Skip to main content

Posts

Showing posts from February, 2008

சுஜாதா

கொலையுதிர்காலத்தையும் வசந்தகாலக் குற்றங்களையும் ரசித்துப் படித்திருக்கிறேன். அவருடைய தீவிர வாசகர்கள் ஓரிருவர் நண்பர்களான பிறகு நைலான் கயிற்றைத் தேடிப்பிடித்துப் படித்திருக்கிறேன். கனவுத்தொழிற்சாலையின் திரைக் கவிஞர் அருமைராசன் கதாபாத்திரத்தை மறக்க வாய்ப்பே கிடையாது. நிமிஷா நிமிஷா நிமிஷா, நில்லுங்கள் ராஜாவே எல்லாம் ஈர்த்திருக்கின்றன. திரைக்கதையில் படுகொலை செய்யப்பட்ட பிரியா, கரையெல்லாம் ஷெண்பகப்பூ வகையறாக்கள், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை - தானம் தொடர்பான கதையானது திரைக்காக இதயமாற்று அறுவை சிகிச்சையாகிப் போகும் அபாயம் உள்ள காகிதச் சங்கிலி, ராஜராஜன் கிணறு, பேசும் பொம்மைகள் இப்படியாக வார இதழ்களில் அவர் எழுதிய தொடர்களைப் படித்து, கதைகள் குறித்து அரட்டை அடித்து, இன்று வரையில் சுஜாதா வாசகனாக (வார இதழ்கள், நாவல்கள்) இருக்கிறேன். எழுத்துகளின் பல பரிமாணங்கள் அறிமுகமான பிறகு பார்வைகள் பரந்து, வாசிப்பு அனுபவத்தின் எல்லைகள் விரிந்துகொண்டே செல்லலாம். அப்பொழுது துவக்கத்தில் நிகழ்ந்த வாசிப்பு அனுபவங்கள் குறித்து பல கேள்விகள் எழலாம், அது வேறு. பலருக்கு சுஜாதா அவர்களின் எழுத்து வாசிப்பு அனுபவத்தின் து...

இசைநிகழ்ச்சிப் புன்முறுவல்கள்

ஒலிவழங்கியைக் காதுகளில் மாட்டிக்கொண்டு கண்களை மூடிக்கொண்டால் கிடைக்கும் இன்பத்தைவிடவும் அதிகமாக ரசனைக்குத் தீனி போட இசைநிகழ்ச்சிகளால் முடியுமா? எனது பார்வையில் முடியாது; ஆனால், இசைநிகழ்ச்சி மேடைகளில் உதிர்க்கப்படும் சில சின்னச்சின்ன புன்னகைகள் போடவைக்கும் 'அடடா'க்களுக்கும் 'ஆஹா'க்களுக்கும் விலை கிடையாது. திரையில் 'வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது' பாடலில் ஒரு இசைக்கலைஞர் தனது வாசிப்பிற்குப் பின் சிந்திய புன்னகை இன்னமும் நினைவில் இருக்கிறது. தொலைக்காட்சியில் அநேகமாக அது சொக்குதே மனம் நிகழ்ச்சி என நினைக்கிறேன். 'ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி' யைப் பாடிக்கொண்டிந்த பெண்மணி பின்னணி இசையில் அட்டகாசப்படுத்திய தபேலாக்காரரைப் பார்த்து புன்னகைத்தார். அந்த வாசிப்பை அங்கீகாரப்படுத்த அதைவிடவும் சிறந்த பரிசு அந்த மேடையில் எதுவாகவும் இருக்கமுடியாது. அந்தப் புன்னகையையும் மறக்க முடியாது. என்றோ நடைபெற்ற தெருவோர இசைக்கச்சேரியில் 'இன்பமே உந்தன் பேர் பெண்மையோ' வின் பல்லவியில் ஒலிக்கும் காங்கோ அடிக்குப் பின் அந்தக் கலைஞரும் இசைநடந்துனரும் பரிமாறிக்கொண்ட புன்னகை நீண...