ஸ்கூட்டர் ரகங்களில் அதிகமாக சாலைகளில் காணப்படுவது ஆக்டிவா (ஹோண்டா). மைல்திறன் மற்ற ரகங்களைவிடவும் மிகக்குறைவாக இருந்தபோதிலும் ஓட்டுதலில் இருக்கும் சுகத்திற்காக ஆக்டிவா விரும்பப்படுகிறது. இதன் மைல்திறன் லிட்டருக்கு 44கி.மீ என்று சொல்லப்படுகிறது. பட்டியலில் காணப்படும் விலை ரூ.43,000, காப்பீடு, இன்னபிற உதிரி பொருத்திணைகள் (ஃபிட்டிங்ஸ்) எல்லாமாகச் சேர்த்து ரூ46,000ஐ எட்டிவிடும்.
விளம்பரங்களில் திரிஷா வந்து கலக்கிக்கொண்டிருக்கும் 99வண்ண ஸ்கூட்டி பெப் + (டிவிஎஸ்) இலும் ஆக்டிவாவைப் போன்றே மாறுதானி பல்சக்கரம் (வேரியோமேட்டிக் கியர்பாக்ஸ்), இரண்டுமே நான்கு சுற்று (ஸ்ட்ரோக்) எந்திரங்கள், ஸ்கூட்டி பெப் +இன் விலை ரூ.38,000 வரை ஆகலாம். மைல்திறனில் ஸ்கூட்டி பரவாயில்லை. லிட்டருக்கு 52கி.மீ. என்கிறார்கள்.
ஆண் பெண் இருபாலரும் ஓட்டுவதற்கான அமைப்பில் ஸ்கூட்டி பெப்+ இருந்தபோதும், அவர்களாகவே பெண்களை மையப்படுத்தி விளம்பரங்களைத் தருவதால் ஏனோ இது பெண்களுக்கென்றே ஆகிவிட்டது.
ஸ்கூட்டியின் முந்தைய விளம்பரத்துடன் எனக்கு உடன்பாடு உண்டு. திரிஷாஜி ஒவ்வொரு கடைக்கும் சென்று பெயர் தெரியாத அடைமொழிகளுடன் வண்ணங்களைச் சொல்வார், கடைக்காரர்கள் முழிக்க - 99 வண்ணங்களில் என்று விளம்பரம் முடியும். சொல்லவந்ததை சரியாக சொன்னார்கள் ஆனால், இப்போதைய விளம்பரத்துடன் எனக்கு உடன்பாடு கிடையாது. புகைப்படக் கண்காட்சியில் ஸ்கூட்டியில் சென்று படம்பிடித்ததால் வெற்றி பெறுவதாகக் காட்டுகிறார்கள். காமிராவிற்கான விளம்பரமோ என சந்தேகம் வந்துவிடுகிறது.
பெண்ணை மையப்படுத்தி விளம்பரங்களில் கலக்கும் இன்னொரு ஸ்கூட்டர் ரகம், ப்ளெஷர் (ஹீரோ ஹோண்டா). இவர்கள் முன்னிறுத்துவது பிரியங்கா சோப்ராவை. இதனுடைய விலை பெப் +ஐவிடவும் ரூ.3,000 அதிகம்.
மேற்சொன்ன இரண்டு விளம்பரங்களிலும் பெண்கள் (திரிஷா, பிரியங்கா) அணிந்திருக்கும் தலைக்கவசத்தை சென்னைச் சாலைகளில் அணிந்து சென்றால் காவலர்கள் அபராதம் விதிக்காமல் இருப்பார்களா என்பது சந்தேகமே. நடிகையரின் முகம் தெரியவேண்டும், அதே சமயத்தில் தலைக்கவசம் அணியாமல் வண்டி ஓட்டுவதைக் காட்டக் கூடாது. விளமரப்படம் எடுப்பவர்களுக்கு இருக்கக்கூடிய பல தடைகளுள் இதுவும் ஒன்று. எப்படியோ நடிகையரின் வசீகரமும் மறைக்கப்படாமல், விதிகளும் மீறப்படாமல் எடுத்துவிடுகிறார்கள்.
(இந்த முகம் மறைக்கும் சமாசாரம் ஆண்களுக்குக் கிடையாது. ஸ்பெளெண்டரிலும், ஷைனிலும் வருகின்ற ஆண்கள் தாடை மறைக்காத தலைக்கவசம்தான் அணிந்திருக்கிறார்களேயன்றி, சட்டியைக் கவிழ்த்தாற்போல் பேருக்கான தலைக்கவசம் கிடையாது. அவர்கள், நடிகர்கள் அல்லர்கள். அதனால் சல்தாஹை சொல்லிவிடலாம். நடிகர் ஜான் ஆப்ரஹாம் கிளாடியேட்டரின் (யமாஹா) விளம்பரத்தில் தலைக்கவசம் அணியாமல் வருகின்றார், காரணம் அந்த விளம்பரத்தில் அவர் வண்டியை சாலையில் ஓட்டவில்லை. இந்தப் பதிவில் ஸ்கூட்டர்களைப் பார்த்துவிட்டு அடுத்த பதிவில் ஆண்கள் நடித்திருக்கும் விளம்பரங்களைப் பேச விருப்பம். 160சிசி ப்ளேஸர் [கைனடிக்] ஸ்கூட்டர் குறித்தும் இந்த 125சிசி தலைப்பில் பேசப்போவதில்லை.)
ஆக, ப்ளெஷரும் (ஹீரோ ஹோண்டா), ஸ்கூட்டி பெப் +உம் (டி.வி.எஸ்) வடிவத்தில் நளினத்தைக் கொண்டிருப்பதாலும், பெண்களை முன்னிறுத்தி தங்கள் விளம்பரத்தை அமைத்துக்கொண்டதாலும் அதிகமாக ஆண்கள் உபயோகிக்கும் வாகனமாக அவை இல்லை. இந்த முனையில் (எட்ஜ்) ஆக்டிவா இவையிரண்டையும்விட ஒருபடி மேல் என்பது எனது கணிப்பு.
ஆக்டிவாவின் இந்த கோலோச்சும் தன்மையை சற்றே அசைத்துப் பார்க்க அக்ஸெஸ் (சுசுகி) வருகிறதோ என்ற சந்தேகம் அக்ஸெஸின் விளமரத்தைப் பார்த்ததும் எழுந்தது. காரணம், அக்ஸெஸின் வடிவமைப்பில் அத்தனை பெண்மைத்தன்மை கிடையாது. கிட்டத்தட்ட ஆக்டிவாவையொத்த வடிவத்தில் இருக்கின்றது. ஆக்டிவாவைவிட சிசி அதிகமாக இருக்கிறது. ஆக்டிவா 100சிசி, அக்ஸெஸ் 125சிசியாக இருக்கும். அகேகமாக பல்சக்கரமும் மாறுதானியாகத்தான் இருக்கும். மைல்திறனிலும், நீண்டதூரப் பயண சொகுசிலும் ஆக்டிவாவிற்குக் கொஞ்சம் மேலே கீழே இருந்தாலும் போதும், அக்ஸெஸ் ஆக்டிவாவின் சந்தையில் போட்டிபோட முடியும். பொறுத்திருந்து பார்க்கலாம்.
கொஞ்சம் சுயபுராணம்:
மோட்டார் விகடனுக்கு நான் சந்தாதாரர். வண்டிகளைப் பிடிக்கும் என்பதால் மோட்டார் விகடனையும் பிடிக்கும். சந்தா அனுப்பியபோது விண்ணப்பப் படிவத்தை தமிழில் பூர்த்தி செய்து அனுப்பியதால் ABUL KHALAM ASATH (நான் எழுதுவது ABUL KALAM AZAD) என அச்சடித்து வரும் இதழை உடனே பிரித்து இம்மாத பெரும்படம் (ப்ளோ அப்) என்ன என்று பார்ப்பது வழக்கம்.
இருசக்கர ஆர்வத்தில் நான் இன்னும் 25அகவைகளைத் தாண்டவில்லை ;-)

Comments