Skip to main content

பிலிம்பேர் விருதுகள் - 50வது ஆண்டு

பிலிம்பேர் விருதுகள் - 50வது ஆண்டு

வணிகத் திரைப்படத்திற்கு விருது வழங்கும் விழாக்களில் கோலாகலத்துக்குக் குறைவிருக்காது. அதிலும் விருது வழங்குவதில் ஐம்பதாவது ஆண்டினை எட்டியிருக்கும் பிலிம்பேர் பத்திரிகையின் விருது வழங்கும் விழா வழமையான கோலாகலங்களுடன் நடந்தது. சோனி எண்டர்டெயின்மெண்ட் சானல் அதை ஒளிபரப்பி என்னைப் போன்ற திரை ரசிகர்களிடமிருந்து புண்ணியம் கட்டிக்கொண்டது.

ஒருமணி நேரம் தாமதமாகவே நிகழ்ச்சியைக் காண முடிந்தது.

சிறந்த திரைக்கதைக்கு (யுவா) 'நம்மவர்' மணிரத்தினம் விருது வாங்கியதைப் பார்க்கமுடியவில்லை.

ஸ்வரூப் க்ரூப் புரவலராக இருந்த இந்த விழாவில், அறிவிப்பாளராக சோனாலி பிந்தரே, சைப் அலி கான், பரீதா ஜலால். நிகழ்ச்சியை அலுப்பு தட்டாமல் எடுத்துச் சென்றார்கள்.

விருதுகள் விஷயத்தில் வணிக சினிமாவோ, இணை சினிமாவோ எப்போதுமே மாற்றுக் கருத்துகள் இருக்கும். ஜாம்பவான்களுக்கு விருதுகள் கிடைக்கும்போது வேண்டுமானால், அந்த மாற்றுக் கருத்துகளின் விகிதம் குறைந்திருக்கும்.

எனக்கு உண்டான மாற்றுக் கருத்துகள் இரண்டு.

1. பரிந்துரையில் இருந்தவற்றில், 'ரெயின்கோட்' ஐஷ்வர்யாவிற்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்திருக்கலாம். அது, 'ஹம் தும்' ராணி முகர்ஜிக்குப் போனது.

2. பரிந்துரையில் இருந்தவற்றில், 'தேவ்' அமிதாபிற்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்திருக்கலாம். அது, 'ஸ்வதேஸ்' ஷாருக்கிற்குப் போனது.

நோ கொஸ்டின்ஸ்..பேனல் ஆப் ஜட்ஜஸ்..சல்தா ஹை.

மேடைக்கு வருபவர்களில் யாரேனும் ஒருவராவது சொதப்புவார்கள் என எதிர்பார்த்தேன். யாரும் சொதப்பவில்லை. புதியவர்களும் நான் உணர்ச்சிவசப்படுகிறேன் எனச் சொல்லி நடித்ததாகவே தோன்றியது. முன்பு ஒருமுறை, தர்மேந்திரா சொதப்பினார், பக்கத்திலிருந்த திலீப் குமார் அசட்டுச் சிரிப்புடன் நெளியுமளவிற்கு சொதப்பினார்.

நேற்றைய நிகழ்ச்சியில் தேவ் ஆனந்தாவது கொஞ்சம் சொதப்புவார் என எதிர்பார்த்தவனுக்கு ஏமாற்றமே. அவரும் ஒழுங்காகப் பேசி, வந்த வேலையை முடித்துச் சென்றார்.

சோனாலி பிந்தரேயின் உடையலங்காரம் எரிச்சலடைய வைத்ததை நான் சொல்வதால் இளையதலைமுறையினரிடமிருந்து விலகுகிறேன் என்பதே பொருள். மேடைக்கு வந்த ஜரீனா வகாபும் என்ன நினைத்தாரோ, உடை மிகவும் அழகாக இருக்கிறதே எனச் சொல்லி கொஞ்சம் சோனாலியின் ஆடையை சரி செய்தார். மற்றவர்களுக்கு இது சாதாரண நடப்பாகத் தோன்றலாம். அன்றைய நிகழ்வில், விருது சம்மந்தப்பட்டவை, நடனங்கள் தவிர மற்றவற்றில் ஜரீனா வகாபின் அந்தச் செயலே மனமெங்கும் நிறைந்திருந்தது.

ஐம்பதாவது விருதைக் கொண்டாடுவதால் சோனு நிகம் 50, 60, 70, 80தாகப் பத்தாண்டுகளில் புகழ்பெற்ற பாடல்களில் ஓரிரு வரிகளைப் பாடியதில் கொஞ்சம் பின்னோக்கிச் சென்று வந்தோம். ஆனால், மகிழ்ச்சி அதிக நேரம் நீடிக்கவில்லை. ஆட வந்த பிரியங்கா சோப்ராவும் அதே பாணியில் காலச்சக்கரத்தில் சுழன்று பின்னால் சென்றார். சரி, எல்லாம் நமது ப்யார் கர்னே வாலே ப்யார் கர்லியே ஷான் ஸே, யே மேரா தில் ப்யார் கா தீவானா, ராத் பாக்கி பாத் பாக்கி, என ஆடல் தொடர்பானவைகளாக விறுவிறுப்பாகச் சென்றது. பாடியது இரண்டிரண்டு வரிகள்தானே. ஆனால், கொஞ்சம் நேரத்தில் வந்த ஷாருக்கும் இப்படிக் காலச் சக்கரத்தில் உட்கார்ந்து தொல்லை செய்தது சலிப்பூட்டியது.

ஐம்பதாண்டுகளில் சிறந்த வெற்றிப் படமாக 'ஷோலே'யைத் தேர்ந்தெடுத்தார்கள். சிப்பி சாஹேப் வாங்கும் முதல் விருதே இதுதானாம். ஷோலேயில் பங்குகொண்டோர்கள் விருதுகளை ஷோலேக்காக வென்றிருந்தாலும், சிறந்த படமாகத் தேர்வு செய்யப்பட்டு, தயாரிப்பாளருக்கு விருது வழங்கப்பட்டது. இதுவே இவரது முதல் விருது.

ஜாவீத் என்று பாடல் எழுதுவதை நிறுத்தப் போகிறாரோ அன்றுதான் மற்றவர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமோ. பரிந்துரையில் வந்த ஐந்து பாடல்களுமே ஜாவீத் அக்தர் எழுதியவை. அவற்றில், வீர் ஸாராவின் தேரே லியேவிற்கு விருது கிடைத்தது.

எல்லாருமே ஹிங்லீஷ் & ஆங்கிலத்தில் பேசினார்கள். மேடைக்கு வந்த சத்ருக்கன் 'பச்சாஸ்வான் வர்ஷாத்..ப்ரணாம்..' எல்லாம் அடித்துத் துவங்கியதும், சுத்தமான பாஷை பேச ஒரு ஆள் இருக்கார் என நினத்தால், அவரும் இடையில் "த மோஸ்ட் பவர்புல்" என ஆரம்பித்து திரை உலகின் வழமையைக் காத்தார்.

சிறந்த துணை நடிகர் விருதும் அமிதாபிற்கு தப்பிப்போனது. 'வீர் ஸாரா'வில் அவருக்குக் கிடைக்கவேண்டியது, 'யுவா'வில் அபிஷேக்கிற்குக் கிடைத்தது. மகன் அப்பாவை அழைக்க விருதை அவருக்குத் தர, அப்பா மகனுக்குத் திருப்பித் தர, அம்மாவோ எடிட்டரின் உதவியால் க்ளோசப்பில் திரையில்..ஆனந்தக் கண்ணீர்த் துளி இதோ இதோ விழிகளில் இருந்து உருளத்துவங்கும் நிலையாக சிரித்தார்.

மேலே பிரியங்காவைக் குறிப்பிட்டோமே. அசப்பில், நமது அசின் இவரைப் போலவே இருக்கிறார். இவர்கள் இருவரின் முகஜாடையில்தான் அந்தக்கால எல்.விஜயலட்சுமி. அரசு பதில்கள் அல்லது வேறு எங்காவது ஒப்பு நோக்கும் படலம் நடந்ததா.

திலீப் சாஹேபின் பக்கத்தில் சாயிரா பானு அமைதியாக, ஆனால், முகத்தில் முதுமைக் களையுடன். முதுமைக் களையுடன் இருந்த இன்னொருவர் வைஜந்தி மாலா. கடைசியில் நமது ஜெயப்ரதாவும் மேடைக்கு வந்தார்.

ரேகா வழக்கம் போல நகைக் கடையாக வந்திருந்தார். 'ஜிஸ்கா நாம் சுன்தேஹி சிப்பாய் அப்னா தல்வார், ஷெஹென்ஷா அப்னா தாஜ் அவுர் இன்ஸான் அப்னா தில் நிகால்கே ரக்தேதேன் ஹை', மொஹலே ஆஸம் திரைப்படத்துக்கும், அதனை நினைவுபடுத்திய சத்ருக்கன்னுக்கும் நன்றிகள்.

பொருள்: இந்தப் பெயரைக் கேட்டதும் வீரன் தன் வாளையும், மன்னன் தன் முடியையும், மனிதன் தன் இதயத்தையும் தந்துவிடுவான்

இப்படியெல்லாம் ரசித்தது இந்தித் திரை உலகின் வணிக சமாச்சாரம் மட்டுமே. இந்திய சினிமாவின் இன்னொரு பக்கம் இப்படியான கோலாகளுங்களுக்கெல்லாம் ஆட்படாமல் அமைதியாக அந்தப் பக்கத்தில் இருந்துகொண்டு சாதித்து வருகிறது.

அதுவும் தேவை; இதுவும் தேவை.

அன்புடன்
ஆசாத்

Comments

Akbar Batcha said…
Mani Rathnam did not attend the function. It was received by Abishek. I did watch the almost two hour program.

Sharuk is maturing now and really ruling the Bollywood.
Boston Bala said…
இந்தப் பதிவுக்கு என்னுடைய நன்றிகள். (ஹிந்தியில் பதிவது எல்லாம் தமிழ்மணம் அனுமதிக்கிறதா :P ;-)

மொரோக்கோ நண்பர் ஒருவர் கூட 'ஷோலே'வின் முதல் விருதைக் குறித்து ஆச்சரியப்பட்டார். அவர் திரும்பத் திரும்ப பார்த்த சிறுவயது படமாம்!

>>>சோனாலி பிந்தரேயின் உடையலங்காரம்

என்ன சார்... படம் போட்டு (அல்லது 'சுட்டி'யாவது காட்டி விளக்கலாமே :->

தமிழில் விஜய் கூட பிரியங்கா நடித்தார் அல்லவா? எனக்கு என்னவோ நடிக்கத் தெரியாத நடிகை மாதிரித் தோன்றியது (அசினுடன் ஒப்பிட்டால்...) என்ன சொல்றீங்க?
Dear Bala,

Photo pooda mudiyalai. athu sudassuda ezuthunathu illaiyaa, photo kidaikkalai. theedip pooduRanee.

aanbudan
azad
Anonymous said…
The programme by SRK with old time heroines is the one which I enjoyed. It was something interesting to watch the oldies steps...
Anonymous said…
Reading your blog and I figured you'd be interested in advancing your life a bit, call us at 1-206-339-5106. No tests, books or exams, easiest way to get a Bachelors, Masters, MBA, Doctorate or Ph.D in almost any field.

Totally confidential, open 24 hours a day.

Hope to hear from you soon!