உணவைப் பற்றிப் பேசுவதற்கு முன் சில வரிகள். என்ன வேண்டுமானாலும் உண்ணலாம், ஆனால் உண்டது செறிமானம் ஆகிறதா என்பது மிகவும் முக்கியம். விரும்பியதைத் தின்றுவிட்டு பிறகு டயானில்லிலும் (சர்க்கரைக்கு), டோனாக்டிலும் (கொலஸ்ட்ராலுக்கு) காசைக் கொட்டிக்கொண்டிருப்பதில் அர்த்தமே இல்லை.
அளவோடு உண்டு வளமோடு வாழ்வோம்!
வேண்டுமென்றால் முன்பு மரத்தடியில் எழுதியிருப்பதை படித்துப் பாருங்களேன்.
பிடித்த நான்கு உணவுவகைகள்
1.தலைக்கறி தக்கடி:
இது அச்சு அசல் நெல்லை மேலப்பாளையத்தார்களின் உணவு.
துணைவியார் விடுமுறையில் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு வரும்போது, கேட்டனுப்பிய புத்தகங்களைக் கொண்டுவருவாரா என்பது தெரியாது, ஆனால், இரண்டு மூன்று கிலோ இடித்த சிகப்புப் பச்சரிசி மாவு எடுத்து வருவார். தக்கடி போடுவது அதில்தான்.
தக்கடி என்றால் புதிதான ஒன்று அன்று. கொழுக்கட்டையைக் குழம்பில் போட்டு எடுப்பது. கிட்டத்தட்ட கேரளாவின் குஞ்ஞுப்பத்திரி போன்ற உணவுதான். முதலில் கொழுக்கட்டைகளை அவித்து எடுத்துவிட்டு, பிறகு குழம்பைத் தயாரித்து அதில் கொழுக்கட்டைகளை ஊறவிடுவார்கள். குழம்பிற்கு ஏற்றது தலைக்கறிதான். பொறுமையாக நொறுக்கெலும்புகளை நீக்கிவிட்டு பிறகுதான் சமைக்கவேண்டும்.
மாப்பிள்ளை வீட்டார்கள் மாலை நேரச் சிற்றுண்டிக்கு வருகிறார்களென்றால் தலைக்கறி தக்கடி சமைப்பதென்பது எங்கள் குடும்பங்களில் வழக்கமாக இருந்தது. இப்போது அந்த வழக்கமெல்லாம் மலையேறிவிட்டது. வேலை அதிகமென்பதால் தவிர்த்துவிட்டார்களோ என்னமோ.
நான் விரும்பி சமைக்கச் சொல்லி சாப்பிடும் உணவு வகைகளுள் இதுவும் ஒன்று.
2.காய்கறி பிரியாணி, பொறித்த கோழி, எண்ணெய்க் கத்தரிக்காய்:
எப்படியோ இது எங்கள் வீட்டின் விருந்தாளி சமையலாகிவிட்டது. காய்கறி வகைகளை மட்டுமே சாப்பிடுபவர்களும், மாமிசம் சாப்பிடுபவர்களும் கலந்து விருந்திற்கு வருகின்ற நாள்களில் இப்படி சமைக்கத் துவங்கி, பிறகு அதுவே விருந்தினர் சமையலாகிப் போனது. காய்கறி மட்டுமே சாப்பிடுபவர்கள் பிரியாணியையும், கத்தரிக்காயையும் சாப்பிட, மிலிட்டரிக்காரர்கள் :) பொறித்த கோழியை எடுத்துக்கொள்வார்கள்.
வெறும் காய்கறி போட்டாலுமே பிரியாணியில் சுவை குன்றிவிடாமல் பார்த்துக்கொள்ள மசாலாவில் சில சித்து வேலைகள் செய்யவேண்டும், அது தொழில் ரகசியம்.
3.கடாய் கோஷ் - தாஸா வாலா:
ஒன்றுமில்லை, சமைத்த கடாயில் அப்படியே இறைச்சியை வைத்துத் தருவது கடாய் கோஷ். பாக்கிஸ்தானி உணவு வகை. இங்கெல்லாம் என்னய்யா கடாய் கோஷ்? நமக் மண்டி கடாய் கோஷ்தான் கடாய் கோஷ் என அங்கலாய்க்கும் பாக்கிஸ்தானி நண்பர்கள் ஓரிருவரை அறிந்திருக்கிறேன்.
ஜித்தாவில் குளிர்பதனத்தில் வைக்கப்பட்ட இறைச்சி, புதிய இறைச்சி இரண்டும் கிடைப்பதால், உணவு விடுதிகளில் கடாய் கோஷ் சொல்லும்போதே 'தாஸா' (புதியது) என்று சொல்லிவிடுதல் நல்லது. இல்லையென்றால், கடாய் கோஷ் கடாயில் வராது; தட்டில்தான் வரும். தட்டில் வரும் கடாய் கோஷ், குளிர்பதனத்தில் வைக்கப்பட்ட இறைச்சியில் செய்தது.
கடாய் கோஷை தந்தூரி ரொட்டியுடன்தான் சாப்பிடவேண்டும். பரோட்டாவெல்லாம் சரிவராது.
கடாய் கோஷ், சூடான தந்தூரி, ராய்த்தா (தயிரும், புதினாவும் கலந்து அரைத்த சட்னி) உடனனிருந்து சாப்பிட யாராவது பாக்கிஸ்தான் பஞ்சாபி நண்பர், பேசுவதற்கு இரண்டு நாட்டிற்கும் பொதுவான எதாவது விஷயம்...திலிப் குமாரோ, நூர்ஜஹானோ, ஸீபா பக்தியாரோ, குலாம் அலியோ, நுஸ்ரத் ஃபதே அலிகானோ, கிரிக்கெட்டோ இப்படி ஏதாவது ஒன்று...சாப்பாட்டை ரசிக்கலாம்..அட அட.
4.தாளித்த கேழ்வரகு சேமியா:
மாமிச வகைகளைக் கூடுமான வரையில் தவிர்த்துக்கொள்ளச் சொல்லி மருத்துவர் பரிந்துரைத்த இந்த ஒருவருடமாக இது மிகவும் பிடித்த உணவாகிப்போனது. பாக்கெட்டில் வரும் சேமியாவை நனைத்து, இட்லி சட்டியில் வைத்து அவித்தெடுத்துவிட்டு, பிறகு தாளிப்பார்கள்.
மற்றவர்கள் தேங்காய்ப்பாலை ஊற்றிக் குழைத்து சர்க்கரையெல்லாம் போட்டு சேமியாவை வெட்டும்போது, நமக்கு விதித்தது இதுதான் என ரசித்து சாப்பிடவேண்டும். அவசியம் வேண்டி உண்ணத் துவங்கிய பத்திய உணவைக் கூட ரசித்து சாப்பிட முடிகிறது.
மனசு இருந்தா எல்லாத்தையும் ரசிக்கலாங்க.
மேற்சொன்ன உணவு வகைகளில் 1, 2, 3 ஐச் சாப்பிட்டால்,
மருத்துவர் சொல்லாமலே மருந்தின் அளவைக் கூட்டிக்கொள்ளலாம் :)
அல்லது
அடுத்த வாரம் முழுவதும் பட்டினி கிடக்கலாம் :)
அல்லது
இரண்டு மடங்கு உடற்பயிற்சி செய்யலாம் :)
வாரத்துக்கு இருவத்தோரு வேளைன்னு பிரிச்சுக்கணுங்க. ஒரு வேளைல கொழுப்பு கூடுதா, அடுத்ததுல கொறச்சுக்கணும். ஒண்ணுல அரிசி நெறைய ஆகிருச்சா, அடுத்ததுல கொறச்சுக்கணும். இன்னிக்கு கறி தின்னாச்சா ரெண்டு நாளுக்கு ஆடு மாடு எதையும் கண்ணால கூடப் பாக்கக்கூடாது. அட, குட் டே பிஸ்கெட்டு ரெண்டு கூடுதலா தின்னாச்சா, அடுத்து ரெண்டு மூணு தடவ டீ குடிக்கும்போது சக்கர போட்டுக்கவேணாம். லைஃபு - வொர்க்கு பேலன்சிங் மட்டும் பத்தாதுங்க, சாப்பாட்டுலயும் பேலன்ஸிங் பண்ணணும்.
கித்னா காத்தே ஹோ, உத்னா ஜலாத்தே ஹோ?
எவ்வளவு சாப்பிடுகிறாயோ, அவ்வளவையும் செறிக்கிறாயா?
அன்புடன்
ஆசாத்

Comments