து தப்படிகள் நடக்குமுன் வலப்புறம் இனாமல் பெயர்ப் பலகையுடன் பூம்புகார் பதிப்பகம் தெரியும். பதிப்பகத்தைத் தாண்டியவுடன் தொட்டடுத்து வரும் இடப்பக்கம் திரும்பினால் அது அம்மன் கோயில் தெரு - பிராட்வே. அதனுள் நுழைந்ததும் இன்றைய இளங்கதாநாயகர்களின் வெற்றிப்படங்களின் சுவரொட்டிகளுக்கு அருகில், அந்தக் கதாநாயகர்கள் பிறப்பதற்கு முன்பே வெளியான வாத்தியார் திரைப்படச் சுவரொட்டிகள் ஒன்றிரண்டாவது கண்ணில் தெரியும். அப்படி சுவரொட்டிகள் தெரிந்தால்தான் சரியான இடத்திற்குள் நுழைவதாகப் பொருள். அங்கிருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஆச்சரியப்படத் துவங்கலாம். ”அது லவ் பேர்ட்ஸ் சார்” ”கன்னியாஸ்த்ரி வோணும்னா பக்கத்துக் கடைலக்குது பார்” (இந்தப் படம் மட்டும் இங்கிருந்து நன்றிகளுடன் சுட்டது) ”அதுவா, அது ஜேக்கபின். இதுக்கே சொல்றிய, ஒரு சிலது வரும் ப...