Skip to main content

Posts

Showing posts from September, 2009

கதையக் கந்தலாக்கிட்டிய கமல் சார்! (உ.போ.ஒ. எனது பார்வையில்)

அந்த டி.வி.ந்யூஸ் பொண்ணுக்கும் மஃப்டிலக்ற பாய் இன்ஸ்பெக்டருக்கும் லவ்ஸு வுட்டு, சும்மா சுவுஸ்ஸு பிரான்ஸுன்னு போயி, 'Oh my dear நீ police எந்தன் heartஐ you take lease'ன்னு இங்கிலீஷெல்லாம் போட்டு ஒரு ட்ரீம் ஸாங் வுட்டிர்ந்தியானா எத்தினி தபா டாப் டென்ல அது வந்திர்க்கும், படத்துக்கு இன்னா அடிடேஸ்மெண்டு, சான்ஸ வுட்டுட்டிய கமல் சார். ட்ரெய்ன்ல போவுத கொழந்தையோட அந்தப் பொண்ணு அப்ப அந்தக் கொழந்தை அப்பாவத் தேடி அழுவ்றாமேறி ஒரு சீன் வெச்சு, ஒரு தாலாட்டுப் பாட்டு வுட்டிர்ந்தேன்னு வெய்யி, லேடீஸ் செண்டிமெண்டுல கல்லா கட்டியிருக்கலாம் சார். ஆர்டிஎக்ஸ் ப்ரோக்கர மண்ணடில வெச்சு சுர்ராமேறி ஏன் சார் சீன் வெச்ச? அந்த ப்ரோக்கரு நைட் க்ளப்புல தண்ணியடிச்சுக்கினு இருக்கான், அப்ப அந்த க்ளப்புல பத்துபாஞ்சு ஐட்டங்க நிஜார் போட்டுக்குனு டிஸ்கோ ஆடணும், ஐட்டம் சாங்குக்கு இந்திலேர்ந்து ஹூமாகானுகீமாகானுன்னு ஆரையாச்சம் கொணாந்து ஆட வுட்டு, அங்க இன்ஸ்பெக்டரு பூந்து க்ளப்புல நாலஞ்சு பீர் பாட்ல சுட்டுட்டு அப்பாலிக்கா ப்ரோக்கர சுர்ரமேறி சீனு இர்ந்தா இன்னா கெத்தா இர்ந்திருக்கும்? பாட்டுக்கு பாட்டும் ஆச்சு, பைட்டுக்கு ஃ...

எ தௌசண்ட் ஸ்ப்லெண்டிட் சன்ஸ் - புத்தகம் எனது பார்வையில்

ஹராமி - பாஸ்டர்ட் - முறைதவறிப் பிறந்தவன்/ள், இதற்கான சரியான தமிழ்ச் சொல்லைத் தேடிக்கொண்டிருக்கிறேன். மரியம் முறைதவறிப் பிறந்தவள். பீங்கான் குவளையைக் கைதவறவிட்டபோதுதான் முதன் முதலாக தனது அம்மாவே தன்னை அப்படி அழைப்பதைக் கேட்கிறாள் மரியம். "ஹராமீ!" அப்போது அவளுக்கு வயது ஐந்து. அங்கிருந்து துவங்குகிறது அவள் கதை. சோவியத்தின் ஆக்கிரமிப்பு, தாலிபான் கட்டு என ஆப்கானின் வரலாறு மட்டும் இந்நாவலுடன் சொல்லப்பட்டிருக்கவில்லையென்றால் ஒருவேளை பெண்ணின் பெருமை பேசும் இன்னொரு புத்தகம் இது என ஒதுக்கியிருக்கலாம். இந்நாவலின் மையமாக இருக்கும் மரியத்தின் வாழ்க்கை மட்டும் தினசரி நாம் கேள்விப்படும் பிரச்சனையாக இருந்திருக்குமேயானால் ஏதோ ஒருதொலைக்காட்சித் தொடருக்கான கதை என்று ஒதுக்கியிருக்கலாம். இவை இரண்டும் இல்லாமல் பிறப்பு முதல் ஏளனத்தையும் ஏமாற்றத்தையுமன்றி வேறெதையும் சந்திக்காத பெண்ணின் வாழ்வில் சோவியத் ஆக்கிரமிப்பும் தாலிபானிய கட்டுப்பாடும் கைகோத்துக்கொண்டு இன்னமும் விதியின் விளையாட்டை குரூரமாக்கிய கதை. தனது பிறப்பும் விதியும் தன்னுடன் விளையாடியதால் அவள் வாழ்வின் ஒவ்வொரு பருவத்திலும் துயரத்தையே சந்...

அல்கெமிஸ்ட் - எனது பார்வையில்

சில படைப்புகள் பரவாயில்லை ரகத்தில் இருப்பதாக எனக்குத் தோன்றுகையில் அதே படைப்பு பலரால் ஆஹா ஓஹோ என்று பாராட்டப்படுகையில் எனது ரசனையின் மீது சந்தேகம் வருகின்றது. எனக்கு சரியாக ரசிக்கத் தெரியவில்லையோ, எங்கேனும் தவறு செய்கிறேனோ, ரசனையில் திருத்தம் தேவைப்படுகிறதோ என்றெல்லாம் எண்ணத் தோன்றுகிறது. காட்டாக, கமீனே திரைப்படம் மோசமாக இருப்பதாக எனக்குத் தோன்ற, படம் வடக்கே சக்கைபோடு போட ஷாஹித் கபூர் சம்பளத்தை 15கோடியாக உயர்த்திவிட்டார். வெகுஜன ரசனையுடன் எனக்கு ஒத்துப்போகவில்லை, சல்தாஹை! ஆனந்தத் தாண்டவம் (பிரிவோம் சந்திப்போம்) அத்தனை மோசமாகத் தோன்றவில்லை. தமன்னாவின் நடிப்பு மதுமிதா பாத்திரத்திற்கு ஏற்றாற்போலவே இருந்ததாகவே எனது பார்வை சென்றது. நண்பர்கள் ஆனந்தத் தாண்டவத்தை மோசமென ஒதுக்கினார்கள். 'பினாத்தல்' சுரேஷ் தவிர்த்து வேறெவருடனும் எனது பார்வை ஒத்துப்போகவில்லை. இதற்கு சல்தாஹை சொல்லிப்போக இயலவில்லை. எங்கோ நான் தவறு செய்கிறேன் என்றே எண்ணத் துவங்கினேன். பௌலோ கோயெல்ஹோவின் அல்கெமிஸ்டைப் படித்ததும் அப்படியொரு நினைப்பு மீண்டும் உருப்பெற்றது. மனதின் அழைப்பதை ஏற்று ஸ்பெயினில் இருந்து எகிப்துவரையில் ...