சிலம்பம். பாகம் 3/6
திசைகளே வீடுகள் என சிலம்பத்தில் வழங்கப்படுகிறது. பயிற்சி பெறுகின்ற பரம்பரை எதுவாக இருந்தாலும் முழுவட்டமடித்துச் சுழன்று திசைகளை மாற்றி மாற்றி நிற்கும் கால்களின் வியூகம் பொதுவானதே.
வடக்கு நோக்கிப் பார்த்து நிற்கையில், வடக்குத் திசைதான் நாலு வீடு. மேற்குப்புறம் இருப்பது எட்டு வீடு, தெற்குத் திசையில் பன்னிரண்டு வீடு, கிழக்கில் பதினாறு வீடு. இவையே அடிப்படையான பதினாறு வீடுகள். அதாவது, சிலம்பம் வீசத் துவங்கும்போது மார்பும் முகமும் எந்தத் திசையை நோக்கி நிற்கிறதோ அதனை நாலு வீடாகக் கொண்டு இடப்புறத்தை எட்டு வீடாகவும், பின்புறத்தைப் பன்னிரண்டு வீடாகவும், வலப்புறத்தைப் பதினாறு வீடாகவும் நிர்ணயித்துக்கொள்ளவேண்டும்.
அடிப்படைப் பயிற்சி நாலு வீட்டில் சுழன்று அரண் அமைப்பதே. இதன் பிறகு, கால்களை மாற்றி வெவ்வேறு வீடுகளுக்கு நகர்ந்தாலும், பின்னிப்பின்னி சுழல்வது ஒரே பாணியில்தான். சிலம்பத்தைச் சுழலவிடுவதன் அடிப்படையை முந்தைய பகுதியில் பார்த்தோம். இதில் 'வீடு' கட்டுவதைச் சிறிது பார்க்கலாம்.
இடது காலை முன்னே வைத்து, வலது காலைப் பின்னே வைத்து ஓடுவதற்குத் தயார் நிலையிலிருப்பது போல நிற்கவேண்டும். பாதங்கள் இரண்டும், மார்பும் முகமும் (முன்னோக்கி) ஒரே திசையை நோக்கி இருக்கவேண்டும். இது முதல் படி. பிறகு, பின்னே இருக்கும் வலது பாதத்தை உயர்த்தி இடது காலின் பக்கவாட்டிற்குக் கொணர்ந்து, சிறிய இடைவெளிவிட்டு பக்கவாட்டில் வைத்துக் கொள்ளவேண்டும். முன்னும் பின்னுமாக இருந்த பாதங்கள் இப்போது பக்கவாட்டில் ஸ்டாண்ட் அட் ஈஸ் நிலையில். இது இரண்டாவது படி.
இங்குதான் மூன்றாவது படியாக சுழற்சி துவங்குகிறது. வலது பாதத்தை மையமாக வைத்து முக்கால் வட்டத்திற்கு உடலை கடிகாரச் சுழற்சியின் திசையில் சுழலவிட்டு இடதுபாதத்தை வலது பாதத்தின் பின்னே நிறுத்தி, முதல் படியின் பிம்பமாக இந்த நிலையில் நிற்கவேண்டும். இப்போது, வலது கால் முன்னும், இடது கால் பின்னும் இருப்பதான் நிலை.
நான்காவது படியாக, இடது காலை எடுத்து பக்கவாட்டில் வைத்து, அதனை மையமாகக் கொண்டு, கடிகாரச் சுழற்சியின் திசைக்கு எதிர்ப்புறமாக முக்கால் வட்டமடித்து, வலது கால் பின்னே வந்ததும், பாதத்தை ஊன்றி, சுழலத் துவங்கியபோது நின்ற பழைய முதல் படிக்கு வந்துவிடவேண்டும். இந்த இரண்டு சுழற்சிகள் சேர்ந்த கூட்டுதான் வீடு. ஆட்டம் துவங்கிய திசையாதலால் இது நாலு வீடு.
துவக்கத்தில் நின்று நிதானித்து ஒவ்வொரு அசைவாகப் பயிற்சி பெறும் இந்த வீட்டைக் கட்டுவது, பழகிய பின்னர் நான்கு விநாடிகளுக்குள் நடந்துவிடும். ஆதாரமாக வைக்கும்போது உடல் எடை அழுந்தி முன்பாதங்கள் சுளிக்காமல், வெண்ணெய் போல கால்களை மாற்றி நாலு வீட்டில் சுழல்வதற்கு ஆர்வம், பயிற்சி, உடல் எடை எல்லாவற்றின் கூட்டணியும் அவசியம்.
பரபரவென நாலு வீட்டில் சுழலும் பயிற்சிக்குப் பின், நான்கிலிருந்து எட்டிற்கு மாற ஒரு சிறிய மாற்றமே பாதங்களின் திசையில் தேவைப்படும். நான்கிலிருந்து எட்டிறகு மாற நினைத்தவுடன், ஆரகதியை அதிகப்படுத்திக் கொள்வதற்காக, இடதுகால் மையச் சுழற்சியினை இரண்டு முறைகள் செய்து, வலது காலைப்பக்கவாட்டில் வைத்து, வலதுகால் மையச் சுழற்சியில் முக்கால் வட்டம் அடிக்காமல், அரைவட்டத்திலேயே இடது பாதத்தை நிறுத்தி, பாதங்களும், முகமும், மார்பும் எட்டு வீட்டினை நோக்கி இருக்கும்படி நின்று அடுத்த திசையில் (எட்டு வீட்டில்) இருக்கும் எதிராளியை எதிர்கொள்ள நாம் தயார்.
எட்டு வீட்டிலும், நாலு வீட்டில் செய்த அதே சுற்றுகள்தான்; திசைதான் வேறு. இப்படியே பன்னிரண்டு, பதினாறுக்கும் மாறலாம். வலதுகாலை ஆதாரமாக வைத்த வைத்த வட்டத்தினை முக்கால், அரை, முழு வட்டங்களாக நிறுத்துவதன் மூலம் வேண்டிய வீட்டை நோக்கி முகத்தைத் திருப்பிக்கொள்ளலாம். பயிற்சி தேவை.
கால்கள் சுழலும்போது, கரங்களில் சிலம்பமும் சுழலவேண்டுமே.. அதனை நேரம் கிடைக்கும்போது அடுத்த தொடரில் பார்க்கலாம்.
அன்புடன்
ஆசாத்

Comments
நன்றிகள். சிலம்பத்தில் இளைஞர்களுக்கு ஆர்வம் குறைந்து வருகின்றது. அதற்குப் பல காரணங்கள். ஆசிரியர் கிடைக்காதது, இடம் கிடைக்காதது, இன்னும் பல. படித்தவர்கள் அதில் ஆர்வம் காட்டாதது முக்கியமான காரணமாக எனக்குப்படுகின்றது.
அன்புடன்
ஆசாத்