எண்பதுகளின் துவக்கத்தில் என்றோ ஒருநாள், கடற்கரைக் கவியரங்கத்தில் சுரதா சொன்னார், ‘பாடல் தொகுதி போடும்படி மருதகாசியிடம் சொல்லியிருக்கிறேன்’ . மருதகாசியின் திரைப்பாடல் தொகுதி வெளிவந்ததா என்பதை நானறியேன். கண்ணதாசன், மு.மேத்தா இவர்கள் இருவரின் திரைப்பாடல் தொகுதிகள் முன்பே என்னிடம் உண்டு. கடந்த இரண்டு மாதங்களுக்குள் வாலியின் தொகுதியும் வைரமுத்துவின் தொகுதியும் வாங்கியிருக்கிறேன். நான்கு திரைக் கவிஞர்களின் தொகுதிகள் புத்தக அலமாரியை அலங்கரிக்கின்றன. திருவல்லிக்கேணி வளர்ப்பு அறிமுகம் செய்துவைத்த எம்.ஜி.ஆர். பாடல்களில் துவங்கி, வாரிசுகள் எனக்கு அறிமுகம் செய்யும் பூக்கள் பூக்கும் தருணம் (மதராசபட்டினம்) வரையில் இன்னமும் திரைப் பாடல் ரசனை தொடர்ந்துகொண்டிருக்கிறது. வளகுடாவிற்கு வேலைக்காகப் புறப்படுவதற்கு முன்பு வரையில் படத்தின் இயக்குநர் பெயர் தெரியவில்லையென்றாலும், பாடலாசிரியரின் பெயர் எனக்குத் தெரிந்திருக்கும். சிகப்பு ரோஜாக்களில் மின்மினிக்கு கண்ணில் ஒரு எழுதியது கண்ணதாசனா? வாலியா? நினைவோ ஒரு பறவை எழுதியது கண்ணதாசனா? வாலியா? புதிய வார்ப்புகளில் இதயம் போகுதே எழுதியது யார்? யார் இந்த T.ராஜேந...