"AZADI EXPRESS" NOW IN TAMILNADU என வெளியாகியிருந்த விளம்பரம், கண்காட்சியின் தேதிகளையும் நேரத்தையும் சொல்லியிருந்தது. பள்ளிக்கூடத்திலிருந்து வந்த குழந்தைகள் விவரங்களைச் சொன்னார்கள். பள்ளியில் விவரம் சொல்லி அனுப்பியிருக்கிறார்கள். சென்ட்ரல் இரயில் நிலையம், பிளாட்பாரம் எண்-11. ஆஸாதி எக்ஸ்பிரஸ் உபயத்தில் பிளாட்பாரம் டிக்கெட் இல்லாமலே சென்ட்ரலுக்குள் நுழைந்து வெளிவர முடிந்தது. சிப்பாய்க் கலகத்தின் 150வது ஆண்டைச் சிறப்பிக்கும் வகையில் இந்திய விடுதலைப் போராட்டத்தின் முக்கியமான சில குறிப்புகளையும், சில அரிய புகைப்படங்களையும், இந்தியக் குடியரசு அமைந்ததையும், இந்தியாவின் வெற்றிப் பாதையையும், புகைப்படங்களால் கண்காட்சியாக இரயில் பெட்டிகளில் அமைத்து, அந்தப் பெட்டிகள் இந்தியாவிலிருக்கும் முக்கியமான இரயில் நிலையங்களுக்குச் சென்று மக்களின் பார்வைக்கு வைக்கப்படுகின்றன. கண்காட்சிகள் தொடர் இரயில் பெட்டிகளுக்குள் அமைக்கப்பட்டிருக்கின்றன. முதல் பெட்டியில் ஏறி ஒவ்வொன்றாகப் பார்த்து முடித்து கடைசிப் பெட்டியிலிருந்து வெளியே வருகின்ற அமைப்பு. பெட்டிகளின் பெயர்கள்: 1.Kampany Raj (Company Raj அல்ல) 2...