அண்மையில் சந்தித்த இளைஞர்களின் கடமையுணர்ச்சியும் அணுகுமுறையும் பாராட்டும்படி இருந்தது. இருக்கின்றார்கள். * துபாயில் இருக்கும் கல்லூரி ஒன்றில் நிர்வாகம் பயிலும் மாணவி தனது புறத்திட்டு ஒன்றிற்காக நேர்காணல் எடுக்க வந்திருந்தார். 'எப்படி என்னைத் தேர்ந்தெடுத்தீர்கள்' என்று கேட்டேன். 'எனக்குக் கிடைத்த பட்டியலில் அகரவரிசைப்படி முதலில் உங்கள் பெயர் இருந்தது, நேரம் கேட்டேன் நீங்களும் சரியென்றீர்கள், வந்துவிட்டேன்' என்றார். 'நீங்கள் ஏதாவது கேட்கிறீர்களா, இல்லை நான் எனது பணி குறித்த விவரங்களைச் சொல்லட்டுமா, உங்களுக்கு எது வசதி' , என்றேன். 'நீங்களே சொல்லுங்கள்' என்றார். கால்மணிநேர விவரிப்பிற்குப் பின் 'இது மேலோட்டமான விவரம்தான் இன்னமும் விளக்கமாகச் சொல்லலாமா? இவற்றை உங்களால் கிரகிக்க முடிகின்றதா?' என்றேன். 'அய்யா, நானும் இது மேலோட்டமாகச் செல்வதாகவே உணர்ந்தேன், எனக்கு இன்னமும் அதிகமான விவரங்கள் தேவை' என்றார். அவர் மாணவியா நான் மாணவனா என்று கொஞ்சம் யோசித்து அவருடைய கால்மணி நேரத்தை வீணாக்கிய குற்ற உணர்வில் நுணுக்கமான விவரங்களைப் பகிர்ந்துகொண்டேன். ந...