சென்ற வாரம் எங்கள் பகுதியில் டோஸ்ட்மாஸ்டர்ஸில் வட்ட அளவிலான போட்டிகள் நடந்து முடிந்தன.

நான்கு போட்டிகள் நடந்தன.
1. பேச்சுப் போட்டி (பிரிபேர்ட்டு ஸ்பீச் கான்டெஸ்ட் என்பார்கள்)
2. பேசியதை மதிப்பிடும் போட்டி (எவால்யுயேஷன் கான்டெஸ்ட்)
3. நகைச்சுவைப் பேச்சுப்போட்டி (ஹ்யூமரஸ் ஸ்பீச் கான்டெஸ்ட்)
4. உடனடி பேச்சுப்போட்டி - தலைப்பு தந்து ஒரு நிமிடத்திற்குள் பேசவேண்டும். ஒன்று முதல் இரண்டு நிமிடங்களே பேசவேண்டும் (டேபிள் டாப்பிக் கான்டெஸ்ட்)
குழு அளவில் வென்று, தொகுதி அளவில் வென்று பிறகு வட்ட அளவில் வென்றால் மாவட்ட அளவில் நடக்கும் போட்டிகளுக்குச் செல்லலாம். மாவட்ட அளவிலான போட்டிகள் அடுத்த மாதம் துபாயில் நடக்கவிருக்கின்றன.
இந்த வருடம் எங்கள் குழுவிலிருந்து யாரும் வட்ட அளவில் வெல்லவில்லை. நான் குழுவில் வென்று தொகுதி வரையில் சென்றேன், அங்கே நடந்த போட்டியில் ஊத்திக் கொண்டேன், சல்தா ஹை. வெற்றி தோல்வியா முக்கியம், பங்கேற்பதுதான் முக்கியம்.
ஜித்தாவில் நடந்த போட்டிகளில் சவூதி, இந்தியர், பிலிப்பினோ என கலவையாக மக்கள் பரிசுகளை தட்டிச் சென்றார்கள். நேற்றைய செய்தித்தாளில் அதன் விவரங்கள் வெளிவரவும், மக்கள் இணையத்தில் தேடி தொலைபேசி எண்களை எடுத்துத் தொடர்புகொண்டார்கள்.
"அய்யா, ஜித்தாவுல மட்டும் ஆறு க்ளப்பு நம்பர் இருக்குங்களே எப்படி இதுக்கு போன் பண்றீங்க"
"ஆறு பேருக்கும் போன் பண்ணுவேன், யாரு நட்பா பேசறாங்களோ அவங்க க்ளப்புக்குப் போவேன்"
தொலைபேசியில் நட்பாகப் பேசவேண்டியது மிகவும் அவசியம். அடுத்த முனையிலிருப்பவர் எந்த மனநிலையில் இருக்கிறாரோ எப்படித் தெரியும். துவக்கத்தையே சினேகமாக அமைத்துக்கொள்வது சிறந்தது.
பேசியவர்களையெல்லாம் அடுத்த கூட்டத்திற்கு அழைத்துவிட்டு, மாறியிருக்கும் பாடத்திட்டத்திற்கான விளக்கங்களைத் தருவதற்காக 'பவர் பாயிண்ட்' வகையறாக்களை ஏற்பாடு செய்துவிட்டு, உறுப்பினர் எண்ணிக்கையைக் கூட்டும் பணியில் ஈடுபட்டேன். இதோ இன்னமும் மூன்று மாதங்களில் அடுத்தவர் ஒருவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார்.
ஆமாங்கோவ் தலைமைப் பதவில ஒர் வர்ஸ்ஸத்துக்கு மேல இருக்கக்கூடாதுங்கோவ், நம்ம க்ளப்புல அது ரூல்சுங்கோவ்.
போட்டிகளுக்கு முன் நடந்த அணிவகுப்பில் நானும், நண்பர் சபாரத்தினம் மெய்யப்பனும் நடந்து வரும் படத்தினை மேலே இட்டிருக்கிறேன். பாஷா பாஷா என பின்னணியில் ஒலிக்க ஜனகராஜோ, மகாநதி சங்கரோ, அந்த இரண்டு அடியாள்களோ நடந்து வரும் காட்சி நினைவுக்கு வந்தால் அது உங்கள் தவறன்று, எனக்கு இறைவன் தந்திருக்கும் அமைப்பு அப்படித்தான்...அல்ஹம்துலில்லாஹ்...சல்தா ஹை.
அன்புடன்
ஆசாத்

Comments