நணபர் இரா.முருகன் அவர்கள் விரும்பிக் கேட்டதனால் ஆயே ஜன்ஜீர் கி ஜன்கார் குதா கைர் கரே என்னும் திரைப்பட கஜலை மொழிபெயர்த்தேன்.
ஜமாலுத்தீன் யாக்கூத் - அடிமை வம்சத்தச் சேர்ந்தவன், குதிரை லாயத்தில் அவனுக்கு வேலை. அவள் அந்நாட்டின் அரசி, சுல்தான், ரஸியா சுல்தான். சுல்தான் என்பது ஆண்பால், சுல்தானா என்பது பெண்பால். சுல்தானா என்பது மன்னனின் மனைவியையும் குறிக்கும் என்பதால் தான் சுல்தான் என்றே அழைக்கப்படவேண்டும் என்று விரும்பிய ராணி அவள், ரசியா சுல்தான். யாகூத்துக்கும் ரசியாவுக்கும் உண்மையிலேயே காதல் இருந்ததா இல்லையா என்பதை வரலாற்று ஆசிரியர்களின் கரத்தில் ஒப்படைத்துவிட்டு, அடிமை வம்சத்தவன் ராணியின் மீது காதல் வயப்பட்டால், அவளும் அவனிடம் மயங்கினால், அந்நேரத்தில் அவனிடம் உண்டாகும் உணர்வுகள் கஜலாக வடிக்கப்பட்டிருப்பதை மட்டுமே நாம் எடுத்துக்கொள்கிறோம்.
பாடல் இடம் பெற்ற திரைப்படம்: ரஸியா சுல்தான்.
கவிஞர்: ஜான் நிஸார் அக்தர் என இணைய தளங்கள் சொல்கின்றன.
வழமைபோலவே வரிக்கு வரி மொழிமாற்றமாக இல்லாமல், கஜலை உள்வாங்கிக்கொண்டு ஓரளவிற்கு தமிழ்ப் பின்னணி கவிதை வரிகளில் இருக்குமாறு பார்த்துக்கொண்டு, சில சுதந்திரங்களை எடுத்துக்கொண்டு மொழிமாற்றம் செய்திருக்கிறேன்.
குதா கைர் கரே என்பது கஜலில் வந்த இயைபு, அதனை நான் யார்தான் காப்பதுவோ என மாற்றியுள்ளேன். குதா கைர் கரே என்பதன் வரிக்குவரி மொழிமாற்றமென்றால் - இறைவன் காக்கட்டும்.
திரைப்படத்துடன் பாடலைக் கேட்கும்போது ஜன்ஜீர் கி ஜன்கார் என்ற வரிகளை கைவிலங்கின் ஓசை என்று எளிதாக விளங்கிக்கொள்ளலாம், ஆனால், அதுவே தனியாக கவிதை வரியாக வரும்போது எப்படி எழுதினாலும், கவிதையின் பின்புலம் தெரியாதவரையில் இதனைப் பாடிய நாயகன் அடிமை வம்சத்தைச் சேர்ந்தவன் எனபதும், அவன்மேல் மணமாகாத அரசியின் கடைக்கண் பார்வை விழுந்திருக்கிறதென்பதையும் விளங்கிக்கொள்வது சிரமம். ஓரளவிற்கு இந்த சிரமத்திலிருந்து விடுபட எண்ணி மூலக்கவிதையில் இல்லாத வரியான வளையல் ஓசையை முதல் வரியில் நான் இணைத்துக்கொண்டேன்.
அடிமை விலங்கில் வளையலின் எதிரொலி கேட்பதாக நான் எழுதியிருப்பது எனது கற்பனை இடைச்செருகல். மற்ற வரிகளில் எனது இடைச்செருகல் இல்லை.
இனி மொழிமாற்றம்:
அடிமை விலங்கு வளையின் எதிரொலி
. ஆனதை யார்தான் காப்பதுவோ?
இதயம் இங்கே எவர்க்கோ அடிமை
. ஆனதை யார்தான் காப்பதுவோ?
யாரோ என்றன் ஆன்மா விற்குள்
. இப்படி முத்தம் இட்டதனால்
இடியும் மழையும் பிரளயக் காற்றும்
. எழுந்ததை யார்தான் காப்பதுவோ?
அடிக்கடி விழியின் அருகில் வந்து
. வருடத் துடிக்கும் விரலாக
எதிரே நிற்பது மின்னும் கொலைவாள்
. எனையும் யார்தான் காப்பதுவோ?
உதிரம் பொங்கி விழியின் வழியே
. வெளியே வழிந்திடத் துணிகிறதே
எதையோ இயற்கை உணர்த்திடுதோ வெனும்
. ஏக்கம் யார்தான் காப்பதுவோ?
*****
பாடலின் யூட்யூப் சுட்டி
aayi zanjeer ki jhankar khuda khair kare
dil hua kis ka giraftar khuda khair kare
jaane ye kaun meri rooh ko chhoo kar guzra
ek qayamat hui bedaar khuda khair kare
lamha lamha meri aankhon mein khinchi jaati hai
ek chamakti hui talwaar khuda khair kare
khoon dil ka na chhalak jaaye kahin aankhon se
ho na jaaye kahin izhaar khuda khair kare

Comments
- சந்திரா
. இப்படி முத்தம் இட்டதனால்
இடியும் மழையும் பிரளயக் காற்றும்
. எழுந்ததை யார்தான் காப்பதுவோ?//
மிக அருமையான மொழிபெயர்ப்பு ஆசாத்ஜி..
மிக்க நன்றி.
Tamil News