1.
வளைந்த முதுகெலும்பை வாணாளில் கொண்டு
விளைந்த சரணங்கள் வீணே - களைந்தெடுத்து
நெஞ்சத்(து) இருக்கும் நெடும்பயப் பேயோட்ட
கொஞ்சம் கிடைக்காதோ கோல்!
2.
வல்லமை பெற்றிருந்தும் வாயடைத் தேயிருக்கும்
நல்லவ ராலேதும் நன்மையுண்டோ - கொல்லுலையாய்
நெஞ்சக் கனலெழுப்பி நேர்மைக்கு வாள்பிடிக்க
கொஞ்சம் கிடைக்காதோ கோல் !
3.
எவரோ உதிர்த்திடும் எண்ணச் சலவை
தவறாமல் தூண்டித் தகிக்கும் - அவதூறு
நெஞ்சத்(து) இருக்காமல் நீக்கி விரட்டிடவே
கொஞ்சம் கிடைக்காதோ கோல்!
4.
அஞ்சித் தினமும் அகத்துள் அடைபட்டு
கெஞ்சி யழைத்தாலும் கேளாது - மிஞ்சியொரு
நெஞ்சத்(து) உறங்குகின்ற நீதி விழித்தாட்ட
கொஞ்சம் கிடைக்காதோ கோல்!
5.
கைக்கிளை யேறிக் கரமொடிந் தோர்மனப்
பொய்க்கிளை சோகப் புனல்நீக்கி - மெய்க்கிளை
நெஞ்சத்(து) இருக்க நிதமும் துணையாக
கொஞ்சம் கிடைக்காதோ கோல்!
*
அன்புடன்
ஆசாத்
பி.கு.:
நல்ல தமிழில் எழுது என பெரியோர்கள் சொல்லிய சொல்லைக் கேட்டதனால் விளைந்த ஐந்து வெண்பாக்களையும் போட்டிக்கு அனுப்பிவிட்டேன்.
எங்கியாச்சும் தப்பு பண்ணா, பெரியவங்க சொன்னா கேட்டுக்கணும். திருத்திக்க முயற்சி பண்ணணும். ஆ..ஊ..அது இது அப்படித்தான்னு அடம் பிடிச்சிருந்தா இந்த முயற்சிய செஞ்சிருக்க முடியுமா.

Comments
முதல் வாக்கு என்னுடையதுதான் உங்களுக்கு.
பெரியவங்க சொன்னா கேட்டுக்கணூமா?
எளக்கியவாதியா ஆவுறதா 'எண்ணமே' இல்லையா?
ஆசிப் மீரான்
பேசுகவி இன்று பிறப்பித்தார் - மாசறு
கொஞ்சம் கிடைக்காதோ கோலென்று வெண்பாக்கள்
நெஞ்சம் நிறைந்தது நின்று.
வணக்கம்.
தங்களின் இயல்பான அருவி போன்ற
கவிதைகள். எல்லாமே அருமை எனினும், என்னை மிகவும் மகிழ்வித்தது இந்தக் கவிதை.
//
வல்லமை பெற்றிருந்தும் வாயடைத் தேயிருக்கும்
நல்லவ ராலேதும் நன்மையுண்டோ - கொல்லுலையாய்
நெஞ்சக் கனலெழுப்பி நேர்மைக்கு வாள்பிடிக்க
கொஞ்சம் கிடைக்காதோ கோல் !
//
நமது மக்களின் தற்போதைய நிலைமையை
சொல்லும் பாடல். அதுமட்டுமல்ல,
"பைசா சூனியம்" என்றொரு குணம் உண்டு. இருந்தும் கொடுக்காத
"இல்லாதவரை"ச் சுட்டும் சொல் அது.
அச்சொல் இப்பாட்டைப் படிக்கும் போது
நினைவுக்கு வந்தது. மகிழ்ச்சி.
அன்புடன்
நாக.இளங்கோவன்
நன்றிகள்.
எளக்கியவாதியவிட நெஞ்ச எளக்கியவாதியானா நல்லதுதான :)
எளக்கணும் -நெல்லை வழக்குதானே 'இளகவைக்கவேண்டும்'
*
நடராஜன் அய்யா, இளங்கோவன் அய்யா,
உங்கள் இருவரால்தான் இந்த ஐந்து வெண்பாக்களும் உருவாயின. ஒருவேளை பரிசு கிடைத்தால் (பெரும்பாலும் கிடைக்காது), அதற்குக் காரணம் நீங்கள் இருவர்தான்.
அன்புடன்
ஆசாத்
வாழ்த்துக்கள் !
***
இங்கே கோல் என்று எதைச் சொல்லுகிறீர்கள் ??
***
2-வது வெண்பா, மிகவும் பிடித்தது :-)
***
எனது விமர்சனத்தில் உங்கள் பின்னூட்டம் பார்த்தேன், அது எனது கருத்து மட்டுமே, அதற்காக வெற்றி பெற முடியாது என்று நினைக்காதீர்கள்,
தொடர்ந்து எழுதுங்கள், வாழ்த்துக்கள் !!
***
நேரமிருப்பின் வெண்பா பற்றியும், எப்படி எழுதுவது என்பதையும், இலக்கணத்தையும் சற்று விளக்குங்களேன் தனிப் பதிவில் !!
நன்றி !!
கோல் - அடிப்படையில் ஒரு தோள், ஒரு துணை, ஊக்கம் கொடுக்கும் துணை. ஆங்கிலத்தில் லிஃப்ட், புஷ், சப்போர்ட் எப்படிவேண்டுமானாலும் சொல்லலாம்.
வெண்பாவில் அமைத்ததன் உட்பொருளும் அதுதான்.
ஆனாலும், முதலிரண்டு வெண்பாக்களில் அதனைக் கோலாகவும் பொருள் கொள்ளலாம்.
1.பேய் ஓட்டுகின்ற மந்திரக்கோல்
2.செங்கோல்
*
அய்யா,
உங்கள் கருத்திற்காகத்தானே எனது பின்னூட்டமும்.
போட்டி முடிவுகள் நான் எழுதுவதை எந்த விதத்திலும் குறைக்காது, ஆனாலும், பரிசு கிடைக்காமற்போனால் நிச்சயம் கொஞ்சநேரம் வருத்தப்படுவேன், அவ்வளவே.
ஏனென்றால், முழுத்திறனையும் வெளிக்கொணர்ந்துதான் ஒவ்வொரு படைப்பையும் தருகிறோம். சும்மா அமர்ந்து தட்டச்சினால் தளைதானே தட்டும். அந்த முயற்சிக்கு அங்கீகாரம் இல்லையென்றாலு*ம்* எனக்கு வருத்தம் வராது என்று சொல்வதற்கு நான் ஞானியல்லன்; மனிதன் :)
வருத்தப்படுவேன்...உடனே துடைத்துப் போட்டுவிடுவேன். இதுவே நான் கலந்துகொள்ளும் கடைசிப்போட்டி அல்லவே :)
அன்புடன்
ஆசாத்
வாழ்த்து நற்பா சொற்பா கேளப்பா
அன்புக் கவிஞராம் ஆசாத் - அன்னார்போல்
அன்பை கடமை அதுபோல் உயர்வையும்
வெண்பா வடிக்கலாம் வா!