Skip to main content

Posts

Showing posts from March, 2006

பட்டியல் - திரைப்படம் எனது பார்வையில்

மீன் சந்தை, மோட்டார் படகுகள், குறுகலான சந்துகள், மருந்துக் கடை, பேருந்து நிலையம் என எல்லாமே தினசரி கண் முன்னே விரியக்கூடிய, திரைக்காக யாதார்த்தத்தை மீறியிருக்காத காட்சியமைப்புகள். எந்த வீட்டுக் கூரையிலிருந்து சென்னை இத்தனை அழகாகத் தெரிகிறது என்றெல்லாம் மண்டையை உடைத்துக்கொள்ளவைக்காமல், உள்ளதை உள்ளபடி அலங்காரமே இல்லாமல் படம் பிடித்ததற்காக இயக்குனரைப் பாராட்டியே தீரவே வண்டும்; இதற்காக மட்டும்தான் . முதன்முறையாக இப்படி எடுக்கிறார்கள் என்பதல்ல; சமீபத்தில் காதலில் இருந்தே இவை திரையை ஆக்கிரமிக்கின்றன. பாடல் காட்சியின் இந்தி வரிகளும் நடனமும் மட்டுமே விதிவிலக்கு. வினியோகமும் ஆகவேண்டுமல்லவா, யதார்த்தத்தை மட்டுமே அறைந்து படமெடுத்து விருது வாங்குவதற்கு நமது திரையுலக இரசாயனம் இன்னமும் இடங்கொடுக்கவில்லையென்றே நினைக்கத் தோன்றுகிறது. பிரகாஷின் விமர்சனம் படிக்காமல் இருந்திருந்தால் இப்படி அவசரமாக பட்டியலைப் பார்த்திருப்பேனா என்பது சந்தேகமே. ஆரவாரமான நிழலுக ஆசாமிகளின் பட்டியலான தீவாரில் துவங்கி, பரிந்தா வழியாக சத்யா, கம்பெனி என கலக்கிக்கொண்டிருக்கும் தாதாக்கள் வரிசையில் நாமும் கோடம்பாக்கத்திலிருந்து நமத...

கர்லாக்கட்டை

கர்லாக்கட்டையைப் பற்றி ஜொள்ளுப்பேட்டையில் படித்து பின்னூட்டம் இட்டபின்பும் கர்லாக்கட்டையைப் பற்றி இரண்டு வரி எழுதவில்லையென்றால், மனசாட்சி என்னைக் கர்லாக்கட்டையால் சாத்து சாத்தென்று சாத்தும். கர்லாக்கட்டை: சந்துக்கு சந்துக்கு உடற்பயிற்சிக்கூடங்களில் கட்டுமஸ்தான ஆப்பிரிக்கர்களின் படங்கள் நிறைந்திருக்கும் இந்த நேரத்தில் கர்லாக்கட்டை சுழற்சியென்பது காலாவதியாகிப் போயிருக்கும் ஒன்று. நானறிந்த வரையில் சென்னையில் இந்த நிலைமைதான்; மற்ற நகரங்களில் கிராமங்களில் என்ன நிலையென அறியேன். மூன்று ஆண்டுகளுக்கு முன் வரையிலும் கர்லாக்கட்டை சென்னை - சரவணா ஸ்டோர்ஸிலும் கிடைத்தது. சென்ற ஆண்டில் சென்னை - தாயார் சாகிபு தெருவைச் சுற்றிலும் இருக்கும் உடற்பயிற்சிப் பொருள்களின் விற்பனைக் கூடங்களில் ஒரு மூலையில் தூசு படிந்து பாவமாகக் கிடந்தது. இந்த வருடம் அந்தப் பக்கமெல்லாம் போகாததால் கர்லாக்கட்டையின் இன்றைய சந்தை நிலவரம் தெரியாது. தோள், புஜம், விலா இவற்றிற்கென தனித்தனியாக பயிற்சி இயந்திரங்கள் அதிகமாக புழக்கத்தில் வந்துவிட்டதால், கர்லாவின் மதிப்பு குறைந்துவிட்டது. கர்லாவின் அமைப்பைப் பார்ப்போம். விகடனில் சத்யராஜின...

டோஸ்மாஸ்டர்ஸ் அணிவகுப்பு

சென்ற வாரம் எங்கள் பகுதியில் டோஸ்ட்மாஸ்டர்ஸில் வட்ட அளவிலான போட்டிகள் நடந்து முடிந்தன. நான்கு போட்டிகள் நடந்தன. 1. பேச்சுப் போட்டி (பிரிபேர்ட்டு ஸ்பீச் கான்டெஸ்ட் என்பார்கள்) 2. பேசியதை மதிப்பிடும் போட்டி (எவால்யுயேஷன் கான்டெஸ்ட்) 3. நகைச்சுவைப் பேச்சுப்போட்டி (ஹ்யூமரஸ் ஸ்பீச் கான்டெஸ்ட்) 4. உடனடி பேச்சுப்போட்டி - தலைப்பு தந்து ஒரு நிமிடத்திற்குள் பேசவேண்டும். ஒன்று முதல் இரண்டு நிமிடங்களே பேசவேண்டும் (டேபிள் டாப்பிக் கான்டெஸ்ட்) குழு அளவில் வென்று, தொகுதி அளவில் வென்று பிறகு வட்ட அளவில் வென்றால் மாவட்ட அளவில் நடக்கும் போட்டிகளுக்குச் செல்லலாம். மாவட்ட அளவிலான போட்டிகள் அடுத்த மாதம் துபாயில் நடக்கவிருக்கின்றன. இந்த வருடம் எங்கள் குழுவிலிருந்து யாரும் வட்ட அளவில் வெல்லவில்லை. நான் குழுவில் வென்று தொகுதி வரையில் சென்றேன், அங்கே நடந்த போட்டியில் ஊத்திக் கொண்டேன், சல்தா ஹை. வெற்றி தோல்வியா முக்கியம், பங்கேற்பதுதான் முக்கியம். ஜித்தாவில் நடந்த போட்டிகளில் சவூதி, இந்தியர், பிலிப்பினோ என கலவையாக மக்கள் பரிசுகளை தட்டிச் சென்றார்கள். நேற்றைய செய்தித்தாளில் அதன் விவரங்கள் வெளிவரவும், மக்கள் இணைய...

பிடித்த நான்கு - உணவு - கடைசிப் பகுதி

உணவைப் பற்றிப் பேசுவதற்கு முன் சில வரிகள். என்ன வேண்டுமானாலும் உண்ணலாம், ஆனால் உண்டது செறிமானம் ஆகிறதா என்பது மிகவும் முக்கியம். விரும்பியதைத் தின்றுவிட்டு பிறகு டயானில்லிலும் (சர்க்கரைக்கு), டோனாக்டிலும் (கொலஸ்ட்ராலுக்கு) காசைக் கொட்டிக்கொண்டிருப்பதில் அர்த்தமே இல்லை. அளவோடு உண்டு வளமோடு வாழ்வோம்! வேண்டுமென்றால் முன்பு மரத்தடியில் எழுதியிருப்பதை படித்துப் பாருங்களேன். பிடித்த நான்கு உணவுவகைகள் 1.தலைக்கறி தக்கடி: இது அச்சு அசல் நெல்லை மேலப்பாளையத்தார்களின் உணவு. துணைவியார் விடுமுறையில் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு வரும்போது, கேட்டனுப்பிய புத்தகங்களைக் கொண்டுவருவாரா என்பது தெரியாது, ஆனால், இரண்டு மூன்று கிலோ இடித்த சிகப்புப் பச்சரிசி மாவு எடுத்து வருவார். தக்கடி போடுவது அதில்தான். தக்கடி என்றால் புதிதான ஒன்று அன்று. கொழுக்கட்டையைக் குழம்பில் போட்டு எடுப்பது. கிட்டத்தட்ட கேரளாவின் குஞ்ஞுப்பத்திரி போன்ற உணவுதான். முதலில் கொழுக்கட்டைகளை அவித்து எடுத்துவிட்டு, பிறகு குழம்பைத் தயாரித்து அதில் கொழுக்கட்டைகளை ஊறவிடுவார்கள். குழம்பிற்கு ஏற்றது தலைக்கறிதான். பொறுமையாக நொறுக்கெலும்புகளை...

பிடித்த நான்கு - திரைப்படங்கள்

1. ஆயிரத்தில் ஒருவன்: சுஜாதாவின் 'திரைக்கதை எழுதுவது எப்படி' புத்தகத்தில் சில அடிப்படைகளைச் சொல்கிறார். அமைதியான வாழ்க்கை இருக்கவேண்டும், பிறகு அது கலைத்துப் போடப்படவேண்டும், கடைசியில் வெற்றி பெறவேணடும். கலைத்துப் போடப்படும் சமாசாரம் படம் துவங்கி அரைமணி நேரத்துக்குள் நிகழ்ந்துவிடவேண்டும். இதற்கான உதாரணமாக அவர் புத்தகத்தில் சொல்வது 'முதல்வன்' திரைப்படத்தை. அமைதியான நிருபர் வாழ்க்கை, முதல்வருடனான சந்திப்பால் கலைத்துப் போடப்படுகிறது. போராட்டத்தில் கடைசியில் வெற்றி. ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தை கடைசி முறையாகப் பார்த்தபோது சுஜாதாவின் புத்தகத்தைப் படித்திருந்தேனில்லை, ஆனால், புத்தகத்தைப் படித்ததும் நினைத்துப் பார்த்தேன், இலக்கணம் சரியாகவே பொருந்துகிறது. அமைதியான வைத்தியர் வாழ்க்கை, சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு சிகிச்சையளிப்பதால் அரசின் கோபத்திற்கு ஆளாகி அடிமையாக்கப்பட்டு ஏதோ ஒரு தீவிற்கு விற்கப்படுகிறார். போராட்டம், கடைசியில் நாடு விடுதலை பெற, இவர் ஆட்சியெல்லாம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு, வைத்தியர் வேலைக்கே புறப்படுகிறார். சிக்கலே இல்லாத கதை, சுஜாதாவின் இலக்கணப்படி. ...

பிடித்த நான்கு - பகுதி 2

தொடர்ச்சி.. பேஷவாருக்கு எல்லைப் பிரச்சனைகள் இருக்கின்றன. பாதிக்கு மேற்பட்ட பேஷ்வாரிகள் தங்களை ஆப்கானிகள் என்று சொல்லிக்கொள்வதிலேயே பெருமைப்படுகின்றார்கள். எனக்கும் புஸ்தஷ்கியால் ஆப்கானைப் பிடிக்காமல் பேஷ்வாரைப் பிடித்திருக்கிறது. குதிரையை ஓட்டிக்கொண்டே ஆட்டின் உடலை எடுத்து வந்து குறிப்பிட்ட வட்டத்துக்குள் போடவேண்டும், அதுதான் புஸ்தஷ்கி. ஒருவர் எடுத்துச் செல்லும்போது இன்னொருவர் பிடுங்குவதும் தள்ளுவதுமாக குதிரையில் போட்டி. குதா கவாவில், போட்டிக் காட்சியில் ஆட்டின் உடலை இருவருக்கொருவர் பிடுங்கிக்கொள்ளும்போது, ஸ்ரீதேவி அணிந்திருக்கும் முகத்திரை விலகி அவள் பெண் என்பது தெரியவருகிறது. அப்போது, புன்னகைத்துக்கொண்டே அமிதாப் ஸ்ரீதேவிக்காக விட்டுக்கொடுக்கும் காட்சியை இன்றெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கலாம். பாக்கிஸ்தானிய நண்பர்கள் சிலரை விருந்துக்கு அழைத்தபோது, ஒருவர் பட்டாணியர் தொப்பி அணிந்து வந்தார். பாக்கிஸ்தானில் தொப்பிகளுக்கென்று தனியாகப் பெயர்கள் இருக்கின்றன. தாஜ்மஹாலின் வடிவத்தைப் போல நெற்றிப் பகுதி அமைந்திருந்து சரிகை வேலைப்பாட்டுடன் இருந்தால், அது சிந்தி தொப்பி. புசுபுசுவென கொஞ்சம் நீண்டு ...

பிடித்த நான்கு - பகுதி 1

பிடித்த நால்வர், பிடித்த நான்கு? இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்லும்போது எந்த நினைப்பில் இருக்கிறோமோ அதுவே முன்னே நிற்கும் என்பதில் சந்தேகம் இல்லை. கொஞ்சம் புத்திசாலித்தனமாக நடந்துகொள்வதாக நினைத்துக்கொண்டு கொஞ்சம் ஜல்லியும் அடிக்கலாம். மனதில் இருப்பவற்றை வெளிப்படையாகவும் சொல்லலாம். எந்த அளவுகோலை எடுத்துக்கொண்டு இந்த நான்கை விவரிப்பது என்பதில் குழப்பமே உண்டாகிறது. கொஞ்சம் ஜல்லியும், கொஞ்சம் மனதில் இருப்பதுமாக, கலவையாக்கி எழுதுகிறேன். எது ஜல்லி, எது மனதில் இருப்பது என்பது படிப்பவர்களுக்கு, அதாவது குழுக்களில் வலைப்பூக்களில் நம்மைப் படிப்பவர்களுக்கு நன்றாக விளங்கிவிடும். பிடித்த அரசியல் தலைவர்கள்: அ. காயிதே மில்லத் இஸ்மாயீல் சாஹேப்: சிறுபான்மையினராக இருந்துகொண்டு தேசியமும் பேசலாம் என்பதை வாழ்ந்துகாட்டிய இவரை எனக்கு மிகவும் பிடிக்கும். இந்தியாவின் தேசிய மொழியாக எதை வைக்கலாம் என்ற விவாதத்தின்போது தமிழை வைக்கலாம் என்று குரல் கொடுத்தவராம். பாராளுமனறத்தில் காரசாரமான விவாதங்களில் வாஜ்பாய் அவர்கள் இஸ்மாயீல் சாஹேபுடன் ஈடுபட்டிருந்த நாளில், பாராளுமன்ற வளாகத்திலிருக்கும் தபால் தந்தி அலுவலகத்தில் பெஞ...

சிங்கப்பூர் சென்று வந்தேன்

சென்ற மாதத்தில் வலைப்பூக்களின் பக்கம் வர இயலாமற்போனது. மூன்று நாள்களுக்கான பயணமே என்றாலும், பயணத்திற்கு முன்னும் பின்னும் நடக்கின்ற கவனக் குவியல் இணைய உலாவைக் குறைத்துவிட்டது. நேரம் கிடையாது என்றெல்லாம் சொல்லமாட்டேன். நேரம் என்பது நாமாக வகுத்துக்கொள்வதுதான். சில நேரங்களில் சில வேலைகளில் மனதைச் செலுத்துவதற்கு முன்னுரிமை தருகிறோம், அவ்வளவே. சென்ற மாதத்திய முன்னுரிமை பயணம் தொடர்பானவற்றிற்கு என்ற அளவில்தான் கொள்கிறேன். சிங்கைப் பயணம் சுற்றுலாவாகச் சென்றது அன்று; அலுவலகத்தில் அனுப்பினார்கள் சென்று வந்தேன். நினைவுக்காக, அலுவலகத்திலிருந்து வெளியே வந்ததும் அலெக்ஸாண்ட்ரா சாலையில் ஒரு புகைப்படம் சொந்தத்திற்காக எடுத்துக்கொண்டேன். நண்பர்களால் அதிகம் பேசப்பட்ட 'முஸ்தபா' விற்குச் செல்ல நேரம் கிடைத்தது. கொஞ்சமே கடைகளைப் பார்த்து, அதிகமாக முஸ்தபாவில் இருந்த எஸ்கலேட்டர்கள், லிஃப்ட்டுகளைப் பார்த்து (தொழில் சார்), கடைக்காரரிடம் தமிழில் பேசி, "சார் தமிழ்ல மெட்ராஸ் திருவல்லிக்கேணி ஸ்டைல் இருக்குங்களே" என்ற கடைக்காரரிடம் கொஞ்சம் தாய் மண் செண்டிமெண்டைக் கலந்து உரையாடிவிட்டு வந்தேன். சிங்கப...