ஈர்க்கும் எண்கள் (Fancy numbers)
இது ஒரு மோகம்தான்.
சென்னையில் வாகனப் பதிவு எண்கள் Mஇலிருந்து Tயாக மாற்றப்பட்டதும் எம்.ஜி.ஆர். அவர்கள் தனது வாகனத்திற்கு MGR பதிவாக வேண்டுமென மகாராஷ்ட்டிராவில் ஒரு வண்டியை பதிவு செய்து அதனைத் தமிழ்நாட்டில் ஓட்டியதாகச் சொல்லும் செய்தியில் எத்தனை உண்மை இருக்கிறதென்பதை நான் அறியேன். ஆனால், இந்த ஈர்க்கும் எண்களுக்கு மதிப்பு இருப்பதை அறிவேன்.
துபாயின் முக்கியமான ஷேக்குகளில் ஒருவரான ஷேக் அல்குரைரின் வாகனப் பதிவு எண் '1'. தனது வாகனத்தை மாற்றினாலும் பதிவு எண்ணை மாற்றாமல் அதையே உபயோகித்தார். 1ம் எண்ணைக் கண்டதும் அது ஷேக் அல்குரைர்தான் என்பது துபாயில் இருக்கும் பலருக்கும் தெரிந்தது.
101 டாலமேஷன்ஸ் திரைப்படத்தில் க்ளென் க்ளோஸின் வண்டி எண் DEVIL எனத் தொடங்குவதாக ஒரு நினைவு.
சவூதி அரேபியாவில் தொலக்காட்சித் தொடர் ஒன்றில் இத்தகைய ஈர்க்கும் எண்ணை முன் பதிவு செய்த பின், வண்டி வாங்கப் பணமில்லாமல், பழைய வண்டியை வாங்கி அதில் ஈர்க்கும் எண்ணை மாட்டி ஓட்டிச் செல்வதை நகைச்சுவைக் காட்சியாகவே காண்பித்தார்கள்.
ஈர்க்கும் எண் கிடைக்கிறதோ இல்லையோ, பதிவு எண்ணின் கூட்டுத் தொகை எட்டாக இருந்தால் வட்டாரப் போக்குவரத்து அலுவலத்திலேயே (R.T.O.) இந்த எண் தேவைதானா எனக் கேட்டே பிறகுதான் தருவார்கள். ஓட்டுனர் உரிமம் பெறும்போதே 'எட்டு' போட்டதால்தானே உரிமம் கிடைத்ததென்ற நம்பிக்கையில் எண்ணைப் பதிவு செய்தீர்களோ, தொலைந்தது. என்றாவது அதனை விற்பதற்குள் மண்டை காய்ந்துவிடும்.
சென்னை வாகனப் பதிவுகள் TNஆகவும், ஒவ்வொரு வட்டார அலுவலகத்திற்கும் தனித்தனியாக எண்களைக் கொடுத்து, அதாவது மத்திய சென்னைக்கு TN-01, தென் சென்னைக்கு TN-07 எனத் தனித்தனியான எண்கள் வந்த பிறகு, கடைசி எண்களில் ஈர்க்கும் எண்களை அமைப்பதற்கு முக்கியத்துவம் இன்னும் கூடியது.
'தீவார்' திரைப்படத்தில் அமிதாப்பின் கூலி அடையாள அட்டையின் எண் 786. திரையில் அவரை அந்த அடையாள அட்டை ஒரு முறை துப்பாக்கிக் குண்டிலிருந்து காப்பாற்றுகிறது. அட்டை தவறியதும் அவர் உயிரிழக்கிறார். அது திரைக்கான மனவெழுச்சிக் காட்சிதானே தவிர, 786இல் அப்படி எதுவும் மாயம் இருப்பதாக எனது அறிவுக்குப் புலப்படவில்லை. ஆனாலும், வாகனப் பதிவின் கடைசியில் 786 இருந்தால் அதற்கு மதிப்பு இருக்கிறது. தேவை (demand) அதிகம் உள்ள எண்களில் இதுவும் ஒன்று.
வழக்கமாக பதிவுகளுக்குக் கட்டுகின்ற தொகையை விடவும் சற்று (அதிகம்) அதிகமான தொகையைக் கட்டி ஈர்ப்பு எண்ணிற்கு விண்ணப்பம் செய்ய வேண்டும். சமயத்தில் நாம் கேட்கின்ற எண் இல்லாமலும் போகலாம். வேறு வட்டார அலுவலகத்தில் அந்த எண் இருந்தால் இடத்தை மாற்றியும் பதிவு செய்துகொள்ள முடியும். சில சமயங்களில் பெரும் புள்ளி (VIP) எண்கள் கிடைக்க அரசியல் செல்வாக்கையெல்லாமும் உபயோகிக்க வேண்டியிருக்கும்.
வட்டார அலுவலகத்தில் ஈர்ப்பு எண்கள் அடங்கிய பட்டியலும் இருக்கும். அதிலிருந்தும் நமக்குத் தேவையான எண்ணைக் கேட்டுப் பெறலாம். பிறந்த வருடம், பிறந்த தேதி, திருமண நாள், தொலைபேசி எண், இப்படிப் பல விஷயங்களுடன் பொருந்துகின்ற எண்களையோ, ராசியான எண், ராசியான கூட்டுத் தொகை என நினைக்கும் எண்ணையோ பெறுவதற்காக அதிகத் தொகை (premium) கட்டுகின்ற வாகன உரிமையாளர்கள் வட்டார அலுவலகம் வந்து போவது தினசரி நடப்பது.
அதிர்ஷ்டம், ராசி, 786, இப்படியான நம்பிக்கைகளால் எந்தப் பலனும் இல்லையென்பது எனது தெளிவு. நமது பிறந்த நாளோ, தொலைபேசி எண்ணோ நமது வண்டிக்கு இருப்பதால் சாலைக்கோ வாகனத்திற்கோ எந்தப் பலனும் இல்லை. சாலையில் செல்பவருக்கு அந்த எண்ணின் 'மகிமை' விளங்கப் போவதுமில்லை. அது உரிமையாளரின் திருப்திக்காகவே.
அப்படிப்பட்ட கூட்டுத்தொகை ராசி எண், திருமண நாள் இத்தியாதிகள் விடுத்து, பார்த்தவுடன் ஈர்க்கும் எண்ணில் வாகனம் பதிவாகியிருந்தால் இரண்டு பலன்கள் உண்டு.
ஒன்று, ஈர்க்கும் எண்களின் விவரங்கள் அறிந்த எவரும் வாகனத்தின் எண்ணைப் பார்த்த பின் ஒரு அடி தள்ளியே நிற்க வாய்ப்பு உண்டு. வாகனத்தின் உரிமையாளர் என்ன பெரும்புள்ளியோ, அரசியல்வாதியோ, செல்வாக்கு உள்ளவரோ என்னும் தயக்கம்தான்.
இன்னொன்று, என்றாவது சாலை விதிகளை மீறும்போது காவலர் நிறுத்தினால், அவர் வண்டி ஓட்டுபவரிடம் மரியாதையாகப் பேச வாய்ப்பு இருக்கிறது. எண்களை வைத்து வாகன உரிமையாளரின் அந்தஸ்தை அவரால் ஓரளவிற்கு எடை போட முடியும். பெரும் புள்ளி எண் உங்களிடம் இருந்தால், அதற்கான அதிகப் பணம் செலுத்தியவராகவோ அல்லது அந்த அளவிற்கு உங்களை செல்வாக்கு உள்ளவராகவோ காவலர் நினைக்க வாய்ப்பு இருக்கிறது.
எந்த வகையான ஈர்ப்பும் இல்லாமல் அதுவாகக் கிடைக்கும் எண் எதுவாக இருந்தாலும் நாளாவட்டத்தில் பழகிப் பழகி, நண்பர்கள், சுற்றம் அனைவருக்கும் அதுவே சாலையில் கண்டால் ஈர்க்கும் எண்ணாகிவிடும்.
"ஆமா சார்/மேடம், நம்ம வண்டி பஞ்சராகி சைடுல ஒதுங்கி நிண்ணா அந்தப் பக்கமாப போற நம்ம ஃப்ரண்டு வண்டியோட நம்பர் ப்ளேட் நம்மள ஈர்க்காதா? அப்ப அது ஈர்க்கும் எண்தானே." ஜோக் சரியில்லல்ல.
அன்புடன்
ஆசாத்

Comments
அன்புடன்,
டோண்டு ராகவன்
//ஜோக் சரியில்லல்ல// I accept, sariyillathaan:-))
RTO aluvalagaththinar oruvarukkum vaNdiyaip pathivu seyya vandhavarukkum sooda vaakkuvaadhamam. ennavendRu visaariththaal pathivu seyya vandhavar, vaNdi eNgaLaik koottinaal ***zero*** varavENdum endRu kEtkiRaraam
:-))
balarajangeetha@yahoo.com
பாலராஜன் அய்யா, நல்ல ஜோக்.
அன்புடன்
ஆசாத்
அன்புடன்,
டோண்டு ராகவன்
தமிழ்நாட்டில், ரமலானுக்கு தர்கா சென்று 'கஞ்சி' குடிப்பதை அரசியலாக்கியது எம்.ஜி.ஆர் என்று நினைவு. யாராவது இதனை கண்டறியுங்கள்.