Skip to main content

Posts

Showing posts from June, 2006

தலைநகரம் - திரைப்படம் குறித்ததுதான், ஆனால், விமர்சனமன்று

இன்னா சேட்டேய்! ஆக்டிவா எட்துக்குனு எங்க கெளம்பிட்ட? படத்துக்கா?செனிக்கெழமையானா தண்ணியும், நாயிதிக்கெழமையானா படமும் இல்லாம உன்னால இருக்கமுடியாத. இன்னா படத்துக்குப் போற. க்ர்ர்ர்ரிஷ்ஷுக்கா? இல்லியா. அப்ப எங்க போற. தமிழ்ப்படமா? சேட்டு புத்தியக்காட்டிட்ட பார். இந்திப்படத்துக்குன்னா என்னையும் இட்டுக்குனு போயி பக்கத்துல ஒக்கார வெச்சு பான் வாசனையோட கோராமையா டயலாக்கெல்லாம் தமிழ்ல சொல்லி நமக்கு இந்தி கத்துத் தருவியபா. இப்பப்பார் தமிழ்ப் படம்னா நம்மள வுட்டுப்போற. என்னியும் இட்டுக்குனு போ, சேட்டே 'பூரா பிலிம் கா டய்லாக் மை டெல்லிங்'. இன்னா படம்? தலைநகரமா? சேட்டேய்! இன்னா மெண்டல் கிண்டல் ஆய்ட்டியா? தர்மாண்ணா செத்துட்டுக்ற இந்த நேர்த்துல ஃபைட்டிங் சீன் பத்தி தப்பாப் பேச வேணாமேன்னு நெனிக்றேன். தளபதி தினேஷுன்னு புதுப்பையந்தான் பன்ணிக்கிறான். நல்லால்ல சேட்டு போவாத. புச்சா ஒண்ணியும் இல்ல சேட்டே. அல்லாம் ஸ்கெட்சு போர்ர மேட்டர்தான். ஆன்னாவூன்னா படத்துல ஸ்கெட்சு போர்ராங்கோவ். இன்னாங்கடா ஸ்கெட்சு போட்டு தூக்றதுன்னா இன்னா ரெண்டு டீ ரெண்டு சம்சான்னு நாயர் கைல ஆர்டர் குடுக்றா மாறியே? அட இந்த 'டா...

திரைப்பட சண்டைக்கலை இயக்குனர் விக்ரம் தர்மா மரணம்

விக்ரம் தர்மா எம்.ஜி.ஆருக்கு ஷ்யாம் சுந்தர் என்றால், கமலஹாசனுக்கு விக்ரம் தர்மா. கமலின் பல படங்களுக்கு சண்டைக்கலை இயக்குனராகப் பணியாற்றியிருக்கும் விக்ரம் தர்மா இயற்கை எய்தினார். விக்ரம் படத்திலிருந்து தனது பெயருடன் விக்ரமைச் சேர்த்துக்கொண்ட தர்மா, கமல் டீம் கலைஞர் என்னும் முத்திரையைப் பெற்றுக்கொண்டவர். தமிழ்த் திரையில் சிலம்பத்தில் ஒற்றைக்கு ஒற்றையா? விவசாயி, தாயைக் காத்த தனயன். குழுவின் நடுவிலா? மாட்டுக்கார வேலன். இரவு நேரக் காட்சியிலா? உரிமைக் குரல், படகோட்டி. கற்றுத் தருவதா? முகராசி. இப்படியாக எம்.ஜி.ஆர். சார்ந்த சிலம்பாட்ட ரசிகர்களான என்னைப் போன்றோரைக் கொஞ்சம் திரும்பிப் பார்க்க வைத்தவர், விக்ரம் தர்மா. அப்படி வியக்க வைத்த சண்டைக் காட்சியை அவர் அமைத்த படம், தேவர் மகன் . ஒற்றைக்கு ஒற்றையாகவும், குழுவின் நடுவிலும், பாடலிலுமாக மூன்று நிலைகளில் சிலம்பக் காட்சிகளை அமைத்து, திரையில் கிட்டத்தட்ட பத்து நிமிடங்களுக்கு மேல் ரசிகர்கள் சிலம்பாட்டத்தையே பார்த்துக் கொண்டிருந்தபோதும் அது திகட்டாதபடி விறுவிறுப்பாக்கியவர். மாடக்குளம் அழகிரிசாமியின் (மாட்டுக்கார வேலன்) சிஷ்யன் என வசனத்திலேயே சொல்...

அனில் அம்பானியின் சவூதி வருகை

நான்கு மணிநேரச் சந்திப்பிற்காக ரியாத் வந்திருந்த அனில் அம்பானியைப் பற்றிய சிறுகுறிப்பை எழுதிய பத்திரிகைகள் இரண்டுமே (சவூதி கெஸட், அரப் ந்யூஸ்), அம்பானியின் வருகையைப் பற்றி இந்தியத் தூதரகம் எதுவும் அறிந்திருக்கவில்லை என்று குறிப்பிட்டிருந்தன. அனில் அம்பானி அவர்கள், ரிலையன்ஸின் சார் நிறுவனமான Flag டெலிகாம் வழியாக, ரியாத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இன்டக்ரேட்டட் டெலிகாம் கம்பெனி லிமிடெட்(ITC)உடன் சேர்ந்து, அறுபது மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்திருக்கிறார். சவூதி அரேபியாவையும் மற்ற வளைகுடா நாடுகளையும் ஐம்பத்து மூன்று நாடுகளுடன் ஃபைபர் ஆப்டிக் கேபிள் நெட்வொர்க் வழியாக இணைக்கவிருக்கும் ராஜாளி புறத்திட்டிற்கான (Falcon project - எனது மொழிமாற்றம் சரியானது அன்று) முதலீடாக இந்தத் தொகை இருக்கும். கடற்கரையையொட்டிய இரண்டு நகரங்களான ஜித்தா, அல்கோபர் இரண்டிலும் ஸப்மரைன் ஃபைபர் ஆப்டிக் கேபிள் ஸ்டேஷன்கள் அமைகின்றன. இதில் அல்கோபரிலிருந்து செயல்படும் நிலையம் தனது சேவையை, அம்பானியின் வருகை நாளான நேற்று முதல் துவங்குவதாக செய்திக் குறிப்புகள் சொல்கின்றன. இந்தப் புறத்திட்டு 2006 அக்டோபர் மாதத்த...

ஆடலுடன் பாடலைக் கேட்டு - சில கோவையற்ற எண்ணங்கள்

'ஷ்ஹாங் ஷ்ஹாங்' என ஆறு முறைகள் மூச்சு வாங்கும் இந்தப் பாடலை சுசீலா அம்மையார்தான் பாடியிருக்கவேண்டுமா என்று பலமுறைகள் நினைத்ததுண்டு. அதே போல் பக்கத்து வீட்டுப் பருவ மச்சான் பார்வையிலே படம் புடிச்சான் பாடலையும் அவருக்குக் கொடுத்திருக்க வேண்டுமா என்றும் சில சமயம் நினைப்பதுண்டு. சல்தா ஹை. நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போம் என காதல் தேவதை சொன்னாள், நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன் என்றெல்லாம் எல்.ஆர்.ஈஸ்வரி அந்தப் பக்கம் வளைய வந்தபோது இவரும் இப்படி மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கும் பாடல்களைப் பாடும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார். இந்த வகையில் வெள்ளி விழா படத்தில் மென்மையான பாடலான காதோடுதான் நான் பாடுவேனிற்கு எல்.ஆர். ஈஸ்வரியையும், துள்ளலான பாடலான நான் சத்தம் போட்டுத்தான் பாடுவேனிற்கு பி.சுசீலாவையும் வேண்டுமென்றே மாற்றித் தந்ததாக எம்.எஸ்.வி. குறிப்பிட்டதை எங்கோ படித்த நினைவு. ஆடலுடன் பாடலைக் கேட்டு பாடலின் பின்னணி மிகவும் சுவாரசியமானது. முதலில் இசையமைத்து எம்.ஜி.ஆரின் ஒப்புதலுக்காக் காட்டியபோது, ஒப்புதல் தர மறுத்திருக்கிறார். இசை மிகவும் துள்ளலாக இருக்கிறது, உடன் ஆடப்போகிறவர் எல்.விஜயலட...

ஃபனா - எனது பார்வையில்

அட போங்க சார், மூக்கு இருக்றவரைக்கும் சளி இருக்குன்ற மாதிரி காஷ்மீர் இருக்றவரைக்கும் காஷ்மீரப்பத்தி சினிமாவுல வந்துக்குனுதான் இருக்கும். ஷிம்லாவுல தலைவரு ஓடுனாரு, 'புதிய வானம் புதிய பூமி' ன்னு பாடிக்கினே. அத்தோட வுட்டாரா? 'என் தாய்த்திரு நாட்டுக்கு வாசலிது' ன்னு அண்ணா - காஞ்சி, நேரு - காஷ்மீர்ன்னு சொன்னாரு. சிவாஜி சாரும் அந்தப்பக்கமாப் போயி 'படகு படகு ஆசைப் படகு' ன்னு படகு ஓட்டலீங்களா. பிந்துன காலத்துல மாடி வீட்டு ஏழை க்குக்கூட சிவாஜி சார் அங்கதானங்க போனாரு. ஜப் ஜப் ப்ஹூல் கிலே வுல நந்தாவப் பாத்து 'பர்தேசியோன் சே நா அக்கீயான் மிலானா' ஷஷி கபூரு பாடிக்கினே படகு ஓட்டுனாரு. இந்திக்காரவுங்க எத்தினி படம் எடுத்தாங்க. யப்பா ஆன்னாவூன்னா காஷ்மீருக்குத்தானங்க போனாங்க. ஹென்னாவுல ரிஷியும் ஸீபா பக்தியாரும் காஷ்மீர் எல்லை தாண்டிய காதல்ல உருகலீங்களா. அப்பாலிக்கா நம்ம கேப்டன், அர்ஜுன், ஷரத்சாரெல்லாங்கூட காஷ்மீர் தீவிரவாதிங்க பின்னாடி கொஞ்ச நாளு கோடம்பாக்கத்துல சுத்தலீங்களா. அவங்க எல்லாரும் சுத்திட்டு வுட்டுட்டுப்போன மீதியச் சுத்றதுக்காக வண்டிக்கும், கூல்ட்ரிங்ஸ்ஸுக்கும...

வளர்சிதை மாற்றம் - "பொடிப்பையா"

பொடிப்பையா 'ரேய் பொட்டே, ஜாக்கே ச்சாய் போல்கே ஆ'பா. கஷ்டம்பர் ஆக்கொ ஹைன்' (டேய் பொடிப்பையா, போயி டீ சொல்லிட்டு வா. கஸ்டமர் வந்திருக்காங்க) அது என்ன அது 'பொடிப்பையா' என்று கூப்பிடுவது? ராஜா, கண்ணா, மௌலானா இப்படி எதையாவது சொல்லி அழைக்கலாமே. என்னதான் பள்ளிப் படிப்பு ஏறாமல் கடைக்கு வேலைக்கு வந்தாலும் இப்படியா பலரின் முன்னால் அழைப்பது. மற்ற நேரங்களில் 'பையா' என்று உரக்கக்கத்தி அழைத்தாலும் மௌலானா கொஞ்சம் பொறுத்துக்கொள்வான். வுஸ்தாதின் (குருவின்) மகள் நஃபீஸாவின் நடமாட்டம் அந்தப் பக்கமாக வரும்போது 'ரேய் பொட்டே' என்று வுஸ்தாத் அழைத்துவிட்டால் கண்கள் சிவந்து விடும். லேசாக நீர் பொங்கி அதை மிகவும் சிரமத்துடன் மறைத்து 'அபி ஆயா' (இதோ வந்திட்டேன்) என ஓடுவான். இதனால்தானோ என்னவோ இப்போதெல்லாம் அடிக்கடி கனவுகளில் மூழ்கிவிடுகிறான். மௌலானாவின் கனவுகளெல்லாம், அவன் தினசரி புழங்கும் செப்புக்கம்பிகளைப்போலவே சிக்கலானவை. கடற்கரைக்காற்றில் கலைந்து போகும் தலைமுடியைப் போலவே, எரிந்து போன மோட்டார்களில் வளைந்து நெளிந்து பிரிந்து கன்னாபின்னாவென சிலுப்பிக்கொண்டு நிற்கும் ச...

துபாயின் நிலச்சொத்து மதிப்பீடு உண்மையா? நீர்க்குமிழா?

துபாயின் நிலச்சொத்து மதிப்பீடு உண்மையா? நீர்க்குமிழா? சென்ற இரண்டாண்டுகளாகவே முதலீட்டாளர்களிடையே இந்தக் கேள்வி உலவி வருகின்றது. ஆனாலும், விலையேற்றத்தில் சரிவையோ, சொத்து கைமாறுதல்களில் தேக்க நிலையையோ இதுவரையில் காணமுடியவில்லை. இத்துடன் மேன்மேலும் முடுக்கிவிடப்படுகின்ற கட்டுமானப் பணிகளும் உடன்சேர்ந்து முதலீட்டாளர்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்துகின்றனவேயன்றி, துபாயின் நிலச்சொத்து மதிப்பீடு நீர்க்குமிழ்தான் என்னும் சந்தேகத்தை உறுதிப்படுத்தவில்லை. நடுத்தர மக்களின் எட்டுதலுக்குள் எனப்படும் குடியிருப்புகளில் சதுர அடிக்கு தோராயமான விலை 1750திர்ஹம்கள் என்ற அளவில் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் விலை இருக்கின்றது. கட்டுமான நிறுவனத்திற்கு சந்தையில் இருக்கும் மதிப்பின்படி இந்த விலை இன்னும் அதிகமாகும். அடுக்குமாடிக் குடியிருப்புகளில்லாமல் நட்சத்திர அந்தஸ்த்துள்ள தனிவீடுகளென்றால் விலையை அப்படியே மூன்று நான்கு மடங்காக்கிக்கொள்ளுங்கள், நகரை விட்டு ஒதுங்கியுள்ள இடங்களில்தான் வீடும் கிடைக்கும். இப்படி விலையேறிப்போனதன் காரணம்தான் என்ன? எனது தனிப்பட்ட கருத்தாக நான் சொல்வது, இந்த முன்னேற்றத்திற்குக் காரண...

சன் செய்திகளில் வலைப்பூக்களின் விவரம்

நேற்று கில்லியில் செய்தியைப் பார்த்ததும், அடடா மூன்றாவது புதனாயிற்றே டோஸ்ட்மாஸ்டர்ஸ் சந்திப்பு இருக்கிறதே, செய்தியைப் பார்க்க முடியாதே என்று வருத்தப்பட்டேன். இன்று காலை டைம் பாஸ் மச்சியில் செய்தித்தொகுப்பு வெளியான விவரம் பார்த்ததும், சற்று முன்னர் சன் தொலைக்காட்சியின் முன் அமர்ந்தேன். சவூதியில் சன் வருவது ஐக்கியராச்சிய நேரப்படிதான், அதனால் இந்திய ஒலிபரப்பு முடிந்த பின்னரே இங்கு வரும். விவரங்களைப் பார்த்தேன். பத்ரி எப்பவும் போலவே தனது உரையாடல் பாணியில் அழுத்தந்திருத்தமாக 'என்ன வேணா எழுதலாம்' என்ற கருத்தைப் பகிர்ந்து கொண்டபோது பின்னால் கணினித் திரையில் அவரது 'எண்ணங்கள்' . (கிழக்கு)முகிலனும் தனது பார்வையைப் பகிர்ந்துகொண்டார். (கிழக்கு)முத்துராமனைக் காட்டினார்கள், ஒரு மாதிரியான ஸைட் ஆங்கிள் டாப் ஆங்கிளில் மக்கள் கணினியில் வேலை செய்வதை காட்டிக்கொண்டே காமிரா நகர்ந்தது. பிரகாஷ் படபடவென கையை ஆட்டிப் பேசினார். நெஞ்சுவரையிலே க்ளோஸ்அப் காட்சியாக இருந்ததால், அவர் கையை ஆட்டிப்பேசியபோது, கை, காமிராவுக்கு வெளியே சென்று திரையில் வரமாட்டேன் என அடம் பிடித்தது. சின்மயா நகரின் தெருமுனையி...

சவூதி அரேபியாவும் இந்தியர்களும் - எனது பார்வை 2

சவூதி அரேபியாவும் இந்தியர்களும் - எனது பார்வை 2 ( சிவா அவர்களுக்கென குறிப்பாக தலைப்பிட்டதை 1 என எடுத்துக்கொள்ள வேண்டுகிறேன். இது இரண்டாவது பதிவு) மேற்கத்திய வாழ்வில் கிடைக்கும் சுதந்திரமும், மேற்கத்திய போலீஸார்களிடம் இருக்கும் பெருந்தன்மையான விசாரிப்புகளும் வளைகுடா வாழ் இந்தியர்கள் அனுபவித்துப் பார்காதவை. இது மட்டுமே நமது பதிவுகளுக்கான தலைப்பு என்றால், தலைப்பை சிறிது மாற்றி எழுதிவிட்டு அப்படியே ஒப்புதல் கொடுத்துவிட்டு அவரவர் தங்களது வாழ்வியல் முன்னேற்றங்களில் கவனத்தைச் செலுத்தலாம். தலைப்பை எப்படி மாற்ற வேண்டும்? மேற்கத்திய வாழ்வில் கிடைக்கும் சுதந்திரமும், மேற்கத்திய போலீஸார்களிடம் இருக்கும் பெருந்தன்மையான விசாரிப்புகளும் சவூதியில் வாழ் இந்தியர்கள் அனுபவித்துப் பார்க்காதவை. இப்படியாகத் தலைப்பை மாற்றிவிட்டு, 'ஆமாங்க, நமக்கெல்லாம் மேற்கத்திய வாழ்க்கைய அனுபவிக்றதுக்கு சுழி இல்லைங்க' எனச் சொல்லி கைகுலுக்கிக்கொண்டு அவரவர் வழியே செல்லலாம். போதும். சிவா அவர்கள் தனது அனுபவத்தைச் சொல்கிறார், ஆசாத் தனது அனுபவத்தைச் சொல்கிறார், அவரவர் அனுபவம் அவரவர்க்கு. நான் சொல்வதை ஏற்கவேண்டுமென்ற ...

கால்கரி சிவா அவர்களின் அரேபிய அனுபவங்கள் - எனது பார்வை 1

நண்பர் கால்கரி சிவா அவர்களின் அரேபிய அனுபவங்களைப் படித்தேன். நிறையவே புண்பட்டிருக்கிறார். சில நேரங்களில் இப்படியான அனுபவங்கள் கைகோத்து நம் முன்னே நின்று நம்மை வெறுப்பின் எல்லைக்குச் செல்லவைக்கும், ஆனால், அதனாலெல்லாம் தயங்காமல் நினைத்ததை சாதிக்கும் வரையில் பொறுமை காப்பதே சிறந்தது. அதனையே கால்கரி சிவா அவர்களும் செய்து பொறுமையாக அரேபியாவிலிருந்து வேறு நாட்டிற்குத் தனது வேலை வாய்ப்பை / தொழிலை மாற்றிக்கொண்டு சென்றிருக்கிறார். பல இன்னல்களையும், அவமானங்களையும் சகித்துக்கொண்டு பத்தாண்டுகள் போராடிய அவரது பொறுமை பாராட்டத்தக்கது. அனுபவங்களைச் சொல்லும்போது நடந்த நல்லவற்றையும் பட்டியலிடுகிறார், கெட்டவற்றையும் பட்டியலிடுகிறார். நல்ல அணுகுமுறை. அராபியர்களிடையே இருக்கும் 'குலம் தாழ்த்தி உயர்த்தி சொல்லல்' வழக்கம் முதல் நாராயணன் அவர்களின் பின்னூட்டத்தில் அராபிய உணவு வகைகளின் பெயரைச் சொல்வது வரையில் வளைகுடா குறித்து நுணுக்கமாகப் பதிவுகள் செய்யும் அவரது பதிவுகளில் எந்த விதமான உள் அர்த்தமும் இருக்காதென்றே தோன்றுகிறது. அமெரிக்காவில் படித்துவந்து பிறகு அமெரிக்காவையே சாத்தான்1 என்று சொல்லுவதாக ஒரு ச...