ஸுபைதா - கரீஷ்மா
மகாராணி (ராஜ்மாதா) - ரேகா
மகாராஜா - மனோஜ் பாஜ்பாய்
இசை - ஏ.ஆர்.ரகுமான்
இயக்கம் - ஷ்யாம் பெனகல்
அடிக்கடி நிகழும் சானல் உலாவலில் எப்பொழுதாவது ஈரானியப் படமோ (ஸாங் ஆஃப் த ஸ்பாரோ), பிரெஞ்சுப் படமோ (டிபார்ட்மெண்ட் 36), சீனப் படமோ (ஐ இன் த ஸ்கை), அரபிப் படமோ (பாரடைஸ் நௌ) யூடிவியில் மாட்டிக்கொள்ளும். நேற்று அப்படி மாட்டியது ஒரு இந்திப் படம், ஷ்யாம் பெனகலின் ஸுபைதா. ஏ.ஆர்.ரகுமானே இசையமைத்திருந்தும், பாடல்கள் பிரபலமாகியிருந்தும், இந்தத் திரைப்படம் வெற்றியடையாமல் போனது. இது ஏன் தோல்வியடைந்த்து என்னும் கேள்வியுடனே திரைப்படத்தைப் பார்த்தபோது பத்தாண்டுகளுக்கு முன் பார்த்ததற்கும் இப்போது பார்ப்பதற்கும் கிடைத்த புரிதல் வேறாக இருக்கின்றது. இடைப்பட்ட நாள்களில் மூளைக்குள் சென்ற பல செய்திகள், அனுபவங்கள், சார்பு நிலைகள் எல்லாமாகச் சேர்ந்து படம் பார்க்கும்போதே கேள்விகளையும் துணைக் கேள்விகளையும் அனுமானங்களையும் உண்டாக்குகின்றன.
இந்திய விடுதலையின்போது ராஜ்மகராஜ்களுடன் சரிசமமாக அமர்ந்து பேசும் அளவிற்கு செல்வாக்கிலிருந்த ஆண்ட்டி ரோஸ் அடுத்த இருபத்தைந்து வருடங்களுக்குள் எப்படி கீழ்நடுத்தர வாழ்க்கைக்குத் தள்ளப்படுகிறாள்.
திரைப்பட ஸ்டுடியோ வைத்திருந்த பெரும்பணக்காரக் குடும்பத்து ஸுபைதாவின் அம்மாவும் கடைசிக்காலத்தில் சாதாரண வீட்டில்தான் வசிப்பதாக காட்டுகிறார்கள்.
ஸுபைதாவைப் பெண்டாள நினத்த ராஜகுமாரனோ கடைசியில் போலி கவுரவத்துடன் மற்றவர் பணத்தில் மதுவருந்தும் நிலையில் இருக்கிறான்.
ராஜ்மாதாவும் அரண்மனையில் வாழாமல் ஏதோ ஒரு பெரிய வீட்டில்தான் வாழ்கிறாள்.
இந்திய விடுதலைக்கு முன் ராஜபோகமாக வாழ்ந்தவர்களெல்லாம் நாளடைவில் மேல்நடுத்தரவர்க்க / கீழ்நடுத்தரவர்க்க நிலைக்குத் தள்ளப்பட்டார்கள் என்று சொல்லாமல் சொல்லும் செய்தியோ என நினைக்கத் தோன்றுகிறது.
இவற்றை விடுத்து கதையென்று பார்த்தால் சற்றே நீஈஈளமான கதை.
பாட்டியிடம் வளர்ந்து வரும் பேரன் தனது அம்மா ஸுபைதா குறித்து அறிந்துகொள்ள முற்படுகின்றான். ஒருகாலத்தில் கொடிகட்டிப் பறந்த திரைப்பட நடன ஆசிரியர் தாரா பாபு ஸுபைதாவுக்கு நடனத்தின் மேல் இருந்த ஆர்வத்தை அவனுக்குச் சொல்கிறார். பாட்டியிடம் அடம் பிடித்து தனது அம்மாவின் பழைய டைரிக் குறிப்புகளை வாங்கிக்கொள்கிறான். அம்மா மறுமணமாகிப்போன ஃபதேபூர் சமஸ்தானத்திற்குச் சென்று ராஜ்மாதாவை சந்திக்கிறான், மகாராஜாவின் தம்பியை சந்திக்கிக்கிறான். ஒவ்வொரு சந்திப்பிலும் அவரவர் அவனது அம்மா குறித்து அவரவர் பார்வையில் ஒவ்வொரு பரிமாணத்தை அவனிடம் சொல்கிறார்கள்.
திரைப்பட ஸ்டுடியோ முதலாளியின் மகள் ஸுபைதாவுக்கு நடிப்பிலும் நடனத்திலும் ஆர்வம். அவளுடைய அப்பாவுக்கு திரைப்படம் தொழிலாக இருப்பினும் தனது மகள் திரைத்துறைக்கு வருவதை விரும்பவில்லை. மகளின் திரைப்பட ஆர்வத்திற்குத் தடைபோட அவசரமாக தனது நண்பரின் மகனுக்கு மகளைத் திருமணம் செய்துவைக்கிறார். ஸுபைதா ஆண் குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். ஸுபைதாவின் மாமனாருக்கு சுதந்திர இந்தியாவின் போக்கில் உடன்பாடில்லை. முஸ்லிம்களுக்கு இனிமேல் இந்தியாவில் இடமில்லையென்பதும், பாகிஸ்தானுக்குக் குடிபெயர்ந்துவிடவேண்டும் என்பதும் அவரது எண்ணம். ஸுபைதாவின் அப்பா தன்னையே உதாரணமாகச் சொல்லி முஸ்லிம்கள் இந்தியாவில் இருக்கலாம் என்கிறார். வாக்குவாதம் முற்ற, நண்பர்களுக்கிடையே இருந்த உறவு உடைகின்றது. ஸுபைதா மணவிலக்கு பெற்று தனது மகனுடன் இந்தியாவில் அப்பாவுடன் இருக்கிறாள்.
தனது வீட்டிற்கு அடிக்கடி வரும் சீமாட்டி ஆண்ட்டி ரோஸ், ஸுபைதாவை ஃபதேபூர் சமஸ்தானத்து மகாராஜாவுக்கு அறிமுகம் செய்கின்றார். மகாராஜாவுக்கு ஸுபைதாவைக் கண்டதும் காதல் பிறக்கின்றது. ஸுபைதா துவக்கத்தில் ஒதுங்கினாலும் ஆண்ட்டி ரோஸின் வற்புறுத்தலால் மெல்ல மெல்ல மகாராஜாவிடம் காதல் வயப்படுகிறாள். விவரம் அறிந்த ஸுபைதாவின் அம்மா, மகாராஜா இந்து, ஸுபைதா முஸ்லிம், மேலும் சமஸ்தான மகாராஜாக்களுக்கு இப்படி இருப்பது ஒரு பொழுதுபோக்கு என காதலுக்குத் தடைபோடுகிறாள். பிறகு, மகளின் பிடிவாதத்தைக் கண்டு மகாராஜாவைத் தான் சந்திக்கவேண்டும் என்று சொல்கிறாள். மகாராஜா தெளிவாக அனைத்தையும் சொல்லிவிடுகிறார். அவருக்கு ஏற்கெனவே திருமணமாகி பட்டத்து ராணி இருக்கிறார். குழந்தைகள் உண்டு. ஸுபைதாவை இரண்டாவது மனைவியாக ஏற்க விழைகிறார். ஸுபைதாவின் மகனைத் தான் தத்து எடுத்துக்கொண்டு அவனை முஸ்லிமாக வளர்ப்பதற்கு சம்மதம் தெரிவிக்கிறார். திருமணத்திற்கு சம்மதிக்கும் அம்மா, பேரனைத் தர மறுத்து தன்னுடன் வைத்துக்கொள்கிறார்.
ஸுபைதா, மீனாட்சி என மாறி, ஃபதேபூர் சமஸ்தானத்திற்குள் இரண்டாவது மனைவியாக நுழைகிறாள். பட்டத்து ராணி மந்திரா, மீனாட்சி என்னும் சுபைதாவுக்கு அரண்மனையின் பழக்கவழக்கங்களைக் கற்றுத் தருகிறார். மீனாட்சிக்கு அந்தப் பழக்கவழக்கங்கள் தன்னைச் சிறைவைப்பதாகத் தோன்றுகின்றன. சமஸ்தானங்களை உள்ளடக்கி இந்தியா ஒரு பெரிய நாடாக உருவாகிக்கொண்டிருந்த நேரத்தில் மகாராஜாவும் மகாராஜாவைச் சேர்ந்தவர்களும் தேர்தலில் நிற்கிறார்கள். தேர்தல் பிரசாரத்துக்கு மீனாட்சியை அழைத்துச் செல்வதைவிட பட்டத்து ராணியை அழைத்துச் செல்வதே வாக்கு வங்கிக்கு சரியான செயல் என நினைத்து மகாராஜா பட்டத்து ராணியை அழைத்துச் செல்கிறார். மீனாட்சிக்கு இது பிடிக்கவில்லை. தான் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறாள்.
தேர்தலில் மகாராஜா அமோக வெற்றி பெற்றதும் இந்திய அரசு அவரை தில்லிக்கு அழைக்கிறது. பேச்சு வார்த்தைக்கு பட்டத்து ராணியுடன் தில்லி செல்லும்போது, மீனாட்சி விமான தளத்திற்கு வந்து வெடிக்கிறாள். யாரும் அனுமதி தரும் முன்னரே தான்தான் மகாராஜாவுடன் தில்லி வருவேன் என்று சொல்லிவிட்டு விமானத்திற்குள் ஏறி அமர்ந்துவிடுகிறாள். அது இரண்டு பேர் மட்டுமே பயணம் செய்யக்கூடிய தனி விமானம். குனிந்த தலையுடன் பட்டத்து ராணி ஒதுங்கிக்கொள்ள, மகாராஜா விமானத்தில் ஏறி புறப்படுகிறார். வழியில் விமானம் விபத்துக்குள்ளாகிறது. மகாராஜாவும் மீனாட்சியும் இறந்துவிடுகின்றார்கள்.
அரசியல் காரணங்களுக்காக மீனாட்சி மகாராஜாவுடன் விமானத்தில் இருந்ததும் மறைக்கப்படுகிறது.
வீட்டை விட்டு, மகனை விட்டு, மதத்தை விட்டு, எல்லாவற்றையும் விட்டு மகாராஜாவின் பின்னே வந்த சுபைதாவுக்கு கடைசியில் கிடைத்த பட்டம் ’மகாராஜாவின் ஆசைநாயகி’.
ஸுபைதா வாழ்ந்த காலத்தில் அவளது ஒவ்வொரு துயரத்திற்குப் பின்னாலும் அரசியலும் மதமும் பின்னப்பட்டிருக்கிறது.
முதல் மணவிலக்கிற்குக் காரணமாக இருப்பது இந்தியா பாகிஸ்தான் பிரிவினை, மகாராஜாவைத் திருமணம் செய்துகொள்ளும்போது ஸுபைதாவின் மகனை அவளுடன் அழைத்துச் செல்ல முடியாமல் தடுப்பது மதம், தன்னிச்சையாக இருந்த ஸுபைதா, மீனாட்சியாகி அரண்மனைக்கு வந்த பின் அவளைச் சுற்றி இடப்படும் ராஜபுத்திர பழக்கவழக்கங்கள், உடைமாற்றம், முஸ்லிமாக இருந்து இந்துவாக மாறியவள் என்பதால் தேர்தல் பிரசாரத்துக்கு மீனாட்சியை அழைத்துப் போகத் தயக்கம் காட்டும் மகாராஜாவின் அரசியல், அண்ணனின் வைப்பாட்டிபோலத்தானே என்னும் நினைப்பில் அவளைப் பெண்டாள நினைக்கும் இன்னொரு ராஜகுமாரன், இப்படியாக அவளைச் சுற்றி நிகழும் அரசியல் காரணிகள், மதக் காரணிகள் இவற்றால் அலைக்கழிக்கப்பட்டு கடைசியில் இறந்த சுவடுகூடத் தெரியாமல் மறைந்துபோகும் அந்தப் பாத்திரம் உறுதியான மனப்பக்குவமற்ற பெண்ணாகவே சித்தரிக்கப்பட்டிருப்பதால் உண்டாக்கவேண்டிய தாக்கத்தை உண்டாக்கவில்லை.
இந்திய விடுதலை, பாகிஸ்தான், சமஸ்தானங்களைச் சேர்த்தல், இந்தியாவின் முதல் தேர்தல் என்று சில அரசியல் தளங்களில் கதை நிகழ்வதாலும், ஸுபைதா கதாபாத்திரம் கொஞ்சம் குழந்தைத்தனமும், கொஞ்சம் வெகுளியும், அதிக சுயநலமும் கொண்ட சுபாவமாக சித்தரிக்கப்பட்டிருப்பதாலும் அந்தப் பாத்திரம் மிகவும் குறைவான தாக்கத்தையே ஏற்படுத்துகிறது.
பாத்திரப் படைப்பு எப்படி இருந்தபோதிலும் கரீஷ்மாவின் நடிப்பு அற்புதம்.
வழமையான இந்தியா பாகிஸ்தான் பிரிவினை உரையாடல்களின் ஊடே இந்தியாவில் இனி முஸ்லிம்களுக்கு எதிர்காலம் இல்லையென்பதும், இருக்கின்றதென்பதும், உழைத்தால் எங்கும் உயரலாம் என்பதும் விவாதமாக மாறி கொஞ்சம் கொஞ்சமாக தனிப்பட்ட தாக்குதலுக்குச் சென்று தங்கள் கருத்துகள் ஒத்துப்போகாததால் தங்கள் வாரிசுகளை மணவிலக்கு பெறச்சொல்லும் அளவிற்கு இந்தியா பாகிஸ்தான் இரண்டு பெரியவர்களின் மனதில் வேர்விட்டிருப்பதைக் காட்டும் வசனங்கள் சொல்லிச் செல்பவை கதைக்கு வெளியே நீண்ட விவாதத்திற்கான துவக்கம்.
பட்டத்து ராணி மந்திரா மீனாட்சியை 'M' என்று அழைப்பதும், மீனாட்சி மந்திராவை ’மேண்டி தீதி’ என்று அழைப்பதும், அவர்களுக்கிடையேயான நட்பில் மகாராஜா யாரிடம் அதிகமாக மயங்குகிறார், யாருக்கு அதிக முக்கியத்துவம் தருகிறார் என்னும் அந்தரங்கமான சில உரையாடல்களும், மெல்லிய பொறாமை தொனிக்கும் வசனங்களும் அருமை.
ஸுபைதாவின் அம்மாவின் அழகை ஸுபைதாவின் முன்னிலையிலேயே வர்ணிக்கும் மகாராஜா, சிருங்காரத்தின் துவக்கத்திலும் ’பண்டித நேரு அழைத்ததான் வரத் தாமதம், ஆனால், இப்போதைக்கு அழைக்கமாட்டார் வா’ என்று அரசியல் பேசும் மகாராஜா, காதலில் வீழ்ந்து இரண்டாம் தாரமாக மணமுடித்து அழைத்து வந்து இந்த வீட்டில் பட்டத்து ராணி இட்டதுதான் சட்டம் என்று அன்புக் கட்டளை இடும் மகாராஜா, அரசியல் வேறு காதல் வேறு எனப் புரிந்து வைத்திருக்கும் மகாராஜா, தனது தம்பிக்கு தனது இரண்டாம் மனைவியின்மேல் ஒரு கண் இருப்பது தெரிந்தாலும் அரசியல் காரணங்களுக்காக, ‘இதனை நீதான் கையாளவேண்டும்’ என இரண்டாம் மனைவியிடம் சொல்லிவிட்டு ஒதுங்கிக்கொள்ளும் மகாராஜா, என பல பரிமாணங்களில் மனோஜ் பாஜ்பாய்.
காதலை மட்டுமல்லாது இந்தியா பாகிஸ்தான் பிரிவினை, சமஸ்தானக்களை ஒருங்கிணைத்த இந்தியா, சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தல், ராஜபுத்திர அரசியல் என பல தளங்களைத் தொட்டுச் செல்லும் கதை. அங்கங்கே கொஞ்சம் பொரித்தெடுத்தாலுமே ஒருமுறை தாராளமாகப் பார்க்கலாம்.

Comments