Skip to main content

Posts

Showing posts from July, 2009

லக் திரைப்படம் - எனது பார்வையில்

நான்காண்டுகளுக்கு முன்னர் அஜய் தேவ்கனின் 'கால்' திரைப்படம் குறித்து எனக்கும் பதின்மவயது நண்பர்களுக்கும் சில கருத்து வேறுபாடு இருந்தது. திரைப்படம் அத்தனை பொழுதுபோக்காக இல்லையென நானும், அப்படியெல்லாம் இல்லை பொழுதுபோக்காகத்தான் இருந்தது என்று பதின்மவயதினரும் உரையாடிக்கொண்டோம். இப்பொழுது ஷ்ருதி ஹாஸன் மட்டும் 'லக்' திரைப்படத்தில் நடித்திருக்கவிலையென்றால் கால் படத்தை இயக்கினார் என்பதைத் தெரிந்த பின்னர் இயக்குனருக்காகவும், சஞ்சய் தத்திற்காகவும் மட்டுமே லக்கைப் பார்த்திருப்பேனா என்பது சந்தேகமே. ஷ்ருதிக்காகத்தான் முதல்நாள் படத்திற்குச் சென்றிருந்தேன். லக்கை நல்ல பொழுதுபோக்குப் படமாக உணர்கின்றேன். திரைப்படங்களை சிலர் குப்பையென்று ஒதுக்குவதற்கும் ஆஹா ஓஹோ என்று பாராட்டுவதற்கும் அவரவர் தேவை, ரசனை, அணுகுமுறை, சமுதாயச் சிந்தனை, அறிவு முதிர்ச்சி இப்படியான பல காரணிகள் உண்டென்பதை அடிக்கடி நினைவுபடுத்திக்கொண்டே ஒவ்வொரு படத்தையும் அணுகுவதால் எதிர்பார்க்கும் விஷயம் திரைப்படத்தில் கிடைக்காமற்போனாலும் தேவையற்ற ஏமாற்றங்களைத் தவிர்க்க முடிகின்றது. அப்படியிருந்தும் சில சமயங்களில் சில படங்கள் பொர...

அமீரக வலைப்பதிவர் சந்திப்பு 19.7.2007

ஷப்-யே-மிராஜ் தினத்தன்று அமீரகத்தில் அரசாங்க விடுமுறை. இந்த வழமை சவூதியில் கிடையாது. அமீரகத்தில் இரவுநேர சிறப்புத் தொழுகைக்கான ஏற்பாடுகள் உண்டு. சவூதியிலலும் சிறப்புத் தொழுகைகள் உண்டென்ற போதிலும், அங்கே ஈகைத் திருநாள், தியாகத் திருநாள் என்று இரண்டு பெருநாள்களின் முன்னும் பின்னுமாக நீண்ட விடுமுறைகள் தருவதால் நாட்கணக்கு நேராகிவிடுகின்றது. சனிக்கிழமையன்றும் விடுமுறையிலிருக்கும் கொடுத்துவைத்தவர்களுக்கெல்லாம் வெள்ளி, சனி, ஞாயிறென்று மூன்று நாள் விடுமுறையாகிவிட சிலர் அவரவர் ஊருக்கும் அருகிலிருக்கும் நகரங்களுக்கும் பறந்தார்கள். நண்பர் ஆசிப் அறிவித்ததன் பேரில் சங்கட் சிட்டி திரைப்படத்தைத் தவிர்த்து நான் வலைப்பதிவர் சந்திப்பிற்குச் செல்ல முடிவு செய்தேன். சந்திப்பில் படம் காட்டுவதற்காக சில புத்தகங்களை அள்ளிப் போட்டுக்கொண்டேன். அள்ளிய புத்தகங்களுடன் அப்பொழுதே வாங்கிய அல்கெமிஸ்ட்டையும் எடுதுக்கொண்டேன். இதுபோன்ற வேலைகளை ஆசிப், அய்யனார் இவர்களே இதுவரையில் பதிவர் சந்திப்பில் செய்வார்கள். சென்ற சந்திப்பில் கிட்டத்தட்ட இதே இடத்தில் அவர்கள் புத்தகக் கடை விரித்தார்கள், இந்த சந்திப்பில் நான். சுபைரையும் அ...