Skip to main content

Posts

Showing posts from December, 2009

என்னுடைய 2009

தொழில், குடும்பம் விடுத்து வெளியே வேறெதுவும் குறிப்பிடத்தக்க செய்திகள் எதுவும் என்னிடம் 2009இல் கிடையாது. அனைத்தும் பொதுவாக எல்லாரிடமும் கிடைக்கும் செய்திகளே. இரண்டு மூன்று ஆங்கில அதிவிற்பனைகளைப் படிக்க முடிந்தது (வொயிட் டைகர், அல்கெமிஸ்ட், தௌசண்ட் ஸ்ப்லெண்டின்ட் சன்ஸ்). மணிஷங்கர் அய்யரின் இரண்டு புத்தகங்களை (பாக்கிஸ்தான் பேப்பர்ஸ், கன்ஃபஷன்ஸ் ஆஃப் எ செக்யூலர் ஃபண்டமெண்டலிஸ்ட்) மேலோட்டமாக மேய முடிந்தது. வழமைபோல் அவ்வப்போது கிடைக்கையில் படிக்கும் புத்தகங்களாக ஒன்றிரண்டு தமிழில் படித்தேன். சுஜாதாவின் விஞ்ஞானக் கதைகள், சிறுகதை எழுதுவது எப்படி, மீண்டும் ஒருமுறை வெங்கடேஷின் இருவர், கொஞ்சம் அப்துற்றஹீம், இலங்கைக் கவிஞர் ஜின்னா ஷர்புத்தீனின் திருநபி காவியம். சில இப்படி அங்கொன்றும் இங்கொன்றுமாக இலக்கின்றி சென்றது. ரூமிசாஹேபின் சூபியிசம் கொஞ்சம் படித்திருக்கையில் நண்பர் அய்யனார் கேட்க அவரிடம் தந்திருக்கிறேன். அவர் திருப்பித் தந்ததும் படிக்கத் துவங்கவேண்டும். பதிவுகள் 30ம், இன்னொருவரின் மரபுக்கவிதையைப் படியெடுத்தலில் 100 பக்கங்கள் தட்டச்சு செய்ததும் கணக்கில் சேர்ந்திருக்கின்றன. சென்ற வருடம் தௌசண...

வேட்டைக்காரன் - புதிய சண்டைக்காட்சிகளில் எனது எதிர்பார்ப்பு

தற்போதைய ஸ்டண்ட் மாஸ்டர்கள் கனல் கண்ணன், பீட்டர் ஹெய்ன் இருவரும் சராசரியான உடல் அமைப்பு கொண்டவர்கள், இருவரின் சண்டைக்காட்சிகளையும் ரசித்திருக்கிறேன். அன்றைய ஸ்டண்ட் மாஸ்டர்களுள் எம்.ஜி.ஆரின் ஆஸ்தான ஸ்டண்ட் மாஸ்டர் ஷ்யாம் சுந்தரையும் இதில் சேர்க்கலாம். ஸ்டண்ட் மாஸ்டராக இருக்கவேண்டுமென்றால் ஆஜானுபாகுவாக இருக்கவேண்டிய அவசியமில்லை என்பதை நிரூபித்தவர்கள் இவர்கள். கனல் கண்ணன் அவர்கள் நடிப்பிலும் ஒரு காலை ஊன்றிக்கொண்டார். சில படங்களில் சண்டைக் காட்சிகளில் கதாநாயகனிடம் தோற்பதையும் நகைச்சுவையாக்கி சிரிப்பை வரவழைத்திருப்பார். சிலம்பரசனுடன் பெண்ணிடம் நேரம் கேட்பதில் உண்டாகும் சண்டையில் சிலம்பரசன் இவரைத் துவைத்தெடுத்த பின் மணி சொல்லும்போது ராகுகாலம் எமகண்டம் சூலம் உட்பட எல்லாமுமாக இவர் சொல்லிய நகைச்சுவைக்கு நான் ரசிகன். கமலின் அவ்வை ஷண்முகி வேடமிட்ட சண்டைக்காட்சி, ரஜினிக்கு சிவாஜியில் பாடலுடன் அமைந்த சண்டைக்காட்சி என்று கனல் கண்ணன் நடித்த ஸ்டண்ட்களில் சிரிப்பையும் வரவழைத்த ஸ்டண்ட்கள் சிலவற்றைச் சொல்லலாம். எனது நினைவாற்றல் சரியாக இருக்குமானால் ரஜினி-25 விழாவில் ரஜினிகாந்த் நடித்த சண்டைக்காட்சிகளை ம...

பா - திரைப்படம் எனது பார்வையில்

நமது விஜயகாந்த் அவர்கள் திரையில் செய்துகாட்டும் அதிரடி அரசியல் சமாசாரங்களை அபிஷேக்கும் திரையில் செய்கிறார். நில ஆக்கிரமப்பை அகற்றி அரசு ஏழைகளின் வாழ்வைக் குலைக்கிறது என்று மக்களுக்காக மேம்போக்காக வாதாடும் செய்தி நிறுவன ஆள்களின் வீடுகளை ஆக்கிரமிக்க குடிசைப்பகுதி மக்களை அனுப்புகின்றார். செய்தியாளர்களின் எதிர்வினையை நேரடி ஒளிபரப்பில் மக்களுக்குக் காட்டி, நான் செய்தது தவறென்றால் என்னைக் கைது செய்யுங்கள் என தொலைகாட்சியில் பேசுகின்றார். நேற்றைய கதாநாயகர்கள் திரையில் காதலிக்காக இரவு முழுதும் வீட்டு வாசலில் காத்திருப்பதை அபிஷேக்கும் செய்கிறார். பாராளுமன்ற உறுப்பினராக இருந்து எப்பொழுதும் அருகில் இரண்டு மெய்க்காவலர்களுடன் சுற்றும் அபிஷேக்கை இந்நேரத்தில் மட்டும் மெய்க்காவலர்கள் பிரிந்தார்கள் என ஏரணம் பார்த்தால் குழப்பமே மிஞ்சும், சல்தாஹை! 'அவன் உன குழந்தையில்லேன்னு சொல்லிடு. இல்லேன்னா பத்திரிகைக்காரங்க உன் பேரைக் கெடுத்துருவாங்க. ஒருவேளை எவனாச்சும் எதுனா பேசுனா...நீ என் மகன்டா, யாராச்சும் உன் பேரைக் கெடுத்தாங்க அவங்களக் கொன்னுருவேன்' என அப்பா அரசியல்வாதி (பரேஷ் ராவல்) மகனிடம் உறுமுகிறார்,...