Skip to main content

Posts

Showing posts from November, 2007

பில்லா (புதுசு) பாடல்கள் - எனது பார்வையில்

உள்ளூர் முனைக் கடையில் வந்த கேசட்டுகள் அனைத்தும் தீர்ந்துவிட்டன. அடுத்த கடை வடபழனி ராஹத் ப்ளாசாவில் தான். கமலாவில் அடிமைப்பெண்ணிற்கு கூட்டம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்கவும், பில்லா கேசட் வாங்கவுமாக ஒரே சவாரி இரண்டு காரியங்களாகப் புறப்பட்டேன். கமலாவில் கூட்டம் பரவாயில்லை. ராஹத்திலும் கேசட்டுகள் தீர்ந்துவிட்டன. நான் சென்றபோது ஒரேயொரு கேசட்தான் ஸ்டாண்டில் இருந்தது. அது வேறு யாருக்காகவேனும் இருக்கட்டும், சிடிதான் ஹோம் தியேட்டருக்கு சரியென்று சிடியை வாங்கினேன். வொய்.எஸ்.ஆர். என நான் நண்பர்களிடம் குறிப்பிடும் யுவன் ஷங்கர் ராஜா, புதிய பில்லாவில், சில இடங்களில் அடித்து தூள் கிளப்பியிருக்கிறார், சில இடங்களில் கொஞ்சம் சொதப்பியிருக்கிறார். புதிய பில்லாவை ரஜினி நடித்த பில்லாவின் மறுபதிப்பு என்கிறார்கள்...அதெல்லாம் சரி, எனக்கென்னவோ ஷாருக் நடித்த டானின் மறுபதிப்போ என்றே தோன்றுகிறது. காரணங்கள் இரண்டு. முதலாவது, ரஜினியின் பில்லா என்றால், அப்பாவி அஜீத்தின் அறிமுகம் 'நாட்டுக்குள்ள எனக்கொரு ஊருண்டு' மாதிரியான பாடலைக்கொண்டே ஆகியிருக்கவேண்டும். அதுபோன்ற பாடலே புதிய பில்லாவில் இல்லாமல், அப்...

நன்றிகள்

ஏழு நாள்களாக முகப்பில் எனது இடுகைகளை வெளியிட்டமைக்கு தமிழ்மணத்தார்க்கு மிக்க நன்றிகள். பதிவிற்கு வருகை தந்த, வாழ்த்துச் சொல்லிய, பின்னூட்டமிட்ட அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றிகள். அதுவாகத் தோன்றி பதிவு எழுதுவதற்கும், இன்றைக்கு ஒரு பதிவு எழுதவேண்டுமென்று எழுதுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. முன்னதில் சுதந்திரமும் பின்னதில் பொறுப்பும் கேளாமல் வந்துவிடுகின்றன. இங்கே பாதி சுதந்திரம், பாதி பொறுப்பும் கலந்து அதிகமான வாசகர்கள் வரக்கூடும் என்னும் உந்துதலால் வழமையான பதிவுகளினும் மாறுபட்டு இருக்க முயற்சி செய்தும், வழமையான குசும்பு இரண்டு பதிவுகளில் முந்திக்கொண்டது. சல்தாஹை. குசும்பினால் இரண்டு மரபுக்கவிதை எழுத முடிந்திருக்கிறது என்னும் பார்வையில் குசும்பும் நல்லதே. நட்சத்திர அந்தஸ்தை அனுபவித்த மகிழ்வுடன் நேரம் கிடைக்கும்போது பதிவுகள் தொடரும் சகஜ நிலைக்குத் திரும்புகின்றேன். அன்புடன் ஆசாத்

வணிக இலச்சுத் தூதுவர்கள் (brand ambassadors)

வடக்கிற்கு காஜோல், தெற்கிற்கு திரிஷா என மிகத் தெளிவாக சந்தையைப் பிரித்துக்கொண்டு, அவர்கள் இருவரையும் தமது வணிக இலச்சின் தூதர்களாக்கிய டாடா இண்டிகாமைப் போலவே, சமீபத்திய வோடோஃபோனும் சந்தை விளம்பரத்தை (வணிக இலச்சு தூதர்களை) வடக்கு தெற்காக பிரித்துக்கொண்டது. வடக்கே இர்ஃபான் கான், தெற்கே பிரகாஷ் ராஜ். இந்த வடக்கு தெற்கு விவகாரத்திற்கே ஆளாகாமல் அகில இந்திய அளவில் ஷாருக்கானிற்கு இருக்கும் பிரபலத்தின்மேல் அபார நம்பிக்கை வைத்து தமிழ் டப்பிங் குரலுடன் ஷாருக் தென்னகத்தில் ஏர்டெல்லை சந்தைப்படுத்துகிறார். திரைப்படம் வெளிவருவதற்கு முன்னர் விமர்சனங்கள் வருவதைப்போல ஏர்செல்லின் இந்த விளம்பரம் வெளிவருவதற்கு முன்னரே சூர்யாவின் விதவிதமான ஒப்பனைகள் குறித்த கருத்துகள் வெளிவந்தன. இந்த பரபரப்பு எதிலும் கலந்துகொள்ளாமல் பி.எஸ்.என்.எல். தங்களை பிரீத்தி ஸின்தாவை முன்னிறுத்தி அடையாளம் காட்டிக்கொள்கிறார்கள். இப்படி அனைத்து தொலைதொடர்பு சேவையரும் யாரேனும் ஒரு பிரபலத்தை தங்கள் வ.இ.தூதராக முன்னிறுத்தி செயல்படுவதால் மட்டுமே அவர்களது சந்தைப் பங்களிப்பு தேவைப்படும் விகிதத்தில் இருப்பதில்லை. விளம்பரமும் வ.இ.தூதர்களும் குறி...

குண்டு வெடிப்பு - சில கோவையற்ற எண்ணங்கள்

எழுதுபவரின் வாழ்வின் ஒருபகுதியாக இல்லாத அக்கறைக்காக அவர் எழுதும் அக்கறையான விவரங்கள் எழுத்தளவில் இருக்கவே தகுதியுள்ளவை. அதாவது, சமூக அக்கறை குறித்த எந்த எழுத்தும், எழுதுபவரின் வாழ்வின் நீட்சியாக இருக்கும்பட்சத்தில்தான் அந்த எழுத்தின் தாக்கம் படிப்பவர் மனதில் நிலைக்கும், இல்லையெனில் அவை வெறும் அச்சடித்த காகிதங்களே. விவரங்களின் தொகுப்பாக வேண்டுமானால் அப்படிப்பட்ட எழுத்துகள் இருக்கலாம், சமூக அக்கறையின் பிரதிபலிப்பாக வேண்டுமானால் அந்த விவரணப் பதிவை ஏற்றுக்கொள்ளலாமேயன்றி, அந்த எழுத்து அது எழுதப்பட்ட அக்கறையான விஷயத்திற்காக சமூகத்தில் ஏதும் மாற்றத்தைத் தராது. இது எனது தீர்மானமான புரிதல். இதன் அடிப்படையில் சமூக அக்கறையுடன் ஏதாவது எழுதத்தலைப்படும்போது மனம் ஒப்புவதில்லை. எந்தவிதமான துயர்மீட்பு சேவை மையங்களுடனும் தொடர்பில்லை, காவல்துறையிலோ, ராணுவத்திலோ சேர்ந்து நாட்டுக்காக உழைக்கவில்லை, தனக்கென்று வாழாமல் பிறர்க்கென வாழ்ந்து அங்கும் இங்கும் ஓடி துன்பப்படுவோரின் இன்னல் தீர்ப்பதில்லை, தன்னைச் சுற்றி இத்தனை நடக்கிறதே எனப் பொங்கி எழுந்து புரட்சிக் கவிதைகள் வடித்து எந்த இயக்கத்திற்கும் பாடுபடுவதில்லை...

பொல்லாதவன் - விமர்சனம் அல்ல

பாடல்கள் குறித்து: நீண்ட நாள்களாகவே நினைத்துக்கொண்டிருப்பதுதான், ஒரு படத்தில் நான்கைந்து பாடலாசிரியர்கள் பாடல்கள் எழுதியிருக்கையில் பெயர் காட்டும்போதே யார் எந்தப் பாடலை எழுதியது என்று அதிகப்படியான விவரத்தை ஏன் திரை உலகோர் தருவதில்லை. அடிமைப்பெண், காதல் ஓவியம் இந்த இரண்டு படங்களில் அப்படிப் பார்த்தது சட்டென நினைவிற்கு வருகிறது. இன்னும் சில படங்களில் இருந்திருக்கலாம். ஒருவேளை இன்றைய பொல்லாதவனிலும் அப்படி அவர்கள் ஏதாவது விவரம் காட்டி நான் பார்க்கத் தவறிவிட்டேனோ என்றும் நினைக்கத் தோன்றுகிறது. இது என்ன உத்தியோ? ஒலிநாடாவை வாங்கிப் பார்த்துக்கொள் என்கிறார்களோ? சில படங்களில் ஒலிநாடாவின் அட்டையிலும் கவிஞர்களின் பெயரைப் போடுவதில்லை. அப்படி என்னதான் திரைக்கவிஞர்களின் பாடல்களை அடையாளம் காட்டுவதில் இவர்களுக்குத் தயக்கம் என்பது விளங்கவில்லை. ஒலிப்பேழையை இன்னும் வாங்காததால், இணையத்தில் ம்யூசிக் இண்டியா ஆன்லைனைப் பிடித்து பாடல்களின் கவிஞர்கள் யார் யார் என்பதைப் பார்க்கவேண்டியதாக இருக்கிறது. 1. எங்கேயும் எப்போதும் பாடலின் மறுகலவைக்குத் தேவைப்பட்ட வரிகளை யுகபாரதி எழுதியிருக்கிறார். 2. அலிபாபா தங்கம் யா...

கண்ணதாசன் - எண்சீர் விருத்தம்

கண்ணதாசன் நானொலிக்கும் பேச்சுக்குள் அங்கு மிங்கும் . நற்றமிழின் சொல்லாடல் வேண்டி யன்று வானொலியின் அருகாமை பால பாடம் . வந்ததெனச் சொன்னாலும் குற்ற மில்லை! ஏனொலித்த திப்பாடல் என்றெண் ணாமல் . என்றென்றும் அழகியலில் நீந்தி நெஞ்சில் தேனொலிக்கும் கவியரசு நீயு ரைத்துத் . தெரிவித்த இலக்கியத்தில் வாழ்ந்த துண்டு! அத்திக்காய் அரிச்சுவடி சொல்லித் தந்தாய் . அவள்பறந்து போனதையும் பார்க்க வைத்தாய் முத்தத்தில் மோகத்தில் மூழ்கி நின்றாய் . முக்கண்ணர் நாகத்தை நீதி கேட்டாய் சித்தத்தில் வேதாந்தம் வேண்டி யன்று . சீராறு கட்டளைகள் பாடி வைத்தாய் எத்திக்கில் உன்பாடல் செல்ல வில்லை . என்றுன்னைப் பேசாத நெஞ்ச மில்லை எல்லைகள் திரையுலகில் மட்டு மில்லை . எழுதியவை இவையென்ற எல்லை யில்லை சொல்லுக்குள் பொய்யுரைகள் கொண்ட தில்லை . சோகத்தை எழுதாமல் விட்ட தில்லை கல்லெறிந்து வைத்தாலும் தமிழைத் தானே . கவிதைகளாய் எறிந்திட்ட சிந்தை செய்கை இல்லையொரு திரைக்கவிஞன் இங்கே யின்று . இவரைப்போல் என்றுரைத்தால் பொய்யாய்ப் போமோ? அன்புடன் ஆசாத்

சினேகா(ட்சீர்) - மொக்கையோ ஜொள்ஸோ ஏதோ ஒண்ணு

வெண்பா(வனா) பதிவில் போட்டது மொக்கையல்லவென்றும் ஜொள்ஸென்றும் பெருவாரியன நண்பர்கள் சொன்னதால், தலைப்பு தரும் உரிமையை அவர்களுக்கே தருகின்றேன். இது மொக்கையோ? ஜொள்ஸோ? எதுவாகவும் இருக்கட்டும், எனக்கு மிகவும் பிடித்தமான எண்சீர் விருத்தத்தின் நான்கு வரிகள் எழுத இந்தப் பதிவு உதவுகின்றது. எட்டுச்சீரென்றாலே அமுதம் கொட்டுச்சீர், அதிலும் முத்துப்பரல்களைப் ;-) பற்றி எட்டுச்சீர் எழுதுவதென்றால் இரட்டிப்பு மகிழ்ச்சி. அன்றந்த கொற்கைக்குப்1 பயணம் செய்து . அருமுத்தைக் காண்தமிழன் ஆனேன் அல்லன் இன்றந்த ருசியத்து2 வீதி சென்று . இணைமுத்தைக் கண்டேனா இன்னும் இல்லை என்றெந்தன் பயணத்தில் ஜப்பான் சென்று . எழில்மிக்கி மோட்டோவைக்3 காணக் கூடும் நன்றென்று நான்கண்ட முத்துக் கோவை . நாள்தோறும் இங்கென்றால் குற்றம் ஏனோ? 1. கொற்கை - முத்துகளுக்குப் பெயர் பெற்ற அன்றைய துறைமுகம் 2. ருசியா - ரஷியா. அங்கே குறைந்த விலையுள்ள முத்துகள் கிடைக்கும் 3. மிக்கிமோட்டா - ஜப்பான் நாட்டில் புகழ்பெற்ற முத்து வணிக நிறுவனம் *** சிறிய விளக்கம்: ஆட்சீர் - 'ஆட்' என்றால் உருதுவில் எட்டு, 'சீர்' தமிழ். எண்சீர் விருத்தங்களை அடிக்கடி எழ...

கார்கோ சர்வீஸ் - எனது பார்வையில்

அனைத்து வாழ்வியல் அணுகுமுறைகளிலும் சேவைகளால் ஏற்படும் வசதிகள் கூடியிருப்பதைப்போல் நடுத்தர, கீழ்நடுத்தர வளகுடாவாசிகளின் இந்திய வருகைகளிலும் நிறைய வசதிகள் கூடியிருக்கின்றன். எழுபதுகளின் இறுதி வரையிலும் எண்பதுகளின் துவக்கத்திலும் அங்கிருந்து பெட்டி கட்டி இங்கே பெட்டியைக் கொண்டுவந்து அவிழ்க்கும் வரையில் படாத பாடுபட்ட கதைகள் ஆயிரம் உண்டு. பணமாற்றுவிகிதத்தால் ஏதோ வருவாய் அதிகமாக இருப்பதான தோற்றத்தில் தூரத்து உறவுகளையும் திருப்திப்படுத்த வாங்கிக் குவித்த பரிசுப்பொருள்கள் பாதியும், 'எங்கள் வீட்டில் இதைத் தந்துவிடு' வகையறாக்களில் அடுத்தவருக்காகச் சுமக்கும் சுமை மீதியுமாகத்தான் பெட்டி நிறையும். சுங்க அதிகாரிகளால் பெட்டி திறக்கப்பட்டு தீர்வை அதிகமாகிவிடாமல் பத்திரமாக வீடு செல்லவேண்டுமே என்னும் நினைப்பில் விமானப் பயணத்தின் சுகத்தை அனுபவிக்க இயலாத மனநிலையில் பயணம் செய்தவதே விதியாக இருந்தது. பரிசுப் பொருள்கள் வாங்குவதும் எடுத்து வருவதும் அவரவர் சூழல் அனுமதிக்கும் விஷயம். ராணி முகர்ஜியின் 'மன்ச்' சிலும், அமிதாபின் குற்றியலுகரமில்லாத 'முத் தூ பாஸாயிட்டான் ஸ்வீட் எ டூ கொண்டா டூ ...

அடிமைப்பெண்

தீபாவளிக்கு முன், அடிமைப்பெண் திரைப்படம், சென்னை மெலடி திரையரங்கில் வெளியிடப்பட்டது. முதல்வாரத்தில் அரங்கிற்குச் செல்ல சமயம் கிடைக்கவில்லை. நண்பருடன் பேசியபோதுதான் முதல்நாளன்று படச்சுருள் அரங்கிற்கு வந்து சேராமல் வேறு படத்தைப் போட்டு பின்னர் அடுத்த நாளிலிருந்து படம் வெளியாகியிருக்கின்றது. ஜெயா தொலைக்காட்சியில் திரைஉலக முக்கியப்புள்ளிகள் திரையரங்கிற்கு வந்து படம் பார்த்ததைக் காட்டினார்கள். அரங்கிலிருந்து வெளியே வரும்போது ரசிகர்களைக் கேட்பதுபோல் பெரும்புள்ளிகளையும் கேட்டார்கள். அவர்களும் 1969இல் பார்த்ததுபோலவே இருக்கிறது என்றார்கள். படம் வெளியான 1969இலிருந்து இன்று வரைக்கும் ஒரு தலைமுறை மாறியிருக்கிறது. ரசனைகள் மாறியிருக்கின்றன. பாடல்களின் அமைப்பும், உத்திகளும் மாறியிருக்கின்றன, சண்டைகாட்சி உத்திகள் எம்.ஜி.ஆரின் காலத்தில் இருந்ததைப் போல சற்றும் கிடையாது, இப்படியெல்லாம் இருக்கையில் படமும் வெளிவந்து வசூலும் ஆகியிருக்கிறது என்கிறார்கள். அவரது கடைசி படம் வெளிவந்து முப்பதாண்டுகளாகின்றன. அவர் மறைந்து இருபது ஆண்டுகள் ஆகப்போகின்றது. இன்னமும் அரங்கில் வசூல் உண்டாக்கக்கூடிய நிலையில் அவரது படம் இர...

வெண்பா(வனா) - மொக்கையும் அப்பப்ப போடுவமுல்ல

அமீரகத்தில் இருக்கும் எனது நண்பருக்காக, இண்டியா கிளிட்ஸிலிருந்து சுட்ட படமும், ஒரு வெண்பாவும். வெண்பாவை ஏற்கெனவே படித்திருக்கும் ஓரிரு நண்பர்கள் தயைகூர்ந்து பொறுத்துக்கொள்ளுங்கள். நான் அடிக்கடி சொல்வதுதான், 'அச்சா ஹை தில்கே பாஸ் ரஹேன் இஸ் பஸ்பான் அக்ல் மகர் கபி இஸே தன்ஹா பி சோடுதேன்!' 'அறிவுஜீவியாக எப்போதும் இருப்பதில் தவறில்லை சில சமயம் சாதாரணனாகவும் இருந்து பார்!' முத்துப் பரலாகி முன்பின் சிறிதுயர்ந்த தெத்து வரிப்பல் தெரிகையிலே - இத்துனைநாள் புன்னகை ராணியெனப் பூவுலகிற் பேர்கொண்டோர் எந்நிலைக்(கு) ஆவார் எழுது! அன்புடன் ஆசாத்

ஃபாஸ்ட்ஃபுட் - பர்கர், மேரி ப்ரவுன் வகையறாக்கள் அல்ல

ஃபாஸ்ட் ஃபுட்இற்கு இப்படி ஒரு பொருள் சென்னையில் கிடைக்கும் என்பதை அந்த வார்த்தையை உருவாக்கிய அமெரிக்கர்கள் இன்னும் அறிந்திருக்கமாட்டார்கள். சைவம் - அசைவம் போல இதுவும் எப்படியோ ஆகிவந்துள்ளது. 70களில் ஏன் 80கள் வரையிலும் 'சென்னை ஃபாஸ்ட் ஃபுட் கடைகள்' பிரபலமாகவில்லை. புறநகரில் பேருந்து நிலையங்களிலும், இரயில் நிலையத்தையும் பிரதான சாலையையும் இணைக்கும் கிளைச்சாலைகளிலும் இரண்டு கரண்டிகளால் தோசைக்கல்லில் தாளம் போட்டு கொத்து பரோட்டா போட்ட இரவுக் கடைகள் ஃபாஸ்ட் ஃபுட் கடைகளாக பெயர் மாற்றம் செய்யப்பட்டு பெருநகருக்குள் வந்த வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் ஃப்ரிக்கனாமிக்ஸ் எழுதவேண்டியிருக்கும். முதலில் நடந்தது பிரியாணிப் புரட்சி. அலுமினிய சட்டியில் செய்தித்தாளைச் சுற்றி சணல் கயிறு கட்டி, அளவுத் தட்டால் ஒலியெழுப்பி கால், அரை, முழுசு என சிக்கன் பிரியாணி போடத்துவங்கினார்கள். தடிமனான 'யேரா' கண்ணாடிக் குவளையில் குளிர்நீருடன், மைக்கா ஒட்டப்பட்ட மேசை மேல், வெள்ளை பீங்கான் தட்டில் சாப்பிடுவதுதான் பிரியாணி என்றிருந்த நிலை மாறி, சந்துக்கு சந்து அலுமினிய சட்டிகள் ஒலியெழுப்பி ஸ்டெயின்லெஸ் ஸ்டீல...

சாலை விபத்தும் சில பகிர்தல்களும்

நேற்று காலை (20.11.07) 7.15 மணியளவில் எங்கள் பகுதியில் ஏற்பட்ட விபத்தின் விளைவுகளைக் காண நேர்ந்தது. எனது இருசக்கரம் அந்தப் பகுதியைக் கடந்தபோது முன்பக்கம் நசுங்கி கண்ணாடிகள் நொறுங்கிய டெம்போவும், ஹெட்லைட்டின் பேனல் உடைந்து சிதறிய இருசக்கரமும் நின்றிருந்தன. உணர்வற்ற நிலையில் தரையில் ஒருவரை சாலையில் கிடத்தி சோடா தெளித்து எழுப்ப முயற்சி செய்தார்கள். அவரால் எழமுடியாமற்போனதும் அப்படியே தூக்கிக்கொண்டு சென்றார்கள். தரையில் கிடந்தவருக்கு உள்காயமும், அதிர்வும் உண்டாகியிருக்க வேண்டும், வெளியே எந்தக் காயமும் தெரியவில்லை. சாலையின் இன்னொரு பக்கத்தில் இருசக்கரத்திலிருந்து விழுந்தவரை கைத்தாங்கலாக அழைத்து வந்தார்கள். அவரும் நிலைகுலைந்திருந்தார். மூக்கு உடைபட்டு ரத்தம் கசிந்துகொண்டிருந்தது, முகத்தில் காயங்கள். மழையின் காரணமாக அடர்த்தியான ரெயின்கோட் அணிந்திருந்ததால் அதன்மேல்தான் சிராய்ப்புகளைக் காண முடிந்தது. அவருக்கு கால்களில்தான் காயம் இருந்திருக்கவேண்டும், நடை மிகவும் தளர்வாக இருந்ததால் ஊகிக்க முடிந்தது. சற்று முன்னரே அந்த விபத்து நடந்திருக்கவேண்டும். மழை தூறிக்கொண்டிருந்தது. ஏராளனமானோர் கூடி உதவிகள் ...

பெருநாளின் பிறைவிடு தூது! - கவிஞர் தா.காசிம்

நாகூர் ஹனீபா அவர்களின் பழைய பாடல்களைக் கேட்டிருப்போர் கவிஞர் தா.காசிம் அவர்களின் வரிகளைக் கேட்டிருப்பார்கள். இளையராஜாவின் திரையுலக வெற்றிக்குப் பிறகு நாகூர் ஹனீபா பாடிய கச்சேரிகளில் 'இளையராஜா மெட்டமைத்துத் தந்த பாடல்' என்னும் அறிவிப்போடு பாடபட்ட பாடல், 'தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு! கொஞ்சம் நில்லு! - எங்கள் திருநபியிடம் போய்ச் சொல்லு சலாம் சொல்லு' இந்தப் பாடலை இயற்றியவர் கவிஞர் தா.காசிம். 'தீன்குலக் கண்ணு! - எங்கள் திருமறைப் பொண்ணு! மாண்புகளைக் காத்து நிற்கும் மஹ்ஷரின் கண்ணு' இதை இயற்றியவரும் தா.காசிம். மடலாற்குழுமங்களில் அறிமுகமான நல்லோர்களால் யாப்பிலக்கணத்தின் அடிப்படைகளை அறிந்துகொண்ட பின், மரபுக் கவிதைகளை வாசிக்கையில் அவற்றின் எதுகை, மோனை, அசை, சீர், ஓசைநயம் இவைகளை, ரசிகன் என்னும் நிலையத் தாண்டி மாணவன் என்னும் நிலையில் இருந்து அணுகிப்பார்த்த நாள்களில் தா.காசிமின் 'உதயங்கள் மேற்கே' என்னும் நூல் படிக்கக்கிடைத்தது. சிறுவயது முதலே கேட்டு வளர்ந்த 'தாயிஃப் நகரத்து வீதியிலே' பாடலும், 'தீன்குலக் கண்ணு' பாடலும் நூலின் துவக்கத்திலேயே இருக்க,...

ஊருக்குள்ள பாரு - கானா

சென்னை நகரின் அடிமட்ட மக்களின் அடையாளமாகத் துவங்கி, மெதுவாக கல்லூரிகளில் தொற்றி, திரைக்கு வந்து, அச்சிற்கு வந்து, இப்பொழுது வண்ணத்திரையும் தனியாக இதற்கென்று நிகழ்ச்சியைத் துவங்கியிருப்பது, என்னைப்போன்ற கானா ரசிகர்களுக்கு / எழுத முயற்சி செய்வோர்க்கு மகிழ்வினை அளிக்கிறது. ஆனாலும், பரவலாக இன்றைக்கு உலவும் கானாக்களில் கானாவின் எல்லைக்குள் சென்று கோலோச்சும் வரிகள் சிலவே. இதனை சுயவிமர்சனமாகக்கூடக் கொள்ளலாம். எனது கானா புத்தகத்தின் முன்னுரையில் கவிஞர் யுகபாரதி கோடு காட்டியிருந்ததும் இதைத்தான். சென்னையின் வியர்வைப் புழுக்கமும் வேதனையும் வரிகளில் தெரியாத வரையில் அது முழுமையான கானாவாக இருக்க முடியாது. நண்பர் ஒருமுறை குறிப்பிட்ட நினைவு, 'ஓரிரு நல்ல கவிதை வரிகளைப் பெறுகின்ற முயற்சியில், பல வரிகளை தேவையற்று எழுதவேண்டியதாகின்றது' - வார்த்தைகள் மாறியிருக்கலாம், ஆனால், பொருளடக்கம் இதுதான். கானாவிலும் அப்படித்தான், மண்ணின் மணத்துடன் கிடைக்கும் ஓரிரு கானா வரிகளைப் பெறுவதற்காக, கானாவைப் போலத் தோன்றும் சில வரிகளையும் எழுதவேண்டியதாகின்றது. கானாவிற்கு முக்கியம் மொழிநடை, சென்னை உச்சரிப்பு. களம் சென...

சமச்சீர்

சமச்சீரற்ற சமுதாயமாகத்தான் நாம் இருக்கிறோம் என்பதை நமக்குக் கற்றுத் தர கற்றது தமிழ் போன்ற திரைப்படங்கள் தேவையில்லை. கண்ணையும், காதையும், மனதையும் திறந்து வைத்திருக்கும் யாருக்கும் இதனை மற்றவர்கள் வந்து உணர்த்தவேண்டிய அவசியம் கிடையாது. அது ஒருபுறமிருக்க, தானாகவோ மற்றவர்கள் உணர்த்தியோ இதனை உணர்ந்தாலும், மாளிகை - குடிசை வாழ்க்கைத்தர வேறுபாட்டை மாற்றியமைக்கும் திறன் தனிமனிதனின் எல்லைகளுக்குள் கிடையாது. அசைக்க முடியாத நம்பிக்கைகளால் உந்தப்பட்டு சமநிலைச் சமுதாயம் மலர்ந்தே தீரவேண்டும் என உழைப்பவர்கள் உழைத்துக் கொண்டிருக்கலாம். அது அவர்களது நம்பிக்கை. குறிப்பிட்ட சமூகப் பிரிவின், உட்பிரிவின் எல்லைக்குள் மட்டுமே இத்தகைய உழைப்புகள் வெற்றியை அளித்துக்கொண்டிருக்கின்றனவேயன்றி, நாடளாவிய விதத்தில் வாழ்க்கைத்தர வேறுபாட்டை அடியோடு இல்லாமற்போகச் செய்வதானது பேச்சளவில் மட்டும் இருக்க வாய்ப்பு உண்டு. சமீபமாக இந்த மாளிகை - குடிசை வேறுபாட்டிற்கு ஒட்டுமொத்தமாக தகவல் தொழில்நுட்பத் துறையையின் சம்பள விகிதம் காரணமாக காட்டப்படுகிறது. வலைப்பதிவுகளில் மட்டுமன்றி பரவலாக சென்னைக்குள் அங்கொன்றும் இங்கொன்றுமாக போதிய ஆதா...

மோட்டார் விகடனும் பைக் இண்டியாவும் - சில கேள்விகள்

எந்தத் துறையில் ஆர்வம் இருக்கிறதோ அது தொடர்பான வாசிப்புகள் அதிகமாக இருப்பது இயல்பு. கட்டுமானத்துறை, எலிவேட்டர் வேர்ல்ட் போன்று தொழில் தொடர்பான தமிழ் ஆங்கிலப் பத்திரிகைகள் படிக்கவேண்டியது தொழிலுக்கு அவசியம். அவுட்லுக் மணி, நாணயம் விகடன் வகையறாக்களில் கொஞ்சமாவது கண்களை அலைபாயவைப்பது காலத்தின் கட்டாயம். மோட்டார் விகடன் அந்த வகையில் சேராது. அது முழுக்கமுழுக்க மனதோடு தொடர்புடைய சமாசாரம். வண்டிகள்...வண்டிகள்...வண்டிகள் வண்டிகளைத் தவிர மற்றொன்றில்லை. நான்குசக்கரங்களில் கொஞ்சமே ஆர்வமும், இருசக்கரங்களில் அதிக ஆர்வமும் கொண்டதான மனப்பக்குவம் உள்ள தமிழ் வாசகர்கள் மோட்டார் விகடனோடு சேர்த்து சமீபத்தில் வரத்துவங்கியிருக்கும் பைக் இண்டியாவையும் சேர்த்துக்கொள்ளலாம். ஹீரோ ஹோண்டா வெளியிடும் 'ஹங்க்' இருசக்கரம் குறித்து இந்த இரண்டு பத்திரிகைகளிலும் கட்டுரை உண்டு. கட்டுரைக்கு பைக் இண்டியா தந்திருக்கும் தலைப்பு 'THE IMPUDENT HUNK' , மோட்டார் விகடன் தந்திருக்கும் தலைப்பு 'கவர்ச்சி வீரன்' . மோட்டார் விகடனில் ஹங்க் குறித்த கட்டுரையை சார்லஸ் என்பவர் எழுதியுள்ளார். பைக் இண்டியாவில் ஆசிரி...

பிக்ரம் வோஹ்ராவும் காலித் மொஹம்மதும்

துபாய் நாள்களில் (1988-1994) பிக்ரமின் 'பிட்வீன் த லைன்ஸ்' பத்தி அறிமுகமானது. "பை தி வே, ஆர் யூ ரீடிங் பிட்வீன் த லைன்ஸ்" "நோ சர்" (துபாயில் உருதுக்காரர்கள் சொல்லித்தந்தது இது, நமது வழக்கப்படி 'சார்' கிடையாது, 'சர்'தான். மேலாளர் பஞ்சாபியாகவும் நமக்குக் கொஞ்சம் நெருக்கமானவராகவும் இருந்தால் 'சர்ஜி') "ட்ரை டு ஸ்டார்ட் இட், யு வில் என் ஜாய்" பிக்ரமின் பத்தியுடன் அறிமுகம் இப்படித்தான் துவங்கியது. அப்பொழுது பிக்ரம் கல்ஃப் ந்யூஸ் பத்திரிகையில் இருந்தார். பின்னர் அவர் கலீஜ் டைம்ஸுக்கு மாறியபோது பிட்வீன் த லைன்ஸ் கலீஜ் டைம்ஸில் தொடர்ந்தது, இப்போது பிட்வீன் த லைன்ஸ் பஹ்ரைன் ட்ரிப்யூனில் தொடர்வதால் பிக்ரம் பஹ்ரைன் ட்ரிப்யூனில் இருக்கிறார் என்பதை தனியாக எழுதத் தேவையில்லை. கொஞ்சம் அரசியல், அதிகமாக அனுபவம் / நிகழ்வுகள் என்பதாக பிக்ரமின் எழுத்துகள் அப்போது இருந்தன. ஆண்கள் 39 வயது பூர்த்தியாகி 40ஐ எட்டும்போது வழமையாக உதிர்க்கும் சில தத்துவங்கள், இந்தியாவில் இருக்கும் நண்பர்கள் அவர்களது வளைகுடா வருகையின்போது தங்களுக்கு சமமான தொழிலைச் செய்து ...

ரெண்டு காலு குதுர (100சிசி - 125 சிசி) - பாகம்-2

ஸ்கூட்டர் ரகங்களில் அதிகமாக சாலைகளில் காணப்படுவது ஆக்டிவா (ஹோண்டா) . மைல்திறன் மற்ற ரகங்களைவிடவும் மிகக்குறைவாக இருந்தபோதிலும் ஓட்டுதலில் இருக்கும் சுகத்திற்காக ஆக்டிவா விரும்பப்படுகிறது. இதன் மைல்திறன் லிட்டருக்கு 44கி.மீ என்று சொல்லப்படுகிறது. பட்டியலில் காணப்படும் விலை ரூ.43,000, காப்பீடு, இன்னபிற உதிரி பொருத்திணைகள் (ஃபிட்டிங்ஸ்) எல்லாமாகச் சேர்த்து ரூ46,000ஐ எட்டிவிடும். விளம்பரங்களில் திரிஷா வந்து கலக்கிக்கொண்டிருக்கும் 99வண்ண ஸ்கூட்டி பெப் + (டிவிஎஸ்) இலும் ஆக்டிவாவைப் போன்றே மாறுதானி பல்சக்கரம் (வேரியோமேட்டிக் கியர்பாக்ஸ்), இரண்டுமே நான்கு சுற்று (ஸ்ட்ரோக்) எந்திரங்கள், ஸ்கூட்டி பெப் +இன் விலை ரூ.38,000 வரை ஆகலாம். மைல்திறனில் ஸ்கூட்டி பரவாயில்லை. லிட்டருக்கு 52கி.மீ. என்கிறார்கள். ஆண் பெண் இருபாலரும் ஓட்டுவதற்கான அமைப்பில் ஸ்கூட்டி பெப்+ இருந்தபோதும், அவர்களாகவே பெண்களை மையப்படுத்தி விளம்பரங்களைத் தருவதால் ஏனோ இது பெண்களுக்கென்றே ஆகிவிட்டது. ஸ்கூட்டியின் முந்தைய விளம்பரத்துடன் எனக்கு உடன்பாடு உண்டு. திரிஷாஜி ஒவ்வொரு கடைக்கும் சென்று பெயர் தெரியாத அடைமொழிகளுடன் வண்ணங்களைச் சொ...

ரெண்டு காலு குதுர (100சிசி - 125சிசி) - பாகம்-1

சென்னையில் தலைகளுக்கு அடுத்தபடியாக அதிகமாகத் தெரிவது இருசக்கரங்கள்தான். புள்ளிவிவரங்களின்படி ஆறேகால்கோடி தமிழக மக்கள் நாற்பத்தொன்றரை லட்சம் இருசக்கரங்களை 2001இல் உபயோகித்திருக்கிறார்கள். 2006 ஏப்ரல் வரையில் அறுபத்தேழரை லட்சம் இருசக்கரங்கள் தமிழகத்தில் பதிவாகியிருக்கின்றன. 2001 - 41,63,000 2002 - 46,00,570 2003 - 50,73,643 2004 - 55,47,755 2005 - 61,06,057 2006 - 67,50,328 இது மொத்தமாக அனைத்துரக இருசக்கரங்களின் எண்ணிக்கை. 'சூப்பர்பைக்' வகை துவங்கி, 'வீரப்த்ர' எம்80 வழியாக, டிவிஎஸ் எக்ஸெல் சூப்பர், ஸ்போர்ட்ஸ் வரையில் எல்லாவிதமான இருசக்கரங்களும் இதில் அடக்கம். இவற்றில் தனியான எண்ணிக்கையாக 125சிசி வரையில் வண்டிகளைப் பிரித்து புள்ளிவிவரங்கள் எதுவும் சரியாகக் கிடைக்கவில்லை. சந்தையில் எவையெவை எத்தனை பங்கினை எடுத்துள்ளன என்பதைப் பிடித்து ஓரளவிற்கு 125சிசிக்களின் எண்ணிக்கையை ஊகிக்கலாமே தவிர, சரியாகச் சொல்வது இப்போதைக்கு இயலாது. இந்தியா முழுதும் 2005-06இல் தயாரான இருசக்கரங்களின் எண்ணிக்கை 76 லட்சம். இதில் தமிழகத்து சந்தையில் விற்பனையாகியிருப்பவை ஆறுலட்சத்து நாற்பதாயிரம். புள்ளியை...

India Wins Freedom - 30 ஆண்டுகளுக்குப் பின் வெளியான 30 பக்கங்கள்

//The Muslim League leader Mohammed Ali Jinnah disparaged him as a "Congress Showboy", a token elected by the Congress to advertise its secular credentials. The Maulana was too dignified a figure to respond to the League's insult. But,....// மௌலானா ஆசாத்தின் பிறந்தநாளான இன்று (11ம் தேதி நவம்பர்) இந்துவில் வெளியாகியிருக்கும் ஷஷி தரூர் பத்திகளில் இப்படியான வரியை ஷஷிதரூர் எழுதியிருக்கிறார். அன்றைய முஸ்லிம் லீக்கின் தலைவர் காயிதேஆஸம் (முகமது அலி ஜின்னா) மௌலானா குறித்து மேற்சொன்ன விமர்சனத்தை வைத்திருக்கலாம். ஆனால், காங்கிரஸின் அனறைய நிலைபாடு குறித்து மௌலானா சாஹேபின் எண்ணம் என்னவாக இருந்தது என்பதை அப்போது காயிதே ஆஸம் நிச்சயமாக அறிந்திருக்க வாய்ப்பில்லை; முகமது அலி ஜின்னா மட்டுமல்லர், வேறு யாருக்குமே மௌலானா ஆசாத்தின் நிலைபாடு குறித்த எழுத்துபூர்வமான ஆதாரம் கிடைத்திருக்காது என்பதே எனது எண்ணம். ஏனென்றால், ரகசியமாக வைக்கப்பட்டு, முப்பது ஆண்டுகளுக்குப் பின் வெளியிடப்பட்ட 30 பக்கங்களுள் ஒன்றில் ஓரிரு வரிகள் காங்கிரஸின் மதச்சார்பு குறித்து ஆசாத் எழுதியது காணக் கிடைத்திருக்கிறது. Indi...

ஆனந்த விகடன் சொல்ல வந்தது என்ன? எனக்குப் புரியவில்லை.

அவர்களது வாசகர்களை அவர்கள் நன்றாகவே அறிவார்கள். சரியான சமயத்தில், சரியான தலையங்கங்கள் எழுதி வாசகர்கள் முன்னே இன்றைய அரசியல் சூழல் குறித்து சரியான கேள்விகளை எழுப்புவார்கள் என்பதில் ஐயப்பாடுகள் கிடையாது. கவிதைகளை அடையாளங்கண்டு வெளியிடுவதிலாகட்டும், தேவையான தொடர்களைத் தருவதிலாகட்டும், அவர்கள் முன்னணியில் இருப்பார்கள். இளமைக்கு முன்னுரிமை தருகின்ற முயற்சியில் சில பல பக்கங்களில் நமது பாரம்பரியத்திற்கு முன்னுரிமை அளிக்கவில்லை என்னும் குற்றத்தினைச் சுமத்தலாம் என்பதன்றி வேறெந்தக் குறையும் அவர்கள் மீது சுமத்த இயலாது. அதுதான் ஆனந்த விகடன். ஆனால், இந்தவார ஆனந்த விகடனில் (நவ.14, 2007, நமீதா - சிம்பு அட்டைப்படம்) 180ம் பக்கத்தில் வெளியாகியிருக்கும் கடிதத்தில் ஒரு கதை (ஆரூர்தாஸ்) சில கேள்விகளைக் கேட்கவைக்கிறது. உண்மைக்கதைகளில் பெயர்கள் மாற்றப்படுவதன் காரணமே சமூகத்திற்கு அவர்களை அடையாளம் காட்டாமல் நிகழ்வினை மட்டும் வாசகர்களுக்கு அறியத் தரவேண்டுமென்பதுதான். இது மிகவும் அடிப்படையான விஷயம். ஆனந்தவிகடன் செய்திருப்பது என்ன? பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்ரன என்னும் குறிப்பைச் சொன்னவர்கள் என்ன மாற்றியிருக்கி...

+2 வினாவங்கிப் புத்தகம் - சில எண்ணங்கள்

கற்றது தமிழில் பரிந்து பேசபட்ட கூட்டம்தான், ஸ்பென்ஸர் ப்ளாசாவிற்கு வெளியில் நிற்கும் பெருவாரிமக்கள்தான், மத்தியதரம்தான், நின்றிருந்த ஒன்றிரண்டு இருசக்கரங்களும் மத்தியதரத்தைப் பறைசாற்றும் பேஷன், சிடி100 வகையறாக்கள்தான், எல்லாருடைய கண்களிலும் தெரிந்த ஒரே விருப்பம்: தனது குழந்தை +2வில் நல்ல மதிப்பெண்கள் வாங்கவேண்டும் என்பதே. சென்னை - கல்லூரிச் சாலையிலிருக்கும் ஈ.வி.கே.சம்பத் மாளிகையின் அருகே அமைந்திருக்கும் குட்டிக்குட்டி கட்டடங்களில் இயங்கும் புத்தக விற்பனை நிலையங்களுள் ஒன்றில் +2, 10ம் வகுப்பிற்கான வினாவங்கிகள் தொகுக்கபட்டு, பாடநூல் நிறுவனத்தாரின் மேற்பார்வையில் வெளியிடபட்டு விற்கப்படுகின்றன. ஒருமணிநேரக் காத்திருப்பிற்குப் பின்னரே நமது முறை கிடைக்கின்றது. அத்தனை கூட்டம். ஒரே ஒரு அலுவலர் மட்டுமே சீட்டு எழுதுவதற்கும், புத்தகத்தை எடுத்துக்கொடுப்பதற்கும், பதில் சொல்வதற்குமாக இருந்தால் அப்படித்தானே இருக்கும். இடையிடையே வெளியே வந்து "+2 எகனாமிக்சும், கம்ப்யூட்ட சைன்ஸும் ஸ்டாக் தீந்துருச்சுங்க" என அறிவிப்புச் செய்வதும் அவரே. அறிவிப்போடு கூடவே தாளில் அச்சடித்து அவ்வப்போது வெளியே வந்த...

புதுரக இருசக்கரச் சந்தையின் இலக்கு இளைஞர்களே! (140சிசி, 150சிசி, 160சிசி வகைகள்)

150சிசி ரக மோட்டார் சைக்கிள்களில் போட்டாபோட்டி காட்டாகுஸ்திதான் நடந்துகொண்டிருக்கிறது. 'கற்றது தமிழ்' திரைப்படத்தின் வசனத்தில் பல்சர் (பஜாஜ்) பெயரைச் சொல்லி அதனை பக்கத்து வீட்டுக்காரன் வாங்கியதால் பொறாமை உண்டானதாக எழுதி எந்தச் செலவுமே இல்லாமல் என் போன்ற இருசக்கர ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து விளம்பரமாகச் செயல்பட்ட வசனத்தை விளம்பரத்துறையின் வழக்குப்படி 'ப்ராடக்ட் ப்ளேஸ்மென்ட்' என்று சொல்லலாமா என அறியேன். ஆனால், பல்சர் இளைஞர்களின் கனவு என்பதை நன்றாகவே அறிவேன். அதே (பஜாஜ்) தயாரிப்பின் 135சிசி டிஸ்கவர் ரகமும் என்னென்னவோ இளைஞர்களைக் கவரும் விளம்பரங்களுடன் வந்தபோதும் பல்சரின் சந்தைக்கு எந்தவிதமான பாதிப்பும் நிகழாது என்பதை தயாரிப்பாளர்கள் அறிந்தே இருப்பார்கள். அவர்களுடைய இன்னொரு தயாரிப்பான அவென்ஜர் தனது படுக்கையான இருக்கையுடன் 180சிசி திறனுடன் சந்தையில் இருந்தபோதும் அதுவும் பல்சரின் பங்கை அசைத்தும் பார்க்காதென்பதும் உண்மை. இப்படியிருக்கையில் செந்தழல் வண்ணத்தில் (ஹோண்டா) யூனிகார்ன் 150சிசி சந்தையில் தலையைத் தூக்கியது. ஒற்றைத்தாங்கி (Mono suspension - பின் சக்கரத்திற்கு இரண்...