Skip to main content

Posts

Showing posts from 2005

சவூதி பெண் பத்திரிகையாளர்

வியாழன் வெள்ளிகளில் சாவகாசமாக ஃபூல் தமீஸோ (மொச்சைக்கொட்டையும் ரொட்டியும்), ஷுக்ஷுக்கோ (முட்டை பொடிமாஸ்) தின்றுவிட்டு, இரட்டை இலை (அரசியல் இல்லைங்க, ரெண்டு டீ பேக் போடறது) தேநீர் குடிக்கும்போது அரப் நியூஸ் செய்தித்தாளை விரிப்பேன். முதல் பக்கத்தில் ரியாத்தில் சுடப்பட்ட அல்கொய்தா தீவிரவாதியையும், கடைசிப் பக்கத்தில் கெய்ரோ ரோட்டரி கிளப் கிளியோபாட்ராவில் புன்னகைத்து நமது புன்னகை அரசி / இளவரசிகளுக்கெல்லாம் சவால் விடுகின்ற எகிப்திய நடிகை அர்வா வையும் ஒதுக்கிவிட்டு இன்றைக்கு லுப்னா ஹுசைனின் (Lubna Hussain) கட்டுரை ஏதும் வந்திருக்கிறதா எனப் பார்ப்பதும் வழக்கம். லுப்னா ஹுசைனின் முன்னோர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். சும்மாவேனும் இடையில் ஓரிரண்டு வரிகளை மேலோட்டமாகப் படித்துவிட்டு / கேட்டுவிட்டு ஜல்லியடிக்கும் மக்களை லுப்னா நையாண்டி செய்திருந்தார். 'லுப்னா, உங்கள் மூதாதையர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்களென நினைத்தேன்' 'உண்மைதான். எனது முன்னோர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்' 'இல்லையே, எனது நண்பன் நீங்கள் தாய்லாந்திலிருந்து வந்தவர் எனச் சொன்னாரே' 'தாய்லாந்தா..நானா..கிடையாதே...

ஒரு பழைய பதிவும் படிக்கவிருக்கும் புத்தகமும்

பழைய பதிவு ராயர் காப்பி க்ளப் குழுமத்தில் எழுதியது. ஸ்டூடியோ எட்டாம் வகுப்பு படிக்கும்போதுதான் அவன் முதன்முதலில் படப்பிடிப்பு ஸ்டூடியோவிற்குச் சென்றான். அதுவும்கூட உறவினரைப் பார்த்து ஒரு சந்தோஷத்தைப் பகிர்ந்துகொள்ளும் ஆர்வத்தில்தான். முதல் மேடைப் பேச்சென்பது கிட்டத்தட்ட ஒப்புவித்தல் போன்ற நிகழ்வுதான். அதுவேதான் அவனுக்கும் நடந்தது. கையில் குறிப்பேடுடன் அமர்ந்துகொண்டு பேசுகின்ற மாணவர்களின் ஒவ்வொரு அசைவையும் கவனித்து மதிப்பெண் தருகின்ற மூன்று ஆசிரியர்கள், ஐம்பது அறுபது மாணவர்கள், சில தமிழாசிரியர்கள் முன்னிலையில் தொடைகளில், கன்னங்களில் இருக்கும் தசைகள் நடுங்க அவன் பேசி..மன்னிக்கவும்..ஒப்புவித்து முடித்தான். பெஞ்சிற்குச் சென்று அமர்ந்து மொத்த மாணவர்களும் ஆசிரியர்களும் தன்னையே பார்த்துக்கொண்டிருப்பதான உணர்விலிருந்து மீள்வதற்குள் அவன் பேச்சுப்போட்டியில் இரண்டாம் பெரிசு பெற்றிருப்பதாக அறிவித்தார்கள். எட்டாம் வகுப்பு மாணவனுக்கு அது உலகத்தையே வென்றது போல் இருந்தது. தொடர்ந்து வந்த விழாவில் அந்த வெற்றிக்காக அவனுக்கு ஒரு புத்தகம் பரிசாகக் கிடைத்தது. தேசியத் தலைவர் ஒருவரின் பெயரையே அவன் கொண்டிருந்த...

பானுமதி ராமகிருஷ்ணா

பானுமதி வனவாசம் போயிருந்தான் .திரும்பி வந்தான் என் மகன் .ஹீ ஈஸ் மை சன் அங்கே இங்கே ஆங்கிலம் கலந்து பாடினால் அது மேல்தட்டு மக்களின் பாடல் என ரசிகனை நம்பவைத்துக்கொண்டிருந்த முயற்சியில் சிறிதும் மாற்றமில்லாத பாடல். படம்: எடுப்பார் கைப்பிள்ளை. கொஞ்சம் இதன் மூலக்கதையைத் தட்டி, இன்னொரு பாத்திரத்தை இடையே நுழைத்து, கமலஹாசனை இரட்டை வேடத்தில் நடிக்க வைத்தால் அதன் பெயர் சட்டம் என் கையில்' என்பது இப்போது வேண்டாத விஷயம். 'வனவாசம் போயிருந்தான் ' பாடலைப் பாடியவருக்காக இந்தப் படத்தைப் பார்க்கச் செல்லவில்லை. எங்கள் நண்பன் ஒருவன் அவ்வப்போது சண்டைக் காட்சிகளில் தலையைக் காட்டுவான். தலையை மட்டும் காட்டியவனுக்கு வசனம் பேசவும் வாய்ப்பு கிடைத்திருப்பதைப் பார்க்கவே படத்திற்குச் சென்றோம். நாயகர்களுக்கும், நாயகிகளுக்கும், இயக்குனர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தந்த கதைகள் வந்துகொண்டிருந்த (எழுபதுகளின் கடைசி) அந்நேரத்தில், நாயகனின் அம்மாவாக இந்த அம்மையார் நடித்து, அவரது பாத்திரத்துக்கும் முக்கியத்துவம் தந்த கதையமைப்பிலிருந்தே அவரது ஆளுமை விளங்கும். 'மாதுளை முத்துக்கள் மல்லிகை மொட்டுக்கள் சிந்திக்...

தாஜ் மஹல்

தாஜ் மஹல் கதை இல்லாமல் வெறுமனே பிரம்மாண்டத்தைக் காட்டி ரசிகர்களை திருப்திப்படுத்த முடியுமா? அப்படி பிரம்மாண்டத்தைக் காட்டி ரசிகர்களைத் திருப்திப்படுத்தும் முயற்சியைத்தான் தாஜ் மஹலில் செய்துபார்த்திருக்கிறார்கள். எழுபது கோடி செலவழித்து தாஜ் மஹல் உருவான கதையை மீண்டும் ஒரு முறை இந்தித் திரையில் சொல்லியிருக்கிறார்கள். * ஆட்சியில் அமர்வதற்காக ஔரங்கசீப், தாரா, ஷ¤ஜா இவர்களிடையே நடக்கும் போர்க் காட்சிகளில் கதை துவங்குகிறது. ஔரங்கசீப் வெல்கிறான். படைபலத்தால் தாராவைக் கைது செய்து, சூழ்ச்சியால் ஷ¤ஜாவை வீழ்த்தி மன்னனாக முடிசூட்டிக்கொள்ளும் ஏற்பாடுகளில் இருக்கும்போது, அவனது அக்கா ஜஹானாராவிடம் தந்தையார் ஷாஜஹான் தனது வாளை பரிசாகத் தந்தனுப்புகிறார். தந்தையார் ஷாஜஹானே வாளை தனக்குத் தந்தனுப்பியதன் காரணம், 'அன்பு அல்ல; அவரது வயோதிகத்தின் இயலாமை' எனப் பேசிவிட்டு, அப்பா ஷாஜஹானையும், அக்கா ஜஹானாராவையும் மாளிகைச் சிறையில் அடைக்கிறான் ஔரங்கசீப். அடுத்த நாள் ஷாஜஹானின் காலை உணவிற்காகச் செல்லும் பாத்திரத்தில் தாராவின் தலை துண்டித்து வைக்கப்பட்டு அனுப்பப்படுகிறது. தூரத்தில் தாஜ் மஹலைப் பார்த்துக் கொண்டிர...

மங்கல் பாண்டே

மங்கல் பாண்டே 'பிரிட்டிஷ் ராஜ்' காலத்திய கதைக்களனும், ஆமிர் கானும் இணைவது மட்டுமே இந்தியத் திரைப்படத்தை ஆஸ்கார் விருதிற்குக் கொண்டுசெல்லுமா? இப்படியே பல விஷயங்களை ஒப்புநோக்கியதால், மங்கல் பாண்டே, சிறந்த படமன்று எனச் சொல்ல முடிகிறது. ஜாவீத் அக்தர், ஏ.ஆர். ரகுமான் கூட்டணியென்றால், 'ராதா கைஸே நா ஜலே ஆக் தன் மன் மே லகே' (படம்: லகான்) நினைவுக்கு வருகிறது. ஆமிர் கான், ராணி முகர்ஜி கூட்டணியென்றால், 'ஏய் க்யா போல்தி து' (படம்: குலாம்) நினைவுக்கு வருகிறது. வடக்கத்திய சோமபானம் 'பங்க்'கை ஆமிர் குடித்ததும், ராஜேஷ் கன்னா தலையாட்டிய 'ஜெய் ஜெய் ஷிவ ஷங்கர்' (படம்: ஆப் கி கசம்) நினைவுக்கு வந்து, ஆமிர் உளருகின்ற, 'கம்பெனிக்கா தன்ஹா தோ ஸாத் ருப்பைய்யா த்யான் கரோ ஹாஸிர் ஹை பாக்கி சிப்பையா' போன்ற இயைபுத்தொடையான நகைச்சுவை வரிகளை மறக்கச் செய்கிறது. (கும்பினிக்காரன் கூலி தந்தான் ஏழு ரூவாயி .கூப்பிட்டதும் ஓடி வந்தான் மீதி சிப்பாயி) என்னதான் ராணி முகர்ஜி வளைந்து நெளிந்து, சரவிளக்கு - மெழுகுவத்தி முன்னே 'தும்ஹாரி அதாவோன் பே மைன் வாரி வாரி' (உனது நளினங்கள...

ஐட்டம் நம்பர்

ஐட்டம் நம்பர் இன்னும் சில நாள்களுக்குப் பின், ஆங்கில அகராதிகளில் வலம் வந்தோமென்றால், ஐட்டம் நம்பர் என்னும் வார்த்தைக்கு 'பிரபலமான நடிகர் / நடிகை திரையில் ஒருபாடலுக்கு மட்டும் ஆடுகின்ற நடனம்' என்னும் விளக்கத்தைப் படிக்கக்கூடும். பாலிவுட், கோலிவுட், டோலிவுட் வகையறாக்களில் சென்ற பத்துப் பதினைந்து வருடங்களாகவே ஐட்டம் நம்பர்கள் இருந்தபோதிலும், குறிப்பாக எந்தப் பெயரும் வழங்கப்படாமல், ஏறக்குறைய ஐந்தாண்டுகளுக்குள் ஐட்டம் நம்பர் என்னும் இந்தப் பெயர் அதிகப் பிரபலமாகிவிட்டது. 'சைஷல்ஸில் அந்த நடிகை தனது ஐட்டம் நம்பரை அரங்கேற்றிக்கொண்டிருந்தபோது மும்பையில் அவரது தந்தையார் வருமான வரி அதிகாரிகளிடம் பதில் சொல்லிக்கொண்டிருந்தார்' என்பதாக எழுதி, செய்திப் பத்திரிகைகளும், சினிமா பத்திரிகைகளுடன் சேர்ந்து ஐட்டம் நம்பர் என்னும் வார்த்தையை அங்கீகரிக்கத் துவங்கின. மெதுவாக ஐட்டம் நம்பரிலிருந்து ஐட்டம் பிரிந்துபோக, நம்பர் என்பது நடனத்தையும் பாடலையும் குறிக்கின்ற தொழில்முறை வார்த்தையாகிவிட்டது. தொலைக்காட்சியில் நேர்காணல் எடுத்தவர் அ சின் என அழைத்தபோது, 'நோ நோ அப்படி இல்ல. அ சின் என அ விற்கு...

குறுஞ்செய்திகளுடன் ஒரு ஈகைத் திருநாள்

குறுஞ்செய்திகளுடன் ஒரு ஈகைத் திருநாள் சீக்கிரமாகவே பெருநாள் தொழுகை தொழுதுவிட்டு தயாராக வேண்டுமா? ஆழ்வார்ப்பேட்டை திவான் சாஹிப் பள்ளிவாசலுக்குப் போகலாம். திர்லக்கண்ணி ஆள்களுடன் சேர்ந்து தொழ வேண்டுமா? வெல்வெட் தொப்பி அணிந்து திருவல்லிக்கேணி லெப்பை பள்ளிக்குப் போகலாம். வெள்ளைச் சட்டை, வெள்ளைக் கைலி, 'ஜின்னா கேப்' சகிதமாக ராமநாதபுரம் கீழக்கரை முதலாளிகளைப் பார்க்க வேண்டுமா? அங்கப்ப நாயக்கன் தெருவுக்குப் போகலாம். அத்தர் மணக்க ஷேர்வானி சுருவால் உருதுக்காரர்களைப் பார்க்கவேண்டுமா? ஐஸ் ஹவுஸ், ஜாம்பஜார், வாலாஜா என எங்காவது செல்லலாம். ஆஹ்ஹா, தாமதமாகிவிட்டதே என்னும் நினைப்பா? இருசக்கர வாகனம் எதையாவது எடுத்துக்கொண்டு கடற்கரைக்குச் சென்று மாநகராட்சி ஏற்பாடு செய்திருக்கும் மகா தண்ணீர்த் தொட்டி நீரில் கை கால்களைச் சுத்தம் செய்து கொண்டு கடற்கரையிலும் தொழலாம். இவற்றில் எதுவுமே இல்லாமல் பெருநாள் தொழுகை தொழுத சுவடே தெரியாமல் வீட்டிற்கு வரவேண்டுமா? சவூதி அரேபியாவில் சேலை செய்யலாம். ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு பழக்கம். இங்கே பெருநாள் என்பது மாலையில்தான் தெரியும். காலையில் தொழுகைக்குப் பின் சத்தம் போட...

புல்லட்

புல்லட் மற்ற இருசக்கர வண்டிகளை ஓட்டிப் பழக்கப்பட்டு முதன்முறையாக புல்லட்டை ஓட்டினால் "லெ·ப்ட்ல ப்ரேக், லெ·ப்ட்ல ப்ரேக்" என்று ஜெபித்துக்கொண்டே ஓட்டுவது நல்லது. கார்களையே ஓட்டிப் பழக்கப்பட்டு முதன்முறையாக புல்லட்டைத் தொடுபவர்களும் கட்டாயம் இந்த ஜெபத்தினை உச்சரிக்கவேண்டும். அப்போதுதான் திடீரென்று வண்டியின் முன்னே நுழையும் இடையூறுகளைச் சமாளிக்க அனிச்சையாக வலது காலால் ப்ரேக்கை அழுத்துவது விடுத்து, இடது காலால் ப்ரேக்கை அழுத்தி விபத்தைத் தவிர்க்கலாம். மற்ற வண்டிகளுக்கு வலது காலால் ப்ரேக் என்றால், புல்லட்டிற்கு மட்டும் இடது காலால் ப்ரேக். ஓரிரு முறைகள் ஓட்டிப் பழகி விட்டால், அதில் அமர்ந்ததும் வருகின்ற கம்பீரம் போலவே 'இடது கால்' உணர்வும் தானாக வந்துவிடும். புல்லட் 350, புல்லட் 500, எலக்ட்ரா வகைகளில் மட்டுமே இடது கால் ப்ரேக் வழக்கம். அவை விடுத்து 'தண்டர் பேர்ட்'டில் இந்தப் பிரச்சனை கிடையாது. தண்டர் பேர்டில் ப்ரேக் வலது புறம்தான். அதனை அறிமுகப் படுத்தும்போதே, 'வலப்புற ப்ரேக்' என்னும் வாசகம் விளம்பரத்தில் இருந்தது. விளம்பரமும் வண்டியும் வெளிவந்த வருடம் இரண்டாயிரத...

இங்கும் அங்கும்

இங்கும் அங்கும் --------------- முத்துக்குளிக்க வாறீயளா! மூச்சையடக்க வா*றீ*யளா! குமரித் தமிழ் கொஞ்சும் பாடலின் பின்னணியில் தூத்துக்குடியென்றே நினைக்கிறேன். வட்டார வழக்கில் வந்திருக்கும் தமிழ்த் திரைப்பாடல்களில் இப்பாடல் கட்டாயம் இடம்பெறும். தென்னகத்து ரசிகர்களை வட்டார வழக்கில் ஆட்டம் போட வைத்த இந்தப் பாடல் இந்திக்குப் போனபோதும் முதல் வரிகளில் மாற்றமில்லை, அதே 'முத்துக்குளிக்க வாறீயளா'தான். ஆனால், பெண்மணியின் உடையை ஏனோ கேரள பாணியில் மாற்றிவிட்டார்கள். ஆணுக்கு கொங்கணி பாணியில் உடை. தெற்கிலிருந்து வடக்கிற்குச் சென்ற போது கவனமாக வடக்கின் ரசிகர்களை ஈர்க்கக்கூடிய அல்லது வடக்கிற்கு அறிமுகமான உடைகளைத் தந்தார்கள். அந்த ஏழு நாள் நாட்!?!களில் வேட்டியின் நுனியை உயர்த்திப் பிடித்தபடி வந்த 'ஈ பாலக்காட்டு மாதவன் நாயர்', வோ ஸாத் தின்னில் மலையாளத்தை ஒதுக்கிவிட்டு பீகார் பைய்யாவாக மாறிப்போனார். தெற்கு வந்து வடக்கைக் காதலித்ததை 'ஏக் தூஜே கே லியே'வுடன் நிறுத்திவிட்டு, அங்கே ஹார்மோனியத்துடன் மலையாளியை பீகாரியாக்கினார்கள். 'போற்றிப் பாடடி பெண்ணே! தேவர் காலடி மண்ணே!'யும் வடக்க...

முஸஃபராபாத்

முஸ·பராபாத் 'முஸ·பராபாத் என்கிற அந்த எல்லைப்புறத்திலிருந்த சிறு டவுனுக்குள் நுழைந்தவுடன், பாக்கிஸ்தானின் ஆதிவாசிப் படைக்குக் குஷி வந்துவிட்டது. அவர்கள் காஷ்மீரை மறந்தார்கள். 'ஜிகாத்'தை மறந்தார்கள். ஸ்ரீநகரை அடைய இன்னும் எழுபத்தைந்து மைல்கள் சென்றாகவேண்டும் என்பதையும் மறந்துவிட்டார்கள்! ஓரளவுக்கு வசதியான முஸ·பராபாதின் கடைவீதிகளுக்குள் புகுந்து, கதவுகளை உடைத்து, கொள்ளையடிக்க ஆரம்பித்துவிட்டார்கள்!' நன்றி. பாக். ஒரு புதிரின் சரிதம் பா. ராகவன் இப்படி அங்கும் இங்குமாகப் படித்து, கேள்விப்பட்டிருந்த முஸ·பராபதிலிருந்து ஒரு நண்பர் கிடைப்பார் என்பது அப்போது எனக்குத் தெரியாது. சென்ற ஒரு வருடமாகத்தான் 'சூரஜ் சிங்'குடன் பழகிவருகிறேன். சூரஜ் சிங் என்பது அவரது பெயர் அன்று; அது நான் அவரை அழைக்கும் பெயர்தான். கிட்டத்தட்ட பஞ்சாபியரைப் போலவே அடர்த்தியான தாடி மீசையும் உருண்டு திரண்ட உருவமுமாக இருக்கும் அவரது அறிமுகம் கிடைத்தவுடனே, 'பே.ஷக் ஆப் பஞ்சாப் கே ஹோங்கே' (சந்தேகமில்லாமல் நீங்கள் பஞ்சாபியர்தான்) என்றேன். 'நஹீ ஜனாப்! கனவானே! நான் கஷ்மீரைச் சேர்ந்தவன். உங்களுக்கெல்ல...

பிலிம்பேர் விருதுகள் - 50வது ஆண்டு

பிலிம்பேர் விருதுகள் - 50வது ஆண்டு வணிகத் திரைப்படத்திற்கு விருது வழங்கும் விழாக்களில் கோலாகலத்துக்குக் குறைவிருக்காது. அதிலும் விருது வழங்குவதில் ஐம்பதாவது ஆண்டினை எட்டியிருக்கும் பிலிம்பேர் பத்திரிகையின் விருது வழங்கும் விழா வழமையான கோலாகலங்களுடன் நடந்தது. சோனி எண்டர்டெயின்மெண்ட் சானல் அதை ஒளிபரப்பி என்னைப் போன்ற திரை ரசிகர்களிடமிருந்து புண்ணியம் கட்டிக்கொண்டது. ஒருமணி நேரம் தாமதமாகவே நிகழ்ச்சியைக் காண முடிந்தது. சிறந்த திரைக்கதைக்கு (யுவா) 'நம்மவர்' மணிரத்தினம் விருது வாங்கியதைப் பார்க்கமுடியவில்லை. ஸ்வரூப் க்ரூப் புரவலராக இருந்த இந்த விழாவில், அறிவிப்பாளராக சோனாலி பிந்தரே, சைப் அலி கான், பரீதா ஜலால். நிகழ்ச்சியை அலுப்பு தட்டாமல் எடுத்துச் சென்றார்கள். விருதுகள் விஷயத்தில் வணிக சினிமாவோ, இணை சினிமாவோ எப்போதுமே மாற்றுக் கருத்துகள் இருக்கும். ஜாம்பவான்களுக்கு விருதுகள் கிடைக்கும்போது வேண்டுமானால், அந்த மாற்றுக் கருத்துகளின் விகிதம் குறைந்திருக்கும். எனக்கு உண்டான மாற்றுக் கருத்துகள் இரண்டு. 1. பரிந்துரையில் இருந்தவற்றில், 'ரெயின்கோட்' ஐஷ்வர்யாவிற்கு சிறந்த நடிகைக்கான வ...

அனுமன் பறந்ததும் நேரவித்தியாசமும்

அனுமன் பறந்ததும் நேரவித்தியாசமும் அன்புடையீர், ஹரி அண்ணன் அவர்களின் அனுமன் நூல் வெளியீட்டு விழா கடற்கரையில் நடந்தது குறித்து பத்ரி அவர்களின் வலைப்பதிவில் படித்திருப்பீர்கள். அதில் ஹரியண்ணன் பேசிய 'கம்பனில் நேரவித்தியாச' விஷயங்கள் குறித்து சிறிது யோசித்துப் பார்த்தேன். சுருக்கமாக மனக்கணக்காகவும் சொல்லக்கூடிய அந்த நேரவித்தியாசத்தை, விளக்கமாக எழுதிப் பார்க்க எண்ணி இக்கட்டுரையை எழுதினேன். அதிகமாக பூகோள விஷயங்களை அணுகிப் பார்க்காமல், மேலெழுந்தவாரியாக தோராயமாகவே எல்லாவற்றையும் மனதில் கொண்டு சில கூட்டல் கழித்தல்கள் போட்டு ஹரி அண்ணன் சொன்ன விஷயத்தை அணுகிப் பார்த்தேன். நான் போட்ட கூட்டல் கழித்தல்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள நினைக்கிறேன். ***** சவூதி அரேபியாவிற்கும், இந்தியாவிற்கும் இடையே நேர வித்தியாசம் 2 மணி 30 நிமிடம். தீர்க்க ரேகையில் பதினைந்து பாகைக்கு ஒரு மணி நேரம் என்பதே நேர வித்தியாசமாக இருப்பினும், அந்தந்த நாட்டின் முறைமைப்படி ஒரே நேரத்தையே வைத்திருப்பதை, நமது வசதிக்காக, இப்போதைக்கு சிறிது மறக்கலாம். ஜித்தா இருப்பது 40பாகை தீர்க்கரேகையில், சென்னை இருப்பது 80பாகையில். இந்த நாற...

சென்னையில் தயாரான முதல் படம்

சென்னையில் தயாரான முதல் படம் நண்பர் ராம்கியின் பரிந்துரையைக் கேட்டு எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய உலக சினிமா வை வாங்கியபின் இன்றுதான் கொஞ்சம் புரட்டிப் பார்க்க நேரம் கிடைத்தது. எழுநூற்றைம்பது பக்கங்கள் கொண்ட புத்தகம். ஒரே மூச்சில் படித்து முடிக்க மலைப்பாக இருந்ததால், பிடித்தமான பகுதிகளை முதலில் படிக்கத் துவங்கினேன். உலகின் நூறு சிறந்த படங்களாக புத்தகத்தின் தேர்வுக்குழு தந்திருக்கும் பட்டியலில், 1. கான் வித் த விண்ட் 2. காந்தி 3. இ.டி. 4. த லாஸ்ட் எம்பரர் 5. டைடானிக் 6. பென்ஹர் 7. ஸ்டார் வார்ஸ் 8. த காட் பாதர் இவ்வளவே பார்த்திருக்கும் என்னைப் பார்த்து 'நீயெல்லாம் படம் பாக்குறேன்னு சொல்லாத' என புத்தகம் சிரிப்பது ஒருபுறமும், பட்டியலில் பாதிக்கு மேல் கேள்விப் படாத படங்களாக இருப்பதால் மனதிற்குள் கொசுவாகிப்போன உணர்வுகளுடனும், பட்டியலையும், படங்களைப் பற்றியும் மேலோட்டமாக மேய்ந்துவிட்டு இந்திய சினிமாப் பகுதியைப் படித்தேன். இருபத்தேழு சிறந்த இந்திய இயக்குனர்களைத் தேர்ந்தெடுத்து தேர்வுக்குழு தந்திருக்கும் பட்டியலில் தமிழ்த் திரையிலிருந்து ஐவர். 1.மணிரத்னம் 2.பாலசந்தர் 3.பாலுமகேந்திரா ...

சுட்டாச்சு சுட்டாச்சு - புத்தகம். எனது பார்வை

சுட்டாச்சு சுட்டாச்சு (புத்தகம்) எம்.ஜி.ஆர். - எம்.ஆர்.ராதா குண்டடி வழக்கு குறித்த புத்தகம் இது. திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை பகுதிகளில், குறிப்பாக, ஜானிஜான் கான் தெரு, டாக்டர் பெசன்ட் சாலை, ஷேக்தாவூத் தெரு பகுதிகளில் வாழும் நாற்பது + வயதில் இருக்கும் அனைவருக்குமே அந்தப் பகுதியில் நிகழ்ந்தவை ஒரே பாதிப்பை உண்டாக்கியிருக்குமோ. சுதாங்கன் அவர்களின் புத்தகத்தைப் படிக்கையில் அப்படித்தான் தோன்றுகிறது. "உம்மா, அங்க போனாலும் அவரைப் பாக்க முடியாது. போலீசு கட்சிக்காரங்கன்னு பெரிய கூட்டம். ஆஸ்பத்திரி கிட்டவே போவமுடியாதுன்னா கேளேன்" "எல, என்ன நீ அங்க கூட்டிட்டுப் போவப்போறியா இல்ல நானே போவவா. தோ இருக்கு ஆஸ்பத்திரி" எம்.ஜி.ஆர். அவர்கள் குண்டடிபட்டு ராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தபோது எங்கள் பகுதியில் (ஆறு வயதில்) நான் கேட்ட உரையாடல்களில் இதுவும் ஒன்று. இப்படிப்பட்ட உரையாடலைக் கேட்ட அனுபவம் அந்தப்பகுதியில் வசித்தவர்களுக்கு அனேகமாக இருந்திருக்கும். இதுபோன்ற நிகழ்வை, புத்தக ஆசிரியர் சுதாங்கன் அவர்களும் கண்டிருக்க, அந்த நிகழ்விலிருந்துதான் ஒரு நாவலைப் போல சுட்டாச்சு சு...

மெட்ராஸ் டு பாம்பே

மெட்ராஸ் டு பாம்பே சமீபத்தில் தமிழிலிருந்து இந்திக்கும், இந்தியிலிருந்து தமிழுக்கும் ம் மொழிமாற்றப்பட்டு எடுக்கப்பட்ட திரைப்படங்களின் பட்டியலைத் தொகுத்தேன். இது முழுமையான பட்டியல் அன்று. அறிந்தவரியில் தொகுத்திருக்கிறேன். சில அங்கிருந்து வந்தன. சில இங்கிருந்து போயின. மொழிமாற்றத்தில் சரியாக பிராந்தியத்தின் நாடி பிடித்து கதைக்காக வெற்றியைப் பெற்றவை சில. ஸ்டார் வேல்யூவின் அடிப்படையில் வடக்கை அப்படியே வடித்தும் வெற்றி பெற்றவையும் இருக்கின்றன. ஊத்திக்கொண்டவை சில. ஊத்தலோ ஊத்தலானவை சில. இங்கிருந்து போனவை: 1. அந்த ஏழு நாட்கள் = வோ சாத் தின் 2. நாயகன் = தயாவான் 3. தேவர் மகன் = விராசத் 4. ஒரு கைதியின் டைரி = ஆக்ரி ராஸ்தா 5. சிகப்பு ரோஜாக்கள் = ரெட் ரோஸஸ் 6. மாப்பிள்ளை = ஜமாய் ராஜா 7. ரிக்ஷ¡க்காரன் = ரிக்ஷ¡வாலா 8. வாணி ராணி = சீதா அவுர் கீதா 9. காதலிக்க நேரமில்லை = ப்யார் கியே ஜா 10. படோசன் = அடுத்த வீட்டுப் பெண் 11. சட்டம் ஒரு இருட்டறை = அந்தா கானூன் அங்கிருந்து வந்தவை: 12. கோரா அவுர் காலா = நீரும் நெருப்பும் 13. பே ஈமான் = என் மகன் 14. நசீப் = சந்திப்பு 15. துஷ்மன்...

கிஸ்னா

கிஸ்னா முன்னணி நிறுவனத் தயாரிப்பு, முன்னணிக் கதை சொல்லி சுபாஷ் கை, முன்னணி இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரகுமானும் இஸ்மாயில் தர்பாரும், முன்னணிக் கவிஞர் ஜாவீத் அக்தர், முன்னணி ஒளிப்பதிவாளர் அஷோக் மேத்தா, முன்னணி நடன அமைப்பாளர்கள் சரோஜ் கானும் ஷைமக் தவாரும், இப்படி எல்லா முன்னணிகளும் இருந்தும் கதைப் பின்னணி எதையும் தொடாமல் இங்கும் அங்கும் அலைந்ததன் விளைவோ என்னவோ, கிஸ்னா ஏமாற்றத்தையே தந்தது. பிரிட்டனைச் சேர்ந்த காத்தரீன், இந்தியாவுக்கு வந்து மூவாயிரத்து ஐநூறு கோடி ரூபாயினை தர்ம காரியங்களுக்குத் தருவதற்கு முன்வருகிறார். இந்திய அரசின் சுற்றுலாத்துறை அவருக்காக ஏற்பாடு செய்யும் 'பாரத் தர்ஷன்' சுற்றுலாவை மறுத்துவிட்டு, உண்மையான இந்தியாவை தனக்குக் காட்டவேண்டுமென்றால் தான் சொல்லும் இடத்திற்கு அழைத்துச் செல்லச் சொல்கிறார். *தேப்ரியாக், உத்ராஞ்சலில் பாகீரத் நதியும், அலக் நந்தன் நதியும் இணைந்து கங்கையாகும் இடத்திலிருக்கும் புண்ணியஸ்தலம். ரிஷிகேஷிற்கும் ஹரித்வாருக்கும் மேலே. அங்கே தன்னை அழைத்துச் செல்லச் சொன்னதும், கதை ·ப்ளாஷ் பேக்கில் சொல்லப்படுகிறது. (* வசனத்தில் ஒருமுறை கேட்டதை அப்...

ஈர்க்கும் எண்கள் (Fancy numbers)

ஈர்க்கும் எண்கள் (Fancy numbers) இது ஒரு மோகம்தான். சென்னையில் வாகனப் பதிவு எண்கள் M இலிருந்து T யாக மாற்றப்பட்டதும் எம்.ஜி.ஆர். அவர்கள் தனது வாகனத்திற்கு MGR பதிவாக வேண்டுமென மகாராஷ்ட்டிராவில் ஒரு வண்டியை பதிவு செய்து அதனைத் தமிழ்நாட்டில் ஓட்டியதாகச் சொல்லும் செய்தியில் எத்தனை உண்மை இருக்கிறதென்பதை நான் அறியேன். ஆனால், இந்த ஈர்க்கும் எண்களுக்கு மதிப்பு இருப்பதை அறிவேன். துபாயின் முக்கியமான ஷேக்குகளில் ஒருவரான ஷேக் அல்குரைரின் வாகனப் பதிவு எண் '1' . தனது வாகனத்தை மாற்றினாலும் பதிவு எண்ணை மாற்றாமல் அதையே உபயோகித்தார். 1 ம் எண்ணைக் கண்டதும் அது ஷேக் அல்குரைர்தான் என்பது துபாயில் இருக்கும் பலருக்கும் தெரிந்தது. 101 டாலமேஷன்ஸ் திரைப்படத்தில் க்ளென் க்ளோஸின் வண்டி எண் DEVIL எனத் தொடங்குவதாக ஒரு நினைவு. சவூதி அரேபியாவில் தொலக்காட்சித் தொடர் ஒன்றில் இத்தகைய ஈர்க்கும் எண்ணை முன் பதிவு செய்த பின், வண்டி வாங்கப் பணமில்லாமல், பழைய வண்டியை வாங்கி அதில் ஈர்க்கும் எண்ணை மாட்டி ஓட்டிச் செல்வதை நகைச்சுவைக் காட்சியாகவே காண்பித்தார்கள். ஈர்க்கும் எண் கிடைக்கிறதோ இல்லையோ, ப...

பர்வீன் பாபி

பர்வீன் பாபி பர்வீன் பாபி, கதாநாயகியர்களில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆட வந்தவர்களின் முன்னோடி என்றும் இவரைச் சொல்லலாம். மோஹ்னீஷ் பெஹல் அறிமுகமான திரைப்படம் 'தேரி பாஹோன்மே'யில், இவர் கப்பலில் நடக்கும் கலை நிகழ்ச்சியில் நடனம் ஆடுவதான காட்சியமைப்பு. (அது ப்ரூக் ஷீல்டின் ப்ளூ லாஹ¥னின் இந்தி மொழியாக்கம். அதில் மோஹ்னீஷ¤டன் அறிமுகமான ஆஷா தத் என்னவானார் என்பது தெரியவில்லை). 1984இல், அப்படி ஒரு பாடலுக்கு மட்டுமே நடனமாடிய பர்வீன் பாபி, அதன் பிறகு திரையில் தோன்றவில்லையென்றே நினைக்கிறேன். தனிமையில் இருந்த பர்வீன் பாபி இப்போது இல்லை. தனது அடுக்குமாடிக் குடியிருப்பில் யாருமற்ற தனிமையில் இறந்துவிட்டார். அவரது உடலை யாரும் பெற்றுக்கொள்ளவில்லையென்றால் நான் பெற்றுக்கொள்வேன் என்று இயக்குனர் மகேஷ் பட் சொன்னார். அதற்கு வாய்ப்பில்லாமலே போய்விட்டது. பர்வீன் பாபியின் உறவினர்கள் உடலைப் பெற மும்பைக்குப் பயணமாகியிருக்கிறார்கள். பத்தாண்டுகளுக்கு மேல் இந்தித் திரையில் இருந்த பர்வீன் பாபியவர்கள் மிகப்பெரிய வெற்றிப்பட நாயகியாக இல்லையென்றாலும், தனது கவர்ச்சி குறையாமல், நடித்த படங்கள் சிலவற்றி...

சிலம்பம். பாகம் 3/6

சிலம்பம். பாகம் 3/6 திசைகளே வீடுகள் என சிலம்பத்தில் வழங்கப்படுகிறது. பயிற்சி பெறுகின்ற பரம்பரை எதுவாக இருந்தாலும் முழுவட்டமடித்துச் சுழன்று திசைகளை மாற்றி மாற்றி நிற்கும் கால்களின் வியூகம் பொதுவானதே. வடக்கு நோக்கிப் பார்த்து நிற்கையில், வடக்குத் திசைதான் நாலு வீடு. மேற்குப்புறம் இருப்பது எட்டு வீடு, தெற்குத் திசையில் பன்னிரண்டு வீடு, கிழக்கில் பதினாறு வீடு. இவையே அடிப்படையான பதினாறு வீடுகள். அதாவது, சிலம்பம் வீசத் துவங்கும்போது மார்பும் முகமும் எந்தத் திசையை நோக்கி நிற்கிறதோ அதனை நாலு வீடாகக் கொண்டு இடப்புறத்தை எட்டு வீடாகவும், பின்புறத்தைப் பன்னிரண்டு வீடாகவும், வலப்புறத்தைப் பதினாறு வீடாகவும் நிர்ணயித்துக்கொள்ளவேண்டும். அடிப்படைப் பயிற்சி நாலு வீட்டில் சுழன்று அரண் அமைப்பதே. இதன் பிறகு, கால்களை மாற்றி வெவ்வேறு வீடுகளுக்கு நகர்ந்தாலும், பின்னிப்பின்னி சுழல்வது ஒரே பாணியில்தான். சிலம்பத்தைச் சுழலவிடுவதன் அடிப்படையை முந்தைய பகுதியில் பார்த்தோம். இதில் 'வீடு' கட்டுவதைச் சிறிது பார்க்கலாம். இடது காலை முன்னே வைத்து, வலது காலைப் பின்னே வைத்து ஓடுவதற்குத் தயார் நிலையி...

ரோக் (Rog - நோய்)

ரோக் (Rog = நோய்) மகேஷ் பட், இவரது 'அர்த்' தமிழில் 'மறுபடியும்' ஆக உருமாற்றமானது. 'சடக்', 'அப்பு'வாக வெளிவந்தது. மகேஷ் பட் வித்தியாசமான இயக்குனர். முதிர்ந்தவர்களின் வாழ்க்கைப் பிரச்சனையான 'காஷ்' (ஒரு சிறிய இடைவெளிக்குப் பின் டிம்பிள் கபாடியா நடித்தது), இளையவர்களின் காதல் கொஞ்சும் 'தில் ஹை கே மான் தா நஹீன்', மனவெழுச்சி அதிகமான 'டாடி' (தொலைக்காட்சித் தொடர்) எதுவாக இருந்தாலும் தனக்கே உள்ள தனிப்பாணியில் அலுப்பு தட்டாமல் கதையை நகர்த்திச் செல்வார். ஏனோ தெரியவில்லை மனிதருக்கு 'ரோக்'இல் ஏகப்பட்ட சறுக்கல்கள். மாடல் அழகி மாயா (இலென், இலெனா?!?1 - Ilene) முகத்தில் சுடப்பட்டு மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். மாயாவின் நண்பரான பத்திரிகையாளர், மாயாவின் காதலன் அலி, அலியைச் சுற்றி வரும் வயதான மாது இவர்களின் மேல் சந்தேகம் எழுப்பப்படுகிறது. வழக்கை விசாரிக்க வருகின்ற ஆய்வாளர் உதய் ராத்தோட் (இர்ஃபான் கான்) மாயாவின் படத்தைப் பார்த்து அவள் மேல் காதலாகிக் கசிகிறான். அவள் படத்தின் முன்னே மெழுகுவர்த்தி ஏற்றுவதும், கல்லறையில் மல...

ஜின்ஜின்னாக்கடி

ஜின்ஜின்னாக்கடி முத்துக்குளிக்க வாரீயளா! மூச்சையடக்க வாரீயளா! மனோரமாவும் நாகேஷ¤ம் கடற்கரையோரமாக ஆடிய இந்த நகைச்சுவைப் பாடலில் வருகின்ற 'ஜின்ஜின்னாக்கடி' குமரிப்பெண்ணிலும், வருஷத்தப் பாரு அறுபத்தியாறு உருவத்தப் பாரு இருவத்தியாறு பாடலில் வந்திருக்கின்றது. இப்படி வினோதமாக சில ஜுஜுபிக்கள் அங்கங்கே திரையில் ஒலிப்பதுண்டு. ஜின்ஜின்னாக்கடியைப் போலவே, ஜிம்பக ஜிம்பா ஜிம்பக ஜிம்பாவையும் பலர் நினைவில் வைத்திருக்கக்கூடும். ஜிம்பக ஜிம்பா ஜிம்பக ஜிம்பா ஜிம்பாரே ஜிம்பாரே ஜிம்பாரே ஜிம்பாரே மானைத் தேடி மச்சான் வரப் போறான் - ஹோய் வரப் போறான் (நாடோடி மன்னன்) ஜாவீத் அக்தரின் பேட்டி ஒன்றில் அவர் திரைக்காகத் தனது புலமையைக் குறைத்து எழுதுவதாக ஒரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அதற்கு அவர், 'திரைப் பாடல்களில் கதாநாயகன், இயக்குனர், அன்றைய மொழிவழக்கு எனப் பல காரணிகள் இருப்பதால் அங்கே நீங்கள் ஜாவீதைப் பார்க்காதீர்கள்' என்றார். ஒப்புக்கொள்ளக்கூடிய கருத்துதான். ஆடைகட்டி வந்த நிலவோ - நெஞ்சில் மேடைகட்டி ஆடும் எழிலோ - குளிர் ஓடையில் மிதக்கும் மலர் ஜாடையில் சிரிக்கும்...

Raincoat

ரெயின்கோட் "சொல்லி வச்சிருந்தீங்கள காக்கா, ரெயின்கோட் வந்திருச்சு" என கடைக்காரர் சொன்னதும் நமது 'ஏய்' 'அட்டகாசம்' சமாச்சாரங்களை ஒதுக்கிவிட்டு இதனைக் கொண்டுவந்தேன். 'ஓ.ஹென்றியால் ஈர்க்கப்பட்டோம்' என்று கடைசியில் சொல்லி அவரைக் கவுரவிக்கிறார்கள். சிக்கலில்லாத எளிமையான கதை. அவனும் அவளும் ஒரு நேரத்தில் காதல் கொண்டிருக்கிறார்கள். மத்தியதரக் குடும்பம், பெற்றோரை எதிர்த்து அவளால் எதுவும் செய்யமுடியவில்லை. அவனுக்கும் யாரையும் எதிர்க்க மனமில்லை. அவள் திருமணமாகித் தன் வழியே செல்கிறாள். அவர்களது காதல் அவர்களைத் தவிர யாருக்கும் தெரியாமல் போகிறது. மனோஜ் - அஜய் தேவ்கன் நிரோ - ஐஷ்வர்யா ராய் ஆறேழு வருடங்களுக்குப் பின் இருவரும் சந்திக்கிறார்கள். கணவன் சரியாக அமையாததால் இருக்கும் துக்கத்தை அவள் மறைத்து, வேலை சரியாக அமையாமல் நஷ்டப்பட்ட துயரத்தை இவன் மறைத்து, இருவரும் சந்தோஷமாக வாழ்வதாகவே ஒருவர் மற்றொருவரிடம் கதை அளக்கிறார்கள். கால் அரை மணிநேரம் இருவரும் தனியாக இருக்க, உண்மையான விவரம் இருவருக்குமே தெரியவருகிறது. தனது ஒரே சேமிப்பை அவளுக்குத் தெரியாமல் ...

aRivaayaa

பகதூர் ஷா ஸ·பர் , கடைசி மொகலாய மன்னர். கடைசிக் காலத்தை ரங்கூனில் கழித்தவர். மன்னராக இருந்து, தனது கடைசி நாள்களில் நாட்டைப் பிரிந்து தனியே இருக்கும் ஏக்கம், துயரம் இவரது கவிதை களில் நிறைந்திருக்கும். மற்ற சமயத்தில் படித்திருந்தால், தன்னைப்பற்றியே ஸ·பர் எழுதிக் கொண்டதைப் போலிருக்கும் இக்கவிதையை, இப்போது நிகழ்ந்தி ருக்கும் துயரச் சம்பவத்துடன் இணைத்துப் பார்த்தேன், மொழிமாற்றம் செய்தேன். ஓரிரு இடங்களில் மட்டுமே எதுகை, மோனைக்காக சில வார்த்தைகளை மாற்றியிருக்கிறேன். இயைபுக்காக 'அறிவாயா'வைச் சேர்த்துக்கொண்டேன் (இயைபுகளனைத்தும் ஒரே வார்த்தையாக இருப்பது கஜலுக்கு சிறப்பு). மற்றபடி, மூலத்திலிருந்து மாறுபடாதபடி மொழிமாற்றம் செய்தேன். * அறிவாயா? -------- பள்ளக் காடாய்க் கிடக்கும் இடத்தோர் .பட்டினம் இருந்ததை அறிவாயா? குள்ள நரிகள் குதிக்கும் இடத்தோர் .குடும்பம் இருந்ததை அறிவாயா? புதர்கள் கண்டு விழிகள் நடுங்கும் .பாதைகள் எல்லாம் ஒருநாளில் விதவித மான மரங்களை செடிகளை .விளைவித் திருந்ததை அறிவாயா? செல்வச் செழிப்பில் பொன்னும் பொருளும் .சேர்ந்து நிறைந்த இடமெல்லாம்...