ஸுபைதா - கரீஷ்மா
மகாராணி (ராஜ்மாதா) - ரேகா
மகாராஜா - மனோஜ் பாஜ்பாய்
இசை - ஏ.ஆர்.ரகுமான்
இயக்கம் - ஷ்யாம் பெனகல்
அடிக்கடி நிகழும் சானல் உலாவலில் எப்பொழுதாவது ஈரானியப் படமோ (ஸாங் ஆஃப் த ஸ்பாரோ), பிரெஞ்சுப் படமோ (டிபார்ட்மெண்ட் 36), சீனப் படமோ (ஐ இன் த ஸ்கை), அரபிப் படமோ (பாரடைஸ் நௌ) யூடிவியில் மாட்டிக்கொள்ளும். நேற்று அப்படி மாட்டியது ஒரு இந்திப் படம், ஷ்யாம் பெனகலின் ஸுபைதா . ஏ.ஆர்.ரகுமானே இசையமைத்திருந்தும், பாடல்கள் பிரபலமாகியிருந்தும், இந்தத் திரைப்படம் வெற்றியடையாமல் போனது. இது ஏன் தோல்வியடைந்த்து என்னும் கேள்வியுடனே திரைப்படத்தைப் பார்த்தபோது பத்தாண்டுகளுக்கு முன் பார்த்ததற்கும் இப்போது பார்ப்பதற்கும் கிடைத்த புரிதல் வேறாக இருக்கின்றது. இடைப்பட்ட நாள்களில் மூளைக்குள் சென்ற பல செய்திகள், அனுபவங்கள், சார்பு நிலைகள் எல்லாமாகச் சேர்ந்து படம் பார்க்கும்போதே கேள்விகளையும் துணைக் கேள்விகளையும் அனுமானங்களையும் உண்டாக்குகின்றன.
இந்திய விடுதலையின்போது ராஜ்மகராஜ்களுடன் சரிசமமாக அமர்ந்து பேசும் அளவிற்கு செல்வாக்கிலிருந்த ஆண்ட்டி ரோஸ் அடுத்த இருபத்தைந்து வருடங்களுக்குள் எப்படி கீழ்நடு...