அனைத்து வாழ்வியல் அணுகுமுறைகளிலும் சேவைகளால் ஏற்படும் வசதிகள் கூடியிருப்பதைப்போல் நடுத்தர, கீழ்நடுத்தர வளகுடாவாசிகளின் இந்திய வருகைகளிலும் நிறைய வசதிகள் கூடியிருக்கின்றன்.
எழுபதுகளின் இறுதி வரையிலும் எண்பதுகளின் துவக்கத்திலும் அங்கிருந்து பெட்டி கட்டி இங்கே பெட்டியைக் கொண்டுவந்து அவிழ்க்கும் வரையில் படாத பாடுபட்ட கதைகள் ஆயிரம் உண்டு. பணமாற்றுவிகிதத்தால் ஏதோ வருவாய் அதிகமாக இருப்பதான தோற்றத்தில் தூரத்து உறவுகளையும் திருப்திப்படுத்த வாங்கிக் குவித்த பரிசுப்பொருள்கள் பாதியும், 'எங்கள் வீட்டில் இதைத் தந்துவிடு' வகையறாக்களில் அடுத்தவருக்காகச் சுமக்கும் சுமை மீதியுமாகத்தான் பெட்டி நிறையும். சுங்க அதிகாரிகளால் பெட்டி திறக்கப்பட்டு தீர்வை அதிகமாகிவிடாமல் பத்திரமாக வீடு செல்லவேண்டுமே என்னும் நினைப்பில் விமானப் பயணத்தின் சுகத்தை அனுபவிக்க இயலாத மனநிலையில் பயணம் செய்தவதே விதியாக இருந்தது.
பரிசுப் பொருள்கள் வாங்குவதும் எடுத்து வருவதும் அவரவர் சூழல் அனுமதிக்கும் விஷயம். ராணி முகர்ஜியின் 'மன்ச்'சிலும், அமிதாபின் குற்றியலுகரமில்லாத 'முத்தூ பாஸாயிட்டான் ஸ்வீட் எடூ கொண்டாடூ'விலும் திருப்தியடைவோருக்கு அங்கிருந்து சாக்லேட்டுகள் தேவைப்படுவதில்லை, இது எனது எண்ணம். ஆனால், எனது இந்தக் கருத்துடன் விவாதித்து வெற்றியடைந்த நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் சொன்ன காரணம் என்னவென்றால், 'நீ சென்னையில் இருக்கிறாய், வளைகுடாவிற்கும் அதிகமான சாக்லேட்டுகளை வாங்க வாய்ப்பிருக்கிறது. தஞ்சைக்கு வந்து, பட்டுக்கோட்டைக்கு வந்து, அங்கிருந்து சில கிலோ மீட்டர்கள் உள்ளே சென்று வசிக்கும் எங்கள் ஊருக்கு வந்து பார், நாங்கள் ஏன் அதிகமான பொருள்களை வாங்கிப்போகிறோம் என்பது புரியும்.' இந்தப் புரிதல் எனக்கு நிகழ்ந்து பல வருடங்களாகின்றன.
அதிகப் பொருளோ, குறைந்த பொருளோ எடுத்து வரவேண்டிய அவசியத்தில் இருக்கையில் சில சமயம் சுண்டைக்காய் கால் பணம் சுமைக்கூலி முக்காற் பணமாகவும் முடியும். படித்துப் படித்து சுமையைக் குறைக்கச் சொன்னாலும் 'அந்த ஏர்லைன்ஸில் முப்பது கிலோ அலவ் பண்றான்யா' வசனத்துடன் ஏகத்துக்குப் பெட்டி கட்டி வந்து அதிக எடைக்குப் பணம் கேட்கும்போது அப்பாவித்தனமான முகபாவத்துடன் விமான சேவையருடன் எடையைக் குறைத்து எழுதச் சொல்லிக் கெஞ்சிய சிலரும் உண்டு. இந்த அனைத்து வேதனைகளும் போதாதென்று, மாங்குமாங்கென்று கையில் ஒன்றும் தோளில் ஒன்றுமாகத் தொங்கும் பைகளில் பத்திருபது கிலோவை ஏற்றி, வழிமாற்றங்களில் (ட்ரான்ஸிட்) ஓடுபாய்களைத் (ட்ராவலேட்டர்) தேடி ஓடி நின்று, நகர்ந்து, குடியேற்றங்களில் (இம்மிக்ரேஷன்) ஊர்ந்து, ஊர் வந்து சேர்வதற்குள் சுமையழுத்தத்தால் இரண்டு மூன்று அங்குலங்கள் குள்ளமாகிப்போன உணர்வுக்கு ஆளாகிப்போனதும் உண்டு.
இப்பொழுது இவையெல்லாம் கிடையாது. 'மாப்ள ஜாமானெல்லாம் கார்கோல அனுப்பியாச்சுல்ல' வாசகங்கள் வளைகுடா விமானநிலையங்களில் நிறையக் கேட்கின்றன.
அப்பொழுதெல்லாம் (1983) ரியாத், பத்தாவில் சிங்கப்பூர் பொருள்கள் விற்கும் கடைகளில் 'சாமான்கள் உங்கள் ஊருக்கு அனுப்பித் தரப்படும்' என்று ஏ4 அளவில் எழுதி வைத்திருப்பார்கள். சிறிய பொருள்களெல்லாம் அப்படி அனுப்புவதுண்டு. பெரிய பொருள்களுக்கு ஒரே வழி 'கார்கோ'தான். பயணச் சீட்டின் எண்ணைக் குறித்து வீட்டு முகவரிக்கு சுமையை விமானம் மூலமாகவோ, கப்பல் மூலமாகவோ அனுப்பிவிட்டு சுங்கத்திலிருந்து வரும் தபாலுக்காகக் காத்திருக்கவேண்டும். தபால் வந்தவுடன் யாராவது முகவரைப் பார்த்தோ அல்லது நேரடியாகவோ சென்று அவற்றை வெளியாக்கி வண்டி பிடித்து வீடு வருவதற்குள் போதும்போதுமென்றாகும். இது சுகமென்றால் சுகம், அவஸ்தையென்றால் அவஸ்தை [மீனம்பாக்கம் விமான நிலைய சரக்ககத்திற்குச் சென்று தாங்களாகவே பொருள்களை வெளியாக்கியிருக்கும் நண்பர்கள் மட்டுமே அது சுகமா அவஸ்தையா என்பதை முடிவு செய்யும் தகுதி பெற்றவர்கள் :-)))].
இப்பொழுது நிலைமை மேற்சொன்னபடியல்ல. ஜித்தாவிலும், ரியாத்திலும் சந்துக்கு சந்து கார்கோ சேவைகள் இருக்கின்றன. பத்து கிலோ முதல் கன்டெய்னர் வரையில் அனுப்பி சுகமாக அவற்றை வீட்டு வாசல் வரையில் எடுத்து வர சேவைகள் வந்துவிட்டன. கடைவீதிக்குப் போனால் அட்டைப்பெட்டிகளும், மாஸ்கிங் டேப்புகளுமாக, மாஸ்கிங் டேப் கண்டு பிடிக்கபட்டதே கார்கோ அனுப்பத்தானோ என எண்ணும்படியாக சர்சர்ரென இழுக்கும் சத்தங்கள் கேட்கின்றன. எல்லாவற்றையும் அவர்களிடம் தந்துவிட்டு கைகளை வீசிக்கொண்டு வர முடிகின்றது. சுங்கத்திலிருந்து எப்போது கடிதம் வரும் என்னும் யோசனையில் பாதி விடுமுறை நாள்களைக் கழிக்கும் பழைய வழக்கங்கள் இப்போது கிடையாது. வளைகுடாவிலிருந்து அனுபப்பட்ட பொருள்களை சேவையர் வந்து வீட்டு வாசலைத் தட்டி தந்துவிட்டுப் போகிறார்கள்.

இன்றைய வளைகுடாவாசிகளுக்கு இது ஒரு பெரிய விஷயமே அல்ல. ஆனால், சென்னைக்கு நேரடி விமானச் சேவை இல்லாத நாள்களில் மூட்டை முடிச்சுகளுடன் மும்பை வந்து, வசதிக்கேற்ப ரயிலடிக்கோ உள்நாட்டு விமான நிலையத்துக்கோ சென்று, உள்நாட்டு விமான சேவையில் 20கிலோவிற்கு மேலிருக்கும் ஒவ்வொரு கிலோவிற்கும் அதிக சுமைப் பணம் கொடுத்து, சென்னை ரயில் நிலையத்திலும் மீனம்பாக்கம் விமான நிலையத்திலும் மூட்டை முடிச்சுகளைப் பாதுகாத்து ஊருக்குக் கொண்டு வந்து சேர்த்தோர்களுக்கு இன்றைய இந்த கார்கோ சேவைகள் ஒரு வரம்.
அன்புடன்
ஆசாத்

Comments