லூர்து
எட்டடித் தீவுக்குள்ளே இருப்பது நியாயம் இல்லே
எமலோகம் போகலாம் வாடியம்மா! தாயே!
பட்டணம் மீதிலுன்னைக் கட்டிய மாப்பிள்ளை
பாசவலை வீசுறான் வாடியம்மா! தாயே!
டடக்முடக் டடக்முடக் ஓசையுடன் ஊடாடிக்கொண்டிருந்த தறி நாடாவின் ஓசையையும் தாண்டி வெண்கலக்குரலில் பாடத் துவங்கினான் ஷேக் அலி.
கைத்தறி வேலை செய்பவனாக இருந்தாலும் ஷேக் அலியின் சிந்தனைகளும் நடவடிக்கைகளும் சராசரி தறிக்காரர்களுடன் எப்பொழுதும் ஒத்துப்போனதில்லை. வயிற்றுப் பிழைப்புக்காக தறியில் கைகள் ஓடிக்கொண்டிருந்தாலும் சிந்தனை வேறு பக்கத்தில்தான் இருக்கும். ஏதாவது பிரபலமான பாடலைப் பாடிக்கொண்டோ அல்லது தானே அடுக்கிய வார்த்தைகளை தனக்குத் தோன்றும் மெட்டில் பாடிக்கொண்டோ இருப்பான்.
ஷேக் அலியின் பாட்டை யாரும் குறை சொல்லாததற்கு முக்கியமான காரணம் இருக்கிறது. அவன் லெப்பையாகத்தான் போவான் என ஜமாத்தில் அனைவரும் நினைத்தார்கள்.
'மவ்லாய ஸல்லி வஸல் லிம்தாஹி மன்அபதா'
மாப்பிள்ளை ஊர்வலங்களில் அரபி பைத்தைத் துவங்கினானென்றால், மாப்பிள்ளைகூட ஊர்வலம் அவசரமாக மணப்பந்தலுக்குப் போகவேண்டாம் என நினைப்பார். வெண்கலக் குரலில் எந்த கோஷ்டியுடன் அவன் சேர்ந்து பைத்து ஓதினாலும் ஷேக் அலி இருப்பதை அவன் குரல் உணர்த்தும். பைத்து, துவா, ஹத்தம் ஃபாத்திஹா எல்லாவற்றையும் மனனம் செய்து வைத்திருந்தும் லெப்பையாகத் தொடர்வது ஏனோ அவனுக்குப் பிடிக்கவில்லை. சுதந்திரமான அவனது சிந்தனைகளுக்கு அது தடையாக இருப்பதாக உணர்ந்தான். தனது எல்லைகள் இந்தத் திருவல்லிக்கேணியைச் சுற்றியல்லவென்பதில் தீர்மானமாக இருந்தான்.
'வா, நான் தறிக்கு போறன் வா' (வா - வாப்பாவின் சுருக்கம்)
'ஏண்டா சம்பாத்தியம் பத்தலயா. கொமரு வூட்டுல உக்காந்தீக்குது நான்லொடா சம்பாத்தியத்த யோசன பண்ணனும்'
'அதுக்கில்ல வா, வூடு வூடா போயி ஓதிப்பாத்து, பாத்திஹா ஓதி, வாணாம் வா, புடிக்கல'
லெப்பைத் தொழிலைத் தொடராமல் போனதற்கு இதுவும் ஒரு காரணம்தானேயன்றி, இதுதான் காரணமன்று. அதிமுக்கியமான காரணம் பாடல்கள் எழுதவேண்டுமென்பது. 'தக்பீர் முழக்கம் கேட்டால் நெஞ்சம் இனிக்கும்' ஹனீபாவின் பாடலைக் கேட்கும்போதெல்லாம், என்றைக்காவது ஒருநாள் ஹனீபா அண்ணன் தனது பாட்டை எப்படியும் பாடத்தான்போகிறார் என நினைத்துக்கொள்வான். கூடவே, 'ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது' கேட்டானென்றால் சிவாஜியும் தனது பாடலைப் பாடினால் எப்படி இருக்கும் என்றும் நினைப்பதுண்டு.
யாரோ வாலி, புதிதாக வந்திருகிறாராமே.
மன்னவனே அழலாமா கண்ணீரை விடலாமா
உன்னுயிராய் நானிருக்க என்னுயிராய் நீயிருக்க - அற்புதமாக இருக்கிறது. புதிது புதிதாக ஆள்கள் வரும்போது தனக்கு மட்டும் ஒரு இடம் கிடைக்காமலா போய்விடும். ஒரு வாய்ப்பு கிடைத்தால் போதுமானது. எப்படியும் மேலே வந்துவிடலாம். அதுவரைதான் தறி.
பாடல்கள் எழுதுவதற்கு வசதியான தொழில் தறி நெய்வதுதான். பக்கத்து தறிக்காரர்கள் ஒன்றும் சொல்லமாட்டார்கள். லெப்பையாக இருந்து தறிக்கு வந்தவனென்பதால் தேவைக்கும் அதிகமாக மரியாதை கிடைக்கும். கால்குழிக்குள் இறங்கி அனிமிதியில் இரண்டு பாதங்களையும் வைத்து மாற்றி மாற்றி அழுத்தி, இடது கையில் அச்சு இருக்க வலது கையால் தொங்கட்டானை இழுத்தால் டடக்முடக் டடக்முடக் ஓசையுடன் தறி நாடா இங்கும் அங்குமாக இழையை இழுத்துக்கொண்டு ஓடும். அதுவே தாளமாக அமைய ஷேக் அலி ஏதாவது பாடலை பாடுவான்.
'எட்டடித் தீவுக்குள்ளே இருப்பது நியாயம் இல்லே
எமலோகம் போகலாம் வாடியம்மா! தாயே!'
'எல, வாணத்துருவ, காலங்காத்தால ஏம்ப்ல மவுத்தாப்போற பாட்டப் படிக்ற. ஹனீபா அண்ணம் பாட்டு எதுனாச்சம் படில'
தடுப்புச் சுவற்றின் பின்னாலிருந்து ஹக்உம்மாவின் குரல் கேட்டது. ஹக்வாப்பாதான் தறிக்கு முதலாளி. ஹக்உம்மாவின் பேச்சுக்கு அவரே 'ஆமாம்' போடுவார். ஷேக் அலிக்கும் ஹக்கும்மா சொன்னது சரியாகத்தான் பட்டது. காலையில் இதனைத் துவங்கியிருக்கக் கூடாது.
'தோ ஹக்கும்மா, ஹனீபா அண்ணந்தான, தோ'
'உலக மக்கள் யாவருக்கும் உரிமையானவர்
உருவமற்ற இறைவனுக்கு உண்மையானவர்'
'இந்த மெட்டு ஏதுவோ சினிமாப்பாட்டுன்னு அந்த 'ஊனா' (உருதுக்காரர்) சொன்னாரே' அவனுக்குப் பொறிதட்டி,
பேகராரு கர்க்கே ஹமே யூன் நா ஜாயியே
ஆப்புக்கோ ஹமாரி கஸம் லௌட்டு ஆயியே -
அடடா, பீஸ் ஸால் பாத், சினிமா பேரையும் அந்த ஆளு சொன்னார. இங்க திர்லக்கண்ணி ஸ்டார்ல பீஸ் ஸால் பாத்தெல்லாம் போடமாட்டாங்க. வேப்பேரிப்பக்கம் போயி நடராஜ்லதான் எப்பவாச்சும் போட்டாங்கன்னா பாக்கணும். பாக்கலாம் இந்தப் பொறை அறத்தா முப்பத்துரெண்டு ரூவா கெடைக்கும். நாலு நாள் கூலி. படம் வேப்பேரில போட்டாங்கன்னா போவத்துக்கு துட்டு எடுத்து வச்சுடணும்' என நினைத்துக்கொண்டே,
'ஹக்கும்மா, நாங்கெட்ன பாட்டுப் பாடவா'
'அந்த எளவெடுத்த மவுத்தாப்போற பாட்ட வுட்டுட்டு வேற என்னத்தன்னாலும் பாடு'
'எழில் வரத்தேடுது வண்ணக் கனவு
என்னை நினைத்தேங்குது என்ன உறவு' - சிலைவடித்தான் ஒரு சின்னப்பெண்ணுக்குதான் இப்படி வார்த்தைகள் மாற்றப்பட்டு ஷேக் அலியின் குரலில் ஒலிக்கும்போது ஹக்வாப்பா உள்ளே நுழைந்தார்.
'வாப்பா வாலைதாசா. இப்படித்தான் பாட்டா கெட்டிக்கிட்டிருந்தான் வாலைதாசன். கடசில களத்தறுத்துக்கிட்டு மவுத்தானான். பாட்டுக்கெட்றிய, இங்க தறில கெடந்து அல்லாடுனா வாலைதாசங் கெதிதான் உனக்கும். நாயித்திக்கெளமைல பயாஸ்கோப்புக்குப் போவாம, ஹயாத்தப் போயிப் பாரு, வெளங்குதா. பயாஸ்கோப்புல குஸ்தி போர்ரான் அவன். யார்ட்டயாச்சும் என்னமாச்சும் சொல்லுவான். மூத்தவ படிச்சிருக்கா, ஓதியிருக்கா, தறியப்புடிச்சுக்கிட்டு எங்கிட்ட கெடக்றா.'
ஹக்வாப்பா, பயாஸ்கோப் குஸ்தி என்று சொன்னது திரைப்படத்தில் சண்டைக் காட்சியில் நடிப்பதைத்தான். அவர்களின் ஜமாத்தில் திரைத்துறையுடன் தொடர்புள்ளவர்கள் இருவர் இருந்தார்கள். அவர்களுள் ஒருவர் அந்தக் காலத்தில் நீலமலைத் திருடனில் ஒரு காட்சியில் வந்து அடிவாங்கிப்போனதை தினசரி எல்லாரிடமும் சொல்லி அறுத்துத் தள்ளும் இஸ்மாயில் பாய். அவர் உருதுக்காரர். ஷேக் அலி பேசும் கடாபுடா உருதுவை வைத்துக்கொண்டு அவரிடம் எதுவும் சொல்ல இயலாது.
இன்னொருவர் ஹயாத் பாய். அவர் தமிழ் பேசுபவர். அவரிடம் சொல்லலாம். வல்லவனுக்கு வல்லவனில் கூட்டத்தோடு கூட்டமாக சண்டைக் காட்சியில் வந்ததாகச் சொல்வார்கள். அவரிடம் கேட்டுப் பார்த்தால் என்னவென்னும் நினைப்பு ஷேக் அலிக்குத் தோன்றியது.
ஹக்வாப்பா பேச்சோடு போட்ட சிறிய பொறி அவன் மனதில் ஏகப்பட்ட கற்பனைகளை வளர்த்தது.
உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல
நீ இல்லாமல் நானும் நானல்ல
இதயக்கமலத்தில் தான் பாடல் எழுதியிருந்தால் எப்படி எழுதியிருக்கக்கூடும் என்ற கற்பனையில் உறக்கம் பிடிக்கவில்லை. இரண்டு மூன்று முறை புரண்டு படுத்தபோது அவன் ஏதோ அசௌகரியத்தில் இருப்பது பக்கத்தில் படுத்திருந்த வாப்பாவுக்குப் புரிந்துபோனது.
'என்னடா ஒடம்பு நோவுதா? பாவு போட குண்டத்தூக்கும்போது கையிகிய்யி பெசகிடுச்சா'
'இல்ல வா, அதெல்லாம் ஒண்ணுமில்ல. ஒங்களுக்கு ஹயாத்தத் தெரியுமா?'
'குஸ்திக்காரந்தான, தெரியும். எளவயசுலயே கஸரத்தெல்லாம் பண்ணி ஷோக்கா இருப்பான். பயாஸ்கோப்புல குஸ்தி பயில்வானா சேந்துட்டான்'
'அவருகிட்ட சொல்றீங்களா'
'என்னத்துக்குடா, குஸ்தி பளவப்போறியா. நம்ம வருமானத்துல குஸ்தி பளவத்துக்கான தீனியெல்லாம் திங்க முடியாதுடா'
'குஸ்திக்கு இல்ல வா. சினிமால எதுனாச்சும் பாட்டு கெட்றதுக்கு...'
சடாரென படுக்கையிலிருந்து வாப்பா எழுந்துவிட்டார்.
'அடி செருப்பால. ஒரு பீஸ் நெய்சா பதினாறு ரூவா தராரு ஹக்வாப்பா. ஒந்துட்டு எனக்கு வேணாம். நாலு காசச் சேத்து சொசைட்டில கொஞ்சம் கடத்த வாங்கி சொந்தமா தறி போடுவன்னு பாத்தா. பாட்டா கெட்டப்போற பாட்டு. ஒன்னக் கண்டாலே களுத்த நெறிக்கச் சொல்றன் ஹயாத்கிட்ட. படுடா மூத்தவ.'
அவனுக்கு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. தறி நாடாவைச் சுற்றியல்ல தனது வாழ்க்கை என்ற அவனது நினைப்பில் அவன் தீவிரமாகவே இருந்தான். தேவையெல்லாம் ஒரே ஒரு வாய்ப்பு. அதை எப்படி உருவாக்குவது. டடக்முடக் தறியில் இருப்பது சும்மா இருக்கக்கூடாதென்பதற்காகத்தானேயன்றி குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுவதாக வாழ்க்கை அமைந்துவிடக்கூடாது. அனிமிதியுடனும், தறி நாடாவுடனும் ஆத்ம நட்புறவு எனக்கில்லை. தொலைதூரப் பயணத்திற்கான முதல் அடிதான் இந்த தறிக்குழி. நெய்த துணிகளை இறுக்கிச் சுற்றி வைக்கும் நங்கூரக்கல்லாக எதுவும் என்னை சிறைப்படுத்த முடியாது. பலவறாக சிந்தித்தபடியே உறங்கிப்போனான்.
காலையில் தறியைத் துவங்கியதும் எதுவுமே பாடத்தோன்றவில்லை.
'எல என்ன பேயறஞ்சமாரியிருக்க. கொமரு நிக்கிதுன்னு பாக்றியா. ஒண்ணும் கவலப்படாதல்ல. வேள வந்தா எல்லாஞ் சரியாவும்'
'அந்தக் கவலயில்ல ஹக்கும்மா'
'பின்ன என்னா'
இடது கையால் அச்சை நிறுத்திவிட்டு எல்லாவற்றையும் சொல்லி முடித்தான்.
'என்னல பேசுற. பயாஸ்கோப்புக்குதான் போவன்றியா. பொலவர் ஆபிதீன் பயாஸ்கோப்புக்கு போயால பாட்டு கெட்னாரு. ஹனீபா அண்ணன் அவரு பாட்டப் பாடல. நீ யாம்புல இப்படி பயாஸ்கோப்பப் புடிச்சுக்கிட்ட. நல்லா நெய்சு சொந்தமா தறி போடுவியா'
எதையுமே காதில் வாங்காதவனாக, 'லூர்துகிட்ட பேசப்போறன் ஹக்கும்மா'
'ஆமாலெ, இங்கனதான் திண்ணைல கொட்டிக்கிட்டிருந்தான். இப்ப பயாஸ்கோப்புல சேந்துட்டான். பயாஸ்கோப்பு அவனுக்கு சரியாவும்புல, ஒனக்கு சரியாவுமா'
'சரியாவும் ஹக்கும்மா'
லூர்து நல்ல தபேலா வாத்தியக்காரன். அங்கே இங்கே கச்சேரிகளில் வாசித்தவன். ஒரு நல்ல நாளில் கோடம்பாக்கத்தில் அடியெடுத்துவைத்து வாழ்க்கையில் தாளம் போடாமல் பாட்டுக்குத் தாளம் போடுபவன்.
'வா பாய் வா. இன்னா இந்தப் பக்கம். ரம்சான் பண்டிகை எப்போ. பிரியாணி வோணும். ஆங்'
'வேல விஷயமா ஒங்களப் பாக்கலாமுன்னு'
'பாயி, இன்னா நக்கலா. டடக்குமொடக்குன்னு கையக்கால ஆட்டிக்கினு நாளுக்கு எட்டு ரூவா கூலி வாங்கற நீயி. கைல தொழில வச்சுக்கினு எங்கிட்ட வேல விஷயமா. சர்தான் போ பாய் நீ'
'இல்லீங்க. உண்மையிலயே. எனக்கு படத்துல எதுனா சான்சு வாங்கித் தரணும்'
'தோடா. கோடம்பாக்கம் டேஞ்சர் ஏரியாமா. உள்ள நொழைய முடியாது. நொழைஞ்சா நிக்க முடியாது. நிண்ணுட்டா வெளிய வர முடியாது. அபேஸ் பண்ணிரும். கோடம்பாக்கத்துல நீ இன்னா பண்ணுவ'
'பாட்டு எழுதணும்'
'பாயி, இன்னா. கெனா காண்றியா. கொழல உறிஞ்சி எழை எடுத்து தறி ஆட்றதுன்னு நெனக்றியா. தமிழ் வாத்தியாருங்கள்ளாம் தண்ணி குடிக்ற எடம் தெரிமா. எத்தினி வர்சம் அல்லாடி போன வர்சந்தான் மேளத்த மெல்லத் தட்டு மாமால ஒரு பீஸ் கெட்சுது எனுக்கு. தாவு தீந்துரும்பா. வாணா'
'நீங்க யார்கிட்டயாவது சொல்லி ஒரு சான்சு'
'வா பாய் பொறும்ம்ம்மையா ஒக்காரு. இன்னா எய்துவ, பாட்டா? எத்தினி எய்திக்கிற. சொம்மா தறி ஓட்டும்போது பெனாத்றதெல்லாம் பாட்டில்லபா. அங்க வேற கணக்கு. மீட்டர் கணக்கு தெரியுமா உனுக்கு, மீட்ரு. எவ்ளோ தம்முக்குதுன்னு பாக்லாம். கட்சிக்காரங்க நேத்துதான் ஒரு பாட்டு வோணும்னாங்கோ. நீ இன்னாத்த எய்தி கியிக்றன்னு பாக்லாம். ஒக்காரு. மீட்டர் போடட்டா? புடி'
தனன்ன னன்னா தான னன்னா தனன்ன னன்னா தான னன்னா - எய்து பாய் பாக்லாம்'
ஷேக் அலியிடமிருந்து வார்த்தைகள் வந்தன.
'கழகமென்னும் ஓடமதை செலுத்தும் எங்கள் தலைவனடா'
'நல்லாதான் இருக்கு. ஒண்ணு செய். இதே மீட்டருக்கு முப்பது நாப்பது வரி எய்தி எட்தா. கட்சில சொல்லி எங்கனா பூத்து வுட்டர்ரன். ஃபஸ்ட்டு எட்ததுமேல்லாம் பெர்சா ஆரும் சான்சு தரமாட்டாங்கோ ஆர்ட்டயாச்சும் அசிசெண்டாத்தான் சேர்ணும். தறி வருமானம் வராது. சோறுதான் ஃபுல் மீல்ஸு கெடிக்கும். ஓட்டலு ஓட்டலா ப்ரொட்யூசருங்க பின்னால ஓடணும். ஓகேன்னா சொல்லு.
பெரீபாய் சத்தம் போட்டா கத கந்தலு. என்னால நீ கெட்டன்னு ஒரு வார்த்த வந்துச்சுன்னு வெய்யி, உன்ன பொலி போட்ருவன்.
ஆங்..ஒரு வேல செய். சொம்மா ஒரு எம்பது பக்கம் நோட்டு வாங்கி நீ பாடுன அல்லாத்தையும் எய்தி வெய்யி. தெர்தா'
அப்பாவின் எரிச்சலை சம்பாதித்துக்கொண்டு ஷேக் அலி கோடம்பாக்கத்திற்குச் சென்றான். வீட்டைப் பிரிந்து லூர்தின் நண்பர்களுடன் சாலிக்கிராமத்திலேயே தங்கினான். மெஸ்ஸில் மீந்துபோனதைச் சாப்பிட்டு காலத்தை ஓட்டினான். நள்ளிரவில் எழுப்பி ஆறிப்போன பிரியாணியை இலையில் வைத்துக்கொடுத்தார்கள்.
எண்பது பக்க நோட்டுப் புத்தகம் இரண்டு மூன்றாகிவிட்டது.
பாத்தா பசுமரம் படுத்துவிட்டா நெடுமரம்
சேத்தா வெறகுக்காகுமா ஞானத்தங்கமே
தீயிலிட்டா கரியும் மிஞ்சுமா!
ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்
கண் தேடுதே சொர்க்கம்
கை மூடுதே வெட்கம்
பொன்மாலை மயக்கம்
வெற்றிப் பாடல்கள் வந்துகொண்டிருந்தன.
அரசியலிலும் ஈடுபட்டிருந்த முன்னணிக் கதாநாயகர் சுடப்பட்டதால் நகரத்தில் குழப்பமானபோது ராயப்பேட்டை மருத்துவமனைக்கு ரசிகர்களுடன் செல்லும் சாக்கில் திருவல்லிக்கேணிவரையில் போகத் துடித்தும் மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டான்.
சாலிக்கிராமத்திலிருந்து பேருந்தைப் பிடித்தால் முக்கால்மணிநேரப் பயணத்தில் திருவல்லிக்கேணி. அவனும் போகவில்லை. பார்க்க வந்தவர்களுக்கும் போக்கு காட்டினான். சினிமாவில் வெற்றி பெறாமல் வீட்டாரின் முகத்தில் விழிப்பதில்லை என்ற உறுதியில் மாதங்களைக் கழித்தும் பலனில்லை. எடுபிடியாகச் சேருவதைத் தவிர வேறு வழியில்லை என்றானது.
எண்பது பக்க நோட்டுப் புத்தகங்கள் ஆறேழு ஆகிவிட்டன.
ஹக்வாப்பாவின் தறிக்கு வேறு ஆள் சுலபமாகக் கிடைத்தார். பாட்டுச் சத்தம் இல்லாமல் தறியின் சத்தம் மட்டுமே கேட்டதில் ஹக்உம்மா எதையோ இழந்துவிட்டதாகவே உணர்ந்தார்.
'யப்பா ஷேக்கு எங்க இருந்தாலும் நல்லா இருக்கணும்பா' என்னும் பிரார்த்தனையை முணுமுணுப்பதைத் தவிர அவரால் வேறெதுவும் செய்ய முடியவில்லை.
*
தயாரிப்பாளருக்காகத்தான் எல்லாரும் காத்திருந்தார்கள். கூட்டத்தோடு கூட்டமாக யாரையோ பிடித்து உள்ளே வந்துவிட்ட இளைஞனும் தான் வெளியிட்ட கவிதைத் தொகுப்பை வைத்துக்கொண்டு காத்திருந்தான்.
அவர் வண்டியிலிருந்து இறங்கும்போதோ வண்டியில் ஏறும்போதோ ஒரு வாய்ப்பு ஒரே ஒரு வாய்ப்பு கிடைத்தால் அவரிடம் இந்தக் கவிதைத் தொகுப்பைக் கொடுத்துவிடவேண்டும் என்பதில் குறியாக இருந்தான். அவரை நெருங்க முடியாதென்பது அவனுக்குத் தெரியும். நெருங்கினாலும் அருகில் இருப்பவர்கள் புத்தகத்தைத் தரவிடாமல் தள்ளிவிடுவார்கள் என்பதும் தெரியும். தெரிந்திருந்தும் ஏதோ அதிர்ஷ்ட கணத்திற்காக நம்பிக்கை வைத்திருந்தான்.
படப்பிடிப்பு தளம் பரபரப்பானது. அவர் வருவதை யாரோ சொல்லிப் போனார்கள். இயக்குனர் முதல் இசையமைப்பாளர் வரை வண்டியின் கதவருகில் நின்றிருந்தார்கள். இளங்கவிஞன் எங்கோ தூரத்தில் தள்ளப்பட்டான். முண்டியடித்து முன்னே நிற்கும் தலைகளை விலக்கிப் பார்த்து மூச்சு விடுவதற்குள் வந்த வேலையை முடித்துவிட்டு அவர் புறப்பட்டார்.
இந்த வாய்ப்பைத் தவறவிட்டால் அவனுக்கும் இன்னொரு வாய்ப்பு கிடைக்க எத்தனை நாளாகுமோ. கடகடவென ஓடிச் சென்று அவர் வண்டியில் ஏறுவதற்கு முன் எப்படியோ அருகில் சென்று,
'சார் வணக்கம் சார்'
'வணக்கம், என்ன'
'நான் கவிதையெல்லாம் எழுதுவேன் சார். இது நான் போட்ட தொகுப்பு. சார் கிட்டத் தரலாம்னு'
இந்திப் படத் தயாரிப்பிற்கான பேச்சு வார்த்தைக்கு அவசரமாகப் போகும் ஷேக் அலி, நின்று நிதானமாக புத்தகத்தைப் பிரித்துப் பார்த்ததும், சந்தத்துக்கு எழுத வருமா என இளங்கவிஞனிடம் கேட்டதும், அவரது படத்துக்கு வழமையாகப் பாட்டெழுதும் முன்னணிக் கவிஞர்கள் இருந்தும், இளங்கவிஞனை அடுத்த வாரம் அலுவலக்த்திற்கு வந்து பார்க்கச் சொன்னதும், ஏன் என்பது அவருடன் இருந்த நண்பருக்கு மட்டுமே தெரியும்.
அந்த நண்பரின் பெயர் லூர்து.

Comments
பொறுமையா படிச்சுட்டு, மறுபடி வர்றேன்.. :)
வாழ்த்துக்கள் !!
***
வட்டார மொழிநடை கதைக்கு பலம். உரையாடல்களும், வர்ணனைகளும் கலந்து விளையாடுகின்றன.
***
மெலிதான நகைச்சுவை அழகு :-)
***
க்ளைமேக்ஸ் எதிர்பாராத, ஆச்சரியமான முடிவு. இதை அருமையாக கதையுடன் இணைத்திருப்பது ரசிக்க வைக்கிறது.
ராசா,
பையன்,
நன்றிகள்.
*
இனிய கல்ஃப் தமிழன்,
லிஃப்ட் என்றால் வாகனத்தில் மட்டுமல்ல; வாழ்க்கையிலும் என்று தலைப்பைப் புரிந்து எழுதினேன்.
ஷேக் அலிக்கு இங்கே கொஞ்சம் லிஃப்ட் கொடுத்தவர் லூர்து.
அன்புடன்
ஆசாத்
பாராட்டுக்கள். முதல் பரிசு வாங்கினதுக்கு.. சென்ற போட்டியில் உங்க கானாவுக்கே பரிசு கெடச்சிருக்கணும்னு ஆசைப்பட்டேன்.. இப்பொ இதுக்கு முதல் பரிசுன்ன உடனே ரொம்ப சந்தோஷப்பட்டேன்...
வாழ்த்துக்கள். உங்கள் எழுத்து அருமை!!
அன்புடன்,
சீமாச்சு...
முதல் பரிசுக்காக என் வாழ்த்துக்கள்.
- சனியன்
இந்த பதிவை படித்த
மாத்திரத்திலேயே வெற்றி பெற நிறைய வாய்ப்பிருப்பதாக அவதானித்தேன். இறையருளால் முதல் பரிசுக்கு தகுதி பெற்றிருக்கிறது.. நானே வென்றது போல் ஒரு சந்தோஷம்.. பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்...
அன்புத் தம்பி லக்கி ஷாஜஹான்.
ரியாத் - சௌதி அரேபியாவிலிருந்து...
போட்டித் தலைப்பை முழுமையாக உள்வாங்கி அருமையாக சிறுகதை எழுதி, வென்றுள்ளீர்கள். (இயல்பான ஆர்வத்தால் உங்கள் வெண்பாக்களை முதலிலேயே படித்திருந்தேன். இக்கதையை இப்போது தான் படித்து மகிழ்ந்தேன்.)
தேன்கூட்டில் பார்த்துவிட்டு இப்போதுதான் படித்தேன். முதல் பரிசுக்கு தகுதியான படைப்பு. Climax நல்ல திருப்பம் !
வாழ்த்துக்கள்!
-ரவிச்சந்திரன்
தொடர்ந்து பெறவும்
இனி வெண்பாக்கள் நிறைய எதிர்பார்க்கலாம்தானே!
சிங்கைதான் வந்து சென்றிருக்கிறீர்களாமே முன்னமயே தெரிந்திருந்தால் சந்தித்து இருந்திருக்கலாம்!
Seemachu,
MurattukkaLai,
Rassaa,
inbaa,
Ila,
saniyan,
anony,
ibnu hamdun,
Ravi,
living smiles,
rassukkutty,
and
all friends
Thank you very much.
I will be able say my thanks in detail by 4th Oct. 2006.
anbudan
Azad