Skip to main content

Posts

Showing posts from December, 2005

சவூதி பெண் பத்திரிகையாளர்

வியாழன் வெள்ளிகளில் சாவகாசமாக ஃபூல் தமீஸோ (மொச்சைக்கொட்டையும் ரொட்டியும்), ஷுக்ஷுக்கோ (முட்டை பொடிமாஸ்) தின்றுவிட்டு, இரட்டை இலை (அரசியல் இல்லைங்க, ரெண்டு டீ பேக் போடறது) தேநீர் குடிக்கும்போது அரப் நியூஸ் செய்தித்தாளை விரிப்பேன். முதல் பக்கத்தில் ரியாத்தில் சுடப்பட்ட அல்கொய்தா தீவிரவாதியையும், கடைசிப் பக்கத்தில் கெய்ரோ ரோட்டரி கிளப் கிளியோபாட்ராவில் புன்னகைத்து நமது புன்னகை அரசி / இளவரசிகளுக்கெல்லாம் சவால் விடுகின்ற எகிப்திய நடிகை அர்வா வையும் ஒதுக்கிவிட்டு இன்றைக்கு லுப்னா ஹுசைனின் (Lubna Hussain) கட்டுரை ஏதும் வந்திருக்கிறதா எனப் பார்ப்பதும் வழக்கம். லுப்னா ஹுசைனின் முன்னோர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். சும்மாவேனும் இடையில் ஓரிரண்டு வரிகளை மேலோட்டமாகப் படித்துவிட்டு / கேட்டுவிட்டு ஜல்லியடிக்கும் மக்களை லுப்னா நையாண்டி செய்திருந்தார். 'லுப்னா, உங்கள் மூதாதையர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்களென நினைத்தேன்' 'உண்மைதான். எனது முன்னோர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்' 'இல்லையே, எனது நண்பன் நீங்கள் தாய்லாந்திலிருந்து வந்தவர் எனச் சொன்னாரே' 'தாய்லாந்தா..நானா..கிடையாதே...

ஒரு பழைய பதிவும் படிக்கவிருக்கும் புத்தகமும்

பழைய பதிவு ராயர் காப்பி க்ளப் குழுமத்தில் எழுதியது. ஸ்டூடியோ எட்டாம் வகுப்பு படிக்கும்போதுதான் அவன் முதன்முதலில் படப்பிடிப்பு ஸ்டூடியோவிற்குச் சென்றான். அதுவும்கூட உறவினரைப் பார்த்து ஒரு சந்தோஷத்தைப் பகிர்ந்துகொள்ளும் ஆர்வத்தில்தான். முதல் மேடைப் பேச்சென்பது கிட்டத்தட்ட ஒப்புவித்தல் போன்ற நிகழ்வுதான். அதுவேதான் அவனுக்கும் நடந்தது. கையில் குறிப்பேடுடன் அமர்ந்துகொண்டு பேசுகின்ற மாணவர்களின் ஒவ்வொரு அசைவையும் கவனித்து மதிப்பெண் தருகின்ற மூன்று ஆசிரியர்கள், ஐம்பது அறுபது மாணவர்கள், சில தமிழாசிரியர்கள் முன்னிலையில் தொடைகளில், கன்னங்களில் இருக்கும் தசைகள் நடுங்க அவன் பேசி..மன்னிக்கவும்..ஒப்புவித்து முடித்தான். பெஞ்சிற்குச் சென்று அமர்ந்து மொத்த மாணவர்களும் ஆசிரியர்களும் தன்னையே பார்த்துக்கொண்டிருப்பதான உணர்விலிருந்து மீள்வதற்குள் அவன் பேச்சுப்போட்டியில் இரண்டாம் பெரிசு பெற்றிருப்பதாக அறிவித்தார்கள். எட்டாம் வகுப்பு மாணவனுக்கு அது உலகத்தையே வென்றது போல் இருந்தது. தொடர்ந்து வந்த விழாவில் அந்த வெற்றிக்காக அவனுக்கு ஒரு புத்தகம் பரிசாகக் கிடைத்தது. தேசியத் தலைவர் ஒருவரின் பெயரையே அவன் கொண்டிருந்த...

பானுமதி ராமகிருஷ்ணா

பானுமதி வனவாசம் போயிருந்தான் .திரும்பி வந்தான் என் மகன் .ஹீ ஈஸ் மை சன் அங்கே இங்கே ஆங்கிலம் கலந்து பாடினால் அது மேல்தட்டு மக்களின் பாடல் என ரசிகனை நம்பவைத்துக்கொண்டிருந்த முயற்சியில் சிறிதும் மாற்றமில்லாத பாடல். படம்: எடுப்பார் கைப்பிள்ளை. கொஞ்சம் இதன் மூலக்கதையைத் தட்டி, இன்னொரு பாத்திரத்தை இடையே நுழைத்து, கமலஹாசனை இரட்டை வேடத்தில் நடிக்க வைத்தால் அதன் பெயர் சட்டம் என் கையில்' என்பது இப்போது வேண்டாத விஷயம். 'வனவாசம் போயிருந்தான் ' பாடலைப் பாடியவருக்காக இந்தப் படத்தைப் பார்க்கச் செல்லவில்லை. எங்கள் நண்பன் ஒருவன் அவ்வப்போது சண்டைக் காட்சிகளில் தலையைக் காட்டுவான். தலையை மட்டும் காட்டியவனுக்கு வசனம் பேசவும் வாய்ப்பு கிடைத்திருப்பதைப் பார்க்கவே படத்திற்குச் சென்றோம். நாயகர்களுக்கும், நாயகிகளுக்கும், இயக்குனர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தந்த கதைகள் வந்துகொண்டிருந்த (எழுபதுகளின் கடைசி) அந்நேரத்தில், நாயகனின் அம்மாவாக இந்த அம்மையார் நடித்து, அவரது பாத்திரத்துக்கும் முக்கியத்துவம் தந்த கதையமைப்பிலிருந்தே அவரது ஆளுமை விளங்கும். 'மாதுளை முத்துக்கள் மல்லிகை மொட்டுக்கள் சிந்திக்...

தாஜ் மஹல்

தாஜ் மஹல் கதை இல்லாமல் வெறுமனே பிரம்மாண்டத்தைக் காட்டி ரசிகர்களை திருப்திப்படுத்த முடியுமா? அப்படி பிரம்மாண்டத்தைக் காட்டி ரசிகர்களைத் திருப்திப்படுத்தும் முயற்சியைத்தான் தாஜ் மஹலில் செய்துபார்த்திருக்கிறார்கள். எழுபது கோடி செலவழித்து தாஜ் மஹல் உருவான கதையை மீண்டும் ஒரு முறை இந்தித் திரையில் சொல்லியிருக்கிறார்கள். * ஆட்சியில் அமர்வதற்காக ஔரங்கசீப், தாரா, ஷ¤ஜா இவர்களிடையே நடக்கும் போர்க் காட்சிகளில் கதை துவங்குகிறது. ஔரங்கசீப் வெல்கிறான். படைபலத்தால் தாராவைக் கைது செய்து, சூழ்ச்சியால் ஷ¤ஜாவை வீழ்த்தி மன்னனாக முடிசூட்டிக்கொள்ளும் ஏற்பாடுகளில் இருக்கும்போது, அவனது அக்கா ஜஹானாராவிடம் தந்தையார் ஷாஜஹான் தனது வாளை பரிசாகத் தந்தனுப்புகிறார். தந்தையார் ஷாஜஹானே வாளை தனக்குத் தந்தனுப்பியதன் காரணம், 'அன்பு அல்ல; அவரது வயோதிகத்தின் இயலாமை' எனப் பேசிவிட்டு, அப்பா ஷாஜஹானையும், அக்கா ஜஹானாராவையும் மாளிகைச் சிறையில் அடைக்கிறான் ஔரங்கசீப். அடுத்த நாள் ஷாஜஹானின் காலை உணவிற்காகச் செல்லும் பாத்திரத்தில் தாராவின் தலை துண்டித்து வைக்கப்பட்டு அனுப்பப்படுகிறது. தூரத்தில் தாஜ் மஹலைப் பார்த்துக் கொண்டிர...