1. மேடு பள்ளம் உனக்கு எங்கே புரியப்போகிறது மகிழுந்தின் கண்ணாடி இறக்கி என்னைப் பார்த்து உறுமிச் செல்கிறாய் கடைந்த எந்திரப்பாகம் பார்ப்பதற்குதான் சிறிய உருளை அதன் எடை என்ன தெரியுமா உன்மேல் ஒருநாள் சரிந்து விழுந்தால் உனக்கு அதன் கனம் தெரியக்கூடும் இரண்டு ஆள்கள் அதை சாக்குப்பையின் நடுவில் வைத்து மூச்சடக்கி தூக்கிக் கட்டினார்கள் தெரியுமா எண்ணூரிலிருந்து மிதித்து வருகிறேன் இடையில் தொண்டை வரண்டபோது தேநீர் குடிக்க நாலணா குறைவாக இருந்தது கிடக்கட்டும் தேநீர் குடிக்காவிட்டால் என்ன திரும்பும்போது கொண்டித்தோப்பு வழியாகச் சென்று மூங்கிலின் மேல் வண்ணக்கோடிழுத்து அப்பி வைத்திருக்கும் சவ்வு மிட்டாயில் கோமாளிப்பொம்மை செய்து தங்கைக்கு வாங்கிப்போக போதுமான சில்லறை இருக்கிறது வெளிநாட்டுப் பானம் உறிஞ்சும் உனக்கு ஒரு ரூபாய் 'வாட்டர் பாக்கெட்'டுக்கு ஆலாய்ப் பறப்பவனின் கவலை எங்கே புரியப்போகிறது உறுமிச் செல்கிறாய் கொஞ்சம் தடம் மாறினாலும் முறைக்கிறாய் வேண்டுமென்றா செய்கிறேன் ஒரே சொத்தென்று அப்பா விட்டுப்போன மிதிவண்டியில் எண்ணெய் விடவும் காசில்லாமல் இப்படித்தான் ஓவ்வொரு நாளும் மூச்சிறைக்க மிதித்துக்கொண்டிர...