//The Muslim League leader Mohammed Ali Jinnah disparaged him as a "Congress Showboy", a token elected by the Congress to advertise its secular credentials. The Maulana was too dignified a figure to respond to the League's insult. But,....// மௌலானா ஆசாத்தின் பிறந்தநாளான இன்று (11ம் தேதி நவம்பர்) இந்துவில் வெளியாகியிருக்கும் ஷஷி தரூர் பத்திகளில் இப்படியான வரியை ஷஷிதரூர் எழுதியிருக்கிறார்.
அன்றைய முஸ்லிம் லீக்கின் தலைவர் காயிதேஆஸம் (முகமது அலி ஜின்னா) மௌலானா குறித்து மேற்சொன்ன விமர்சனத்தை வைத்திருக்கலாம். ஆனால், காங்கிரஸின் அனறைய நிலைபாடு குறித்து மௌலானா சாஹேபின் எண்ணம் என்னவாக இருந்தது என்பதை அப்போது காயிதே ஆஸம் நிச்சயமாக அறிந்திருக்க வாய்ப்பில்லை; முகமது அலி ஜின்னா மட்டுமல்லர், வேறு யாருக்குமே மௌலானா ஆசாத்தின் நிலைபாடு குறித்த எழுத்துபூர்வமான ஆதாரம் கிடைத்திருக்காது என்பதே எனது எண்ணம். ஏனென்றால், ரகசியமாக வைக்கப்பட்டு, முப்பது ஆண்டுகளுக்குப் பின் வெளியிடப்பட்ட 30 பக்கங்களுள் ஒன்றில் ஓரிரு வரிகள் காங்கிரஸின் மதச்சார்பு குறித்து ஆசாத் எழுதியது காணக் கிடைத்திருக்கிறது.
India Wins Freedom - இந்தப் புத்தகத்தின் கையெழுத்துப்பிரதியை பேராசிரியர் ஹுமாயூன் கபீர் ஓரியன்ட் லாங்மன் பதிப்பகத்தாரிடம் ஒப்படைத்திருக்கிறார் (செப்டம்பர் 1958இல் - மௌலானா இறந்து ஏழு மாதங்களுக்குப் பிறகு). அதில் 30பக்கங்கள் ரகசியமாக வைக்கப்பட்டிருப்பதாகவும் 22 பிப்ரவரி 1988 அன்றுதான் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கும் பக்கங்கள் பதிப்பிக்கக் கிடைக்கும் என்றும் அறிவித்திருக்கிறார்கள். முதல் பிரதி அந்த 30 பக்கங்கள் இல்லாமல் வெளியாகியிருக்கிறது.
22 பிப்ரவரி 1988இல் பல்வேறு சட்டப் பிரச்சனைகளால் பக்கங்கள் பதிப்பகத்தாருக்குக் கிடைக்காமற்போனது. தொடர்ந்த வழக்கால் கொல்கத்தா, புது டில்லி நீதிமன்றங்களைச் சுற்றிவந்து 29 செப்டம்பர் 1988 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த 30 பக்கங்களின் நகல்கள் தேசிய நூலகம், கொல்கத்தாவிற்கும், தேசிய ஆவண காப்பகத்திற்கும் அனுப்பப்பட்டு பாதுகாக்கப்பட்டிருக்கின்றன. வெளியிடப்படும் 30 பக்கங்களும் அப்படியே உள்ளது உள்ளபடி வெளியிடப்படவேண்டுமென்றும், வரிகளில் எந்தவிதமான மாற்றமும் இருக்கக்கூடாதென்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.
பக்கங்களைப் படிக்கும்போதுதான் பதிப்பகத்தாருக்கு விவரம் புலப்பட்டிருக்கிறது, இந்த 30 பக்கங்களும் தனியாக எழுதபட்ட பின் இணைப்பு அல்ல; மாறாக, ஒரு சில அத்தியாயங்களிலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட வரிகள். பக்கங்களை அப்படியே இணைத்து அடுத்த வெளியீட்டைச் செய்யாமல், எந்தெந்த அத்தியாயங்களில் வரிகள் சேர்க்கப்படவேண்டுமோ அவற்றை இணைத்து, சேர்த்த வரிகளை நட்சத்திரக் குறியிட்டுக் காட்டியிருக்கிறார்கள்.
அவற்றுள் ஒன்றே ஒன்றை மட்டும் இங்கே குறிப்பிட விருப்பம்.
முப்பதாண்டுகளுக்குப் பின் வெளியான வரிகள்:
அத்தியாயம்-1:
Congress in Office
"......One has to admit that the nationalism of the Congress had not reached s atage where it could ignore communal consideration and select leaders on the basis of merit without regard to majority or minority."
அன்றைய காங்கிரஸ், தனது மதச்சார்பு நிலையை, ஒரு இஸ்லாமியரை (சையத் மஹ்மூத்) பீகாரின் முதன்மந்திரியாகாமற் செய்தும் காட்டியிருக்கிறது, Congress Assembly Party - Bombayஇன் தலைவராக ஒரு பார்சியை (நரிமன்) ஆகாமலும் செய்திருக்கிறது.
இவ்விரண்டு விஷயங்களையும் குறிப்பிடும் சமயத்தில்தான் மேற்சொன்ன வரிகளை ஆசாத் எழுதியிருக்கிறார். மொழிமாற்றங்களில் ஏதேனும் பிழை உண்டாகிவிடுமோ என்பதால், ஆங்கிலத்தில் இருப்பதை அப்படியே தட்டச்சியுள்ளேன்.
இன்றைய அரசியல் நடைமுறைகளுடன் ஒப்பிடும்போது, இதுபோன்ற கருத்தையெல்லாமா 30 ஆண்டுகளாக ரகசியமாக வைக்கவேண்டும் என்று கேட்கத் தோன்றலாம். அன்று பண்டித நேருவின் சர்தார் பட்டேலின் சில அணுகுமுறைகளை இப்படி வெளிப்படையாகச் சொல்வதை மக்கள் ஏற்றுக்கொள்ள முப்பதாண்டுகள் ஆகும் என ஆசாத் நினைத்தாரோ என்னவோ.

அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டம் - 1947, டில்லி
புத்தகம் குறித்த எனது விரிவான பார்வையை இன்னொரு நாள் எழுத விருப்பம்.
between the lines-1:
அன்றைய காங்கிரஸ், மதச்சார்பின்மை முகங்காட்டவேண்டி இஸ்லாமியரை (மௌலானாவை) உயர்த்தியது உண்மையென்றால், அதே அன்றைய காங்கிரஸ் பெரும்பான்மையை திருப்திபடுத்த ஒரு பார்சியையும், ஒரு இஸ்லாமியரையும் பின்னுக்குத் தள்ளியும் காட்டியிருக்கிறது.
between the lines-2 :-)
அன்று, காங்கிரசுக்கு தன் மதச்சார்பின்மை முகத்தைக் காட்ட அபுல் கலாம் ஆசாத் தேவைப்பட்டதாக முகமதலி ஜின்னா சொல்லியிருக்கிறார். அப்துல் கலாம் ஜனாதிபதியானபோது இதே தொனி ஒலித்த கருத்தினை பலர் முன்வைத்தார்கள்.
அன்புடன்
ஆசாத்

Comments