1. ஆயிரத்தில் ஒருவன்:
சுஜாதாவின் 'திரைக்கதை எழுதுவது எப்படி' புத்தகத்தில் சில அடிப்படைகளைச் சொல்கிறார். அமைதியான வாழ்க்கை இருக்கவேண்டும், பிறகு அது கலைத்துப் போடப்படவேண்டும், கடைசியில் வெற்றி பெறவேணடும். கலைத்துப் போடப்படும் சமாசாரம் படம் துவங்கி அரைமணி நேரத்துக்குள் நிகழ்ந்துவிடவேண்டும். இதற்கான உதாரணமாக அவர் புத்தகத்தில் சொல்வது 'முதல்வன்' திரைப்படத்தை.
அமைதியான நிருபர் வாழ்க்கை, முதல்வருடனான சந்திப்பால் கலைத்துப் போடப்படுகிறது. போராட்டத்தில் கடைசியில் வெற்றி.
ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தை கடைசி முறையாகப் பார்த்தபோது சுஜாதாவின் புத்தகத்தைப் படித்திருந்தேனில்லை, ஆனால், புத்தகத்தைப் படித்ததும் நினைத்துப் பார்த்தேன், இலக்கணம் சரியாகவே பொருந்துகிறது.
அமைதியான வைத்தியர் வாழ்க்கை, சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு சிகிச்சையளிப்பதால் அரசின் கோபத்திற்கு ஆளாகி அடிமையாக்கப்பட்டு ஏதோ ஒரு தீவிற்கு விற்கப்படுகிறார். போராட்டம், கடைசியில் நாடு விடுதலை பெற, இவர் ஆட்சியெல்லாம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு, வைத்தியர் வேலைக்கே புறப்படுகிறார். சிக்கலே இல்லாத கதை, சுஜாதாவின் இலக்கணப்படி. நல்ல திரைக்கதைக்குள் இந்த இலக்கணம் தானாகவே அமையும் என்கிறார், ஆயிரத்தில் ஒருவனில் அமைந்துள்ளது.
ஒவ்வொரு முறை இந்தப் படத்தைப் பார்க்கும்போதும் இதன் பிரம்மாண்டத்தில் லயித்துப்போகிறேன். சரவிளக்கிலிருந்து கட்டில் வரையில் நேர்த்தியாக பார்த்துப் பார்த்து செய்யப்பட்ட கலை நுணுக்கம். பாய்மரக் கப்பல்கள், கடல் கொள்ளையர், பெண்களை ஏலம் விடுவது, அதில் நிகழும் அரசியல், எனக்குப் பிடித்த கத்திச் சண்டைகள், சிருங்காரத்துக்கு ஒரு பாடல், வீரத்துக்கு ஒரு பாடல், காதலர் பிரிவுக்கு ஒரு பாடல் என வகைக்கு ஒன்றாக கணக்குப் போட்டு வைத்ததைப் போல, எதைச் சொல்வது எதை விடுவது.
எத்தனை முறை இதனைப் பார்த்தேன் என்ற கணக்கு இல்லை. பார்க்கும்போதெல்லாம் ரசித்தேன் என்பதே கணக்கு.
இணைய நண்பர்கள் யாரேனும் என்னைச் சந்தித்தீர்களென்றால், எம்.ஜி.ஆர். - நம்பியார் சண்டைக் காட்சியின் துவக்க வசனங்களை என்னை பேசச்சொல்லிக் கேட்கலாம்.
"மதங்கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா?"
"சினங்கொண்ட சிங்கத்தின் முன் தோற்று ஓடும்!"
"தோல்வியையே காணாதவன் நான்!"
"தோல்வியையே எதிரிக்கு பரிசாக அளிப்பவன் நான்!"
"மோதிப் பார்ப்பதுதான் உனது முடிவா?"
"உங்கள் முடிவு அதுதானென்றால் நான் தயார்!"
2. மொஹலே ஆஸம்:
இதைப் பற்றி அடிக்கடி எழுதியாகிவிட்டது. ஜலாலுத்தீன் மெஹம்மத் அக்பரில் துவங்கி, ஜில்லே இலாஹி ஜில்லே இலாஹி வசனம் வரையில் கண்முன்னே ஓடும்.
இதன் ப்யார் கியா தோ டர்னா க்யா பாடலையும், ஹம்பி தேக்கேங்கே பாடலையும் அதே சந்தத்தில் மொழி பெயர்த்திருக்கிறேன்.
ஹம்பி தேக்கேங்கே பாடல் எனது கஜல் புத்தகத்திலும் இடம் பெற்றிருக்கிறது.
3. தென்றலே என்னைத் தொடு:
நான் இந்தப் படத்தின் ரசிகன் என்பது மரத்தடி நண்பர்களுக்கும் எல்லே ராம் அவர்களுக்கும் நன்றாகவே தெரியும். கதாநாயகி இப்போது எங்கோ அமெரிக்காவில் குடியேறிவிட்டதாக அறிந்தேன். ஸ்பிரிங்க் தலையர் என எங்களால் செல்லமாக அழைக்கப்பட்ட மோகன்தான் நாயகர், ஜெயஸ்ரீ என்பவர் நாயகி.
கோயில் சிற்பங்களைப் பழிக்கும் அழகான பெண்சித்திரம்
கோடி மின்னல்களில் பிறந்து ஒளிவீசும் நட்சத்திரம்
தேமா - தேமாங்கனி - புளிமா - புளிமாங்காய் - தேமாங்கனி
என்ன அழகிய அசை. ராஜா - வாலி. அற்புதம்.
இந்தப் படம் பிடித்துப்போனதற்கு இது வெளியான நேரத்தில் எனக்கிருந்த வயதும், ஒன்றரை ஆண்டுகளாக சவூதியில் தொலைக்காட்சிப் பெட்டியில் படங்களைப் பார்த்து திடீரென்று பெரிய திரையில் படத்தைப் பார்த்த பிரமிப்பும் கூட காரணங்களாக இருக்கலாம்.
இன்றைக்கும் இந்தப் படம் பிடிக்கும்.
4. நினைத்தாலே இனிக்கும்:
பதினெட்டு வயதில் ஜெயப்பிரதாவின் ரசிகனாகாத இளைஞனும் ஒரு இளைஞனா ;)
படம் அலங்காரில் ஓடிய வரையில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மாலைக் காட்சியில் எங்கள் கூட்டம் ஆஜர்.
இடையில் ஒரு நாளில் தொலைக் காட்சியில் இது போடப்பட்ட போது வளர்ந்துவிட்ட பெரிய மனிதர்களாக அதே நண்பர்கள் இதனைப் பார்த்து பழைய நினைவுகளை அசைபோட்டது இன்னொரு சுகமான அனுபவம்.
பிடித்த நான்கு உணவு வகைகள்..பிறகு..
அன்புடன்
ஆசாத்

Comments
கைய குடுங்கோ! சிவ சம்போ!
அவர் மன்மதலீலையிலேயே அறிமுகமாகியிருந்தபோதும், நி.இ.விற்குப் பிறகுதான் பரவலாக பேசப்பட்டார்.
அதன் பிறகு வடக்கே போய்,
தப்லே வாலே தப்லே பஜா
மேரே குங்குரூ புல்லாத்தீ ஹை ஆ
மை நாச்சூன் தூ நா ஜா
...வெல்லாமும் தற்கொலை முயற்சியுமாக, வேண்டாங்க.
ஆசாத்
நேற்று முன் தினம் கூட பார்த்தேன். நீங்கள் சொல்லுவது போல, குற்றம் குறையே கண்டுபிடிக்க முடியாத ஒரு படம்!