தொடர்ச்சி..
பேஷவாருக்கு எல்லைப் பிரச்சனைகள் இருக்கின்றன. பாதிக்கு மேற்பட்ட பேஷ்வாரிகள் தங்களை ஆப்கானிகள் என்று சொல்லிக்கொள்வதிலேயே பெருமைப்படுகின்றார்கள். எனக்கும் புஸ்தஷ்கியால் ஆப்கானைப் பிடிக்காமல் பேஷ்வாரைப் பிடித்திருக்கிறது.
குதிரையை ஓட்டிக்கொண்டே ஆட்டின் உடலை எடுத்து வந்து குறிப்பிட்ட வட்டத்துக்குள் போடவேண்டும், அதுதான் புஸ்தஷ்கி. ஒருவர் எடுத்துச் செல்லும்போது இன்னொருவர் பிடுங்குவதும் தள்ளுவதுமாக குதிரையில் போட்டி. குதா கவாவில், போட்டிக் காட்சியில் ஆட்டின் உடலை இருவருக்கொருவர் பிடுங்கிக்கொள்ளும்போது, ஸ்ரீதேவி அணிந்திருக்கும் முகத்திரை விலகி அவள் பெண் என்பது தெரியவருகிறது. அப்போது, புன்னகைத்துக்கொண்டே அமிதாப் ஸ்ரீதேவிக்காக விட்டுக்கொடுக்கும் காட்சியை இன்றெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கலாம்.
பாக்கிஸ்தானிய நண்பர்கள் சிலரை விருந்துக்கு அழைத்தபோது, ஒருவர் பட்டாணியர் தொப்பி அணிந்து வந்தார். பாக்கிஸ்தானில் தொப்பிகளுக்கென்று தனியாகப் பெயர்கள் இருக்கின்றன. தாஜ்மஹாலின் வடிவத்தைப் போல நெற்றிப் பகுதி அமைந்திருந்து சரிகை வேலைப்பாட்டுடன் இருந்தால், அது சிந்தி தொப்பி. புசுபுசுவென கொஞ்சம் நீண்டு தலையவிட உயரமாக அமைந்தால் அது ஜின்னா கேப். கம்பளித் தொப்பியில் கீழ்ப்பகுதி சுருட்டிவிடப்பட்டு தோசைக்கல்லின் கீழ் வட்டு கட்டியதுபோல் தலையில் பொருத்திக்கொண்டால் அது பட்டாண் கேப். அந்த பட்டாண் கேப்பை அணிந்துகொண்டு நண்பர் வந்ததும் விநோதமாகப் பார்த்தேன். அது அச்சு அசல் பேஷ்வாரி பாணி.
தொடர்ந்த சில நாளில், கிரிக்கெட் வர்ணனையின்போது அதே போன்ற தொப்பியை இம்ரான் கான் ஆனிந்து வந்து பேசியதும் இன்னமும் அது பிடித்துப்போனது. அந்தப் பேச்சில்தான் இம்ரான் கான் பேஷவாரின் 'நமக் மண்டி'யைக் குறிப்பிட்டார்.
நண்பர்களிடம் நமக் மண்டி குறித்து கேட்கவும், பேஷவார் நிறையவே பிடித்துப் போனது. என்றோ படித்த அசோகமித்திரனின் மானசரோவரின் மற்ற வசனங்கள் மறந்துவிட்டன. ஆனால், நடிகை ஒருத்தி கதாநாயகனை 'ஏய் பேஷவார் பேவகூஃப்' (டேய் பேஷவார் முட்டாளே) என்று அழைப்பது மட்டும் நினைவிலிருப்பது ஒன்று போதும் பேஷவார் எனக்குப் பிடிக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாக.
இத்தனை பிடித்த பேஷவாரில், என்னை மிகவும் சோகமடையச் செய்யும் ஒரு நிகழ்வும் நடந்திருக்கிறது. எனது முன்னேற்றத்திற்குக் காரணமாக இருந்த மேலாளர் பேஷவார் நகரில்தான் பைபாஸ் சர்ஜரி செய்து கொண்டார். அறுவை சிகிச்சை முடிந்த நான்காம் நாள் மரணமடைந்துவிட்டார். இரண்டு மாதங்களாக மனதில் மூலையில் நிரந்தரமாக இடம்பெற்றுவிட்ட சோகம் இது.
ஆ. எம்.ஜி.எம். ரிசார்ட் - கிழக்குக் கடற்கரைச் சாலை:
விடுமுறைக்கு வந்தால் இரண்டொரு நாள்கள் மனைவி மக்களை அழைத்துக்கொண்டு எங்காவது தலைமறைவாகிவிடுவது வழக்கம். எம்.ஜி.எம். ரிசார்ட்டில் ஒருமுறை தலைமறைவானேன். அமைதியான கடற்கரை, கடலை நோக்கிய அறை, பக்கத்திலேயே தீம்பார்க்கில் ஒரு சுற்று சுற்றிவிட்டு அலுப்பாக வண்டி பிடித்து நகருக்குள் செல்லாமல், அக்கடாவென பொடிநடையாக ரிசார்ட்டுக்கு வந்துவிடலாம்.
தீம்பார்க்கில் விளையாடிய அலுப்பு தீர நீச்சல் குளத்தில் மூழ்கி எழுந்து, உடை மாற்றி ஸ்மார்ட் கேஷுவல் உடையில் உணவுக்கூடத்திற்கு வந்து கடலை நோக்கிய மேசையில் அமர்ந்து உஷ் உஷ் என்னும் கடலலை சத்தத்தைக் கேட்டுக்கொண்டே சாப்பிட்டுவிட்டு, அரைக்குச் சென்று கண்ணாடிக் கதவை விரியத் திறந்துவைத்து, பாலிமர் நாற்காலியைப் போட்டு புல்தரையில் அமர்ந்துகொண்டு பக்கத்தில் ஒருபாக்கெட் சிகெரெட்டையும் வைத்துக்கொண்டால்..ஆஹா. இரவு பத்து மணிக்கு மேல் தூரத்தில் எங்கோ நடக்கும் கார்ப்பரேட் விருந்துகளிலிருந்து மெல்லிசைச் சத்தமோ, யாரோ அடிக்கும் அபத்தமான ஜோக்குகளோ லேசாகக் காதில் விழும். நேரம் போவதே தெரியாது.
காலையில் ஏழு மணிக்கெல்லாம் எழுந்து உடற்பயிற்சிக்கூடத்தில் ட்ரெட்மில்லுக்குச் சென்றால் அங்கே பயிற்சியாளராக இருக்கும் இளைஞரின் உபயத்தில் எதாவது பாட்டுகளைப் பார்த்துக்கொண்டே நடை பழகலாம். நேரம் ஆக ஆக மற்றவர்கள் வர தொலைக்காட்சி ஆங்கிலத்துக்கு மாறிவிடும். அதை முடித்து 'சானா'வில் அமர்ந்து எழுந்து வந்தால், ஆஹா, பத்து கிலோ எடை குறைந்து இளமையானதுபோல் தோன்றும்.
எம்.ஜி.எம். ரிசார்ட் எனக்குப் பிடித்த இடம்.
இ.திர்லக்கண்ணி:
இது எனக்குப் பிடித்த இடம் என்பதை விளக்கவே தேவையில்லை. கவிதைகளையும், அரசியலையும், உடற்பயிற்சியையும், வாழ்க்கையையும், கல்வியையும், நட்பையும் எனக்கு அறிமுகப்படுத்திய இடம். பிறந்து வளர்ந்த இடம்.
திர்லக்கண்ணியில் சொந்தமாக ஒரு வீடு வாங்கவேண்டும் என்ற எண்ணம் இன்னும் நிறைவேறவில்லை. இப்போது இருக்கும் மனப்பக்குவத்தில், நில விலையேற்றங்களில் இனி திர்லக்கண்ணியில் வீடு வாங்குவேனென்றும் தோன்றவில்லை.
துபாய்:
துபாய் பற்றிய கவிதை ஒன்று எழுதியிருக்கிறேன். எப்போது இங்கு காலடி வைத்தேனோ அன்று முதல், விட்டு வந்து பதிமூன்று வருடங்களாகியும், துபாய்க்குப் போவது என்றாலே எத்தனை மகிழ்ச்சி வரும் என்று சொல்லமுடியாது.
இம்மாதத்தின் முதல்வாரத்தில்கூட சென்று வந்தேன். அனேகமாக அடுத்த மாதத்தின் இரண்டாவது வாரத்திலும் போக வாய்ப்பு இருக்கிறது. நூறுமுறை சென்றாலும் நூற்றியொன்றாவது முறையாக அங்கு போக விருப்பப்படுவேன். துபாயில் எனக்குக் கிடைத்த நட்பும், வளமும், தொழில் அறிவும் என்றைக்குமே மறக்க முடியாதவை.
உணவும் திரைப்படங்களும் அடுத்த பதிவில்...
அன்புடன்
ஆசாத்

Comments
எனது அழைப்பில் முதலாவதாக உங்களை அழைத்தது வீண் போகவில்லை.
பிடித்த விஷயங்களை ஏன் பிடிக்கிறது என்பதை விவரமாக, பல விஷயங்களை கலந்து ஒரு காக்டெயில் விருந்து கொடுத்திருக்கிறீர்கள்.