Skip to main content

Posts

Showing posts from October, 2005

புல்லட்

புல்லட் மற்ற இருசக்கர வண்டிகளை ஓட்டிப் பழக்கப்பட்டு முதன்முறையாக புல்லட்டை ஓட்டினால் "லெ·ப்ட்ல ப்ரேக், லெ·ப்ட்ல ப்ரேக்" என்று ஜெபித்துக்கொண்டே ஓட்டுவது நல்லது. கார்களையே ஓட்டிப் பழக்கப்பட்டு முதன்முறையாக புல்லட்டைத் தொடுபவர்களும் கட்டாயம் இந்த ஜெபத்தினை உச்சரிக்கவேண்டும். அப்போதுதான் திடீரென்று வண்டியின் முன்னே நுழையும் இடையூறுகளைச் சமாளிக்க அனிச்சையாக வலது காலால் ப்ரேக்கை அழுத்துவது விடுத்து, இடது காலால் ப்ரேக்கை அழுத்தி விபத்தைத் தவிர்க்கலாம். மற்ற வண்டிகளுக்கு வலது காலால் ப்ரேக் என்றால், புல்லட்டிற்கு மட்டும் இடது காலால் ப்ரேக். ஓரிரு முறைகள் ஓட்டிப் பழகி விட்டால், அதில் அமர்ந்ததும் வருகின்ற கம்பீரம் போலவே 'இடது கால்' உணர்வும் தானாக வந்துவிடும். புல்லட் 350, புல்லட் 500, எலக்ட்ரா வகைகளில் மட்டுமே இடது கால் ப்ரேக் வழக்கம். அவை விடுத்து 'தண்டர் பேர்ட்'டில் இந்தப் பிரச்சனை கிடையாது. தண்டர் பேர்டில் ப்ரேக் வலது புறம்தான். அதனை அறிமுகப் படுத்தும்போதே, 'வலப்புற ப்ரேக்' என்னும் வாசகம் விளம்பரத்தில் இருந்தது. விளம்பரமும் வண்டியும் வெளிவந்த வருடம் இரண்டாயிரத...

இங்கும் அங்கும்

இங்கும் அங்கும் --------------- முத்துக்குளிக்க வாறீயளா! மூச்சையடக்க வா*றீ*யளா! குமரித் தமிழ் கொஞ்சும் பாடலின் பின்னணியில் தூத்துக்குடியென்றே நினைக்கிறேன். வட்டார வழக்கில் வந்திருக்கும் தமிழ்த் திரைப்பாடல்களில் இப்பாடல் கட்டாயம் இடம்பெறும். தென்னகத்து ரசிகர்களை வட்டார வழக்கில் ஆட்டம் போட வைத்த இந்தப் பாடல் இந்திக்குப் போனபோதும் முதல் வரிகளில் மாற்றமில்லை, அதே 'முத்துக்குளிக்க வாறீயளா'தான். ஆனால், பெண்மணியின் உடையை ஏனோ கேரள பாணியில் மாற்றிவிட்டார்கள். ஆணுக்கு கொங்கணி பாணியில் உடை. தெற்கிலிருந்து வடக்கிற்குச் சென்ற போது கவனமாக வடக்கின் ரசிகர்களை ஈர்க்கக்கூடிய அல்லது வடக்கிற்கு அறிமுகமான உடைகளைத் தந்தார்கள். அந்த ஏழு நாள் நாட்!?!களில் வேட்டியின் நுனியை உயர்த்திப் பிடித்தபடி வந்த 'ஈ பாலக்காட்டு மாதவன் நாயர்', வோ ஸாத் தின்னில் மலையாளத்தை ஒதுக்கிவிட்டு பீகார் பைய்யாவாக மாறிப்போனார். தெற்கு வந்து வடக்கைக் காதலித்ததை 'ஏக் தூஜே கே லியே'வுடன் நிறுத்திவிட்டு, அங்கே ஹார்மோனியத்துடன் மலையாளியை பீகாரியாக்கினார்கள். 'போற்றிப் பாடடி பெண்ணே! தேவர் காலடி மண்ணே!'யும் வடக்க...

முஸஃபராபாத்

முஸ·பராபாத் 'முஸ·பராபாத் என்கிற அந்த எல்லைப்புறத்திலிருந்த சிறு டவுனுக்குள் நுழைந்தவுடன், பாக்கிஸ்தானின் ஆதிவாசிப் படைக்குக் குஷி வந்துவிட்டது. அவர்கள் காஷ்மீரை மறந்தார்கள். 'ஜிகாத்'தை மறந்தார்கள். ஸ்ரீநகரை அடைய இன்னும் எழுபத்தைந்து மைல்கள் சென்றாகவேண்டும் என்பதையும் மறந்துவிட்டார்கள்! ஓரளவுக்கு வசதியான முஸ·பராபாதின் கடைவீதிகளுக்குள் புகுந்து, கதவுகளை உடைத்து, கொள்ளையடிக்க ஆரம்பித்துவிட்டார்கள்!' நன்றி. பாக். ஒரு புதிரின் சரிதம் பா. ராகவன் இப்படி அங்கும் இங்குமாகப் படித்து, கேள்விப்பட்டிருந்த முஸ·பராபதிலிருந்து ஒரு நண்பர் கிடைப்பார் என்பது அப்போது எனக்குத் தெரியாது. சென்ற ஒரு வருடமாகத்தான் 'சூரஜ் சிங்'குடன் பழகிவருகிறேன். சூரஜ் சிங் என்பது அவரது பெயர் அன்று; அது நான் அவரை அழைக்கும் பெயர்தான். கிட்டத்தட்ட பஞ்சாபியரைப் போலவே அடர்த்தியான தாடி மீசையும் உருண்டு திரண்ட உருவமுமாக இருக்கும் அவரது அறிமுகம் கிடைத்தவுடனே, 'பே.ஷக் ஆப் பஞ்சாப் கே ஹோங்கே' (சந்தேகமில்லாமல் நீங்கள் பஞ்சாபியர்தான்) என்றேன். 'நஹீ ஜனாப்! கனவானே! நான் கஷ்மீரைச் சேர்ந்தவன். உங்களுக்கெல்ல...