அட போங்க சார், மூக்கு இருக்றவரைக்கும் சளி இருக்குன்ற மாதிரி காஷ்மீர் இருக்றவரைக்கும் காஷ்மீரப்பத்தி சினிமாவுல வந்துக்குனுதான் இருக்கும்.
ஷிம்லாவுல தலைவரு ஓடுனாரு, 'புதிய வானம் புதிய பூமி'ன்னு பாடிக்கினே. அத்தோட வுட்டாரா? 'என் தாய்த்திரு நாட்டுக்கு வாசலிது'ன்னு அண்ணா - காஞ்சி, நேரு - காஷ்மீர்ன்னு சொன்னாரு.
சிவாஜி சாரும் அந்தப்பக்கமாப் போயி 'படகு படகு ஆசைப் படகு'ன்னு படகு ஓட்டலீங்களா. பிந்துன காலத்துல மாடி வீட்டு ஏழை க்குக்கூட சிவாஜி சார் அங்கதானங்க போனாரு.
ஜப் ஜப் ப்ஹூல் கிலேவுல நந்தாவப் பாத்து 'பர்தேசியோன் சே நா அக்கீயான் மிலானா' ஷஷி கபூரு பாடிக்கினே படகு ஓட்டுனாரு. இந்திக்காரவுங்க எத்தினி படம் எடுத்தாங்க. யப்பா ஆன்னாவூன்னா காஷ்மீருக்குத்தானங்க போனாங்க. ஹென்னாவுல ரிஷியும் ஸீபா பக்தியாரும் காஷ்மீர் எல்லை தாண்டிய காதல்ல உருகலீங்களா.
அப்பாலிக்கா நம்ம கேப்டன், அர்ஜுன், ஷரத்சாரெல்லாங்கூட காஷ்மீர் தீவிரவாதிங்க பின்னாடி கொஞ்ச நாளு கோடம்பாக்கத்துல சுத்தலீங்களா.
அவங்க எல்லாரும் சுத்திட்டு வுட்டுட்டுப்போன மீதியச் சுத்றதுக்காக வண்டிக்கும், கூல்ட்ரிங்ஸ்ஸுக்கும், வாட்சுக்கும் நடிச்சதுபோக மீந்த நேரத்துல ஆமிர்கானு வந்திருக்காரு.
அமைதியா இருந்தப்ப படகு வூட்ல ஷூட்டிங் எட்த்தாங்கோ. டெரரிஸ்ட்டுங்க மேட்டர் வந்தப்புறம் தேசபக்திக்கு படம் எடுக்றாங்க்கோவ். ஆகக்கூடி நமக்கு காஷ்மீர வச்சு படம் எடுக்கணுங்கோவ், அவ்ள்தான். காதலா இர்ந்தா என்னா? தீவிரவாதமா இர்ந்தா என்னா?
கொஞ்சம் தேசபக்தி, அங்கங்க பனிமலை, ரெண்டு மூணு கன் ஷாட்டு, ஒரு போலீஸ்காரரு, பட்ஜெட் கொஞ்சம் கூட இர்ந்தாகா ரெண்டு மூணு ஹெலிகாப்டரு...அல்லாத்துக்கும் நடுப்ற கொஞ்சூண்டு கத. தோடா, காஷ்மீர் பத்தி படம் ரெடி.
இதே யாஷ் சாஹேபுது வீர் ஸாராவுல உருகுன ஆளுங்க நானு. சாந்தினில ஸ்ரீதேவி மேடம் ஆடுனாங்கள 'மேரி ஹாத்தோன்மே நவ்நவ் சூடியான் ஹை' எத்தினி தபா கேட்டிருப்பேன். அப்பேர்க்கொத்த யாஷ் சாஹேப் நம்மள ஏமாத்திட்டாருங்கோவ்.
கத ஒண்ணுமில்லீங்க. உயிரேவுலயும் டெரரிஸ்ஸ்ட்டுலயும் லேசா ஒட்டிக்கினு வர்தே அதேதான். நியாயமாப் பாத்தாக்கா மணிரத்தினத்துக்கும் சந்தோஷ் சிவனுக்கும் யாஷ்ஜி வந்து தேங்ஸ் சொல்லி ஒரு கார்டே போட்டிருக்கணுங்க டைட்டில்ல. தீம் இன்னாமோ இந்த ரெண்டு படங்கள்ளேர்ந்துதான் வந்துக்குதுங்கோவ். பின்ன இன்னாங்க, ஒரே வரில சொல்ணும்னா, 'தீவிரவாதியா இருக்கியா, லவ் பண்ணாத. மீறி லவ் பண்ணியா மிஷன் இம்பாஸிபிள் ஆகிரும்' - இதுதாங்க தீம்.
டெரரிஸ்ட்டு ஆமிர்ஜி (ரெஹான்) டெல்லில பேருக்கு கைடா இருக்றாரு. உண்மையான மிஷனு கட்டடத்துக்கு பாம் வைக்றது. அப்ப, காஷ்மீர்லேர்ந்து டூரிஸ்ட்டா வர்ர கண்ணு தெரியாத பொண்ணு காஜோல் (ஸூனி) மேல லவ்ஸூ வுட்டுர்ராரு. கல்யாணமும் பண்ணிக்கினு, மிஷனயும் முடிச்சுட்டு, கண்ணுக்கு ஆப்பரேஷனும் பண்ணிட்டு ஜூட் வுட்டுர்ராரு. இன்னா சுத்தலுன்றீங்கோ.
பொண்ணு காஷ்மீருக்குப் போயிடுது. அப்பவே போலீசுக்கு ரெஹான் மேல சந்தேம் வந்துடுது. பொண்ணுக்கு ஆம்பள புள்ள பொறந்து அதுக்கு ரெண்டு மூணு வயசு இருக்கும்போது, விதிவசமா டெரரிஸ்ட்டு ரெஹான் குண்டடிபட்டு ஸூனி வூட்டுவாசல்ல வுழுந்துர்ராரு. வுழும்போது இந்திய ராணுவ அவுட்ஃபிட்டுல இருக்காரு. செரி இந்தியப்படை ஆசாமிதானண்ணு பொண்ணோட அப்பாவும் (ரிஷி) ரெஹானுக்கு முதலுதவியெல்லாம் பண்ணி வெக்கிறாரு.
ஒரு நாள் ராத்திரில அல்லாரும் தூங்னப்புறம் ரெஹானும் ஸூனியும் பாட்டுக்குப் பாட்டு அந்தாக்ஷரி பாடிக்கினே வெள்ளாடும்போது கபால்னு ரெஹான் உணர்ச்சிவசப்பட்டு பழைய மேட்டர எடுத்து வுட்டுர்ரான். அவ்ள்தான், ஸூனியும் கண்ண மூடிக்கினே ரெஹான் மூஞ்சியத் தடவிப்பாத்து இது நம்ம ஆளுன்னு கண்டு புடிச்சிர்ரா.
அப்புறம் இன்னா..அப்படியே அடுத்த ஒரு இன்சிடெண்டுல தலைவரு டெரரிஸ்ட்டுன்னு தெர்ஞ்சுடுது. அத்தக் காட்டிக்குடுக்க அப்பா ஓட, ரெஹான் அப்பாவ பள்ளத்தாக்குல தள்ள, அப்புறம் ஸூனிக்கு இந்த மேட்டர் தெரிய, அவ ஓட, ரெஹான் தெர்த்த, ஒரு சிக்கலான நேரத்துல ரெஹான் ஸூனிய சுட்டுத்தள்ள நெனைக்கும்போது, அவ தன்னோட காதலியாச்சேன்னு தயங்குறான், அந்த கேப்புல ஸூனி, ரெஹான சுட்டுர்ரா. ஆஹ்ஹா ஜதின் - லலித் பாய் இப்ப ஸாரே ஜஹான் ஸே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரான்னு பேக்ரவுண்ல வயலின் அடிப்பாரோன்னு சவுண்டக் கம்மி பண்ணே. நல்லவேளையா அப்டி எதுவும் நடக்கல.
அப்புறம் சுபம்.
ஆமிரும் காஜோலும் இல்லேன்னு வைங்க, படம் ஃபனா இல்ல ஃபணால் - அதாவது பூட்ட கேஸ்.
ஸ்டார் ப்ளஸ்ஸுல ஒரு ஃபேமிலி ப்ரோக்ராமுல அம்மா - கொழந்தங்க வெளையாட்டுக்கு ஆங்க்கர் கேர்ளா ஒரு பொண்ணு வரும், அதுக்கு இதுல கஜோல் தோழியா வேஷம் குடுத்திருக்காங்க. லொடலொடன்னு பேசுதே அது பேரு என்னாண்ணு ஸ்டார்ல பாத்து வெச்சிருக்கணும், வுட்டுட்டேன். ஃபனாவுலயும் அதே லொடலொட பேச்சுதான். நமக்குக் கெடச்ச சிடில டைட்டில்ஸ் இல்ல. அடுத்ததபா ஸ்டார்ல அந்த ப்ரோக்ராம் பாத்தா பொண்ணு பேரைப் பாத்து எழுதுறேன்.
சிடிசன்ல நக்மாவுக்கு ஒரு சொத்த ரோல் குடுத்தா மாதிரி ஃபனாவுல தபுவுக்கு சொத்த ரோலு. ஷரத் சக்ஸேனா - தமிழ்ப் படங்கள்ள அப்பப்ப வருவாருங்க வரு ஒரு ஆபீசரு. அதுவும் சொத்த ரோலு. கபூர் ஆளுங்களுக்கு வயசாகிட்டா ஒடம்பு போட்டுருமோ? ரிஷி பாய் குண்டா இருக்காரு. அப்பா ரோலுக்கு இந்தக் குண்டுபாடி சல்தா ஹை. கிரண் கேர் ஆண்ட்டி அதே சிரிப்பு. வீர் ஸாராவுல ஆண்ட்டி பஞ்சாபி அம்மா, இதுல கஷ்மீரி அம்மா.
ஆரம்பத்துல சும்மா ஆமிர் கேரக்டரு ஷேர் (இரண்டடிக் கவிதை) சொல்லுதுன்னு டப்பா வரிங்களையெல்லாம் ஷேருன்னு சொல்லு எடுத்துவுட்டா நமக்கு ரொம்ப டென்ஷனாவாதுங்களா? ஆகிருச்சு. போய்யா நீயும் உன் ஷேரும், திர்லக்கண்னி வந்து பாரு, இந்த மாதிரி ஒண்ரைணா ஷேர் சொல்றதுக்கு கூட்டங்கூட்டமா ஆளுங்க இர்க்காங்கன்னு கத்தணும்னு தோணுச்சுங்க.
பின்ன என்னாங்க, நாங்க ஓட்ட உருது கத்துக்குனப்ப, உட்டாலக்டி ஷேரெல்லாம் சொல்லுவோம்.
கத் லிக்தானூன் கூன்ஸே ஸியாஹி நா சம்ஜோ
ப்யார் கர்த்தாஹூன் தும்ஸே திவானா நா சம்ஜோ
இரத்தத்தால் கடிதமெழுதுகிறேன் மையென்று நினைக்காதே
உள்ளத்தால் காதலிக்கிறேன் பைத்தியமென்று நினைக்காதே
இதெல்லாம், உட்டாலக்டி.
ஃபனாவுல பாருங்க இப்படி ரெண்டு மூணு ஷேர் வருது.
ப்ஹூல் ஹூன் குலாப்கா சமேலி நஹீ சமஜ்னா
ஆஷிக் ஹூன் தேரா அப்னீ சஹேலிகா மத் சமஜ்னா
ரோஜா மலர் நான் வேறொன்றாக நினைக்காதே!
உனக்குதான் காதலன் நான், உன் தோழிக்கென்று நினைக்காதே!
எக்ஸாம்பிள் போதுங்களா?
ஆனா காஜோல் சொல்ற ஒரு ஷேர் நமக்குப் புடிச்சிருன்சுங்கோவ்.
இன்ஸான் கா க்வாயிஷ் கா இந்தகாப் நஹீ
தோ கஸ் ஸமீன் சா தோ கஸ் கஃபன் கே பாத்
மனிதனுக்கு ஆசைப்படுவதில் குழப்பம்
ஆறடி வெள்ளைத்துணிக்கு மேல் ஆறடி நிலத்தை நாடுகிறான்
கொஞ்சம் தத்துவம் பேசுற ஷேருங்க. நானு தமிழ்ப்படுத்துனதுல தகராறு இருக்கு.
அதே டைப்புல யாஷ்ஜிக்கு ஒரு ஷேர் :)
யாஷ்ஜீக்கா க்வாயிஷ் கா இந்தகாப் நஹீ!
பூரி இண்டஸ்ட்ரி கஷ்மீர் திக்காச்சுக்கி -
அவுர் அப் ஆயி ஹை வஹ் காம்யாப் நஹீ!
யாஷ்ஜீக்கு ரொம்பதான் ஆசை!
இண்டஸ்ட்ரில அல்லாரும் கஷ்மீர் படம் காட்டிட்டாங்க!
அண்ணாத்த லேட்டா வந்தாரா, ஊத்திக்கினாரு!
அன்புடன்
ஃபனாசாத்

Comments