இங்கும் அங்கும்---------------
முத்துக்குளிக்க வாறீயளா! மூச்சையடக்க வா*றீ*யளா!
குமரித் தமிழ் கொஞ்சும் பாடலின் பின்னணியில் தூத்துக்குடியென்றே நினைக்கிறேன். வட்டார வழக்கில் வந்திருக்கும் தமிழ்த் திரைப்பாடல்களில் இப்பாடல் கட்டாயம் இடம்பெறும். தென்னகத்து ரசிகர்களை வட்டார வழக்கில் ஆட்டம் போட வைத்த இந்தப் பாடல் இந்திக்குப் போனபோதும் முதல் வரிகளில் மாற்றமில்லை, அதே 'முத்துக்குளிக்க வாறீயளா'தான். ஆனால், பெண்மணியின் உடையை ஏனோ கேரள பாணியில் மாற்றிவிட்டார்கள். ஆணுக்கு கொங்கணி பாணியில் உடை. தெற்கிலிருந்து வடக்கிற்குச் சென்ற போது கவனமாக வடக்கின் ரசிகர்களை ஈர்க்கக்கூடிய அல்லது வடக்கிற்கு அறிமுகமான உடைகளைத் தந்தார்கள்.
அந்த ஏழு நாள் நாட்!?!களில் வேட்டியின் நுனியை உயர்த்திப் பிடித்தபடி வந்த 'ஈ பாலக்காட்டு மாதவன் நாயர்', வோ ஸாத் தின்னில் மலையாளத்தை ஒதுக்கிவிட்டு பீகார் பைய்யாவாக மாறிப்போனார். தெற்கு வந்து வடக்கைக் காதலித்ததை 'ஏக் தூஜே கே லியே'வுடன் நிறுத்திவிட்டு, அங்கே ஹார்மோனியத்துடன் மலையாளியை பீகாரியாக்கினார்கள்.
'போற்றிப் பாடடி பெண்ணே! தேவர் காலடி மண்ணே!'யும் வடக்கே போனபோது, தெற்கின் வாசனையே சிறிதும் கலக்காத 'டோல் பஜ்னே லகா'வாகி அந்த வருடத்தின் சிறந்த நடன அமைப்பிற்கான விருதினை பெற்றுச் சென்றது. அம்ரீஷ் பூரியும் சிவாஜியைப் போல எட்டு முழ வேட்டியெல்லாம் கட்டாமல், பஞ்சகச்சமும் ஜிப்பாவுமாக வந்து கணீர்க் குரலில் பேசிச் சென்றார்.
பிராந்திய உடைகள், பழக்க வழக்கங்கள் விஷயத்தில் தெற்கிலிருந்து வடக்கே சென்ற கதைகளில் மாறுபட்டிருக்கிறது. ஆனால், அங்கிருந்து கதைகள் இங்கே வரும்போது நமது பிராந்தியத்திற்கேற்றபடி உடைகள் மாற்றப்படவில்லை.
தெலுங்கின் 'தசரபுல்லுடு' தமிழில் உரிமைக் குரலாக மாறியபோதும் எம்.ஜி.ஆர். அவர்கள் வேட்டிய கட்டிய பாணி ஆந்திர பாணியாகத்தான் இருந்தது. உரிமைக் குரலின் வெற்றியாலோ என்னவோ அதே பாணி வேட்டி கட்டுதல் 'இன்று போல் என்றும் வாழ்க'விலும் தொடர 'எம்.ஜி.ஆரின் காஸ்ட்யூமர் என்றைக்குதான் இந்த ஆந்திரக்கட்டை விடப்போகிறாரோ' என வாரப்பத்திரிகைகளில் எழுதினார்கள்.
துஷ்மனில், வடக்கே எங்கோ ஒரு கிராமத்தில் கண்ணாடி வில்லைகள் பதித்த காக்ரா சோளி அணிந்து பயாஸ்கோப் பெட்டியைத் தூக்கிக்கொண்டு ஆட்டமாடும் பெண்ணாக மும்தாஜ் நடித்திருந்தார். அதுவே தமிழில் 'நீதி'யாக வந்த போது நாயகிக்கு ஒரு சுங்கிடிச் சேலை, ஒரு பாவாடை தாவணி, சேலை தந்திருக்கக்கூடாதா? அதே கண்ணாடி வில்லைகள் பதித்த காக்ரா சோளி. இதுவும் பத்தாதென்று பசிக்கின்ற குழந்தைக்கு நாயகன் ஜிலேபி வாங்கித் தரும் காட்சியை என்ன சொல்ல? தமிழக கிராமத்தில் இட்லி, வடை, போண்டா வகையறாக்களே இல்லாமல், ஜிலேபியை வாங்கி, வசனம் வேறு, 'ஜிலேபி சாப்புர்ரா கண்ணா'. (இதன் 'வாதா தேரா வாதா' தமிழில் 'மாப்பிள்ளையப் பாத்துக்கடி மைனாக்குட்டி'யாக மாறியது குறித்து என்றேனும் ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையை நான் எழுதக்கூடும் ;))
ஸன்ஜீரில், வடக்கிற்கு நன்கு அறிமுகமான பட்டாணியராக ப்ரான் வந்து, நடு வகிடு எடுத்து, மருதாணி பூசிய செம்பட்டை முடியுடன், 'யாரீ ஹை ஈமான் மேரா யார் மேரி ஸிந்தகி' என பக்தூனியப் பாணியில் கலக்கினார். அதையே சிரித்து வாழ வேண்டுமாகத் தமிழில் தந்த போது, தென்னகத்தில் வட்டிக்குப் பணம் கொடுத்த பட்டாண்களோ அல்லது தென்னகத்தில் வாழ்ந்த முஸ்லீம்களோ கொஞ்சமும் நினைத்துப் பார்க்கமுடியாத உடையைத்தான் எம்.ஜி.ஆர். அணிந்து 'மேரா நாம் அப்துல் ரகுமான்' பாடினார்.
இவற்றிற்கெல்லாமும் 'சல்தா ஹை' சொல்லிவிடலாம். ஆனால், மன்னிக்கவே முடியாத ஒரு பாடல் இருக்கிறதென்றால், அது இரு துருவங்களின் 'தேரு பாக்க வந்திருக்கும் சித்திரப்பெண்ணே'.
அம்மாடி கொஞ்சம் பூச்சூடவா!
அத்தாணி முத்தம் நான் போடவா! என டி.எம்.எஸ். பாடும்போதும்,
ஊரு பாக்க மணமுடிப்போம் பொருத்திரு கண்ணா! - அப்போ
ஊர்வலத்தில் நாம் வருவோம் ஒண்ணுல ஒண்ணா! என பி.சுசீலா பாடும்போதும், எங்கோ பறப்பது போலிருக்கும்.
இருப்பினும், இந்தப் பாடல் காட்சியில், ஷோலேயில் டாகூ காலியா அணிந்திருப்பது போன்ற உடையில் சிவாஜி வந்து ஆடுவதைத்தான் மன்னிக்கவே முடியாது. (அனேகமாக இது சுனில்தத்தின் ஜ்வாலா).
இங்கிருந்து அங்கு செல்லும்போது கவனமாக மாற்றம் செய்யப்பட்ட பிராந்திய உடைகள், அங்கிருந்து இங்கே வரும்போது மட்டும் அப்படியே வந்தது ஏனென்று புரியவில்லை.
தேசிய ஒருமைப்பாடு தெற்கிற்கு மட்டுமா?
வுடு ஜூட்...
அன்புடன்
ஆசாத்

Comments