Skip to main content

உன் வழியா? என் வழியா?

மழலையர் பள்ளிக்கூடங்களில் மாணவ மாணவியர்க்கு அவசியம் சாலை விதிகளை சொல்லித் தருகிறார்கள். நிற்க, நடக்க, கவனிக்க இத்தியாதி இத்தியாதிகளெல்லாம் படம் போட்டு விளக்கப்படுகின்றன. அவை மாணவ மாணவியர்க்கு மட்டும்தான்; மாணவ மாணவியரை ஏற்றிச் செல்லும் பள்ளிக்கூடப் பேருந்து ஓட்டுனர் இந்த விதிகளைக் கடைப்பிடிக்கவேண்டிய அவசியம் இல்லை என நினைக்கத் தூண்டியது ஒரு நிகழ்ச்சி.

ஒரு பள்ளிக்கூடத்திலிருந்து மாணவர்களை ஏற்றி வந்த பேருந்து,

1.கற்சுவரால் பாதை இரண்டாகப் பிரிக்கப்பட்டு போவோரும் வருவோரும் தனித்தனியாக மற்றவர்க்கு இடையூறு இல்லாதபடி சென்றுவர வழி இருந்தபோதும்,


2.கிளைச் சாலையிலிருந்து வெளியே வந்து, சாலையின் போக்கிற்கு எதிர்ப்புறம் சென்று,



3.அதில் நேரான திசையில் வருகின்ற வண்டிகளை நிறுத்தி,



4.தானே சாலையை குத்தகைக்கு எடுத்தாற்போன்ற அதிகாரத்துடன் இடைச்சுவரில் இருக்கும் இடைவெளிவரையில் எதிர்ப்புறம் ஓட்டிச் சென்று, சாலையில் இன்னொரு பகுதியில் இணைகிறது
.

சாலையின் போக்கில் சென்று, முன்னே இருக்கும் 'ப' திருப்பத்தில் திரும்பி வருவதற்கு பத்து நிமிடங்கள் அதிகமாக செலவாகும் என்பதால் இந்த அதிரடி எதிர்த்திசை ஓட்டம் [சென்னை ஓட்டுனர்களின் மொழியில் wrong side].

தனது பத்து நிமிடங்களை மிச்சப்படுத்த எதிரில் வரும் பல வண்டிகளின் பத்து நிமிடங்களை வீணடிக்கிறார் அந்த வண்டி ஓட்டுனர். சென்னைதானே...சல்தாஹை...இடித்தால் அப்புறம் பார்த்துக்கொள்ளலாம், இரண்டு நாள்கள் தொலைக்காட்சியில் பரபரப்பாகப் பேசிவிட்டு எல்லாம் மறந்துவிடுவார்கள்.



பள்ளிக்கூடம் கொஞ்சம் புகழ்பெற்ற பள்ளிக்கூடம்தான். அதனால்தானே, பெயர்ப்பலகையை வெட்டிவிட்டு படத்தைப் போடுகிறேன்.


அன்புடன்
ஆசாத்

Comments