Skip to main content

Posts

Showing posts from 2010

ஒரு நிழற்படம்

முதன்முதலில் அந்த நிழற்படத்தை எங்கே பார்த்தேன் என்பது நினைவில் இல்லை. வலப்புறம் ஜெயலலிதா அம்மையாரும் இடப்புறம் கலைஞரும் நடுவில் புரட்சித் தலைவரும் நிற்கின்ற படம். செய்தியில் தெளிவாக இது ’எங்கள் தங்கம்’ படத்தின் துவக்க விழாவோ பாராட்டு விழாவோ எதோ ஒன்றில் எடுக்கப்பட்ட படம் என்று குறிப்பிட்டிருந்தார்கள். நண்பர் ரஜினி ராம்கி அவர்களுடன் அம்மையார் + எம்.ஜி.ஆர். நடித்த வெற்றிப்படங்களின் வரிசை குறித்து ஒரு சில வரிகள் பேசியபோது இந்தப் படம் எங்காவது கிடைக்கிறதா எனப் பார்க்க வேண்டியிருந்தேன், அவருடைய முயற்சிக்குப் பிறகும் கிடைக்கவில்லை. இது நடந்து நான்காண்டுகளாவது இருக்கும். அப்படி வந்துவிட்டுப் போன நிழற்படத்தை 3.11.2010 ஆனந்தவிகடனில் பார்த்தேன். முதல் ஆச்சரியம்: படத்தை இதற்கு முன் வெளியிட்டிருந்த பத்திரிகை (எதுவென்று எனக்கு நினைவில் இல்லை) படத்தில் இருந்து கண்ணதாசனின் அண்ணன் ஏ.எல்.எஸ் அவர்களின் படத்தை வெட்டிவிட்டு வெளியிட்டிருந்தார்கள். இப்போது விகடனில் வெளிவந்திருக்கும் படத்தில் ஏ.எல்.எஸ் அவர்களின் படம் இருக்கின்றது. முந்தைய தேதியில் நிழற்படத்தைப் பார்த்த ஆசிரியருக்கோ அல்லது உதவி ஆசிரியருக்கோ ஏ....

குதா கைர் கரே - மொழிமாற்றம்

நணபர் இரா.முருகன் அவர்கள் விரும்பிக் கேட்டதனால் ஆயே ஜன்ஜீர் கி ஜன்கார் குதா கைர் கரே என்னும் திரைப்பட கஜலை மொழிபெயர்த்தேன். ஜமாலுத்தீன் யாக்கூத் - அடிமை வம்சத்தச் சேர்ந்தவன், குதிரை லாயத்தில் அவனுக்கு வேலை. அவள் அந்நாட்டின் அரசி, சுல்தான், ரஸியா சுல்தான். சுல்தான் என்பது ஆண்பால், சுல்தானா என்பது பெண்பால். சுல்தானா என்பது மன்னனின் மனைவியையும் குறிக்கும் என்பதால் தான் சுல்தான் என்றே அழைக்கப்படவேண்டும் என்று விரும்பிய ராணி அவள், ரசியா சுல்தான். யாகூத்துக்கும் ரசியாவுக்கும் உண்மையிலேயே காதல் இருந்ததா இல்லையா என்பதை வரலாற்று ஆசிரியர்களின் கரத்தில் ஒப்படைத்துவிட்டு, அடிமை வம்சத்தவன் ராணியின் மீது காதல் வயப்பட்டால், அவளும் அவனிடம் மயங்கினால், அந்நேரத்தில் அவனிடம் உண்டாகும் உணர்வுகள் கஜலாக வடிக்கப்பட்டிருப்பதை மட்டுமே நாம் எடுத்துக்கொள்கிறோம். பாடல் இடம் பெற்ற திரைப்படம்: ரஸியா சுல்தான். கவிஞர்: ஜான் நிஸார் அக்தர் என இணைய தளங்கள் சொல்கின்றன. வழமைபோலவே வரிக்கு வரி மொழிமாற்றமாக இல்லாமல், கஜலை உள்வாங்கிக்கொண்டு ஓரளவிற்கு தமிழ்ப் பின்னணி கவிதை வரிகளில் இருக்குமாறு பார்த்துக்கொண்டு, சில சுதந்திரங...

தேர் நீங்கு படலம்

தேர் நீங்கு படலம் தேரே தேரே என்னுடை தேரே இருபத் தைந்தெழில் ஆயிரம் கற்கள் என்னை யுன்னுள் இருத்திப் பறந்தனை இன்றுனை நானும் நீங்கும் நொடியில் கதவம் பற்றிய கைகள் விலக்கினை மாரியில் வேனிலில் பொடிதிரள் பாலைச் சாலையில் என்னுடன் புரவிப் பாய்ச்சலில் ஹத்தா அல்அய்ன் எல்லாம் கண்டனை தேரா பர்துபாய் ஜுமைரா மிர்திஃப் அல்ஷாப் ஹோரலன்ஸ் எல்லாம் சுற்றினை பன்னாட்(டு) ஊரில் குடிபுகும் நெஞ்சுரம் தந்தது நீயல் லால்வே(று) எவரோ? கருக்கலில் வேரிலி வருடலிற் சிலிர்த்து நயனக் குமிழ்விளக்(கு) அணைத்தும் எரித்தும் அரிமா கர்ச்சனை பீலியின் முத்தம் இரண்டும் காட்டினை கடுகிடத் துணிந்தனை அமர்ந்ததுங் குளிர்மியின் அணைப்பால் போர்த்தி ஆரத் தழுவி நாசியிற் சந்தனம் அகிற்புகை நறுமணக் கிரீடை நடாத்தினை உருளியால் பாட்டைப் பரப்பைப் பற்றி வளைவில் நெளிவில் நாவாய்ச் சிறப்பென மிதந்து சென்றனை மீச்சொகு(சு) அளித்தனை வளையந் திருப்பி வழியில் புகுவோர் வரவைக் கண்டால் வாய்விட்(டு) அலரினை வாளியில் அருவி வழிநீர் ஆடி வன்மெழு காலே செஞ்சாந்(து) லர்த்தி துடைப்பான் கேசம் தும்பியின் தூதோ எல்லாம் இன்றெனை விட்டே கியதே வாடகை யாரிஸ் நெருங்கும் நீங்கும் காரிகை ...

ஹரீஷ்சந்த்ராசி ஃபாக்டரி - மராத்திப் படம் - எனது பார்வையில்

நண்பர் ப்ரகாஷ் முகப்புத்தகத்தில் இந்தப் படம் கிடைக்குமாவெனக் கேட்டிருந்தார். உடன் இருக்கும் சிங்க மராட்டியர்களிடம் படத்தின் பெயரைச் சொல்லிக் கேட்டேன். உடனடியாக இதெல்லாம் வராது, வந்தால் சொல்கிறேன் என்றார்கள். சென்றவாரத்தில் வெளியாகியிருப்பதாகச் சொன்னார்கள், பார்த்தேன். படம் பார்த்து முடித்தபின் வழமைபோலவே நான் படிக்கும் சில திரைவிமர்சகர்களைப் படித்தேன். படம் குறித்து மிக நன்றாக எழுதியிருந்தார்கள். விக்கியில் இப்படம் குவித்த விருதுகளை பட்டியலிட்டு வைத்திருக்கிறார்கள். நல்ல படம். படத்தின் பின்னணி கி.பி.1911 முதல். சராசரி மத்தியதரக் குடும்பஸ்தனாக இருக்கும் பால்கே, அரங்கில் ஏறி பார்வையளர்களை மகிழ்விப்பதில் அதிகம் கவனம் செலுத்துகிறாரேயன்றி, தனது அச்சாபீஸை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்தவில்லை. பால்கே நடத்தும் அச்சாபீஸ் தொழிலில் பணம் போட்டு பங்குதரராக விரும்பும் பெரிய மனிதரைக் கண்டால் ஓட்டம் எடுக்கிறார். ஓடி ஒளியும்போது தற்செயலாக டெண்ட் கொட்டகையில் ஊமைப்படம் வெளியிடப்பட்டிப்பதக் காண்கிறார். இரண்டு அணா (12 காசுகள்) கொடுத்து சீட்டு வாங்கி சலனப் படத்தைப் பார்க்கிறார். அது அவரை ஈர்க்க, மனைவி இரண்...

அங்காடித் தெரு - எனது பார்வையில்

அங்காடித்தெரு நன்றாக இருக்கிறது என அறிந்ததும் அது எப்பொழுது துபாயில் திரையிடப்படுகிறது என்று நண்பர்களிடம் வினவினேன். கேலரியாவில் திரையிடப்பட்டிருப்பதாகச் சொன்னார்கள். துபாயில் நட்சத்திர மதிப்புள்ள படங்களைத்தான் பொதுவாகத் திரையிடுவார்கள், அங்காடித் தெருவைத் திரையிட்டிருக்கிறார்களே எப்படி என்று யோசித்துக்கொண்டே அரங்கத்தை அடைந்தேன். துபாய்க்காரர்களின் கூற்று சரியே. என்னையும் சேர்த்து நேற்றைய மாலைக்காட்சியில் பத்துப் பேர்தான் அரங்கில் அமர்ந்திருந்தோம். கந்தசாமிக்கும் ஆதவனுக்கும் வேட்டைக்காரனுக்கும் கொட்டகை நிறைந்து சீட்டியொலியால் அதகளமான கேலரியா எங்கே, பத்தே பத்து ரசிகர்களை நேற்று கண்ட கேலரியா எங்கே. துபாய் ரசிகர்களுக்கு இப்படியான படங்கள் தேவையில்லையெனத் தோன்றுகிறது. சல்தாஹை. இந்தத் திரைப்படம் ஏற்படுத்திய அதிர்வுகள் ஒருபுறமும், முதலாளிகளை வில்லன்களாக மட்டுமே காட்டியிருக்கும் நெருடல் மறுபுறமுமாக இரண்டு மாறுபட்ட உணர்வுகளுக்கு ஆட்பட்டிருக்கிறேன். ஒரு திரைப்படத்தை கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, பின்னணி இசை, எடிட்டிங் என்று தனித்தனியாக ஆய்ந்தறியும் அளவிற்கு தொழில்நுட்ப ரீதியாக திரைப்படங்களை...

சென்னை - சில கோவையற்ற எண்ணங்கள்

என்னதான் என்.டி.டிவிக்காரர்கள் தமிழகத்தில் மழலையர் பள்ளிகளின் நன்கொடை குறித்து செய்தியறிவித்தாலும், அமைச்சர்பெருமகனார் நன்கொடை கட்டணம் குறித்து முற்போக்கான செவ்விகள் தந்தாலும் மழலையர் பள்ளிகளின் மீதான பெற்றோர்களின் மோகம் குறையாது. பொறியியல் படிப்புக்கு இணையாக நன்கொடை தந்து மழலையர் பள்ளியில் குழந்தைகளைச் சேர்க்கும் ஆர்வம் பரவலாக இருக்கத்தான் செய்கிறது. நமது நடைமுறையுடன் ஒப்புநோக்கும்போது இன்றைய என்.டி.டிவி. செய்தியே ஒரு சிரிப்புக்கொத்தாகத் தோன்றுகிறது. வாய் வலிக்கப் பேசலாம், ஆனால், எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை. சாதாரணப் பள்ளியில் பயின்று இந்தியாவின் குடியரசுத் தலைவர் வரையில் உயர்ந்த ஆளுமை நம் கண் முன்னே வாழ்ந்துகொண்டிருக்கும் போதிலும் நம்மில் இந்த மோகம் குறைந்தபாடில்லை. எது நம்மை ஆட்டிப் படைகிறது? மாணவர்களின் வெற்றி விகிதமா? குறிப்பிட்ட மழலையர் பள்ளியில் பயின்ற மாணவர்கள் சாதித்தது அதிகமா? இரண்டு மூன்று வாக்கியங்கள் அடிப்படை ஆங்கில உரையாடலை ஆங்கிலத்தில் தமிழ்நாட்டுப்பாணியில் பேசினால் போதுமென நினைக்கிறோமா? மழலையர் பள்ளிக்குத் தரும் நன்கொடைக்கு அவர்களுக்கு திறனை ஊக்குவிக்கும் விளையாட்டுப...

கத்திகள் - சில கோவையற்ற எண்ணங்கள்

துபாய் குளோபல் வில்லேஜில் ஏமன் கேலரியில் எடுத்த படம் நான் ஒரு கத்திப் பிரியன் என்பது என்பதை பழைய சவூதி நண்பர்கள் ஓரிருவர் அறிவர். பலபொருள் அங்காடிகளுக்குச் செல்லும்போது சிறிது நேரம் கத்திகளைப் பார்வையிடும் வழக்கமும் உண்டு. பிளாஸ்டிக் பிடிகளுக்குள் உலோகம் மறைந்திருக்கும் சீனத் தயாரிப்புகள் ஜித்தா கடைகளுக்கு வருமுன் (83, 84களில்) எல்லா கத்திகளும் மரப்பிடிகளுடன்தான் கிடைத்தன. 'ஏம்பா எதுவோ பாப்பியே அதெல்லாம் பாத்துக்குடு இந்தக் கத்திய வாங்கலாமா?' என்று ஒரு நண்பர் என்னைக் கேட்டிருக்கிறார். மரப்பிடி கத்திகளில் நான் முதலில் கவனிப்பது கத்தியின் கைப்பிடி முழுவதுமாக மரத்தினுள் சென்றிருக்கிறதா இல்லை பாதியில் நிற்கிறதா என்பதைத்தான். இரண்டு ரிவிட்டுகளுடன் பாதி உலோகம் மரத்தினுள் சென்றிருக்கும் பிடியுள்ள கத்திகளை நான் வாங்குவது கிடையாது. மூன்று ரிவிட்டுகள் இருக்கவேண்டும், மரப்பிடியின் அடுத்த முனைவரையில் பிடியின் உலோகம் சென்றிருக்க வேண்டும். அந்த அமைப்புக் கத்திகள்தான் நீண்டநாள் உழைக்கும். எனது சிறுவயதில் எங்கள் வீட்டுச் சமையலறையறையில் கத்திகள் புழங்கியது கிடையாது. நாங்கள் சென்னையில் எந...

ஆயிரத்தில் ஒருவன் - சில கோவையற்ற எண்ணங்கள்

புதிய ஆயிரத்தில் ஒருவன் படத்தின் கதைக்களன் சர்ச்சைக்குரியதென்றால், கலைஞர் எழுதிய ரோமாபுரிப் பாண்டியனும் சர்ச்சைக்குரியது. காணாமற்போன பாண்டியன் ரோமாபுரியில் காலங்கழித்ததாக கலைஞர் எழுதியிருப்பார். அகிலனின் கயல்விழியில் சில வர்ணனைகளும் சர்ச்சைக்குரியன. யானையின் மீது துள்ளிக்குதித்து வீரனைப்போல ஏற முடியாதவனாக அல்லவா சோழ இளவரசனை அகிலன் வர்ணித்திருப்பார். மகன் இப்படி இருக்கிறானே என்ற கவலையுடன் சோழ மன்னர் இளவரசனைப் பார்த்து வருந்துவதாகவும் எழுத்துகள் இருக்கும் அல்லவா. மேலும், சோழ இளவரசனாக நம்பியார் அவர்கள் கயல்விழி லதாவை துரத்திச் செல்வதான காட்சியமைப்பு மதுரையை மீட்ட சுந்தர பாண்டியனில் இருக்குமே, அதுவும் சர்ச்சைக்குரியது. சோழ பாண்டிய சர்ச்சைகளையும், ஏரணங்களையும் கொஞ்சம் மறக்கலாம். இது படம் - அதன் கதைக்களன் கற்பனையே என்று வாக்குமூலம் தந்த பின்னரும் அதைக் கிளறுவது தேவையற்றது. அம்புலிமாமா, பெரிய திரையில் அம்புலிமாமா, அதனாலென்ன அம்புலிமாமாவை ரசிப்பதொன்றும் குற்றமில்லை. ஆயிரத்தில் ஒருவன் படத்தை ரசித்தாலே ஏதோ ரசனையில் குறை இருப்பதாகத்தான் நண்பர்கள் சொல்கிறார்கள், சல்தாஹை, சென்னையில் என்னிடம் டொயோட்...

இஷ்க்கியா - திரைப்படம், எனது பார்வையில்

ஐபிஎன்னின் திரை விமர்சகர் ராஜீவ் மசந்த் அவர்கள் சில சமயங்களில் ஒருதலைப்பட்சமாகவும் படங்களுக்கு மதிப்பெண் வழங்குவார், அவர் இஷ்க்கியாவிற்கு ஐந்துக்கு மூன்றரை வழங்கியதோடு படக்குழுவிற்கு ஒரு 'தம்ஸ் அப்' பும் சொல்லியிருப்பதால் என்னதான் இருக்கிறதென்று பார்க்க அரங்கிற்குச் சென்றேன். தேரா சிட்டி செண்டரின் சினி ஸ்டாரில் வழமையான பணக்காரத்தனங்களின் நடுவே வீர் படத்தை விடுத்து இதற்கும் கூட்டம் அப்பியதன் காரணம் வித்யா பாலனா, நசீருத்தீன் ஷாவா, அர்ஷத் வார்சியா என அறியேன், ஆனால், படத்தைப் பார்த்த பின் மூவருக்காகவும் இதனைப் பார்க்கலாம் என பரிந்துரைக்கிறேன். உலகப்பட ரசிகர்களை இது பொரித்தெடுக்காது, அதனாலேயே வணிக ரீதியில் இது வெற்றி பெறுவது சந்தேகம். தாதா முஷ்டாக்கிடமிருந்து பணத்தைச் சுருட்டிக்கொண்டு தப்பியோடும் பபன் (அர்ஷத் வார்சி), காலுஜான் என்னும் இஃப்திக்கார் (நசீருத்தீன் ஷா) இருவரும் எங்கெங்கோ போக முயற்சி செய்து கடைசியில் தங்கள் நண்பர் வர்மாவின் ஊரான கரக்பூருக்கு அருகிலுள்ள புறநகரை அடைகிறார்கள். அங்கே வர்மா இல்லை, வர்மாவின் விதவை கிஷ்ணாவைச் (வித்யா பாலன்) சந்திக்கிறார்கள். முதியவர் நசீருத்தீன...